Monday, July 06, 2009

ஹி ஹி... அது போன வருஷம்

இது போன வருடம்:
எனது தோழி ஒருத்தியை அழைத்து வர நான் லண்டன் விமான நிலையத்திற்குப் சென்றேன். அவர்களை அழைத்து வர நான் ஒரு காரை ஏற்பாடு செய்திருந்தேன். கார் ஓட்டுனர், நாவரசன் எனக்கு மிகவும் பரிச்சயம். அவரை நாவா என்றே அனைவரும் அழைக்க, நானும் அவரை நாவா என்றே அழைக்கிறேன். அவர் இலங்கைத் தமிழர் என்பதால் நாங்கள் தமிழிலேயே கதைப்போம். லண்டனுக்கு வரப்போகும் பெண்ணிற்கும் தமிழ் தெரியும் என்பதால் நாங்கள் தமிழில் தான் பேசிக் கொண்டிருந்தோம்.

'நீங்க எங்க ஸ்டே பண்றீங்க', என்னைப் பார்த்து அவள் கேட்டாள்.
'நான் ஸ்ட்ராட்போர்ட் (எழுதவும், படிக்கவும் மிகவும் கடினமாக இருப்பதினால், இனி இந்த இடத்தை 'ஸ்' என்று குறிப்பிடுகிறேன்), எப்படிங்கிற இடத்துல இருக்கேன்', என்றேன்.
'அங்கிருந்து நான் தங்க போற இடம் எவ்வளவு தூரம்?'
'நீங்க தங்க போற இடம் இல்போர்ட் (இனி இது 'இ' எனப்படும்)', என்றேன்
'அது தெரியும், எவ்ளோ தூரம்?'
'ஒரு பத்து நிமிஷம் தாங்க பஸ்ல'
'ஓ, ஸ் நல்லா இருக்குமா இ நல்லா இருக்குமா?'
'ஸ் தாங்க நல்லா இருக்கும்.'
'இ இந்தியா மாதிரியே இருக்கும்னு சொல்றாங்க'
'அப்போ இந்தியாலேயே இருக்கலாமே. இ ல நிறைய கருப்பனுங்க இருப்பாங்க, அவ்ளோ சேஃப்டி இல்லேங்க'
'ஓ'
'அது மட்டும் இல்லே, நாம ஒரு புது நாட்டுக்கு வரும் போது, அங்க இருக்கிறது பத்தியும் தெரிஞ்சிக்கனும். இ இந்தியா மாதிரியே தான் இருக்கும். நீங்க லண்டனில் இருக்கிற பீலீங்கே வராது'
'ஆனாலும் இத்தனை வருஷம் இந்தியால இருந்துகிட்டு புதுசா ஒரு நாட்டுல இருக்கிறது கஷ்டம் தானே?'
'கரெக்ட் தான், ஆனா ஸ் இந்தியா-லண்டன் கலந்த மாதிரி இருக்கும், நல்லா இருக்கும்'
இவ்வாறாக கிட்டத்தட்ட நாற்பது நிமிடங்கள் இ-ஸ் பற்றி சொல்லிக் கொண்டிருந்தேன்.

'நாவா, நீங்க எங்க தங்கியிருக்கீங்க?', என்றேன்.
'இ தான்'
'ஐயோ, நான் சும்மா சொல்லிக்கிட்டு இருந்தேங்க. தப்பா நினைக்காதீங்க', என்றேன்.
'இல்லை கிரண், நீங்க சொல்றது கரெக்ட் தான்'

இது இன்று:
விமான நிலையத்தில் எல்லா வேலைகளும் முடித்து விட்டு, ஒரு வார தாடியுடன் வெளியே வந்ததால், என்ன நினைத்தார்களோ தெரியவில்லை, எனது பெட்டியை சோதனை செய்ய வேண்டும் என முடிவு செய்தனர் அங்குள்ள ஆபீசர்ஸ். ஏற்கனவே செக் இன் செய்த பெட்டிகள் வர முக்கால் மணி நேரம் ஆனதால், காலை 6:45க்கு விமானத்தில் இறங்கிய நான் வெளியே வரும் போது 8:00 ஆகியிருந்தது.

நான் பெட்டிகளை எடுத்துக் கொண்டு வந்ததை பார்த்த நாவா, என்னிடம் இருந்து வாங்கிக் கொண்டார்.
'இல்லே பரவால்லேங்க, நானே தள்ளிட்டுவர்றேன்', என்றேன்.
'இட்ஸ் ஓகே. நீங்க ரொம்ப டையர்ட் ஆகியிருப்பீங்க', என்று சொல்லி என்னிடம் வாங்கிக் கொண்டு காரில் ஏற்றினார்.
இருவரும் காரில் ஏறி விட்டு பயணிக்க ஆரம்பித்தோம்.
'எங்க ஸ்டே பண்ணப் போறீங்க', எனக் கேட்டார் நாவா.
'இ', என்றேன்
அவர் என்னை திரும்பிப் பார்க்க, 'ஹி ஹி, அது போன வருஷம்', என்றேன்

15 comments:

Manu said...

Whenever I read ur post, its like every situation is happening straight before my eyes.

Appreciate your effort..Expecting more..Dil Maangae more.........

Truth said...

நன்றி மனு

புன்னகை said...

"இடுக்கண் வருங்கால் நகுக" ---> உங்களப் பாத்து தாங்க கத்துக்கணும். ஒரு வழியா உங்க தாய்நாட்டிற்குப் போயாச்சு போல? ;-) மீண்டும் சென்னை வருகை எப்போ?

Anu said...

East Ham will be more good for you rather than Ilford :-)

Truth said...

@புன்னகை,
சென்னை சீக்கிரமா வரனுங்க.

@Anu
ஏங்க? ஈஸ்ட் ஹாம் எல்லாம் முடிஞ்ச அளவுக்கு தவிற்கிறேன். நீங்க எங்க இருக்கீங்க?

Anu said...

Really?? Its crowded...i accept...but does not make much difference from ilford !! am in eastham only..(i hope u came from startford to ilford dis year...should be moving to east ham next year)...kiddin..

Truth said...

@Anu
I stayed in Croydon for 1 year and the moved to Stratford.
After 1 year in Stratford, I have now moved to Ilford.
The trend looks like I will move to East ham next year :)

But if that ever happens, expect another post saying 'ஹி ஹி, அது போன வருஷம்', again.

Anu said...

Who am i teasing?? One well known writer (?) better i should keep quiet :) but good luck for moving soon!!!

Truth said...

@அனு,
//Who am i teasing?? One well known writer (?)
ஹி ஹி. ஆமாமா, ரொம்ப பெரிய எழுத்தாளர் தான் நான் :) நான் தாங்க பர்ஸ்டு, கடைசில இருந்து :P

//better i should keep quiet :)
நோ நோ, இதுக்கேல்லாம் அழக்கூடாது. :) மீண்டும் வந்து படிங்க.

//but good luck for moving soon!!!
ங்கொய்யாலே!

Anu said...

First or last ...it doesnt matter...As long as you have accepted as big writer, i will recommend to giv u Honorary Doctor from my college...Soon be ready to attend the function! (Dont worry..my rec will work as am an acdermic director)...Advance Bouquet! :)

Truth said...

ரொம்ப நன்றிங்க.

// Advance Bouquet! :)
பெரிய பெரிய வார்த்தை எல்லாம் பேசுறீங்க.

Anu said...

Dis z wt called being clever..good keep it!

Truth said...

என்ன சொல்றீங்கன்னு தெரியல. நீங்க எனக்கு kirankumar.gosu@gmail.com க்கு மெயில் அனுப்பிங்க. பேசி தீத்துக்கலாம்.

Anu said...

G8 maanaadla pesaravu alavu important illinga. that was a comment...when i said, will recommend h.dr..u replied as thanks...for that i teased as clever...nuthin else!!

Truth said...

சரிங்க.