Wednesday, September 02, 2009

இது ஒரு உண்மைக் கதை

உண்மையில் இது ஒரு உண்மைக் கதை அல்ல. ஆனால் தலைப்பில் 'இது ஒரு உண்மைக் கதை அல்ல' என்று சொல்லியிருந்தால் ஒரு வேளை இது ஒரு உண்மைக் கதை தானோ என்ற எண்ணம் உங்கள் மனதில் வரலாம். அந்த எண்ணத்தைத் தவிர்க்கத்தான் ஒரு பொய்யான கதையை உண்மைக் கதை என்று பொய் சொல்ல வேண்டியிருக்கிறது. இது வரையில் நான் சொன்னது அனைத்தும் உண்மை தான். நான் சென்ற மார்ச் மாதம் சென்னை வந்த போது இது நடந்தது. நடந்தது என்று சொல்லும் போது மீண்டும் இது ஏதோ உண்மைக் கதையைப் போல் இருக்கிறது என்று எண்ண வேண்டாம். உண்மையில் இது எந்த செய்தித் தாளிலும் வரவில்லை என்பதால், நீங்கள் படிக்கும் போது இது ஒரு பொய்க் கதை என்ற உண்மையை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். இனி கதை அல்ல நிஜம் (அல்ல கதை தான்). இந்தக் கதையைச் சொல்வதற்கு முன் சில பழைய நிகழ்வுகளும், இதில் வாழ்ந்த்திருக்கும் சில கதாப்பாத்திரங்களையும் உங்களிடம் சொல்ல வேண்டியிருக்கிறது.

கதாப்பாத்திரங்களில் முக்கியமானவர்கள் நான், எனது நண்பன் இளங்கோ, இளங்கோவின் தம்பி சுகுமாரன். எங்களின் மூவரைத் தவிர்த்து இந்த பொய்க் கதையின் நிஜ வில்லன் எங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர். ஹிட்லரைப் பார்த்திராதவர்கள் எங்கள் தலைமை ஆசிரியரைப் பார்க்கலாம். பார்த்து மடியலாம். இவரின் பெயர் சொல்லப் போவதில்லை. காரணம் இந்த செய்தி இது வரை செய்திகளில் வரவில்லை.

நானும் இளங்கோவும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போது சுகுமாரன் பத்தாவது படித்துக் கொண்டிருந்தான். இளங்கோ படிப்பில் கெட்டி. சுகுமாரன் அப்படி இல்லை. ஊர் சுற்றுவது அவனுக்கு மிகவும் பிடிக்கும். நண்பர்களைப் போல் கெட்ட பழக்கங்களும் அவனுக்கு அதிகம். ஆறாவது படிக்கும் போது தம் அடிக்க ஆரம்பித்தான். பத்தாவது படிக்கும் போது சாலை மறியல் வரை வந்தான். அன்று எங்களுக்கு ஏதோ அரையாண்டுப் பரிட்சை என்று நினைக்கிறேன். அரையாண்டு தானே என்று சரியாகப் படிக்கவும் இல்லை. அதே நாள் எங்கள் பள்ளியின் அருகில் இருக்கும் ஒரு மில்லில் ஒரு பிரச்சனை. இதனால் அங்கு சாலை மறியல். ஆரம்பத்தில் அது சாலை மறியலாகத் தான் இருந்தது. ஒரு இருபது நிமிடங்களில் அது பள்ளியிலும் வந்து சேர்ந்தது, சுகுமாரனின் உதவியால். அந்த அளவுக்கு சுகுமாரனுக்கு நண்பர்கள். எங்களுக்கு அன்று பரிட்சை எழுத முடியாமல் போகும் என்ற தான் தோன்றியது. படிக்கவும் இல்லை என்பதால், அதுவும் நல்லதாகவே பட்டது.

ஆனால் இதை எல்லாம் இரண்டே நிமிடங்களில் ஹிட்லர் தவுடு பொடியாக்கினார். சுகுமாரன் தொடர்ந்து நான்கு மணி நேரமாக எங்கும் தெரியவில்லை. நானும் இளங்கோவும் பரிட்சையை முடித்து விட்டு வெளியே வந்த போது எங்களுக்காக காத்துக் கொண்டிருந்தது அந்த அதிர்ச்சி. சுகுமாரனை ஒரு அறையில் அடைத்து, அடித்து உதைத்ததில் அவன் சுயநினைவை இழந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான். இதை அறிந்து நானும் இளங்கோவும் உடனே பள்ளியிலிருந்து மருத்துவமனைக்கு விரைந்தோம். சுகுமாரன் அன்றிலிருந்து இன்று வரை கோமாவில் இருக்கிறான். அன்று ஹிட்லரை வெட்டுவதற்காகச் சென்ற இளங்கோவை நானும் எனது மற்ற நண்பர்களும் தடுத்தோம். இதற்கான சமயம் வரும் போது இதைப் பற்றி ஏதேனும் செய்யலாம் என்று அன்று ஒரு முற்றுப்புள்ளி வைத்தோம். இந்தச் சம்பவம் எந்தச் செய்தியிலும் வரவில்லை.

மார்ச் மாதத்தில் நான் சென்னைக்கு சென்ற போது அதற்கான சமயம் வந்தது. எங்கள் பள்ளியில் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டது. சோதனை செய்தவரின் பெயரும் இங்கு குறிப்பிடப்போவதில்லை. அவரை நான் இன்ஸ்பெக்டர் என்றே குறிப்பிடுகிறேன். அந்த இன்ஸ்பெக்டர் நேர்மையானவர் என்று நாங்கள் விசாரித்ததில் தெரியவந்தது. இன்று ஹிட்லரைப் பற்றி எல்லா விசயங்களும் அம்பலம் செய்வோம் என்று நான், இளங்கோ, மற்றும் ஒரு ஐந்து பேர் பள்ளிக்குச் சென்றோம்.

ஹிட்லர் இன்றும் மாறவில்லை. அதே தோற்றம் தான். தலையில் மட்டும் வெள்ளை அடிக்கப்பட்டிருந்தது. நானும் இளங்கோவும் மட்டும் பள்ளிக்கு உள்ளே சென்றோம். மற்ற ஐவர் பள்ளிக்கு வெளியே இருந்தனர். எந்நேரமும் எங்களுடன் தப்பிக்க வண்டியுடன் ஆயுத்தமாகவே இருந்தனர். அங்கு இன்ஸ்பெக்டரைப் பார்த்து நான் பேசும் போது ஹிட்லருக்குப் புரிந்துவிட்டது. இன்ஸ்பெக்டரிடம் என்னைப் பேச விடாமல் தடுத்தார். ஹிட்லரை அறையிலிருந்து வெளியே இழுத்துச் சென்றான் இளங்கோ. நான் இன்ஸ்பெக்டரிடம் அனைத்தும் கூறி, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அங்கு சுகுமாரனைப் பார்த்து விட்டு, மேலும் எங்களுடன் வந்த நண்பர்களிடமும் விசாரித்து உண்மையை அறிந்து கொண்டு ஹிட்லர் மீது ஒரு மெமோ அடித்து அவரின் மேலதிகாரிக்கு அனுப்பினார். ஹிட்லர் கைதாவது உறுதியாகிவிட்டது.

இப்போது, இனியும் ஹிட்லரைப் பழிவாங்க ஏதேனும் செய்ய நினைத்தால் செய்து விடு என்று இளங்கோவிடம் நான் சொல்ல, அவனோ, கைது செய்ததே நல்ல விசயம் தான். இது அடுத்த நாள் பத்திரிக்கைகளில் வருமே, அதுவே வெற்றி தான் என்றான். நான் இளங்கோவை அவனது வீட்டில் விட்டு விட்டு, வீடு திரும்பினேன். வழியில் பொன்னம்பலம் போல் ஒரு நான்கு பேர் என்னை மறித்தனர். அவர்களின் கைகளில் ஐந்து அடி நீளத்தில் உருட்டைக் கட்டைகள் இருந்தன. இனி இவர்களிடமிருந்து தப்பிக்க முடியுமா என்றால் கண்டிப்பாக முடியாது.

நடப்பது நடக்கட்டும் என்று நானும் அவர்களின் முன் நின்றேன். அவர்களில் ஒருவன் ஓடி வர, நான் எனது வலது கையை மடக்கி வுட்டேன் பாரு ஒன்னு, அருகில் படுத்து நன்றாக உறங்கிக் கொண்டிருந்த அருண் மெத்தையிலிருந்து கீழே விழுந்தான். அதிகாலைக் கனவு, இது நடந்தால், 'அதிகாலைக் கனவு பலிக்கும்' என்ற கதை உண்மைக் கதை. இல்லையென்றாலும், உண்மை (நான் தாங்க) எழுதியதால், இது ஒரு உண்மைக் கதை தானே!

பி.கு: ஆதி இதை படிப்பாரா என்று தெரியவில்லை. ஒரு வேளை படித்தால் அவருக்கு ஒரு எச்சரிக்கை, ஆதி, உங்களுடைய அடுத்த டாப் 10க்கு ஒரு டஃப் காம்பெடிஷன் இருக்கும் :-)

11 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

எனக்கும் கனவு வருது..,

பரிசல்காரன் said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

கார்க்கிபவா said...

சாமீ, முதல் பாராவிலே நாக்கு தள்ளுது.. இது டஃப் காம்பெடிஷன் இல்லை. முதலிடம்தான்

யப்பா.. எங்க அண்ணன் என்னை லண்டனுக்கு வா வான்னு கூப்பிடறான்.. வர மாட்டேன் சாமீ..

நல்லா இருங்க

Manu said...

நல்லா இருடா... நல்லா இரு...

அடைய்...நல்லா இருடா.... மவனே....

செ.பொ. கோபிநாத் said...

அருமை சகா!

Thamira said...

லிஸ்ட்ல சேத்துக்கலாம், இன்னும் முயற்சி பண்ணுங்க. ரொம்பத்தான்பா டஃப் குடுக்குறாங்க..

sreeja said...

டஃப்-ஆன உண்மை கதை தான்.

Truth said...

நன்றி SUREஷ்
நன்றி பரிசல் (அதான் முதல் பத்தியில தெளிவா சொல்லியிருக்கேன்ல, அப்புறம் எதுக்கு? :))
நன்றி கார்க்கி
நன்றி மனு
நன்றி கோபிநாத்
நன்றி ஆதி
நன்றி ஸ்ரீஜா. (உங்கள் தொடர்ந்த ஆதரவுக்கு)

sri said...

உண்மைஎலேயே இது உண்மை கதையா இருந்தாலும் இவ்வளவு இவ்வளவு ........ சுவாரசியமா இருந்திருக்காது, ஒ கடவுளே இது பொய், ஆனா சுவாரசியமா இருந்ததால உண்மையா நடந்திருந்தா நல்ல இருக்கும், உண்மை தானா............

Truth said...

@ஸ்ரீ,
//ஆனா சுவாரசியமா இருந்ததால உண்மையா நடந்திருந்தா

ஏன் இந்த கொலை வெறி உங்களுக்கு? :-)

sri said...

ஒரு திரில்லுக்கு தான்..............