Saturday, January 17, 2009

ஒரு சின்ன உதவி

வணக்கம்.

ஒரு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி என்னடா நாம இவ்ளோ மஸ்குலரா இருக்கோமேன்னு ரொம்ப பீலிங்கோட டயட்டிங் எல்லாம் இருந்து, ஜிம்க்கு எல்லாம் போயி, இன்னும் சில பல வேலைகளை செஞ்சி ஒல்லியா ஆனேன். நான் சொன்ன மஸ்குலர் வயிரு பாகம் மட்டும் தான். இருந்த தொப்பையெல்லாம் குறைக்க கிட்டத்தட்ட ஒரு ரெண்டு வருஷமாச்சு. 34" பேண்டு எல்லாம் போட முடியாம அவதிப்பட்ட காலமெல்லாம் போயி இப்போ 30" பேண்டு போட்டு பெல்டு போட்டாக்கூட கிழண்டி கீழ விழற மாதிரி ஆயிடிச்சு.

இப்படியே போனா, கொஞ்சம் பலமா காத்து அடிச்சாக்கூட நான் பறந்து போயிடுவேன். உடம்புல கொஞ்சம் வெயிட் போடனும். இன்னும் ஒரு மாசத்துல ஒரு 10 கிலோ வெயிட் போடறதுக்கு ஐடியா இருந்தா கமெண்டுங்க. ப்லீஸ்.

பி.கு: கீழ இருக்ற மாதிரி கமெண்டெல்லாம் ஒத்துக்க முடியாது.
1)ஐயோ வெயிட்ட குறைச்சீங்களா? எப்படி?
2)இந்த லிங்க பாரு, அந்த லிங்க பாரு

Friday, January 09, 2009

புரியாத புதிர்- பாகம் 3

வணக்கம்.

நேத்து நான் சர்க்கரையும், ஜூஸும் வாங்க ஒரு பிரபலமான கடைக்குப் போனேன். வாங்கிக்கிட்டு பில் போடும் போது, பில் போடுற அக்கா தன்னுடைய பெயர் கொண்ட பேட்ஜ பாத்தேன். அந்த அக்காவோட பெயரும் என்னோட பெயரும் ஒன்னு தான். அதுக்கு அப்றொம் நடந்த உரையாடலின் தமிழாக்கம் கீழே
"ஓ இது தான் உங்க பெயரா" - இது நான்.
"இல்ல, அந்தா போறான் பாரு அவனுடைய பெயர்" - இது அவங்க இல்ல, அவங்களோட மனசு, ஆனா எனக்கு கேட்டிடுச்சு. "ஆமா" - இது தான் அவங்க சொன்னது.
"என் பெயரும் அதேத்தான்"
"நீங்க இந்தியால இருந்து வந்திருக்கீங்களா?"
"ஆமா" - இது நான்.
"இந்தியால நிறைய மக்கள் இந்தப் பேர வச்சிக்கிறாங்க"
"அப்படியா?" இது என்னோட மனசாட்சி, அவங்களுக்குக் கேட்காது.

ஆவங்க தலைல ஒரு கருப்புத் துண்டு கட்டிக்கிட்டு இருந்தாங்க. இப்படிப் பலப்பேர நாங்க இங்க பாக்றதுண்டு. இவங்க எல்லாம் எந்த ஊருன்னு நானும் என்னோட ரூம் மேட்டும் அடிக்கடி யோசிச்சதுண்டு. ஒவ்வொரு முறையும் இந்த நாடா, இல்ல அந்த நாடான்னு எங்களுக்குள்ள குழப்பிக்கிட்டு இருப்பதுண்டு. இன்னைக்கு நல்ல சான்சு கேட்டே ஆகனும்னு
கேட்டுட்டேன்.

"நீங்க எந்த நாட்ல இருந்து வந்திருக்கீங்க" - நான்
"%^&)&^%" - அவிங்க
"சரியா கேக்கல, மறுபடியும் சொல்லுங்க" - நான்.
"ஆசாத் கேஷ்மீர்" -
"என்னது கேஷ்மீரா?"
"ஆமா"
"அது இந்தியால தானே இருக்கு"
"இல்ல இது பாக் பக்கத்துல இருக்கு"
"அப்படியா?" - இது மறுபடியும் இன்னோட மனசாட்சி

வீட்டுக்கு வந்து அந்த ஆசாத் கேஷ்மீர் எங்கயிருக்குன்னு பாத்தா, அது நம்ம POK ன்னு சொல்ற Pakistan Occupied Kashmir தான். அப்போ எந்த நாடுன்னு கேக்கும் போது ஒன்னு பாக்ன்னு சொல்லியிருக்கனும், இல்லேனா இந்தியான்னு சொல்லியிருக்கனும், அட என்னடா இது கூத்தா இருக்கேன்னு, நான் கொஞ்சம் கூகிள் பண்ணினேன். கூகிள் பண்ணும் போது தெரிஞ்சிக்கிட்ட விஷயங்கள் எல்லாமே உங்க எல்லோருக்கும் ஏற்கனவே தெரிஞ்சிருக்கலாம், ஆனா எனக்கு எல்லாமே புதுசாத் தான் இருந்தது.
- ஆசாத் கேஷ்மீர் அப்படீங்கறது ஒரு நாடு.
- 1948 லயே உருவாகியிருக்கு.
- அந்த நாட்டுக்குன்னு தனியா ஒரு பிரதம மந்திரி கூட இருக்காங்க. ஆனா எல்லாமே டம்மி தான்.
- அந்த நாடு தனியா இருந்தாலும், அது பாக் கீழத் தான் இயங்குது.

பள்ளில படிச்ச geographyல இந்த நாடெல்லாம் அட்லாஸ்ல எனக்கு காட்டவே இல்ல. இல்லேனா, நான் தான் இப்போ தப்பா புரிஞ்சிகிட்டேனா?

Saturday, January 03, 2009

லண்டன் ஐ - New Year Eve

31-Dec-2008

வணக்கம்.

என்னோட டிசம்பர்-2008 அமோகம் அப்படீன்னு ஏற்கனவே சொல்லியிருந்தேன். அதுல கடைசியா லண்டன் ஐ-ல வானவேடிக்கை பாக்கப் போறேன், நல்லபடியா வந்தா ஒரு பதிவ போடறேன், இல்லேனாலும் போடறேன், ஆனா கொஞ்சம் லேட் ஆகும்னு சொல்லியிருந்தேன். அந்த பதிவு தான் இந்த பதிவு. ஒரு ரெண்டு புகைப்படங்கள்ல என்னோட photoblog ல போட்டிருக்கேன்.

லண்டன் ஐ-ல வானவேடிக்கைப் பத்தி சொல்லனும்னா, ஒரு நல்ல இடத்தப் புடிச்சத் தான் வானவேடிக்கைய நல்லாப் பாக்கலாம். போன வருஷம் தான் எனக்கு முதல் அனுபவம். நாங்க நண்பர்கள் நாலுப் பேரு இருந்தோம். ஆறு மணிக்கெல்லாம் போய் இடத்த புடிச்சிட்டோம். போன வருஷம் ரொம்ப குளுரல. பெருசா ஒன்னும் ப்ளான் கூட பண்ணல. ஏன் டா ஆறு மணி நேரம் இருக்கனுமே, நைட் சாப்பாடு என்ன பண்ணுவோம்னு கூட யோசிக்காம போயிட்டோம். எங்க ரூம் மேட்டோட இன்னொரு நண்பனும் வந்திருந்தான். அவன் கொண்டுவந்தத நாங்களும் சாப்டு வண்டிய ஓட்டி 12 மணி வரைக்கும் தாக்கு புடிச்சிட்டோம். 12 மணிக்கு கவுண்ட் டவுன் எல்லாம் போட்டானுங்க. சரி ஒரு மணி நேரம் வேடிப்பானுங்கனு பாத்தா வெரும் 10 நிமிஷம் தான் வெடிச்சானுங்க. அதுக்கு 6 மணி நேரம் காத்திருந்தது மறக்க முடியாது. இனிமே Dec 31 லண்டன் ஐ-க்கு போக கூடாதுனு போன வருஷமே முடிவு பண்ணிட்டோம்.

ஆனாலும் இந்த வருஷம் போனோம். நண்பர்கள் மாறிப்போனதுனால அவங்களுக்கு இது முதல் தடவையா இருந்ததுனால கண்டிப்பா போகனும்னு சொன்னதுனால நாங்க கெளம்பினோம். குளுருல இருந்து தப்பிக்க கீழ மூனு முழுக்கால் டவ்சர், மேல ஏழு சொக்கா போட்டுக்கிட்டு , பசிக்கு சாப்பாடு எல்லாம் எடுத்துக்கிட்டு ஏழு மணிக்குத்தான் போனோம். எதுவும் ப்ப்ப்ளான் பண்ணித்தான் நாங்க பண்றதுன்னு உலகத்துக்கு காட்டனும்னு போனா, அங்க குளிரு பட்டைய கெளப்பிடிச்சு. நல்லாப் பாக்கனும்னு நினைச்சு ஆர்வக் கோளாருல முன்னாடி இடம் புடிச்சு நின்னுக்கிட்டேன். தேம்ஸ் நதி முன்னாடி 10 நிமிஷத்துக்கு மேல நிக்க முடியல. எப்படா மணி 12 ஆகும்னு காதலிக்கு காத்திருக்றதுப் போல காத்திருந்தேன். குளுருல கைக் கால் எல்லாம் ஊசியால குத்தின மாதிரி இருந்திச்சு, ஆனா கொஞ்சம் நேரம் தான் அப்படி இருந்திச்சு. அப்றொம் சுத்தமா சொர்னையே இல்லாதது போல ஆயிடிச்சு. மணி 12 ஆனதும் இருக்கிற உடல் நிலைய வெச்சிக்கிட்டு வான்வேடிக்கைய ஒரு 10 நிமிஷம் ஃபோட்டோ புடிச்சிக்கிட்டேன்.

வானவேடிக்கைய நல்லா ஃபோட்டோ புடிக்கலாம்ன்னு நினைச்சா, அதுவும் முடியல. ஒரு 20 வினாடில எல்லாமே புகை மண்டலமா ஆயிடிச்சு, ஆக நல்லா ஃபோட்டோவும் புடிக்கல. Smoke Filters அப்படீன்னு ஏதாவது இருந்தா சொல்லிட்டுப் போங்க.

10 நிமிஷ வானவேடிக்கைய முடிச்சிக்கிட்டு கெளம்பனும்னு பாத்தா, பக்கத்துல இருக்கிற ரயில்வே ஸ்டேஷன் எல்லாம் மூடிட்டு ரெண்டு மணிக்குத் தான் திறப்பாங்கனு சொன்னாங்க. 5 நிமிஷம் கிழக்கா நடந்தா இன்னோரு ஸ்டேஷன் இருக்கு அங்க போலாம்னு நடைய கட்டினோம். அந்தக் கூட்டத்த பாத்தா திருப்பதி கோவில பாத்த மாதிரித் தான் இருந்திச்சு. 12:30 நடக்க ஆரம்பிச்சு, 1:30 வரைக்கும் நடந்தோம். எத? 5 நிமிஷம் நடக்க வேண்டியத. அங்க போயிட்ட பின்ன, திருவிழால காணாம போன நம்ம நண்பர்கள தேடி ஒரு 45 நிமிஷம் செலவாச்சு. 2:15க்கு தான் எல்லோரும் ஒன்னு சேர்ந்து "அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் மாற்றங்கள்" பாட்டு பாடிட்டு ஒரு ரயில புடிக்கும் போது மணி 2:30. இதுக்கு நாங்க ஒரு மணி நேரம் நடக்காம இருந்திருந்தா மூடின ஸ்டேஷன் ரெண்டு மணிக்கே திறந்திருப்பாங்க. அங்கயே ரயில்ப் புடிச்சு வீடு சேர்ந்திருக்கலாம்.

வீடு போய் சேரும் போது மணி அதிகாலை 3:40. கூட வந்த புதுப் பயலுகக் கிட்டக் கேட்டா, இனி வரவே மாட்டோம், பெரிய தப்புப் பண்ணிட்டோம்னு சொன்னாங்க. இதுல இண்ட்ரெஸ்டிங் பாயண்ட் என்னனு கேட்டீங்கன்னா, அடுத்த வருஷம் நான் லண்டன்ல இருந்தா, அப்போ நண்பர்கள் கூட்டம் மாறினா, அவிங்க கிட்ட எவ்ளோ சொன்னாலும் கேக்காம, இது வாழ்க்கைல ஒரே தடவ பாக்ககூடிய நிகழ்ச்சி, பாத்தே ஆகனும்னு ஒத்த கால்ல நின்னுக்கிட்டு இருப்பாய்ங்க. போய்த் தான் ஆகனும். நான் லண்டன்ல அடுத்த வருஷமும் இருந்தா, இதே பதிவ மறு ஒளிபரப்பு செய்வேன். படிச்சிட்டு போங்க :)

வாழ்க லண்டன் ஐ.