Saturday, January 17, 2009

ஒரு சின்ன உதவி

வணக்கம்.

ஒரு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி என்னடா நாம இவ்ளோ மஸ்குலரா இருக்கோமேன்னு ரொம்ப பீலிங்கோட டயட்டிங் எல்லாம் இருந்து, ஜிம்க்கு எல்லாம் போயி, இன்னும் சில பல வேலைகளை செஞ்சி ஒல்லியா ஆனேன். நான் சொன்ன மஸ்குலர் வயிரு பாகம் மட்டும் தான். இருந்த தொப்பையெல்லாம் குறைக்க கிட்டத்தட்ட ஒரு ரெண்டு வருஷமாச்சு. 34" பேண்டு எல்லாம் போட முடியாம அவதிப்பட்ட காலமெல்லாம் போயி இப்போ 30" பேண்டு போட்டு பெல்டு போட்டாக்கூட கிழண்டி கீழ விழற மாதிரி ஆயிடிச்சு.

இப்படியே போனா, கொஞ்சம் பலமா காத்து அடிச்சாக்கூட நான் பறந்து போயிடுவேன். உடம்புல கொஞ்சம் வெயிட் போடனும். இன்னும் ஒரு மாசத்துல ஒரு 10 கிலோ வெயிட் போடறதுக்கு ஐடியா இருந்தா கமெண்டுங்க. ப்லீஸ்.

பி.கு: கீழ இருக்ற மாதிரி கமெண்டெல்லாம் ஒத்துக்க முடியாது.
1)ஐயோ வெயிட்ட குறைச்சீங்களா? எப்படி?
2)இந்த லிங்க பாரு, அந்த லிங்க பாரு

21 comments:

Anonymous said...

நீங்க ஒத்துக்காட்டியும், என்னோட கெல்வி இதுதான்..

எப்படி sir வெயிட் குறைச்சிங்க..please ஒரு பதிவு ப்ளிஸ்.

ஏன்னா நானும் 34" பேண்டு எல்லாம் போட முடியாம அவதிப்படுறேன் sir...

அதெப்படி நீங்க மட்டும் உதவி கேக்கலாம், நாங்க கேக்க கூடாதா?

உங்களுக்கு ஒர் டிப்ஸ்: வாரம் ஒருமுறை கண்டிப்பா Non-Veg சாப்பிடுங்க;

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
ஷாஜி said...
This comment has been removed by the author.
ஷாஜி said...

//நான் சொன்ன மஸ்குலர் வயிரு பாகம் மட்டும் தான். இருந்த தொப்பையெல்லாம் குறைக்க கிட்டத்தட்ட ஒரு ரெண்டு வருஷமாச்சு//

எனக்கும் இந்த தொப்பை தான் சார் ரொம்ப பிரச்சினையா இருக்கு..

Namakkal Shibi said...

இளைத்தவனுக்கு எள்ளு!
கொழுத்தவனுக்கு கொள்ளு!

Manu said...
This comment has been removed by the author.
nathas said...

Boss,
Don't try to gain 10kgs in a month or two. That is unhealthy and dangerous too.

Try to increase your weight gradually.

Truth said...

@Bhasha and ஷாஜி.

என்னோட பி.கு படிச்சபிறகும் இப்படி கமெண்டு அடிச்சதுக்கு என்னோட கண்டனங்கள். :-)

சரி, சொல்றேன் கேளுங்க. நான் ஒழுங்கா நைட் சாப்டு ஒன்ர வருஷம் ஆகுது. முடிஞ்சா ஃபாலோ பண்ணுங்க.

@Bhasha,
வாரத்துல ஒரு முறைக்கு மேலயே நான் non-veg சாப்டுக்கிட்டேத் தான் இருக்கேன்.

Truth said...

//Namakkal Shibi said...
இளைத்தவனுக்கு எள்ளு!
கொழுத்தவனுக்கு கொள்ளு!//

உங்களுக்கு லொள்ளா?

புரியுற மாதிரி சொல்லுங்கப்பு! :(

Truth said...

@Manu,

மாம்ஸ், நீ சொல்றாப்ல பண்ணா வயித்துல மட்டும் தான் மசுல்ஸ் வரும்.

Truth said...

@Nathas,
பாஸு, உண்மையாவா சொல்றீங்க? ஒரு வாரத்துல 10 kg குறைக்க முடியும்னு பல பேரு பண்றத பாத்து, சரி ஒரு மாசத்துல 10 kg கூட்டலாம்னு நினைச்சிட்டேன். சரி gradual-a கூட்றதுக்கு வழியேதும் உண்டா?

VJ said...

Sir,
I suppose unnkaluku nabakam irrukumnuuu ninaikurennnn....

Kojam unkaloda 2004 photovaiyum, 2005 photovaiyumm, eduthuu compare panni paruuga sir....

Ungalukaeee theriyum enna pannanumnuuu....

anthaaa oru varusathulaa enna pannikaloo athaaa thirubii pannuuuukaaa Sirrrr... :)

Truth said...

@VJ,

அதான் சொன்னேனெ, ஸ்டொமக் மசுல்ஸ் தான்னு :-)

Raji said...

ஒரு மாசத்துல பத்து கிலோவா ... sir என்ன நினைச்சிட்டு இருக்கீங்க... இப்படி blog ல கேட்டா ஆளு ஆளுக்கு ஒரு suggestion சொல்லி உங்கள confuse பண்ணிடுவோம்... பரவாஇல்லையா?

நட்புடன் ஜமால் said...

ஒரு பெரிய உதவி ...

பதிவிட்டு சொல்லுங்க ...

Namakkal Shibi said...

///Namakkal Shibi said...
இளைத்தவனுக்கு எள்ளு!
கொழுத்தவனுக்கு கொள்ளு!//

உங்களுக்கு லொள்ளா?

புரியுற மாதிரி சொல்லுங்கப்பு! :(//

:))

இளைத்து இருப்பவர்கள் எள் கலந்த உணவுப் பொருட்களை அதிகம் சேர்த்துக் கொண்டால் உடல் பருக்கும்!

பருத்த உடலை உடையவர்கள் கொள்ளு கலந்த உணவுப் பொருட்களை உண்டு வர உடல் பருமன் குறையும்!


நிறைய எள்ளுருண்டை சாப்பிடுங்கள்!

Namakkal Shibi said...

வெறுமனே உடலை பருமனடையச் செய்து கொள்வதில் பயனேதும் இல்லை! மாறாக இரத்த அழுத்தம், சர்க்கரை போன்ற விளைவுகளையே சிறுக சிறுக ஏற்படுத்தும்!

உடற்பயிற்சி மூலம் உடலை பருமடையச் செய்யுங்கள்! உடற்பயிற்சி நிலையத்திலேயே இதற்கான ஆலோசனைகளும் கிடைக்கும்!

இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...

என்ன sir முடிவு பண்ணி இருக்கீங்க?

Truth said...

//இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...
என்ன sir முடிவு பண்ணி இருக்கீங்க?

இன்னும் ஒன்னும் பெருசா முடிவு பண்ணலேங்க. வழி ஏதும் தெரிஞ்சா சொல்லுங்க.

பரிசல்காரன் said...

Me and My Notepad - இந்தப் பெயரை மாற்றி தமிழில் வைங்களேன்.. கூட்டம் கூடும்.

நல்ல எழுத்து நடை உங்களுக்கு அதனாலதான் சொல்றேன்...

மணிகண்டன் said...

அண்ணேன், நீங்க என்ன லூசா ? சரி, திட்டாதீங்க.

வெயிட் குறைக்கறது ஈசி. ஏத்தறது ரொம்பவே கடினம். ஆனா நீங்க muscles எல்லாம் வேணாம். fat இருந்தாலும் பரவால்லைன்னு சொன்னா :-

கண்டநேரத்துல சாப்பிடுங்க. வூட்டுல சோபா விட்டு நகராதீங்க. internet மற்றும் டிவி மட்டும் தான் உங்க பொழுதுபோக்கா இருக்கணும். கொஞ்ச நாளைக்கு weight machine ல வெயிட் செக் பண்ணாதீங்க. பேன்ட் போட்டா சுத்தளவு தெரிஞ்சிடும். அதுனால வேட்டி இல்லாட்டி கைலி கட்டிக்கிட்டு வேலைக்கு போங்க. வேலைக்கு போகாட்டி இன்னுமே சூப்பர்.

ஒரு மாசம் கழிச்சி என் கிட்ட feedback சொல்லுங்க.

ஒத்து வராட்டி இன்னும் ஒரு சுலப வழி இருக்கு. அப்புறமா சொல்றேன்.