Tuesday, December 30, 2008

டிசம்பர் -2008

வணக்கம்.
டிசம்பர் 2008 எனக்கு அமோகம்.
எங்க கொம்போனில வருசா வருசம் ரெண்டு செர்டிஃபிக்கேஷன் எழுதனுமாம். அப்டி எழுதி பாஸ் ஆனாத் தான் ப்ரொமோஷனுக்கு நாங்க எலிஜிபிள். ஆங் நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டீங்கனு நினைக்றேன். பாஸ் ஆனா ப்ரொமோஷன் இல்ல. எலிஜிபிள் மட்டுமே, ப்ரொமோஷன் கிடைக்காமலும் இருக்கலாம். கப் வாங்கினா கண்டிப்பா ப்ரொமோஷன் இல்ல. மூனு வருஷத்துக்கு ஒரு முறை ப்ரொமோஷன். இது ஆறாவது வருஷம் எனக்கு. எல்லா வருஷமும் பாஸ் பண்ணிட்டு வந்தேன்.

ரெண்டு செர்டிஃபிக்கேஷன்ல ஒன்ன் நவம்பர் மாசத்துலேயே பாஸ் ஆயிட்டேன். ரெண்டாவது செர்டிஃபிக்கேஷன் எழுத நான் பரிட்சை ஹால்ல ஆன்லைன் டெஸ்டு எடுத்துக்கிட்டு இருந்தேன். 75 மார்க்கு எடுத்தா பாஸ். 50 கேள்வி தான். கேள்விக்கு ரெண்டு மார்க்கு. கேள்விகள பாக்கும் போது என்னடா இவ்ளோ ஈஸியா இருக்குன்னு பயங்கர சந்தோசம் வேர. ஒரு மணி நேர பரிட்சைய 30 நிமிஷத்துல முடிச்சிட்டு 'சப்மிட்' கிளிக்கினப்போ 72% ன்னு வந்திச்சு. இன்னும் ரெண்டு கேள்விக்கு கரெக்டா அடிச்சியிருந்தா பாஸ் பண்ணியிருப்பேனேன்னு மனசுல நினைச்சிக்கிட்டு (புலம்பிக்கிட்டு) வீட்டுக்கு வந்தேன்.

பசியில உயிரு போற மாதிரி இருந்ததுனால ட்ரெஸ் சேஞ்சு பண்ணிக்கிட்டே தட்டுல சாப்பாட்ட போட்டுக்கிட்டேன். இடது கைல என்னோட ரொம்ப புடிச்ச வாட்ச்ச கிழட்டினேன்.

என்னோட வாழ்க்கைல நான் சந்தோஷமா கட்டின ரெண்டாவது வாட்ச் இது தான். முதல் வாட்ச் எங்க அக்கா வாங்கித் தந்தது. அதுக்கு அப்றோம் எங்க கம்பனில புதுசா வாட்ச் தந்தாங்க. அது ரொம்ப புடிச்சு போனதுனால அக்கா தந்த வாட்ச் அப்பா கைல மாட்டிட்டு, எங்க கம்பனி வாட்ச் என் கைல கட்டினேன். கிட்டத் தட்ட மூனு வருஷமா இந்த வாட்ச் தான்.

சரி ஃப்ளெஷ் பேக் போதும். என்னோட வாட்ச கிழட்டி இது கைல வெச்சிக்கிட்டு அதே இடது கைல தவா-வ (கடாய்) தூக்கினப்போ டப் டிப்ன்னு ஒரு சத்தம். வாட்ச் உடஞ்சிப் போச்சு.

எனக்கு இதெல்லாம் பாக்கும் போது கவுண்டமணி வடக்குப்பட்டி ராமசாமி கிட்ட குடுத்தக் காச திரும்பி வாங்கின கதைப் போலத் தான் தெரிஞ்சுது.எனக்கு மொபைல் ன்னா கொஞ்சம் (அதிகம்) க்ரேஸி. நோக்கியா பக்கமே போகாம சோனி எரிக்க்ஸனோடவே வாழ்ந்துகிட்டு இருந்தேன். இங்க வந்ததும், புதுசா ஒன்னு வாங்கலாம்ன்னு O2 - Xda Orbit ஒன்னு வாங்கினேன். இந்த ஊருல எது எடுத்தாலும் contract தாங்க. 18 மாசம் contract போட்டு மாசா மாசம் £35 அப்டீன்னு ஒரு contract போட்டு வாங்கினேன். ஆனா அதுல internet எல்லாம் use பண்ணி மாசா மாசம் £50 குறையாம கட்டிக்கிட்டு இருந்தேன். GPS, internet ன்னு எல்லா வசதியோட என்னோட லாப்டோப்ப விட அதிகமா use பண்ணினது இந்த மொபைல் தான். டச் ஸ்கீரின் ஃபோன் வேற. ஊருல எல்லார்கிட்டையும், இனி என்னால டச் ஸ்கீரீன் இல்லாம வாழவே முடியாதது போல சீன் போட்டுக்கிட்டு அலஞ்சிக்கிட்டு இருந்தேன். Jan 2009 ல contract முடிஞ்சப்றொம் prepaidக்கு மாறிடலாம். £50 இனி செலவாகாதுன்னு நெனச்சிக்கிட்டு பஸ்சுல வந்துக்கிட்டு இருந்தேன். ஐயோ வீட்டுல பால் இல்லயே ரூம்மேட்ட வாங்கிகிட்டு வரச்சொல்லலாம்ன்னு ஃபோன்ன எடுக்க பைல கைய விட்டா, ஃபோன் கானல. முடிஞ்ச வரைக்கும் தேடிப் பார்த்தேன் கிடைக்கல. இது வரைக்கும் சுமார் £900 இந்த ஃபோன்க்கு செலவு பண்ணியிருப்பேன். காசு போனத விட ஒரு கை உடைஞ்ச ஒரு ஃபீலிங்க. அதுக்கு அப்றொம் நான் ஆடர் பண்ண போற ஃபோன் இது தான். இன்னும் வாங்கல. ஃபோன் இல்லாம கூட வாழ்க்கை நல்லாத் தான் இருக்கு. :)

அதுக்கு அப்றோம் செர்டிஃபிக்கேஷன்க்கு மறுபடியும் எழுதிப்பாத்தேன். பாஸ் ஆகல. நடுல கொஞ்சம் நாள் உடம்பு சரியில்லாம படுத்துக்கிட்டு இருந்தேன். ஆக இந்த மாசம் எனக்கு ப்ரமாதம்.
நாளைக்கு Dec 31, லண்டன் ஐ ல வெடி வெடிப்பானுங்க, அத பாக்கப் போறேன். நல்ல படியா திரும்பி வரனும். வந்தா ஒரு நல்ல புகைப் படத்த என்னோட அடுத்த பதிவா என்னோட photo blog ல போடறேன். இல்லேனாலும் போடுவேன் ஆனா கொஞ்சம் லேட்டு ஆகும். :)
நல்ல விஷயம் நடக்கிறதுக்கு முன்னாடி பல தடங்கள் வரும்னு சொல்லியிருக்காங்க, (ஆனா யாரு சொன்னாங்கனு யாருக்கும் தெரியாது), அதனால 2009 நல்ல படியா அமையும்னு நினைக்கிறேன்.

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

14 comments:

ராமலக்ஷ்மி said...

//அதனால 2009 நல்ல படியா அமையும்னு நினைக்கிறேன்.//

அமையும்:)! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

நந்து f/o நிலா said...

அட இதெல்லாம் கல்யானத்துக்கு முன்னோட்டம்ப்பா... கல்யானத்துக்கு தயார் படுத்தறதுன்னா இப்படித்தான்.

சீக்கிரமே ஒரு பிகர் செட்டாகி இந்த வருசத்துலயே கல்யானம் ஆகி எங்கள மாதிரியே இம்சைப்பட வாழ்த்துக்கள்.

பழமைபேசி said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

புத்தாண்டு வாழ்த்துகள் தேவைதானா இப்பொழுது?

புன்னகை said...

முதல் முறையா உங்கப் பதிவுல ஒரு 30-40 வயலின் வாசிக்கிற அளவுக்கு சோகம் தெரியுது! "அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா"! எப்படியும் கல்யாணம் முடிஞ்ச பெறகு இத விட பெரிய பிரச்சனை எல்லாம் சந்திக்கப் போறீங்க ;) இது "ப்ராக்டிஸ் செஷன்"னு நெனச்சிக்கோங்க :P இன்னும் எத்தனை நாட்களுக்குத் தான் உங்க தேவதைய எங்க கிட்ட இருந்து மறைச்சு வெக்க போறீங்க? சீக்கிரமா கல்யாண சாப்பாடு போடுங்கப்பா! :) இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

Raji said...

WISH U A VERY HAPPY NEW YEAR.

Manu said...
This comment has been removed by the author.
Truth said...

நன்றி ராமலக்ஷ்மி :).
உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Truth said...

நந்து அண்ணாத்தே
சூப்பர் பிகர் என்ன மதிக்க கூட இல்லீங்களே :) நம்ம மூஞ்சிக்கு எத்த மாதிரி ஒன்னு புடிக்க என்ன வாழ்த்துங்க :)
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! அண்ணிக்கும், நிலாக்கும் வாழ்த்துக்கள பாஸ் பண்ணிடுங்க :)

Truth said...

//பழமைபேசி said...
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

நன்றி. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Truth said...

@புன்னகை
கிடார் கத்துக்க ஆசை வந்திருக்குங்க. சரி வயலினாவது வாசிக்கலாம்னு தான் :)
கல்யாண சாப்பாடு தானே? போட்டுட்டா போச்சு. நானா மாட்டேங்க்றேன்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Truth said...

@Raji
உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Truth said...

மனு அண்ணே, வாங்க. தத்துவம் எல்லாம் பலமா இருக்கே. :) உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

SurveySan said...

//இது வரைக்கும் சுமார் £900 இந்த ஃபோன்க்கு செலவு பண்ணியிருப்பேன்//
அடேங்கப்பா..

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Truth said...

@SurveySan
//இது வரைக்கும் சுமார் £900 இந்த ஃபோன்க்கு செலவு பண்ணியிருப்பேன்//
அடேங்கப்பா..

ஒன்னும் சொல்றதுக்கில்ல.

//இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
உங்களுக்கும் :)