Thursday, November 12, 2009

காம்போசிஷன்

இது புகைப்படங்கள் எடுப்பதைப் பற்றிய பதிவு. இனிமேல் இது போன்ற பதிவுகள் தொடரலாம். ஆமாங்க நேரமும், ஐடியாவும், உங்கள் ஆதரவும் இருந்தால் மட்டுமே இது தொடரும். புகைப்படங்கள் எடுப்பதைப் பற்றி நான் எழுதுவதற்கான காரணங்கள் பல. எனக்குள் புகைப்பட ஆர்வம் இருப்பதாலும், இப்படிப் பதிவுகளாக எழுதுவதால் நானும் மேலும் படிக்க முடியுமென்பதாலும், இப்படியாவது பதிவுகள் எனது ப்ளாக்கில் ஓடட்டும் என்றும் பல காரணங்கள்.
ஒரு முக்கிய முன்குறிப்பு - இங்கு நான் எழுதுவது அனைத்தும் என்னுடைய எண்ணங்கள் மட்டுமே, அதைக் கண்டிப்பாக அனைவரும் பின்பற்ற வேண்டும் என்பதில்லை.
சரி இனி பதிவிற்குச் செல்லலாம்.

முதலில் நாம் புரிந்து கொள்ளவேண்டியது புகைப்படம் எடுத்தல் என்பது ஒரு கலை, அறிவியல் கண்டிப்பாக இல்லை. எனவே தான் அப்படியொரு முன்குறிப்பு.

இந்தப் பதிவு காம்போசிஷனைப் பற்றியது. காம்போசிஷன் என்றால் என்ன? நாம் ஒரு மெயிலை கம்போஸ் செய்கிறோம் என்று எடுத்துக்கொள்ளுங்கள். மெயிலை கம்போஸ் செய்யும் போது, To, CC, BCC, Subject, Body, Signature போன்ற சமாச்சாரங்களைச் சரியாக அடிக்க வேண்டும், அதாவாது எது எங்கு இருக்க வேண்டுமோ அது அங்கு இருந்தால் நலம். CCயில் இருப்பவர் Toவில் போட்டாலும் மெயில் சரியாகச் செல்லத் தான் போகிறது. ஆனால் அது சரியான முறை அல்ல. ஒரு முறை எனது அலுவலகத்தில், எனது டீமைச் சார்ந்த ஒருவன் Subjectல் 'Hi, this is Venkat' என்று அடித்து ஒரு முக்கியமான ப்ராஜெக்ட் ரிலேடட் மெயிலை அனுப்பினான். மெயில் எனக்கு வரத் தான் செய்தது. ஆனால் அவன் என்னிடம் வந்து சொன்ன பிறகு தான் நான் படித்தேன். எனவே காம்போசிஷன் மிக முக்கியம். அதே சமயம் இதுவும் ஒரு கலை தானே.

சரி இனி புகைப்பட உதாரணங்களுக்குச் செல்வோம்.
நாம் ஒரு புகைப்படம் எடுக்கப்போகிறோம் என்றால் நாம் முதலில் முடிவு செய்ய வேண்டியது புகைப்படத்தின் சப்ஜெக்ட். நமது புகைப்படத்தைக் காண்பவர்களின் கண்கள் நாம் நினைத்த சப்ஜெக்டை மட்டுமே பார்க்கும் வண்ணமாகச் செய்ய வேண்டும். அவர்களின் கண்கள் நாம் நினைத்த சப்ஜெக்டை நோக்கி ஈர்க்கப்பட வேண்டும்.

நாம் ஒரு லேண்ட்ஸ்கேப் ஒன்றினை எடுக்கப் போகிறோம் என்று நினைத்துக் கொள்வோம். ஒரு லேண்ட்ஸ்கேப் என்பது பரந்து விரிந்த ஒரு நிலம்/மலை. இதில் சப்ஜெக்ட் என்று சொல்வதற்கு முக்கியமாக ஒன்றும் இல்லை. முழு புகைப்படமும் சப்ஜெக்ட் தான். இப்படிப்பட்ட புகைப்படங்களில் நமது நிழலோ அல்லது வேறொருவது நிழலோ மிகத் துல்லியமாக இருந்தால், பார்ப்பவர்களின் கண்கள் கண்டிப்பாக திசை மாறும்.

சில நேரங்களில் நாம் நிழலை மட்டும் புகைப்படம் எடுக்க நினைத்து தேவையில்லாமல் ஒரு ஓரத்தில் நமது கால்களோ, கைகளோ வந்து தொலைக்கும். அவற்றை தவிர்ப்பது நல்லது.


சில சமயம் நாம் ஏதாவது ஒரு சப்ஜெக்டை எடுக்க நினைக்கும் போது நடுவில் ஒரு சிலர் வருவது தடுக்க முடியாதது. அப்படிப்பட்ட இடங்களில் நாம் அவர்களை க்ராப் செய்தோ அல்லது அவர்கள் அங்கிருந்து சென்ற பிறகோ அல்லது அவர்களிடம் கேட்டுக் கொண்டு அவர்களை விலக்கி புகைப்படம் எடுக்க வேண்டும். கீழே இருக்கும் புகைப்படத்தைப் பாருங்கள். ஒரு காலத்தில் நான் எடுத்தது தான். நாயை மட்டுமே எடுக்க வேண்டும் என நினைத்து எடுக்கப்பட்டது தான், ஆனால் கூடவே ஒருவரின் பின்புறமும், இன்னொருவரின் கால்களும் வந்திருக்கிறது. காண்பவர்களின் கண்கள் இனி நாயை விட்டு திசை மாறுவது இயல்பே.



நாம் புகைப்படம் எடுக்கும் போது சப்ஜெக்டின் அருகே இருக்கும் பொருட்கள் நமது சப்ஜெக்டின் வடிவத்தையோ, பொருளையோ மாற்றிவிடுகிறது. உதாரணதிற்கு... படங்கள் இல்லை, எழுதுகிறேன், புரிந்து கொள்ளுங்கள். ஒருவர் ஒரு விளக்குக் கம்பத்திற்கு முன் நின்று கொண்டிருக்கிறார் எனக் கொள்வோம். அவரைப் புகைப்படம் எடுக்கும் போது அந்தக் கம்பம் அவரது தலைக்கு மேலே இருந்தால் தலையிலிருந்து முளைப்பது போல் காட்சியளிக்கும்.

பதிவு பெரியதாகிக் கொண்டே போகிறது. சரி இந்தப் பதிவில் எப்படி எல்லாம் புகைப்படம் எடுக்கக்கூடாதென்பது தெளிவாக(?) விளக்கியுள்ளேன். கேள்விகள் இருந்தால் பின்னூட்டமிடுங்கள். தெரிந்தால் பதிலளிக்கிறேன். தெரியவில்லையெனில், வாங்க கத்துக்கலாம்.

அடுத்தப் பதிவு எப்படி எடுத்தால் காண்பவர்களின் கண்களை ஈர்க்க முடியும் என்று பார்க்கலாம்.

23 comments:

கார்க்கிபவா said...

கலக்கறீங்க பாஸ்... இன்னும் சரியா சொன்னா படம் காட்டப் போறீங்க..

அடுத்த பாகம் போகலாம்.. ரை ரை..

ராமலக்ஷ்மி said...

நல்ல தொடக்கம். வாழ்த்துக்கள்!

அடுத்த பதிவுக்குக் காத்திருக்கிறோம்!

Truth said...

நன்றி கார்க்கி, ராமலக்ஷ்மி மேடம், அடுத்த பாகம் கூடிய விரைவில்...

Rajalakshmi Pakkirisamy said...

Good Start!

Manu said...

:-)

புன்னகை said...

உங்களது முயற்சிக்கு நல்வாழ்த்துக்கள்! நல்ல பதிவு! சீக்கிரமா அடுத்த பாகம் போடுங்களேன். உங்களுக்கு போட்டியா வரணும்ல அதுக்கு தான்! ;-)

Sankar said...

மறுபடியும் எழுத ஆரம்பிச்சிட்ட .. நல்லது மச்சி .. வாழ்த்துக்கள் ..

Truth said...

நாறி இராஜி, மனு, புன்னகை, சந்தி(ப்)பிழை.

அடுத்த பாகம் சீக்கிரமா போடறேன்.

Anonymous said...

Nice one,do continue posting, it is useful for the beginners like me:)

Truth said...

நன்றி மது.
இது பிகினெர்சுக்கு மட்டும் தாங்க. அடுத்த பாகம் விரைவில் போடறேன்.

IAMWHATIAM said...

english???

Truth said...

//AMIAHUMAN said...
english???

mmm, lemme think about it.

வெட்டிபையன் said...

Part 2 எப்போ release பண்றீங்க?

Truth said...

@வெட்டிபையன்

கூடிய சீக்கிரம். சில புகைப்படங்கள் தேவைப்படுது விளக்குவதற்கு. அதான் லேட் ஆகுது.

sri said...

:)

Truth said...

@sri
ஏங்க சிரிச்சுட்டு போறீங்க. நல்லா இல்லையா?

SurveySan said...

nice :)

Truth said...

நன்றி சர்வேசன்!

இசை நிலா said...

Thanks for the post.. Waiting for the next part..

sri said...

நல்ல தகவல்கள் Truth...... அதுக்குதான் தான் இந்த புன்சிரிப்பு........

Hari said...

உங‌க‌ பதிவுகல் ரொம்ப‌ அருமை என‌க்கும் புகைப‌ட‌ம் எடுப்ப‌தில் அர்வ‌ம் உல்ல‌து ஆனால் எப்ப‌டி எடுப்ப‌து என்ப‌தில் சிரு குல‌ப்ப‌ம். உங்க‌ல் ப‌திவுக‌ல் மூல‌ம் நானும் சிர‌ந்த‌ புகைப‌ட‌ம் எடுத்து உங்க‌லுக்கு அனுப்புகிரேன்.

Truth said...

நன்றி இசை நிலா
நன்றி ஸ்ரீ. உண்மைய இருந்த நல்லது :)
நன்றி ஹரி. கவலை படவேண்டாம். ரொம்ப சுலபம் தாங்க. எனக்கு தெரிஞ்சதெல்லாம் சொல்லித் தரேன். படிங்க.

Manivasagan said...

good.