Wednesday, November 05, 2008

பச்சை நிறமே பச்சை நிறமே

காலை 8:00

"ஆஹா, எவ்ளோ அழகா இருக்கு, பச்சப் பசேல்னு", புல்லைப் பார்த்து ரசித்தபடி ஆஃபீஸ்ல காலடி வைக்கும் போது, புல்லை வெட்டுகிற பெண்கள், என் கண்களில். "இவங்களும் பச்சப் புடவ கட்டியிருக்காங்க. அது சரி, இவங்களுக்கு எப்போமெ, பச்சப் புடவ தானே" என்று எனக்குள் சொல்லிக்கொண்டு, உள்ளே நுழைய, ஒரு பச்சோந்தி இடமிருந்து, வலம் போனது. நேற்று வரையில், சாம்பல் நிறத்தில் சுற்றிக்கொண்டிருந்தது, இன்று பச்சை நிறத்தில். "அது சரி, அப்பப்போ கலர மாத்தறவன் தானெ நீயி", என்று இன்னொரு முறை எனக்குள் முனுமுனுத்துக்கொண்டு, ஒன்றும் நடக்காதது போல் என்னுடைய சீட்டுக்குச் சென்று கொண்டிருக்கும் வேளையில்...

"அட இன்னுமாடா உன் சீட்டுக்கு போகல, எவ்ளோ நேரம் தான்டா நடப்பே" என்று நீங்கள் கேட்பது என் காதுகளில் விழாமல் இல்லை. அதற்கு என்னங்க செய்ய முடியும்? நம் படத்தின் கதாநாயகனை முதல் ஷாட்டில் காலைக் காட்டிவிட்டு, பிறகு ஐந்து நிமிடங்கள் தொடர்ந்து சண்டைப் போடவிட்டு, அந்த அனல் பறக்கும் சண்டையை முடித்தவுடன் ஷாட்டை அங்கு கட் செய்து, சுவிஸில ஓபன் செய்து தீபிகா படுகோனேவுடன் ஒரு பாட்டு வைக்கவா முடியும? இருக்கிற பட்ஜெட்டில் இவ்வளவுதாங்க முடியும். அட கதாநாயகன் யாருன்னு கேக்கறீங்களா? நீங்க தாங்க. ஆக இந்தக் கதையில் எங்கெல்லாம், 'நான்' அல்லது 'என்' என்று சொல்கிறேனோ, அங்கெல்லாம் உங்களை நீங்கள் நினைத்துக் கொள்ளுங்கள். சரிங்களா? இனி மேல படிங்க.

என்னோட சீட்டுக்குச் சென்று கொண்டிருக்கையில் என்னுடைய, செல்ஃபோனில 'பச்சை நிறமே பச்சை நிறமே' பாட்டு பாடியபடி ஒரு கால். இளம்பச்சை, கரும்பச்சை, பாட்டில் க்ரீன், கிளிப்பச்சை, அவ்வளவு ஏங்க, சினேகா பச்சையைக் கூட விடாமல், எல்லா வகையான பச்சை நிறங்களிலும் பச்சைப் பச்சையாகப் பேசும் விஜயின் ஃபோன் கால். இல்ல இல்ல வெறும் மிஸ்டு கால். எல்லா விதமான பச்சை ஷேடுகளில் பேசுவதால் அவனுக்கு இந்த ரிங்டோன். அவன் மிஸ்டு கால் தந்தால் "இங்க தான்டா இருக்கேன், வெயிட் பண்ணு வரேன்" என்று அர்த்தம். திரும்பிப் பார்த்துத் தேட, அவன் வேகமாக நடந்து வந்து கொண்டிருந்தான்.

எனக்கு ஒரு நிமிடம் பித்துப் பிடித்தது போல் இருந்தது. இது வரைக்கும், ராமராஜன் கூட, இந்த கலர் காம்பினேஷன்ல வந்ததில்ல. பச்சை சட்டை, பச்சை பேண்டு. பச்சை சட்டை ஒகே. ஆனா பச்சை பேண்டு? நான் பன்னிரெண்டாவது படிக்கும் போது, என்னோட பயாலஜி சார், ஒரு நாள் சிவப்பு நிறத்தில் பேண்ட் அணிந்த போது, "ஏன் சார், இந்த கலர்ல பேண்டு பிட்டு எங்க சார் கிடைக்குது" என்று கேட்டவன் நான். அதற்கு அவர், பதில் சொல்லாமல் சிரித்துவிட்டு சென்றார். அதன் பின்னர் பல கடைகளில் சிவப்பு நிறத்தில் பேண்டு பிட்டோ, அல்லது ரெடி மேட் பேண்டோ கிடைக்குமா என்று பல வருடங்கள் தேடியது தனிக்கதை. சரி இவன் பச்சை பேண்ட எங்கே வாங்கினான் என்று தெரிந்து கொண்டு அங்கேயேச் சென்று சிவப்பு பேண்டு கிடைக்குமா என்று பார்த்து விடலாம் என அவனிடம் கேட்டேவிட்டேன். அவன் அதற்கு பதில் சொல்லாமல் வரும் வழியில பார்த்த பெண்ணைப் பற்றி பேச ஆரம்பித்துவிட்டான்.

சரி, இடத்திற்க்கு போகும்போது, "குட் மார்னிங்"னு சொல்லிவிட்டு அனிதா இந்த பக்கமாக போனாள். திரும்பி "குட் மார்னிங்"னு சொல்வதற்க்குள் வாய் அடைத்துப் போனேன். அவளும் பச்சை நிற சல்வாரில். எனக்குள் சிறிது பயம் எட்டிப்பார்க்க ஆரம்பித்துவிட்டது. உள்ளே நுழைந்ததும் சுவரெங்கும் பச்சை. ஒரு வேளை பாசி பிடித்திருக்குமோ? இல்லை இன்டீரியர் டெகரேஷனாக இருக்குமோ? இல்லை பச்சை நிறத்தை சுவற்றில் அடித்தால் லாபம் கொட்டோ கொட்டென்று கொட்டும் என்று அதிகாலையில் டிவியில் எவனாவது சொல்லித் தொலைத்திருப்பானோ என பயத்துடன் கூடிய கேள்விகளுடன் மேலும் நடந்தேன்.

சிறிது யோசித்ததில், 'ப்ளு டே' என்று ஒரு நாள் எங்க ஆஃபீஸ்சில் கொண்டாடியது நினைவிற்க்கு வந்தது. அன்று அனைவரும், நீல நிறத்தில் சகலமும் அணிந்து ஆஃபீஸ்சிற்க்கு வந்ததும் நினைவிற்க்கு வந்தது. ஓ ஒருவேளை இன்று 'க்ரீன் டே'வாக இருக்குமோ என்று சரவணன் இருக்குமிடத்திற்க்கு சென்றேன்.

அவனிடம், "என்னடா சரவணன், இன்னைக்கு எதாவது 'க்ரீன் டே'யா"? என்று கேட்க, அவன் பச்சை சீட்டில், பச்சை உடை அணிந்து, பச்சை ஆப்பிளை வாய் நிறைய மென்று கொண்டிருந்தான். "என்ன கொடும சரவணா இது" என்று கேட்டுவிட்டு, ஒருவேளை உண்மையாகவே 'க்ரீன் டே'வாக இருக்குமோ என்று எனது மெயில் பாக்ஸ்சில் ஒரு முறை பார்த்துவிடலாமென்று என்னுடைய சீட்டிற்க்கு வந்தேன்.

வந்ததும் அதிர்ச்சி. என்னோட சீட்டு மட்டுமில்லை, எனது கம்ப்யூடரும் பச்சை நிறத்தில். மெயில் பாக்ஸ்சும் பச்சை நிறத்தில். ஒவ்வொரு மெயிலும் பச்சை நிறத்தில். 'க்ரீன் டே' பற்றி மட்டும் ஒரு மெயிலும் இல்லை. கண் பார்வை கோளாறுகளில் நான் படித்தது மையோப்பியா மற்றும் ப்ரொடனாப்பியா. இவை இரண்டில் ஒன்று பச்சை நிறத்தை மட்டும் அதிகமாக காட்டும், மற்றொன்று சிவப்பு நிறத்தை மட்டும் அதிகமாக காட்டும். வயதாக ஆக தூரப்பார்வை தானே வரும்? இதென்னடா புதுசா என்று பயந்து கொண்டு வெளியே வர, என் கண்களில் எனது உடையும் பச்சை நிறத்தில் தெரிந்தது.

சிதறடித்துக்கொண்டு என்னுடைய இடத்திலிருந்து வெளியே வர, என் கண்களில் அனைவரும், அனைத்தும் பச்சை நிறத்தில். எனது கைகளை பார்த்ததில், அவையும் பச்சை நிறத்தில். இது வரையில் சந்தேகமென்று நினைத்திருந்த மையோப்பியா அல்லது ப்ரொடனாப்பியா இரண்டில் ஒன்று என்னைத் தாக்கியுள்ளதென்பது உருதியானது.

பயம் ஒருபுறம் இருக்க, பச்சைத் தரையில் வேகமாக ஓடி, பச்சை நிறப் பலகையில், பச்சை நிறத்தில் 'ஆண்கள்' என் எழுதியிருந்த பச்சைக் கதவைத் திறந்து பச்சைக் கண்ணாடியில் எனது முகத்தைப் பார்க்க, எனது முகமும் 'ஹல்க்'கைப் போல் பச்சை நிறத்தில் இருந்தது. பச்சைக் கண்ணாடி முன் முழுமையாக சகலமும் பச்சை நிறத்தில் நின்று கொண்டிருந்தேன். வேறு வழியின்றி, பச்சை முகத்தைக் கழுவ நினைத்து, பச்சைக் குழாயிலிருந்து பச்சை நிறத்தில் வந்த நீரை எனது வலது பச்சைக் கையில் நிறப்பிக்கொண்டு, எனது இடது பச்சைக் கையால் எனது பச்சைக் கண்ணாடியை கழற்ற உலகம் அழகானது.

27 comments:

நந்து f/o நிலா said...

அடங்கொய்யால கலக்கற போ.

அடுத்த ஓ.ஹென்றி நீதான்.

கான்செப்ட் செம்ம.

நாதஸ் said...

:) :) :)

Nice !

நாதஸ் said...

//அடுத்த ஓ.ஹென்றி நீதான்.//

Nanthu annachi, yaarunga anth Henry ???

நந்து f/o நிலா said...

//
Nanthu annachi, yaarunga anth Henry //
கதையின் கடைசி வாக்கியம் அல்லது வார்த்தை மொத்த கதையயும் புரட்டி போட்டுவிடுவது போல கதை எழுதுபவருங்க.

ரொம்ப ரொம்ப பேமஸ் அவர்.

சர்வேசன் கூட இந்த மாதிரி கடைசி வரியில் ஒரு ட்விஸ்ட் வர மாதிரி போட்டி வெச்சாரு.

டெம்ப்டாகி நானும் முதல்முறையா ஒரு கதை எழுதி தொலச்சேன்.

அதுவும் கருமம் ரெண்டாவதாவோ மூணாவதாவோ வந்து தொலச்சுது.

ஆஃபீஸ்ல வேல வெட்டி ஒண்ணும் இல்லீன்னா மட்டும் படிச்சு பாருங்க. படிச்சுட்டு திட்டாதீங்க
http://nandhu1.blogspot.com/2007/12/blog-post_17.html


(என்னா வெவரமா வெளம்பரம் போட்டுட்டடா நந்து :P )

நந்து f/o நிலா said...

அப்பூ கிரண் எதுக்குப்பா இந்த கமெண்ட் மாடரேசன்? நாமள்ளாம் புள்ளபூச்சிங்க. யாரு வந்து திட்டி கமெண்ட் போட போறாங்க?

இல்ல உனக்கு எதிரிகள் ஜாஸ்தியா?

Truth said...

நந்து,

நன்றி. ஆனா நீங்க சொல்றத மட்டும், ஒ. ஹென்றி கேட்டிருந்தா தற்கொலை பண்ணி இருப்பாரு. :)

ஹ்ம்ம், உங்க நச்சுனு ஒரு கதை படிச்சிருக்கேன். உண்மையாவே நச் தான். :)

கமெண்ட் மாடரேசன் எனக்கு வேணும் பாஸு, இல்லேன, பழைய போஸ்டுக்கு வர கமெண்ட்ஸ்கு ரிப்ளை பண்ண மறந்துடுவோம் :)

உதாரணத்துக்கு --
உங்க நச்சுனு ஒரு கதைக்கு,
------------------
truth said...
நந்து
என்ன சொல்றதுனே தெரில. முதல் நாலு வரிய படிச்சிட்டு, இருக்கிற வேல எல்லாத்தையும் விட்டுட்டு படிக்க வெச்சீங்க. என்ன சொல்றது? u r great!

~உண்மை

22/10/08 3:37 PM
-------------------

நான் அக்டோபர் 22ஆம் தேதி அடிச்ச கமெண்டுக்கு நீங்க இன்னும் ரிப்ளை பண்ணல :) ஏனா, கமெண்டு மாடரேசன் நீங்க பண்ணல.


ஸ்ஸ்ஸ்ஸ், இப்போ விளம்பர இடைவேளை. :)

Truth said...

@நாதஸ்,

நன்றி, தல.

Balaji said...

Dei.. unnaiya ninacha enakku perumaiya irukku da.

Anonymous said...

Kiran, to be very frank first I thot ennada ithu, chumma pachai pachai nu solraangannu? But paathi padichathum, viruviruppa irunthuchu. Antha pachai kannadiya naan konjam kooda ethir paarkala.
Super twist. Hats off Kiran

Sankar said...

மொத்ததில நல்ல கதை.

பத்து வருஷமா உன்னைத் தெரிஞ்சதாலா, இல்லை பக்கத்திலே வருஷக்கணக்கா பெஞ்சு தேச்சதாலான்னு தெரியல. பாதி படிக்கறதுக்குள்ளேயே நீ எங்கே வரேன்னு புரிஞ்சு போச்சு. இருத்தாலும் முழுசா படிக்க வச்சுது உன்னோட சாமர்த்தியம்.

நீ புஷ்பா மேம் கிட்ட கத்திரிக்கா தக்காளி லாஜிக் சொல்லும் போதே தெரியும்டா நீ நல்லா கதை (விடுவேன்னு) சொல்லுவேன்னு.

கண்ல பட்ட சில திருத்தங்கள்.
பாட்டிள் = பாட்டில்
பயோலஜி = பயாலஜி
அனித்தா = அனிதா

மேலே வை (KEEP IT UP?) :-)

ராமலக்ஷ்மி said...

படித்துக் கொண்டே வருகையில் உங்கள் வலைப்பூவின் பின்னணி நிறம் கரும் பச்சை ஆயிற்று. திகைத்து மேலே வாசிக்க எழுத்துக்கள் இளம் பச்சையில் தெரிய ஆரம்பித்தன. அப்போது பார்த்து 'பழங்களை விடவும் "பச்சை" காய்கறிகள் விலை கிடுகிடு உயர்வு' என்ற டிவி செய்தி காதில் விழுந்தது. சரிதான் வாசிப்பவருக்கும் வந்து விடுமோ 'மையோப்பியாவோ ப்ரொடனாப்பியாவோ' என திகிலுடன் கடைசி வாக்கியத்தை படித்து முடிக்கையில் 'என் உலகமும் அழகானது' :)))!

பாராட்டுக்கள் ட்ரூத்!

Arasu said...

Nice story.

Truth said...

@பாலாஜி,
//
Balaji said...

Dei.. unnaiya ninacha enakku perumaiya irukku da.//

குடுத்த காச விட நெறயவே பேசிட்டீங்க. நன்றி. :)
நிங்க ஒன்னும் தூக்கத்துல இல்லயே :)
btw, எருமை னு சொல்ல வந்து பெருமைனு சொல்லிடீங்க கரெக்டா? :)

Truth said...

@Raich

ரொம்ப நன்றிங்க

Truth said...

@சங்கர்,

ஒரே குட்டைல இவ்ளோ வருஷமா ஊறினா ஒரே மாதிரி தான் தோனும்னு நெனைக்கிறேன.

நாம விளயாடின "மாடும், எருமையும்" பத்தி, ஒரு போஸ்டு போடு டா, உனக்கு டைம் இருக்கும் போது :).
இத விட மொக்கத் தனமா காலேஜுல எவனும் விளயாடிய்ருக்க மாடானுங்க.
குமாரு ஒரு படி மேல போயி, இதுக்கு code எழுதனும்னு ஒத்த கால்ல நின்னதெல்லாம் மறக்கமுடியாது :)


திருத்தங்கள் பண்ணிடறேன். நன்றி.

Truth said...

@ராமலக்ஷ்மி,

வாங்க. கண்ணு ஒன்னும் கெட்டுப் போகலயே :) பாராட்டுக்கு நன்றி. :)

Truth said...

@Arasu,


நன்றி அரசு.

நிலா said...

//நான் அக்டோபர் 22ஆம் தேதி அடிச்ச கமெண்டுக்கு நீங்க இன்னும் ரிப்ளை பண்ணல :) ஏனா, கமெண்டு மாடரேசன் நீங்க பண்ணல. //

மாமா இதுக்கு நான் பதில் சொல்றேன்.அதெல்லாம் அப்பப்போ கமெண்ட் வந்த உடனே மெயிலுக்கும் வந்துடும்.

எங்கப்பா சரியான சோம்பேறி. என் ப்ளாக்குக்கு வர கமெண்ட்சுக்கே ரிப்ளை பண்ண வந்து டைப்படிச்சு கொடுக்க மாட்றார் :(

Anonymous said...

நாங்க யாரு... நாங்க கொஞ்ச கதைய படிச்ச உடனே கண்டு பிடிச்சிட்டோம்ல. உங்க கிட்ட இருந்து கொஞ்சம் நிறைய எதிர்பார்கிறோம்.

தமிழில் இந்த முறை முன்னேற்றம் தெரிகிறது :) :)

Truth said...

@நிலா,

அப்டியா மா? :) நானும் அந்த மெயில் மாட்டெர தடவி பாக்கறேன்
:)

Truth said...

@ராஜி,

நன்றி. நிறைய எல்லாம் எதிர்பாக்காதீங்க. அது 'குசேலன்' கணக்கா ஆயிடும்.

நல்ல வேளை, நான் இந்த பதிவு பெருசா இருக்கே, ரெண்டு பாகமா போடலாம்னு நெனச்சேன். மீசைல மண்ணு ஒட்டியிருக்கும் :)

விலெகா said...

அடங்கொய்யால கலக்கற போ.

அடுத்த ஓ.ஹென்றி நீதான்.

கான்செப்ட் செம்ம.,
ரீப்பீட்டு

Truth said...

@விலெகா

நன்றி. ஆனா நீங்க சொல்றத மட்டும், ஒ. ஹென்றி கேட்டிருந்தா தற்கொலை பண்ணி இருப்பாரு. :)

ரிப்பீட்டு. :)

குடுகுடுப்பை said...

நல்லா இருக்குங்க

Truth said...

@குடுகுடுப்பை

நன்றிங்க...

Arasi Raj said...

romba nalla irukku....muthallaye ipdi than simisham panna porengannu therinjuchchu..irunthaalum suspense vidaama padippomennu padichchu mudichchen...

Truth said...

நன்றி நிலாம்மா