Monday, November 03, 2008

புரியாத புதிர்- பாகம் 1

அறியாமையா என்னனு தெரியலை, எனக்கு பல விஷயங்கள் புரியவே மாட்டேங்குது. அப்படி பல விஷயங்கள் இருக்கிறதனால இந்தப் பதிப்ப, பாகம் 1 அப்படின்னு பேரு வெச்சிருக்கேன்.

இலங்கைத் தமிழர்களுக்கான சினிமாத்துறை மக்கள் உண்ணாவிரதம்.
ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், விஜய், அஜித் இப்படி பல பேர் பேசிட்டுப்போனாங்க. இது ஒரு உணர்ச்சிய வெளிப்படுத்திற போராட்டம்னு சொல்றாங்க. ஆனா எதுக்கு? இவங்க இங்க பேசறத பாத்து, இலங்கை அரசாங்கம் "ரஜினி சொல்லிட்டாரு, கமல் சொல்லிட்டாரு, மற்றும் பல நடிகர்களெல்லாம் சொல்லிட்டாங்க. அதனால போர நிறுத்திட்டு வீட்டுக்கு வாங்கடா" அப்படினு இராணுவத்திடம் சொல்லப்போறதில்ல.

இது, உண்ணாவிரதம் இருந்த சினிமாத்துறை மக்களுக்கும் நல்லாவே தெரியும். மேடை போட்டு பேசி பன்சு டயலாக் அடிக்கும் போது, ரசிகர்கள் கைத்தட்டி ஆர்ப்பாட்டம் பண்ணி சிரிச்சிக்கிட்டு இருக்காங்க. ஆஹா மக்களே, இந்தக் கூட்டம் எதுக்குனே மறந்துட்டீங்களே.

காவிரிப் பிரச்சனை இருக்கும் போது நெய்வேலிக்கு போய் மின்சாரத்தை நிறுத்தினாங்க. ஒகேனக்கல் பிரச்சனையில் சினிமாத்துறைல இருக்கிறவங்க உண்ணாவிரதம் இருந்தாங்க. இப்போது இலங்கைப் பிரச்சனையிலும் இராமேஸ்வரத்துல, சென்னைல மேட போட்டும், உண்ணாவிரதமும் இருந்தாங்க. ஆனா எல்லா சம்பவங்களிலும், ஒன்னுமே நடக்கலேங்க. அடுத்த நாள் செய்தியிலும், பத்திரிக்கையிலும் இவங்க, அவங்க பேசினாங்கனு படம் வந்ததே தவிர, பிரச்சனைக்கு தீர்வு வரல.

ஆக பிரச்சனைக்கு இது தீர்வு இல்லேனு முடிவாகுது. அப்போ என்ன பண்ணனும்? ஒரு வேள சேரன் சொன்ன மாதிரி, "இந்த பிரச்சனை தீரும் வரை இனி தேர்தலில் வாக்களிக்க மாட்டோம்", அப்படினு வாக்குறுதி எடுத்துக்கிட்டா? எடுத்த அடுத்த விநாடி இதற்கு தீர்வு கிடைக்க வாய்ப்பு இருக்கு. இத சேரன் இராமேஸ்வரத்துலயே தெள்ளத்தெளிவா, எல்லோருக்கும் புரிகிற மாதிரி, நெத்தில செம்மட்டையால அடிச்சு சொன்னாரு. அவருக்கு ஒரு சபாஷ். ஆனா இத டி.வில, நேர்ல, இண்டெர்னெட்ல எல்லாம் பாத்துட்டு கூட, சென்னைல நடந்த உண்ணாவிரதத்துல பன்சு டயலாகுக்கு எதுக்கு கைத்தட்டி, விசில் அடிச்சு, சிரிச்சீங்க ரசிகர் பெருமக்களே?

எனக்கு சத்தியமா புரியல. உங்களுக்கு புரிஞ்சா கமெண்டுங்க.

7 comments:

Sankar said...

இந்தியப் பெருங்கடல் பகுதியில நாம STATEGIC'a சில விஷயங்கள் பண்ணித்தான் ஆகனும். அது தவிர, இரண்டு பேரு சண்டை போட்டுட்டு இருக்கும் போது, அதுல ஒருத்தன் தெரிஞ்சவனா இல்ல சொந்தக்காரனா இருந்தா, அட விடப்பா அப்படின்னு ஒரு பாசம் கலந்த உரிமையோட சொல்லுவோமெ, இலங்கைப் பிரச்சனை'ல அவ்வளவு தான் நம்ம லிமிட்'ங்கறது என்னோட சிறுபிள்ளைத் தனமான கருத்து.
படிச்சவங்க நிறைய பேரு ஏற்கனவே ஓட்டு போடறது இல்லை (எனக்கு இன்னும் வாக்காளர் அடையாள அட்டை வரலை. அது வேற விஷயம்). அவங்களுக்கு புதுசா ஐடியா குடுக்காதீங்கப்பா.

Anonymous said...

அவங்க என்ன பண்ணுறாங்கன்னு அவங்களுக்கே தெரியாது... யாரும் முழு மனதோட, முழு ஈடுபாட்டோட எதுவுமே செய்யல... எல்லோரும் சேர்ந்தா என்ன வேணும்னாலும் பண்ணலாம் ... ஆனா நாம யாரும் ஒற்றுமையா ஒரு நல்லது கூட பண்ணினது கிடையாது ... இந்த மாதிரி meeting நடந்துகிட்டே தான் இருக்கும். எல்லோரும் வேடிக்கை பார்த்துக்கிட்டு தான் இருக்க போறோம்

Manu said...

உண்மையே....
நீங்க சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. திரைப்பட துறையினர் நடத்திய இந்த போராட்டம் முழுவதுமாக இலங்கை தமிழர்களுக்காக மட்டும் இல்லை. இவர்களின்(திரைப்பட துறையினர்) தற்பெருமையை எடுத்து காட்டுகிற போராட்டமாக தான் தோன்றியது. எடுத்துகாட்டாக அஜித் பேசிய போது அவர் அங்கே துன்பங்களை அனுபவிக்கிற இலங்கை தமிழர்களை பத்தி பேசாமல், தனது சொந்த விஷயங்களை மட்டுமே பேசினார்.

இலங்கயில் மகாத்மா காந்தியின் அறபோரட்டம் செல்லுபடி ஆகாது. சுபாஷ் சந்திர போசின் மகத்துவம் மட்டுமே செல்லும்.

ராமலக்ஷ்மி said...

உங்கள் கருத்து இது. சொல்ல உரிமை இருக்கிறது. ஆனால் ஒரு விஷயம் யோசித்துப் பாருங்கள். இந்த உண்ணாவிரதங்கள் போராட்டங்கள் ஆகியவை நடிகர்களுக்கு சமூக நிர்ப்பந்தமாகி விட்டிருந்தாலும் கூட அவர்கள் எழுப்பும் குரல் நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தத்தான் செய்யும் என்பது என் கருத்து.

ஏன் நாம் இன்று சமூகத்தைச் சாடி எழுதும் கதை, கட்டுரை, கவிதைகள் எத்தனை பேரை எட்டப் போகிறது.. என்ன பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விடப் போகிறது.. என்ன பெரிய தீர்வு கிடைத்து விடப் போகிறது..நம் ஆதங்கங்களின் வடிகாலாகத்தான் அவை பெரும்பாலும் இருந்து விடுகின்றன. அதற்காக நம்மால் எழுதாமல் இருக்க முடிகிறதா?

அப்படி இருக்க இவர்கள் பிரபலங்களாக இருப்பதால் இவர்கள் சொல் அம்பலம் ஏறும். அந்த சொற்கள் ஏற்படுத்தும் சலசலப்பு சிறிதோ பெரிதோ சம்பந்தப் பட்டவரைச் சிந்திக்க வைக்கும். இது என் கருத்து.

Truth said...

என்ன பொருத்த வரையில், சினிமாத்துறை பண்றது சரி தான். அவங்களாவது ஏதாவது பண்றாங்க. ஆனா, அவங்க எதுக்காக பேசறாங்கனு புரிஞ்சிக்காம, சும்மா கைத்தட்டி, விசில் அடிச்சிட்டு, சிரிச்சிட்டு, அடுத்த நாள் மறந்து போற ரசிகர் கூட்டத்த பாக்கும் போது தான், மனசு கஷ்டமா இருக்கு. மக்களான நாமும் எதாவது பண்ணனும். ரசிகர்கள் வந்து சிரிச்சிட்டு போறது சினிமாத்துறையின் இந்த உண்ணாவிரத்தின் நோக்கத்தை கேலி செய்வது போல எனக்கு தெரியுது. இத யாரால தட்டி கேக்க முடியும்? நான் சொன்னா, 'என் தலைவனை கிண்டல் பண்றியா' னு என்ன திட்டுவாங்க. ஆனா என்னோட கோபம் நடிகர்கள் மேல இல்ல. உண்ணாவிரத நோக்கத்தை தப்பா புரிஞ்சிகிட்ட 'சிலர்' மேல

ராமலக்ஷ்மி said...

புரிகின்றது. அந்தச் 'சிலர்' அபிமான நட்சத்திரங்களை நேரில் பார்க்க வந்தவர்கள். நிகழ்ச்சியின் நோக்கத்தை மனதில் இருத்திக் கொள்ளாமல் அவ்வாறு நடந்தது அவர்கள் அறியாமையைக் காட்டுகிறது. நல்லது நடக்கையில் இது மாதிரியான சில சங்கடங்கள் தவிர்க்க முடியாததாகி விடுகின்றன.

Truth said...

@ராமலக்ஷ்மி,

நீங்க சொல்றது எனக்கு புரிகிறது. ஆனா என்னானு தெரியல, ஒரு இடத்துல பல பேர் செத்துக்கிட்டுருக்கிறாங்க, அதப்பத்தி பேசும் போது சில பேர் சிரிக்கிறத பாத்து மனசு கஷ்டமாத்தான் இருக்கு.

//"நல்லது நடக்கையில் இது மாதிரியான சில சங்கடங்கள் தவிர்க்க முடியாததாகி விடுகின்றன."

இப்படித்தான் மனச தேத்திக்கனும்! :)