Thursday, November 13, 2008

நமது பள்ளிகளும், பிள்ளைகளும்

வணக்கம்
இந்தப் பதிவ ரொம்ப அவசர அவசரமா எழுதறதால, கண்டிப்பா நெறய தவறுகள் இருக்கும். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிகோங்க.

அது வேற ஒன்னும் இல்லேங்க. "வீட்டுப்பாடம் பெற்றோர்களுக்கா? பிள்ளைகளுக்கா!!!" அப்டீங்கற பதிவ நந்து இங்க இருக்கு, படி, படிச்சிட்டு மனசுல தோன்றத கமெண்டு அடீனு சொன்னாரு. அதுக்கு கமெண்டு அடிக்கனும்னு பாத்ததுல மனசுல நெறய விஷயங்கள் பட்டிச்சு. அவ்ளோவும் கமெண்டா போட முடியாதுனுத்தான் ஒரு பதிவாவே போட்றேன்.

இதுல முக்கியமான விஷயம் என்னான, எனக்கு சரீனு படறதத்தான் எழுதறேன்.
முதல்லெ, வீட்டுப்பாடம் (இனி இத வீ.பா னு தான் சொல்லுவேன்) வேணுமானு கேட்டா, கண்டிப்பா வேணுங்க. ஆனா வீ.பா என்னானு தான் நாம முடிவு பண்ணனும். அது பொது அறிவ ஊட்ற மாதிறி இருக்கனும். பள்ளிபுத்தகள்ல இருக்றதையே வீட்லயும் பண்ணச் சொன்னா, வீட்ல பண்ணவேண்டியத, பள்ளிலயா பண்ணமுடியும்? இதுல என்னக் கொடுமைனா, ஆனுவல் (Annual தமிழ்ல தெரிலீங்க) பரிட்சை முடிஞ்சப்பறம் கூட, handwriting நல்லா இருக்கனும்னு பழைய புத்தகங்கள்ல இருக்கறதையே எழுதச்சொல்லுவாய்ங்க. ஒவ்வொரு நாளும் ஒரு பக்கம் எழுதனுமாம். நானும் கேண மாதிறி எழுதியும் இருக்கேன். முழுசா முள்ளாங்கி பத்த மாதிறி 60 நாளையும் வீனடிச்சிருக்கேன். என்னத்த சொல்ல. லீவு முடிஞ்சி பள்ளிக்குப் போனா, அதப் பத்தி வீ.பா கொடுத்தவங்களும் மறந்திருப்பாங்க. இப்படித் தான் நானும் வளந்தேன்.

என்னப் பொருத்த வரையில் வீ.பா என்ன தரனும்? உன்னோட இஷ்டப்படி எதாவது பண்ணு. வரையவோ, இல்ல handwork, இல்ல பாட்டு பாட்றதோ, இல்ல, கிரிக்கெட் விளயாடறதோ அப்படி என்ன வேணும்னாலும் பண்ணு. முக்கியமா, இந்த வரைஞ்சது, handwork பண்ணினத பாத்தவுடனே, இத பண்ணது யாருனு தெரிஞ்சிடும். புள்ள பண்ணியிருந்தா எவ்ளோ அசிங்கமா இருந்தாலும் முழு மதிப்பெண் கொடுக்கனும். இதுவே அப்பவோ, அம்மாவோ பண்ணியிருந்தா, அவங்கள கூட்டியாந்து, என்ன ப்ரச்சன உங்களுக்கு, குழந்தைக்கு கொடுத்தத நீங்கயேன் பண்றீங்க? உங்களுக்கு வேல இல்லயானு கேக்கனும். அத விட்டுட்டு, மாத்தி பண்ணா, நந்து சொன்ன மாதிறி குழந்தை ப்ராயிலர் கோழியாத் தான் வளரும். இது ஒன்னுல இருந்து அஞ்சாவது வரைக்கும் செல்லும். ஆறாவதுக்கு மேல, நாட்ல என்ன நடக்குது, அது அரசியலோ விஞ்ஞானமோ, விளையாட்டோ என்ன வேணும்னாலும் இருக்கட்டும், அதப் பத்தி தெரிஞ்சிட்டு வாங்கனு சொல்லலாம். நான் உக்காந்துகிட்டு தாங்க இத எழுதறேன். எனக்கே இவ்ளோ தோனுதுனா, ரூம் போட்டு, மல்லாக்காப் படுத்து, குப்புறப் படுத்து, நின்னு, நடந்து, உக்காந்து யோசிக்கிறவங்களுக்கு இன்னும் நெறயவே ஐடியா வரும்.

"பட்டு, ஸ்கூல்ல சிங்கிங் காம்பெடிஷன்ல ஃப்ஸ்டு ப்ரைஸ் வாங்கினியே, அந்த பாட்ட அங்கிள்க்கு பாடி காட்டுமா" அப்டீனு சொல்றத விடனும். "எங்க பையன் மேத்ஸ்ல எப்பமே செண்டம்" அப்டீனு கணக்கே வராத பையனோட அம்மாகிட்ட சொல்றத அறவே ஒழிக்கனும்.

அடுத்து நம்ம சிலபஸ்க்கு வருவோம். நாம பத்தாவதுல படிச்சத இப்போ இருக்ற குழந்தைங்க அஞ்சாவதுல படிக்குதுனா, (இத சொல்லும் போதே எனக்கு ரொம்ப வயசான மாதிறி ஒரு பீலிங்கு, அது உண்ம தானடானு சொல்றீங்களா? :-) ) அதுக்கு அர்த்தம், இப்போ நெறய புதுசு புதுசா கண்டுப்பிடிச்சிருக்காங்க. அவ்ளொ தான். சிலபஸ் எல்லாம் ஒன்னும் அதிகம் இல்லேங்க. நாம படிச்சத விட இப்போயிருக்ற புள்ளைங்க நெறய படிக்றதுல தப்பு இல்ல. ஆனா, அதச்சொல்லித்தற வாத்தியாருங்கள்ல எத்தன பேருக்கு இந்தப் புது சிலபஸ் புரியுதுனு தான் மேட்டரே.

ரெயில்வே ரிசர்வேஷன் ஃபார்ம் ஃபில் பண்ண தெரில, வௌச்சர்னா என்னனு தெரில, இது தெரில, அது தெரில ஆனா, சிலபஸ் மட்டும் அதிகமா இருக்குனு சொல்றதுல அர்த்தமே இல்லேங்க. சரியாச் சொல்லித்தற வாத்தி இல்ல. அவ்ளோ தான். Integration, differentiation, taylor approximation, rho, vega, tau derivatives எல்லாம் நான் படிக்கும் போது, இத எல்லாம் எதுக்குத் தான் டா படிக்றோம்னு எரிச்சலோடு தான் நானும் படிச்சேன். அப்போ புரியல. இன்னைக்கு என்னோட ப்ரோக்ராம்ல taylor approximationம், differentiationம் இருக்குனு சொன்னா நீங்க நம்பித் தாங்க ஆகனும். புரியாம படிக்க சொல்லித்தந்தத தப்புன்னும் சொல்ல முடியல. ஏனா அவங்களுக்கு தெரிஞ்சது அவ்ளோ தாங்க. இப்போ எனக்கு இத பத்தி நல்லாவேத் தெரியும். ஆனா இங்க வாங்குற சம்பளம் பள்ளிலயோ, கல்லூரிலயோத் தந்தா பாடம் நடத்த நான் தயார்.

இத படிக்றவங்க பலப்பேர் ஏன்ஸ்டீனோட "தியரி ஆஃப் ரிலேட்டிவிட்டி" பத்தி படிச்சிருப்பீங்க. சொல்லப்போனா, அது ஆறாவதோ, எட்டாவதோ படிக்கும் போதே வந்திச்சு. கரெக்டா? ஒரு சின்ன கேள்வி. ஒரு ரெண்டு கைக்கடிகாரங்கள் எடுத்துக்குவோம். ரெண்டு கடிகாரத்திலும் ஒரே டைம செட் பண்ணிடுவோம். அதாவது ரொம்ப ரொம்பச் சரியா ஒரே டைம். இதுல ஒரு கடிகாரத்த ஒரு செயற்கைக்கோள்ல வெச்சு அனுப்பிடுவோம். அது உலகத்த விட்டு ஒரு அம்பது வருஷம் வெளிலயே சுத்தட்டும். அம்பது வருஷம் கழிச்சுப் பாத்தா ரெண்டு கடிகாரமும் வெவ்வேரு டைம காட்டும். வெளில சுத்தின கடிகாரம் கொஞ்சம் டைம குறைவாக் காட்டும். எப்படி தெரியுமா? ஒன்னுல பேட்டரி காலி ஆச்சுனு மொக்கத்தனமா எல்லாம் சொல்லக்கூடாது. ஒரு பொருள் பயணிக்குதுன்னா அது டைம சேமிக்கும். ஆக ஒரு மனுஷன் அந்த செயற்கைக்கோள்ல இருந்திருந்தா, அவன் திரும்பி உலகத்துக்கு வரும் போது உலகம் வெள்ளிக்கிழமையா இருக்கும், ஆனா அவனோட கடிகாரம் படி அது இன்னும் வியாழக்கிழமையாக் கூட இருக்கலாம், ஆனா கண்டிப்பா, உலகத்துல இருக்கிற கடிகாரத்த விட டைம் கம்மியாத்தாங்க காட்டும். அது தாங்க தியரி ஆஃப் ரிலேட்டிவிட்டி. இதெல்லாம் கண்டுப் பிடிக்கலேனா, இன்னைக்கு சந்திராயன் - 1 எல்லாம் பறந்திருக்காது. இத புரிஞ்சி எத்தன பேருங்க படிச்சோம்?

Teaching is not a profession, its a service அப்டீனு சொன்னா வேலைக்காகாது. IT industryய விட அதிகமா இல்லேனாலும் அதுல முக்காவாசி சம்பளத்த வாத்திக்கு தந்தா, பள்ளிலயும், கல்லூரிலயும், பசங்க எதிர்காலம் நல்லவே இருக்கும். ஆனா, இங்க தாங்க ட்விஸ்டு, அவ்ளோ அதிகமா சம்பளம் தரனும்னா, பள்ளிலயும், கல்லூரிலயும் ஃபீஸ் அதிகமாயிடும்.

ஆக இதுக்கு தீர்வு என்னனு கமெண்டுங்க.


12 comments:

Raich said...

Shabba, thirumbavum 8th std ku poita vantha oru feeling.
Good one.

சங்கர் (Sankar Balasubramaniam) said...

நம்ம கல்விமுறையப் பத்தி கிட்டத்தட்ட பத்து வருஷமா நானும் நீயும் பொலம்பிட்டு இருக்கோம். அதனால இந்த குமுறல நான் எதிர்ப்பார்த்தேன். இந்த கடியாரத்தைக் கட்டி ராக்கெட்'ல அனுப்பறதப் பத்தி நாம தனியா ஒரு நைட் செஷன் வைக்கனும். அதைப் பத்தி கேள்விப் பட்டதில்லை. ஆனா ESCAPE VELOCITY பத்தின ந்யூட்டனோட கேனன் பால் தியரி பத்தி படிச்சுருக்கேன். அது ஏன் நம்மளோட பாட புத்தகத்தில இல்லேன்னு சுத்தமா புரியல. அயல்நாடுகளுககு வந்து இந்த ஊரு நூலகங்களைப் பார்த்ததுக்கப்பறம், மாசக்கணக்கா விழுந்து விழுந்து படிக்கறதுக்கு இந்த மாதிரி நாலு DVD பாத்திருந்தா பல விஷயங்கள் தெளிவா புரிஞ்சுருக்குமேன்னு நிறைய ஃபீல் பண்ணியிருக்கேன்.

Aruna said...

//Teaching is not a profession, its a service அப்டீனு சொன்னா வேலைக்காகாது. IT industryய விட அதிகமா இல்லேனாலும் அதுல முக்காவாசி சம்பளத்த வாத்திக்கு தந்தா, பள்ளிலயும், கல்லூரிலயும், பசங்க எதிர்காலம் நல்லவே இருக்கும்.//

ஒரு மனிதனை உருவாக்கும் வேலையைச் செய்யும் ஆசிரியர்களுக்கு நாட்டின் முதல் தர சம்பளத்தைக் கொடுக்க வேண்டும் எனபது எத்தனை பேருக்குப் புரியும்?

SurveySan said...

////அவ்ளோ அதிகமா சம்பளம் தரனும்னா, பள்ளிலயும், கல்லூரிலயும் ஃபீஸ் அதிகமாயிடும்.


ஆக இதுக்கு தீர்வு என்னனு கமெண்டுங்க./////


பணத்துக்காக வேலைக்கு வரவங்க நல்ல வாத்தியாகமுடியாது.
இதில் கொஞ்சம் தியாக/கடமை உணர்ச்சிகளும் வேணும். :)

புதுகைத் தென்றல் said...

ஒரு மனிதனை உருவாக்கும் வேலையைச் செய்யும் ஆசிரியர்களுக்கு நாட்டின் முதல் தர சம்பளத்தைக் கொடுக்க வேண்டும் எனபது எத்தனை பேருக்குப் புரியும்?//

சத்தியமான வார்த்தை.


பணத்துக்காக வேலைக்கு வரவங்க நல்ல வாத்தியாகமுடியாது.
இதில் கொஞ்சம் தியாக/கடமை உணர்ச்சிகளும் வேணும். :)

என்ன கொடுமை இது சர்வேசன்.
பணத்துக்காகத்தானே சார் மத்த வேலைங்களும். வாத்தியார்கள் மட்டும் என்ன தப்பு செஞ்சாங்க.

15 வரு்டத்துக்கு முன் டீச்சராக என் சம்பளம் 300 ரூபாய் தான் :(

இப்போது நான் வேலைக்குச் சென்றாலும் அதிக பட்சமாக 6000 தான் கிடைக்கும்.

மத்த வேலைகளை விட ஆசிரியராக
வேலை அதிகம். கேள்விக்கு பதில் சொல்வது கஷ்டம்னா, கேள்வித்தால் செட் செய்யறது அதைவிட கஷ்டம்ங்க.

சக்கையா பிழியப்படுறாங்க ஆசிரியர்கள். நியாயமான உழைப்புக்கு கூலி கொடுத்தா
தாய்மையின் தியாகத்தோடு வேலை செய்ய ஆசிரியர்களுக்கும் விருப்பம்தான்.

வேற் எந்த வேலையு்ம் கிடைக்காததானல் இந்த வேலைக்கு வந்தேன், வீட்டுல சும்மா இருக்க வேண்டாமேன்னு டீச்சரானேன்னு சொல்றவங்களும் இருக்காங்க.
இப்படி பட்டவங்களாலத்தான் படிப்புத்துறை பாழாகிறது.

கணிணிபத்தி தெரிஞ்சாத்தான் அது சம்பந்தமான வேலை என்பது போல, ஆசிரியராக எல்லாத் தகுதியும் இருந்தாத்தான், அதற்கான முறையான பயிற்சி இருந்தாத்தான் அந்த வேலைன்னு வெக்கணும்.

ராமலக்ஷ்மி said...

நல்ல அலசல் ட்ரூத்.

புதுகைத் தென்றலின் இந்த வரிகளையும் வழிமொழிகிறேன்.

//வேற் எந்த வேலையு்ம் கிடைக்காததானல் இந்த வேலைக்கு வந்தேன், வீட்டுல சும்மா இருக்க வேண்டாமேன்னு டீச்சரானேன்னு சொல்றவங்களும் இருக்காங்க.
இப்படி பட்டவங்களாலத்தான் படிப்புத்துறை பாழாகிறது.

கணிணிபத்தி தெரிஞ்சாத்தான் அது சம்பந்தமான வேலை என்பது போல, ஆசிரியராக எல்லாத் தகுதியும் இருந்தாத்தான், அதற்கான முறையான பயிற்சி இருந்தாத்தான் அந்த வேலைன்னு வெக்கணும்.//

Truth said...

@raich,
ஃபீல் பண்ணதுக்கு நன்றி. :)

Truth said...

@சங்கர்,
ரைட்டு, ஆக நம்ம பள்ளிலயும், DVD வெச்சி புரிகிற மாதிரி எடுத்தா நல்லாத்தான் இருக்கும். ஆனா, உண்மையாச் சொல்லு, நாம காலேஜுல படிக்கும் போது, நம்மல விட பல டீச்சர்ஸ்க்கு கம்மியாத்தானே தெரியும்? G எத்தன தடவ லெக்சரர்க்கு சொல்லித்தந்திருக்கான். வாத்தியோட சம்பளம் தான் ப்ரச்சன. Gக்கு இப்போ வாங்கிற சம்பளத்தை விட அதிகமா நம்ம காலேஜுல தந்தா அவன் நல்லா எடுக்காமலா போவான்? அது மட்டும் இல்லாம, அதுக்கு டீச்சர் வேலைக்கு போட்டியும் அதிகம இருக்கும். சொ பல பேர் வருவாங்க. என்ன நான் சொல்றது

Truth said...

@aruna,
/*ஒரு மனிதனை உருவாக்கும் வேலையைச் செய்யும் ஆசிரியர்களுக்கு நாட்டின் முதல் தர சம்பளத்தைக் கொடுக்க வேண்டும் எனபது எத்தனை பேருக்குப் புரியும்?*/

மிகச் சரியா சொன்னீங்க அருனா. அருமை.

Truth said...

@சர்வேசன்,
/*பணத்துக்காக வேலைக்கு வரவங்க நல்ல வாத்தியாகமுடியாது.
இதில் கொஞ்சம் தியாக/கடமை உணர்ச்சிகளும் வேணும். :)*/

என்னங்க சொல்றீங்க. அப்போ கடைசி வரைக்கும் வாத்தியெல்லாம் ஏழையாவே இருக்கனுமா? புதுகைத்தென்றல் சொன்ன மாதிறி, வேற வேல கிடைக்காதவங்க தான் வாத்தியா வருவாங்க.

வாத்தியா வருனும்னா, ஒரு பெரிய இண்டெர்வியூ வெக்கனும். ரொம்ப ரொம்ப அறிவும் + சொல்லித் தரக்கூடிய திறமையும் + வாத்திக்குத் தேவையான எல்லா அம்சங்களும் இருக்கிறவங்கள செலக்ட் பண்ணி நெறய சம்பளம் தரனும்.

வாத்திக்குத் தேவையான எல்லா அம்சங்களும் தன்னால இருக்கனும், சம்பளம் தராங்கனு வரக்கூடாதுனு சொல்லக்கூடாது. இப்போ IT industryல எத்தன பேரு இருக்காங்க? அத்தன பேரும் எல்லாத்தையும் கத்துக்கிட்டா வராங்க? வந்து கத்துக்கலயா? அப்டி தான்...

Truth said...

@புதுகைத் தென்றல்
/*கணிணிபத்தி தெரிஞ்சாத்தான் அது சம்பந்தமான வேலை என்பது போல, ஆசிரியராக எல்லாத் தகுதியும் இருந்தாத்தான், அதற்கான முறையான பயிற்சி இருந்தாத்தான் அந்த வேலைன்னு வெக்கணும்.*/

100 marks :)
கூடவே நெறய சம்பளமும் தரனும்னு சொல்லுங்க. அப்போத்தான் போட்டி இருக்கும், எல்லா வாத்தியும், கொஞ்சம் பயந்து, புதுசா வர டெக்னாலஜியெல்லாம் கத்துக்கிட்டு பாடம் நடத்துவாங்க. இல்லேனா, நாம பத்தாவதுல படிச்சத இந்த புள்ளைங்க அஞ்சாவதுலேயே படிக்குதுனு சொல்லிக்கிட்டேத் தான் இருக்கனும். என்ன நான் சொலற்து?

Truth said...

@ராமலக்ஷ்மி
/*நல்ல அலசல் ட்ரூத்.*/
நன்றிங்க.

/*புதுகைத் தென்றலின் இந்த வரிகளையும் வழிமொழிகிறேன்.*/
அவங்களுக்குத் தான் நான் 100 மார்க் தந்துட்டேனே, அப்போ உங்களுக்கும் தான் :-)