Wednesday, December 02, 2009

காம்போசிஷன் - 2

காம்போசிஷன் பதிவிற்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி. இந்தப் பதிவும் காம்போசிஷன் பற்றியது தான். சென்ற பதிவில் எப்படி எல்லாம் படங்களை எடுக்கக்கூடாதென்று சொல்லியிருந்தேன் அல்லவா? இம்முறை படங்களை எப்படி எடுத்தால் கண்களைக் கவரும் என்பதை பார்ப்போம்.
இதற்கு பல விதிமுறைகள் இருக்கின்றன. ஆனால் முன்பே சொன்னது போல், புகைப்படம் எடுப்பது ஒரு கலை தான். எனவே இங்கே நான் சொல்லும் விதிமுறைகள் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை, ஆனால் இவற்றைப் பின்பற்றினால், கண்களை ஈர்க்கும் என்பது நிச்சயம்.
"The so-called rules of photographic composition are, in my opinion, invalid, irrelevant and immaterial" - Ansel Adams

காம்போசிஷனை பற்றி தெரிந்து கொள்ள நிறைய உள்ளது. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெயர். ஒவ்வொன்றையும் முழுவதுமாக சொல்லிக் குழப்புவதற்கு பதிலாக சில எடுத்துக்காட்டுகளுடன் விளக்குகிறேன். சந்தேகங்களைப் பின்னூட்டமிடவும்.

மிக முக்கியமான விதி ஒன்று Rule of Thirds. நமது புகைப்படத்தை ஒன்பது கட்டங்களாக பிரித்துக் கொள்ளுங்கள், அதாவது மேலிருந்து கீழாக இரண்டு கோடுகளும், இடமிருந்து வலமாகவும் இரண்டு கோடுகளும் வரைந்துக் கொள்ளவும். இப்போது 3X3 மேட்ரிக்ஸ் கிடைக்கும் அல்லவா? அனைத்துக் கட்டங்களும் ஒரே அளவில் இருக்க வேண்டும், அதாவது கோடுகளின் இடைவெளி சமமாக இருக்க வேண்டும். இப்போது இதிலிருக்கும் நான்கு கோடுகளின் மீதோ அல்லது அந்தக் கோடுகள் சேரும் புள்ளிகளின் மீதோ தான் நமது கண்கள் தானாக செல்லும். இந்தப் புள்ளிகளை Power Points என்று சொல்வதுண்டு. எனவே நாம் நினைக்கும் சப்ஜெக்ட் இந்தப் புள்ளிகள் இருக்கும் இடத்தில் இருத்தல் நலம். நாம் திரைப்படங்கள் பார்க்கும் போது கூட இதை கவனித்திருக்கலாம். (இல்லையென்றால் இனி கவனிக்கவும்). கீழிருக்கும் புகைப்படங்களை பார்த்தால் உங்களுக்குப் புரியும்.

புகைப்படம் - நன்றி விக்கிபீடியா







ஆனால் அனைத்துப் படங்களிலும் Rule of Thirds பயன் படுத்த முடியுமா என்றால், முடியாது. காரணம் சில படங்களுக்கு symmetry தேவைப் படுகிறது. அப்படிப் பட்ட இடங்களில் Rule of Thirds பயன் படுத்த முடியாது. இவ்வாரு சிமெட்ரியாக எடுப்பது ஒருவகையான காம்போசிஷன் தான்.







தவறான உதாரணம்


சரி இப்போது மேலே பார்த்த படத்தை வைத்துக் கொண்டு இன்னொரு காம்போசிஷன் விதியையும் சொல்லிவிடுகிறேன். - Leading Lines என்பது இதற்கான பெயர். நாம் பார்க்கும் காட்சிகளில் பெரும்பாலும் கோடுகள் இருக்கின்றன. உதாரணதிற்கு ரயில் தடம், கரண்ட் கேபிள், ஜன்னல் கம்பிகள், மரக் கிளைகள், நேர் ரோடுகள் இப்படிப்பட்டவை. இவற்றை நாம் பார்க்கும் போது நமது கண்கள் நம்மை அறியாமலேயே அந்தக் கோடுகளை நூல் பிடித்தாற் போல் பிடித்துக் கொண்டு கோட்டின் அடுத்த முனைக்குக் கொண்டு சென்றுவிடும். இப்படியிருக்கும் போது நமது சப்ஜெக்ட் எங்கிருக்க வேண்டும்? ஆம் கோட்டின் அடுத்த முனையில் தான். [டோரா கார்டூன் பார்ப்பது போல் இருக்கா? :) ]. கீழே இருக்கும் படங்களைப் பார்த்தால் உங்களுக்குப் புரிந்துவிடும்.





காம்போசிஷனில் இன்னொரு சின்ன விதியும் உள்ளது. இப்போது நாம் நேர் கோடுகளைப் பார்த்தோம் இல்லையா? அதே போல் வளைந்த கோடுகளும் ['S' வடிவிலான வளையங்கள்] மனித கண்களுக்கு மிகவும் பிடிக்குமாம். உதாரணத்திற்கு வளைந்து ஓடும் நதிகள், ரோடுகள்.



வளைந்து ஓடும் நதிகளைப் பற்றிச் சொல்லும் போது இன்னொரு விதியும் சொல்லிவிடுகிறேன். அதாவது நமது சப்ஜெக்ட் வலப்பக்கத்திலிருந்து இடமாக போவது போல் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம், அப்போது சப்ஜெக்டை வலப்பக்கம் வைத்து விட்டு இடப் பக்கம் நிறைய இடம் இருப்பது போல் இருக்க வேண்டும். அப்படி இருக்கும் போது நமது சப்ஜெக்ட் இடப் பக்கம் போவது போல் தெரியும். அதுமட்டுமின்றி நமது ஃப்ரேமிற்கு ஒரு முழுமை கிடைக்கும். அப்படியின்றி வலப்பக்கம் போகும் சப்ஜெக்டை வலதோரத்தில் வைத்தால், இதோ சற்று நேரத்தில் சப்ஜெக்ட் நமது ஃப்ரேமிலிருந்து சென்று விடுவது போல் தோன்றும், அதுமட்டுமின்றி காலியாக இருக்கும் வலப்பக்கம் ஃப்ரேமில் 'ஏதோ மிஸ்ஸிங' போன்றது போல் இருக்கும். இந்த காம்போசிஷனை 'Movement into the Majority of the Frame' என்று சொல்வதுண்டு.



தவறான உதாரணம்


Monotonous Content என்று ஒரு விதி இருக்கிறது. அதாவது ஒரே மாதிரியானவற்றை ஒன்றாக வைத்து படம் எடுப்பது, உதாரணதிற்கு புற்கள், கூழாங்கற்கள்.






இவை மட்டும் தானா விதிகள் என்றால், இல்லை என்பது தான் என்னுடைய பதில். நாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய ஒன்று - நாம் நமது புகைப்படத்தில் எதைக் காட்டவேண்டும் என்று நினைக்கிறோமோ, அது மட்டும் தான் நமது புகைப்படத்தைப் பார்ப்பவர்களுக்குத் தெரியவேண்டும். அவர்களின் கண்கள் எங்கு பார்த்தாலும், அவர்களின் கண்களை ஈர்த்துக் கொண்டு வந்து 'இதோ நான் இங்குட்டு இருக்கேன்', என்று சொல்வது போல் இருக்க வேண்டும் நமது புகைப்படங்கள்.

எல்லாவற்றிலும் மிக முக்கியமான விதி ஒன்று இருக்கிறது. பல சமயங்களில் அழகான ஒரு சப்ஜெக்டிற்கு முன்பு படுகேவலமான நமது முகத்தை வைத்து சப்ஜெக்டை அசிங்கப்படுத்துவது நமது வாடிக்கையாகவே இருந்து வருகிறது. இதைத் தவிர்ப்பது என்பது நம்மால் முடியாத ஒன்று தான். ஆனால் இது தான் முக்கியாமன விதி. சொல்லியாச்சு, இனி படங்களை எடுங்க.

9 comments:

நிகழ்காலத்தில்... said...

நல்ல கலைநயம் மிக்க குறிப்புகள்..

தொடர்ந்து இது போல் நிறைய எழுதுங்கள் நண்பரே

வாழ்த்துகள்

ராமலக்ஷ்மி said...

பறக்கும் புறா நல்ல உதாரணம். அந்தக் குருவி அந்த ஃப்ரேமில் எங்கிருந்தால் நன்றாக இருந்திருக்கும்? இதய நிழல் கோப்பையை படத்தில் மையப் படுத்தாதற்கான காரணம்?

கடைசி பத்தி:))! ரோல் வாங்கி ப்ரிண்ட் போட்டுதான் படங்களைப் பார்க்கவே முடியும் என்கிற கால கட்டத்தில் கொடுக்கிற காசுக்கு நம்ம முகமும் ஒரு ஓரத்தில் இருந்துட்டுப் போகட்டுமே என்கிற மாதிரியான எண்ணங்கள் பரவலாய் இருந்தே இருந்தது:)! டிஜிட்டல் உலகில் எல்லோரும் இப்போ மாறி வருவது ஆரோக்கியமானது.

நல்ல இடுகை. நன்றி ட்ரூத். தொடருங்க இன்னும் இதுபோல..! நல்வாழ்த்துக்கள்!

Vidhya Chandrasekaran said...

எளிமையான விளக்கங்களுடன் அருமையான பதிவு.

லைட்டிங் பற்றியும் கிளாஸ் எடுங்களேன்.

Truth said...

@நிகழ்காலத்தில்,
நன்றிங்க. தொடர்ந்து எழுதறேன். தொடர்ந்து படிங்க, உங்க ஆதரவு ரொம்ப முக்கியம்.

*******************************

@ராமலக்ஷ்மி,
நன்றிங்க.
குருவி இடது பக்கம் பார்த்துக் கொண்டிருப்பதால், அது இன்னும் வலது பக்கம் தள்ளியிருக்கலாம். மேலும் power pointsல் இருந்திருக்கலாம்.
கோப்பை ஓரத்தில் இருப்பதன் காரணம் - rule of thirds விதி தாங்க

*******************************

@வித்யா,
ரொம்ப நன்றிங்க. லைட்டிங்கா? :-) படிச்சுட்டு, பழகிட்டு, எனக்குத் தகுதி வந்துட்டா எழுதறேன்.

Sankar said...

சூப்பர் மச்சி .. rule of thirds தவிர நிறையவே சொல்லியிருக்கே .. ஒரு 2-3 வருஷம் மெனக்கெட்டு ஃபோட்டோ எடுத்துட்டே இருந்தா தன்னிச்சையா வருகிற விஷயம் தான் என்றாலும் நல்லா எளிமையா சொல்லியிருக்கே .. மறுபடியும் நிறைய நேரம் கிடைக்குது போல இருக்கு .. அடுத்த கதை எப்போ ரிலீஸ் ?

Truth said...

@சந்தி(ப்)பிழை
// நல்லா எளிமையா சொல்லியிருக்கே நன்றி சங்கர்.

// மறுபடியும் நிறைய நேரம் கிடைக்குது போல இருக்கு .. அடுத்த கதை எப்போ ரிலீஸ் ?
ஆல்ரெடி ஒன்னு எழுதிகிட்டு இருக்கேன். முடிச்ச உடனே ரிலீஸ் தான். :-)

Thamira said...

பல சமயங்களில் அழகான ஒரு சப்ஜெக்டிற்கு முன்பு படுகேவலமான நமது முகத்தை வைத்து சப்ஜெக்டை அசிங்கப்படுத்துவது நமது வாடிக்கையாகவே இருந்து வருகிறது.//

இது பாயிண்ட்.!

Anonymous said...

ok. good tips. very useful

சந்திர வம்சம் said...

Dear sir! It is really very nice to know about Photography