Friday, January 09, 2009

புரியாத புதிர்- பாகம் 3

வணக்கம்.

நேத்து நான் சர்க்கரையும், ஜூஸும் வாங்க ஒரு பிரபலமான கடைக்குப் போனேன். வாங்கிக்கிட்டு பில் போடும் போது, பில் போடுற அக்கா தன்னுடைய பெயர் கொண்ட பேட்ஜ பாத்தேன். அந்த அக்காவோட பெயரும் என்னோட பெயரும் ஒன்னு தான். அதுக்கு அப்றொம் நடந்த உரையாடலின் தமிழாக்கம் கீழே
"ஓ இது தான் உங்க பெயரா" - இது நான்.
"இல்ல, அந்தா போறான் பாரு அவனுடைய பெயர்" - இது அவங்க இல்ல, அவங்களோட மனசு, ஆனா எனக்கு கேட்டிடுச்சு. "ஆமா" - இது தான் அவங்க சொன்னது.
"என் பெயரும் அதேத்தான்"
"நீங்க இந்தியால இருந்து வந்திருக்கீங்களா?"
"ஆமா" - இது நான்.
"இந்தியால நிறைய மக்கள் இந்தப் பேர வச்சிக்கிறாங்க"
"அப்படியா?" இது என்னோட மனசாட்சி, அவங்களுக்குக் கேட்காது.

ஆவங்க தலைல ஒரு கருப்புத் துண்டு கட்டிக்கிட்டு இருந்தாங்க. இப்படிப் பலப்பேர நாங்க இங்க பாக்றதுண்டு. இவங்க எல்லாம் எந்த ஊருன்னு நானும் என்னோட ரூம் மேட்டும் அடிக்கடி யோசிச்சதுண்டு. ஒவ்வொரு முறையும் இந்த நாடா, இல்ல அந்த நாடான்னு எங்களுக்குள்ள குழப்பிக்கிட்டு இருப்பதுண்டு. இன்னைக்கு நல்ல சான்சு கேட்டே ஆகனும்னு
கேட்டுட்டேன்.

"நீங்க எந்த நாட்ல இருந்து வந்திருக்கீங்க" - நான்
"%^&)&^%" - அவிங்க
"சரியா கேக்கல, மறுபடியும் சொல்லுங்க" - நான்.
"ஆசாத் கேஷ்மீர்" -
"என்னது கேஷ்மீரா?"
"ஆமா"
"அது இந்தியால தானே இருக்கு"
"இல்ல இது பாக் பக்கத்துல இருக்கு"
"அப்படியா?" - இது மறுபடியும் இன்னோட மனசாட்சி

வீட்டுக்கு வந்து அந்த ஆசாத் கேஷ்மீர் எங்கயிருக்குன்னு பாத்தா, அது நம்ம POK ன்னு சொல்ற Pakistan Occupied Kashmir தான். அப்போ எந்த நாடுன்னு கேக்கும் போது ஒன்னு பாக்ன்னு சொல்லியிருக்கனும், இல்லேனா இந்தியான்னு சொல்லியிருக்கனும், அட என்னடா இது கூத்தா இருக்கேன்னு, நான் கொஞ்சம் கூகிள் பண்ணினேன். கூகிள் பண்ணும் போது தெரிஞ்சிக்கிட்ட விஷயங்கள் எல்லாமே உங்க எல்லோருக்கும் ஏற்கனவே தெரிஞ்சிருக்கலாம், ஆனா எனக்கு எல்லாமே புதுசாத் தான் இருந்தது.
- ஆசாத் கேஷ்மீர் அப்படீங்கறது ஒரு நாடு.
- 1948 லயே உருவாகியிருக்கு.
- அந்த நாட்டுக்குன்னு தனியா ஒரு பிரதம மந்திரி கூட இருக்காங்க. ஆனா எல்லாமே டம்மி தான்.
- அந்த நாடு தனியா இருந்தாலும், அது பாக் கீழத் தான் இயங்குது.

பள்ளில படிச்ச geographyல இந்த நாடெல்லாம் அட்லாஸ்ல எனக்கு காட்டவே இல்ல. இல்லேனா, நான் தான் இப்போ தப்பா புரிஞ்சிகிட்டேனா?

9 comments:

ராமலக்ஷ்மி said...

நான் படித்த போதும் அட்லஸ் எனக்கும் காட்டவில்லை.

//"இல்ல, அந்தா போறான் பாரு அவனுடைய பெயர்" - இது அவங்க இல்ல, அவங்களோட மனசு, ஆனா எனக்கு கேட்டிடுச்சு.//

அவங்க சொல்லாதது உங்களுக்கும் நீங்க சொல்லாதது அவங்களுக்கும் கேட்டதா எழுதியிருப்பதற்கு பெயரும் ‘நக்கல் நையாண்டி’தான் ஒரு விதத்தில். அதையே நான் ‘கலகலப்பா’ எழுதியிருக்கீங்கன்னு சொன்னா...நம்பாம போன பதிவில கேட்டிருக்கீங்களே:)), அதுதான் மெய்யான நையாண்டி:)))!

சங்கர் (Sankar Balasubramaniam) said...

அவங்க கிட்ட ரொம்ப கேள்வி கேக்காதீங்க. ஆசாத் காஷ்மீர்ல RDX எல்லாம் ரேஷன் கடையிலேயே சப்ளை பண்ணுவாங்கன்னு நினைக்கறேன். மளிகை சாமான் பேக் பண்ணும் போது அப்படியே ரெண்டு வெடியைப் போட்டாலும் போட்டுருவாங்க.

Raich said...

Ellarukkum irukara maathiri, enakkum ithu puthusa thaan irukku.
This is the first time, iam hearing a name of such a plaz.
All ur blogs give some information.
Very interesting. I love to improve my general knowledge.
Keep on blogging...

Truth said...

@ராமலக்ஷ்மி,
வருகைக்கு நன்றி.

//அதுதான் மெய்யான நையாண்டி:)))!
நீங்க சொல்றீங்க... ஆனா, எனக்கென்னமோ என்னய வெச்சி காமெடி கீமிடி பண்ற மாதிரியே ஒரு பீலிங்கு :)
PITல உங்க ஃபோட்டோ இன்னும் போடலியா? :)

Truth said...

@சங்கர்,

வாங்க :). உங்க கமெண்டு படிச்சதுல இருந்து மளிக சாமான் வாங்கும் போதெல்லாம் கொஞ்சம் கூடுதலா செக் பண்ணிக்கிட்டுத் தான் இருக்கேன். என்னைக்கு வெக்க போறாய்ங்களோ ஆப்பு

Truth said...

@Raich,

thanks for reading :)

பரிசல்காரன் said...

எனக்குப் புதுசுங்க இது!

உங்க ரைட்டிங் ஸ்டைல் கலக்கல்!!!

rapp said...

பாத்தீங்களா, இவ்ளோ பேர் இருக்காங்க இது தெரியாம. நான் ஒரு தரம் என் கணவர் கேட்டப்போ அப்டில்லாம் ஒன்னும் கெடயாதுன்னு சாதிச்சேன்னு, இப்போ வரை ஓவரா சீன் போடறார். கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....................

Truth said...

@rapp said...
//பாத்தீங்களா, இவ்ளோ பேர் இருக்காங்க இது தெரியாம. நான் ஒரு தரம் என் கணவர் கேட்டப்போ அப்டில்லாம் ஒன்னும் கெடயாதுன்னு சாதிச்சேன்னு, இப்போ வரை ஓவரா சீன் போடறார். கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

அட இந்த சாட்சி போதுங்க :-) போய் காட்டுங்க :-)