Saturday, January 03, 2009

லண்டன் ஐ - New Year Eve

31-Dec-2008

வணக்கம்.

என்னோட டிசம்பர்-2008 அமோகம் அப்படீன்னு ஏற்கனவே சொல்லியிருந்தேன். அதுல கடைசியா லண்டன் ஐ-ல வானவேடிக்கை பாக்கப் போறேன், நல்லபடியா வந்தா ஒரு பதிவ போடறேன், இல்லேனாலும் போடறேன், ஆனா கொஞ்சம் லேட் ஆகும்னு சொல்லியிருந்தேன். அந்த பதிவு தான் இந்த பதிவு. ஒரு ரெண்டு புகைப்படங்கள்ல என்னோட photoblog ல போட்டிருக்கேன்.

லண்டன் ஐ-ல வானவேடிக்கைப் பத்தி சொல்லனும்னா, ஒரு நல்ல இடத்தப் புடிச்சத் தான் வானவேடிக்கைய நல்லாப் பாக்கலாம். போன வருஷம் தான் எனக்கு முதல் அனுபவம். நாங்க நண்பர்கள் நாலுப் பேரு இருந்தோம். ஆறு மணிக்கெல்லாம் போய் இடத்த புடிச்சிட்டோம். போன வருஷம் ரொம்ப குளுரல. பெருசா ஒன்னும் ப்ளான் கூட பண்ணல. ஏன் டா ஆறு மணி நேரம் இருக்கனுமே, நைட் சாப்பாடு என்ன பண்ணுவோம்னு கூட யோசிக்காம போயிட்டோம். எங்க ரூம் மேட்டோட இன்னொரு நண்பனும் வந்திருந்தான். அவன் கொண்டுவந்தத நாங்களும் சாப்டு வண்டிய ஓட்டி 12 மணி வரைக்கும் தாக்கு புடிச்சிட்டோம். 12 மணிக்கு கவுண்ட் டவுன் எல்லாம் போட்டானுங்க. சரி ஒரு மணி நேரம் வேடிப்பானுங்கனு பாத்தா வெரும் 10 நிமிஷம் தான் வெடிச்சானுங்க. அதுக்கு 6 மணி நேரம் காத்திருந்தது மறக்க முடியாது. இனிமே Dec 31 லண்டன் ஐ-க்கு போக கூடாதுனு போன வருஷமே முடிவு பண்ணிட்டோம்.

ஆனாலும் இந்த வருஷம் போனோம். நண்பர்கள் மாறிப்போனதுனால அவங்களுக்கு இது முதல் தடவையா இருந்ததுனால கண்டிப்பா போகனும்னு சொன்னதுனால நாங்க கெளம்பினோம். குளுருல இருந்து தப்பிக்க கீழ மூனு முழுக்கால் டவ்சர், மேல ஏழு சொக்கா போட்டுக்கிட்டு , பசிக்கு சாப்பாடு எல்லாம் எடுத்துக்கிட்டு ஏழு மணிக்குத்தான் போனோம். எதுவும் ப்ப்ப்ளான் பண்ணித்தான் நாங்க பண்றதுன்னு உலகத்துக்கு காட்டனும்னு போனா, அங்க குளிரு பட்டைய கெளப்பிடிச்சு. நல்லாப் பாக்கனும்னு நினைச்சு ஆர்வக் கோளாருல முன்னாடி இடம் புடிச்சு நின்னுக்கிட்டேன். தேம்ஸ் நதி முன்னாடி 10 நிமிஷத்துக்கு மேல நிக்க முடியல. எப்படா மணி 12 ஆகும்னு காதலிக்கு காத்திருக்றதுப் போல காத்திருந்தேன். குளுருல கைக் கால் எல்லாம் ஊசியால குத்தின மாதிரி இருந்திச்சு, ஆனா கொஞ்சம் நேரம் தான் அப்படி இருந்திச்சு. அப்றொம் சுத்தமா சொர்னையே இல்லாதது போல ஆயிடிச்சு. மணி 12 ஆனதும் இருக்கிற உடல் நிலைய வெச்சிக்கிட்டு வான்வேடிக்கைய ஒரு 10 நிமிஷம் ஃபோட்டோ புடிச்சிக்கிட்டேன்.

வானவேடிக்கைய நல்லா ஃபோட்டோ புடிக்கலாம்ன்னு நினைச்சா, அதுவும் முடியல. ஒரு 20 வினாடில எல்லாமே புகை மண்டலமா ஆயிடிச்சு, ஆக நல்லா ஃபோட்டோவும் புடிக்கல. Smoke Filters அப்படீன்னு ஏதாவது இருந்தா சொல்லிட்டுப் போங்க.

10 நிமிஷ வானவேடிக்கைய முடிச்சிக்கிட்டு கெளம்பனும்னு பாத்தா, பக்கத்துல இருக்கிற ரயில்வே ஸ்டேஷன் எல்லாம் மூடிட்டு ரெண்டு மணிக்குத் தான் திறப்பாங்கனு சொன்னாங்க. 5 நிமிஷம் கிழக்கா நடந்தா இன்னோரு ஸ்டேஷன் இருக்கு அங்க போலாம்னு நடைய கட்டினோம். அந்தக் கூட்டத்த பாத்தா திருப்பதி கோவில பாத்த மாதிரித் தான் இருந்திச்சு. 12:30 நடக்க ஆரம்பிச்சு, 1:30 வரைக்கும் நடந்தோம். எத? 5 நிமிஷம் நடக்க வேண்டியத. அங்க போயிட்ட பின்ன, திருவிழால காணாம போன நம்ம நண்பர்கள தேடி ஒரு 45 நிமிஷம் செலவாச்சு. 2:15க்கு தான் எல்லோரும் ஒன்னு சேர்ந்து "அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் மாற்றங்கள்" பாட்டு பாடிட்டு ஒரு ரயில புடிக்கும் போது மணி 2:30. இதுக்கு நாங்க ஒரு மணி நேரம் நடக்காம இருந்திருந்தா மூடின ஸ்டேஷன் ரெண்டு மணிக்கே திறந்திருப்பாங்க. அங்கயே ரயில்ப் புடிச்சு வீடு சேர்ந்திருக்கலாம்.

வீடு போய் சேரும் போது மணி அதிகாலை 3:40. கூட வந்த புதுப் பயலுகக் கிட்டக் கேட்டா, இனி வரவே மாட்டோம், பெரிய தப்புப் பண்ணிட்டோம்னு சொன்னாங்க. இதுல இண்ட்ரெஸ்டிங் பாயண்ட் என்னனு கேட்டீங்கன்னா, அடுத்த வருஷம் நான் லண்டன்ல இருந்தா, அப்போ நண்பர்கள் கூட்டம் மாறினா, அவிங்க கிட்ட எவ்ளோ சொன்னாலும் கேக்காம, இது வாழ்க்கைல ஒரே தடவ பாக்ககூடிய நிகழ்ச்சி, பாத்தே ஆகனும்னு ஒத்த கால்ல நின்னுக்கிட்டு இருப்பாய்ங்க. போய்த் தான் ஆகனும். நான் லண்டன்ல அடுத்த வருஷமும் இருந்தா, இதே பதிவ மறு ஒளிபரப்பு செய்வேன். படிச்சிட்டு போங்க :)

வாழ்க லண்டன் ஐ.

11 comments:

Raich said...

Yeah, that was a horrible experience.
Anyways, this New year was different. Thanks for taking us :)

கபீஷ் said...

பதிவு படிக்கறதுக்கு முன்னாடியே என்ன இருக்கும்னு ஓரளவுக்கு ஊகிக்க முடிஞ்ச பதிவு. நானும் கொஞ்சம் பேரை எச்சரிக்கை பண்ணினேன். கேக்காம போய் நீங்க எழுதினதில இரண்டாவது பாதியை இன்னும் விவரிச்சு சொன்னாங்க.

Truth said...

@Raich,
I wish you are here next year and some one new to London pester you to take you to London Eye, and you get convinced and go there :)

Truth said...

@கபீஷ்,
இன்னும் நிறைய சொல்லலாம். எழுதறதுக்கு கொஞ்சம் மோடிவேஷன் இருக்கனுமில்ல? அது சுத்தமா இல்ல. அவ்ளோ கடியா இருந்திச்சு

Senthil said...

The fotos would have come good if you have taken from other end of Thames(exit from waterloo station ,take left), bcos therez no smoke
from this side..
Yes,even we were "kind of" disappointed bcos the show was for just 10 mins..but it was good..
The temperature was freezing..!!

You should hvae taken southwark station after that..it was not at all crowded...


// இது வாழ்க்கைல ஒரே தடவ பாக்ககூடிய நிகழ்ச்சி, பாத்தே ஆகனும்னு ஒத்த கால்ல நின்னுக்கிட்டு இருப்பாய்ங்க. //...itha solli thaan
I have taken my friends who have already seen and exp the horrible winter..:-)

Truth said...

@Sen,
//// இது வாழ்க்கைல ஒரே தடவ பாக்ககூடிய நிகழ்ச்சி, பாத்தே ஆகனும்னு ஒத்த கால்ல நின்னுக்கிட்டு இருப்பாய்ங்க. //...itha solli thaan
I have taken my friends who have already seen and exp the horrible winter..:-)//

என்ன மாதிறி அடுத்த முறை நீங்க அவதிப் பட வாழ்த்துகிறேன். பிள்ளையார் கிட்ட இது நடந்தா தேங்காய் உடைக்கிறேன்னு வேண்டிக்கிறேன். :)

ராமலக்ஷ்மி said...

சொத சொதப்பலாய் முடிந்தது என்றாலும் கலகலப்பாய் விவரித்திருக்கிறீர்கள்:))!
சரி மறு ஒளிபரப்புக்குக் காத்திருக்கிறேன்:))! ஏன்னா புகை வரும் முன் புடிச்ச அந்த மொத ஃபோட்டோ ஒண்ணு போதுமே போனதுக்கு கிடைத்த பொக்கிஷமா! அடுத்த வருஷ பொக்கிஷத்தையும் பாக்கணுமில்லையா:)?

Truth said...

@ராமலக்ஷ்மி
//சொத சொதப்பலாய் முடிந்தது என்றாலும் கலகலப்பாய் விவரித்திருக்கிறீர்கள்:))! //

இதில் நக்கல் நையாண்டி எல்லாம் இல்லயே :)

//சரி மறு ஒளிபரப்புக்குக் காத்திருக்கிறேன்:))! ஏன்னா புகை வரும் முன் புடிச்ச அந்த மொத ஃபோட்டோ ஒண்ணு போதுமே போனதுக்கு கிடைத்த பொக்கிஷமா! அடுத்த வருஷ பொக்கிஷத்தையும் பாக்கணுமில்லையா:)//

இந்த ஊருல இருந்தா கண்டிப்பா எவனாவது கூட்டிட்டுப் போகச் சொல்லுவாய்ங்க, so கண்டிப்பா மறு ஒளிபரப்பு இருக்கு. :(

ராமலக்ஷ்மி said...

அட, கை வலி கால் வலின்னு நொந்து நூலாகித் திரும்பினாலும் அதை நகைச்சுவை கலந்து விவரித்திருக்கிறீர்கள் எனப் பாராட்ட வந்தால்...ஹும்ம். என்னத்தை சொல்ல:(?

அடுத்த வருட தோழர்கள் தவறாமல் உங்களை கூட்டிப் போகச் சொல்ல இப்போதே அட்வான்ஸ் வாழ்த்துக்கள்:))!

Truth said...

@ராமலக்ஷ்மி
//அடுத்த வருட தோழர்கள் தவறாமல் உங்களை கூட்டிப் போகச் சொல்ல இப்போதே அட்வான்ஸ் வாழ்த்துக்கள்:))!//

ஏங்க? :)

புன்னகை said...

//காதலிக்கு காத்திருக்றதுப் போல காத்திருந்தேன்//
அனுபவம் பேசுது போலத் தெரியுதே? :P