Friday, July 03, 2009

புளீச்

நல்லாத்தான்யா போயிக்கிட்டு இருந்தது. இரண்டு வாரங்களுக்கு முன்னாடி இந்தச் சூரியனை இன்னொரு முறை முழுசா சுத்தி முடிச்சேன். வருஷா வருஷம் இது எல்லோருக்கும் நடக்கும், அதுல என்னதான் கொண்டாட வேண்டியிருக்குன்னு தெரில. ஏதோ நாமளே சுத்தி சுத்தி வர்ற மாதிரி எபெக்டு நமக்கு. பூமியோடு ஒட்டிகின்னு இருக்றோம். அது சுத்தும் போது நாமும் சுத்துறோம். ச்சே எவ்ளோ அறிவு டா எனக்கு. இது போல நீல நிறத்துல வர்றதெல்லாம் என்னோட மனசாட்சியோட பேச்சுன்னு நினைச்சுகிட்டு படிங்க. அப்படிப் படிச்சா நல்லதே உண்டாகும். சரி டாபிக் ட்ராக் மாறுது. லெட் மீ கம் பேக்.

மாத்தியோசி மாத்தியோசின்னு யோசிச்சு யோசிச்சு பாத்ததுல, என்னால _____ தான் மாத்த முடிஞ்சுது. அட உண்மையாத்தாங்க. என்னோட ஹேர் ஸ்டைல்(?) மூனு மாசத்துக்கு ஒரு முறை மாறிகிட்டு இருக்கும். மூனு மாசத்துக்கு ஒரு முறையாவது முடிய வெட்டணும் டி. வெட்டாம இருந்தா அப்படி தான். என்னோட டேமேஜர் என்ன மூனு மாசத்துல ஒரு முறை தான் பாக்க வருவாங்க. அப்படி வரும்போதெல்லாம், என்கிட்ட வந்து 'Where is Kiran?' ன்னு எல்லா முறையும் கேப்பாங்க. நானும் 'I am Kiran' ன்னு சொல்லுவேன், அவங்க 'Aah, Oh my God, you look totally different man' ன்னு சொல்லிட்டுப் போவாங்க. சில சமயம் மீசை இருக்கும், சில சமயம் மீசை இருக்காது, ஒரு சில நேரத்துல french beard இருக்கும். இதுல இருந்து ஒன்னு மட்டும் உங்களுக்கு நல்லா புரிஞ்சிருக்கும். எனக்கு முடி வெட்டவோ, ஷேவ் பண்ணவோ அவ்ளோ கடி. அதனால நான் முடி வெட்டிட்டு வெளில வரும் போது அங்க ஒரு சத்யா கமலோ இல்ல நந்தா சூர்யாவையோ கண்டிப்பா பாக்கலாம். ஆமா நீ கமல் சூர்யாவ நேர்ல பாத்திருக்கியா? இல்ல சத்யா, நந்தா படத்தையாவது பாத்திருக்கியா. அப்றொம் எத வெச்சு அப்படி சொன்னே? எதுக்கு வெளம்பரம்?

சரி பொறந்த நாளுக்கு ஸ்மார்டா(?) இருக்கலாம்ன்னு முடிய வெட்ட நான் வாக்கட் வளைச்சு வளைச்சு சுத்தி சுத்திப் பாத்தேன். எங்கையும் அகப்படல. டேய் நீங்க எல்லாம் எங்க தான் டா முடிய வெட்றீங்க? அப்றொம், ஒரு ஹைவே-ல ஒரு பெட்டிக் கடைய கண்டுபிடிச்சுப் போனேன். எனக்கு இந்த பெட்டிக் கடைங்க, மணல் தரைல உக்காந்து சினிமா கொட்டாய்ல படம் பாக்றது எல்லாம் ரொம்பப் பிடிக்கும், ஒரு காலத்துல. ஏன் டா நீ பேசறது பாத்தா நீ ஏதோ தமிழ் சினிமால பாரின்லேயே படிச்சுட்டு வர்ற பணக்கார பொண்ணு மாதிரி இருக்கே. சென்னைல உங்க வீடு எங்க இருக்குன்னு யாருக்கும் தெரியாத தைரியமா? ஒரு முறை மணல் தரைல படம் பாத்துட்டு இனிமே இப்படிப் படம் பாக்கக் கூடாதுன்னு முடிவே பண்ணிட்டேன். எனக்கு தம் அலெர்ஜி. அங்கப் போனா, நாம தம் அடிக்கிற ஆளா இருந்தாக் கூட தம் வாங்கவே வேணாங்க. எல்லோருமே தம் அடிச்சுப் புகையக் கெளப்புவானுங்க, வர்ற புகைய உள்ள வாங்கிறதோடு நம்ம வேலை முடியுது. ட்ரை பண்ணுங்க. என்னா வில்லத்தனம். இப்போ நான் போகப் போற சலூன் ஒரு பெட்டிக் கடை. அடப்பாவி நீ இன்னும் சொல்ல வந்ததை ஆரம்பிக்கவே இல்லயா?

அது ஒரு ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் போடப்பட்ட கடை. பூகம்பமே வந்தாலும் நாங்கள் எங்களின் இடம் மாற்ற மாட்டோம், நாங்கள் சுற்றவாப் போகிறோம் என்று ஒரு தோரனையாக இருந்த இரண்டு நாற்காலிகள். பாதரசம் பார்த்திராத கண்ணாடிகள். எப்பொழுது விழுவேன் என்று எனக்கே தெரியாது என்ற அளவிற்கு ஏங்கிக் கொண்டிருந்த சிகப்பு நிற பான் எச்சில் முடி வெட்டுபவன் வாயின் இடதோரம். ஸ்ப்ரைட் பாட்டிலில் ஸ்ப்ரே செய்வதற்கான தண்ணீர். டேய் அதான் சரியா வரலேல்ல. இப்படியெல்லாம் எழுதிட்டா நெறைய பேரு வந்து படிச்சுடுவாங்கன்னு நினைப்பா? ஒழுங்கா பேசு, சரி சரி ஒழுங்கா எழுது. அதாங்க இப்படி தான் இருந்துச்சு அந்த சலூன்.

உள்ளே போனதும் அவர் 'புளீச்' என்றார். கொய்யாலே, உன் கடைக்குள்ள கூடவாயா நீ எச்சையத் துப்புவே? வேறு கடைக்கு போலாம்ன்னா எங்க போறது. அதுக்கு முன்ன வாரம் என்னோட நண்பன் வேற 'ஏன் டா நீ எப்படி டா இவ்ளோ முடியோட அலையறன்னு கேட்டுட்டான். வெட்டியே ஆகணும்னு அந்த 'புளீச்'ச மன்னிச்சு அசையாத சுற்றும் சேர்ல உக்காந்துகிட்டேன்.
அவர் ஏதோ கேட்டர். பான் வாய் முழுசா இருந்ததுனால என்ன கேட்டார்ன்னு தெரியலே. அநேகமா என்ன வேணும்னு கேட்டார்ன்னு நினைக்கிறேன்.
நான், 'ஹேர் கட்', என்றேன்.
'க்யா?', என்றார்.

ஏன் டா நான் என்ன ஜபனீஸ்லியா பேசினே? உலகத்துல எல்லா இடத்துலையும் இப்படி தான் சொல்லுவாங்க. எப்படி டா உனக்கு ஹேர் கட்ட புரிய வெப்பேன். இத வரைஞ்சி எல்லாம் காட்ட முடியாதே. என்ன பண்ணுவேன் நான். உனக்கு முடி வெட்டி காமிச்சா தான் உனக்கு ஹேர் கட் ன்னா என்னான்னு தெரியும்னா, அதுக்கு எனக்கு நேரம் இல்லடா, கொஞ்சம் ட்ரை பண்ணி புரிஞ்சிக்கோ

'ஹேர் கட், கட்டிங்க்', என்றேன்.
'ஓ கட்டிங், டீக் ஹே', ன்னு சொல்லிட்டு இன்னொரு தபா புளீச்.
மவனே என்மேல மட்டும் அந்த புளீச் ஸ்ப்ரே ஆச்சு நீ காலி டி.
அந்த ஸ்ப்ரைட் பாட்டில்ல இருந்த தண்ணிய என்மேல தெளிச்சுகிட்டே இன்னொரு புளீச். இப்போ என் மேல என்ன விழுகுதுன்னு கூட எனக்குத் தெரியல தண்ணியா, புளீச்சான்னு.
'கித்னா ஹே ஹேர் கட்', என்றேன்.
'க்யா கித்னா?' என்றான் அந்த புளீச்.
டேய் உனக்கு உண்மையாவே புரியலியா இல்ல, புரியாத மாதிரி நடிக்கிறியா. கித்னா கூடவா டா உனக்கு தெரியாது. இத தான் டா நான் முதல்ல கத்துகிட்டேன்.

வலது கை கட்ட விரல் நுனிய ஆள்காட்டி விரல் நுனியோட வெச்சி எவ்ளோ அப்படின்னு சைகை செய்தும் புரியல அவனுக்கு.
ஒரு வேல இது நம்ம ஊருல மட்டும் தான் இந்த சைகை பிரபலம் போல இருக்குன்னு பர்ஸ்ல இருந்த காச காமிச்சேன். அவனும் அவங்கிட்ட இருந்த காச காமிச்சான்.
ஏன் டா நாம் என்ன ட்ரேடிங் கேமா ஆடப் போறோம்? வெளக்கெண்ண.
'கித்னா பைசா ஹே கட்டிங்', என்றேன்.
'பச்சீஸ்', என்று இன்னொரு புளீச்
'டீக் ஹே, ஒகே', என்றேன்.
'சுட்டா?' என்றான் அவனோட ஆள்காட்டி விரல காமிச்சுகிட்டு.
சுட்டான்னா சிகரெட் தானே, இவன் ஏன் இத கேக்றான். கஸ்டமர் சேடிஸ்பேக்ஷன்னா?
'நஹி நஹி, சுட்டா நஹி', என்றேன்.
'மீடியம்?', இன்னொரு புளீச்.
சிகரெட்டுக்கும் மீடியம்கும் என்ன டா லிங்? ஓ அந்த சுட்டா, சோட்டா வா? ஹேர் கட் மீடியமா வேணுமா, சோட்டாவா வேணுமான்னு கேக்றானா இவன்.
'சோட்டா ஹே', என்றேன்.

ரொம்ப சின்னதா கட் பண்ண சொல்லணும், அத எப்படி சொல்றது?
'படா சோட்டா', என்றேன்.
'படா யா சோட்டா', அதாவது பெருசாவா, சின்னதாவா?, என்றான்
'நஹி, லம்பா சோட்டா', என்றேன்.
அவன் முழிச்சுகிட்டு இருந்தான்.
சரி டா தப்பு தான். இரு யோசிச்சு சொல்றேன்.
'பஹூத் சோட்டா', என்றேன்.
எப்படி கண்டு புடிச்சுட்டோம்ல?
'ஆஹ்', என்று சிரித்தான்.
கொய்யாலே, நான் அப்படி என்ன டா சொல்லிட்டேன்.
அவன் சிரிச்சதுக்கு மதிச்சு, நானும் சிரிச்சு, 'ஆஹ், சோட்டா ஹேர் கட்', என்றேன்.
'க்யா?', என்றான்.
இவனுக்கு ஏதோ ஒரு வார்த்தை புரியலேன்னு மட்டும் எனக்கு நல்லாப் புரிஞ்சிப் போச்சு. ஆனா என்னான்னு மட்டும் தெரியல.
'கட்டிங் சோட்டா ஹே', என்றேன்
'ஓ', என்று மறுபடியும் புளீச்.
டேய் உனக்கு கட்டிங்ன்னு சொன்னா புரியுது, ஆனா ஹேர் கட்டிங் ன்னா புரியலயா? ஹேர் கட்டிங்ன்னு சொல்லும் போதெல்லாம் க்யா க்யான்னு சொல்றே, ஆனா கட்டிங்ன்னு சொன்னாப் புரிஞ்சிக்றே. டேய் ஹேர் னா தெரியாம தான் சலூன் வெச்சிருக்கியா? நல்லவன் டா நீ. இன்னும் முடி வெட்டவே ஆரம்பிக்கல, அதுக்கு முன்னடி இவ்ளோ பிரச்சனை. நடக்கட்டும் நடக்கட்டும்

ஒரு அரை மணி நேரம் முடிஞ்சப்றொம், 'கைசா ஹே', என்றான்.
'இதர் தோடா ஆர் கட் கீஜியே', என்றேன். அதாவது இங்க இன்னும் கூட கொஞ்சம் வெட்டுங்கன்னு சொல்ல வந்தேன். ஆனா நான் சொன்னதுக்கு என்ன அர்த்தம்ன்னு எனக்குத் தெரியல.
அவனும் மதிச்சு வெட்டறேன்னு பேருல முடிய புடிச்சு புடிச்சு வெட்டினதுல, வெட்டின முடிய விட புடிங்கின முடி தான் அதிகமா இருந்திருக்கும். புடிங்கி.
அப்றொம் அவனே 'ஏக் தம் அச்சா ஹே', என்றான்.
டேய் இன்னும் கொஞ்சம் வெட்டு டா, இதோட நான் ஒரு மூனு மாசம் வெட்டக் கூடாது.

'ஆர் தோடா கட் கீஜியே', என்றேன். நமக்கு அவ்ளோ தாங்க தெரியும்.
என்னோட நெத்தியக் காமிச்சு 'அரே இதர் பால் கம் ஹே', என்றான்.
அடங்கொய்யாலே, வயசாச்சுன்னு சொல்றியா டேய்ய்ய்ய்ய்? போதும் போதும்ன்னு நானே எழுந்திருக்கப் பாத்தேன்.

அதுக்கப்புறம் அவன் என்ன உக்கார வெச்சு, மேக் அப்ங்கிற பேருல ஏதோ ஒன்ன மூஞ்சில அப்பி, துவைக்கவே இல்லாத ஒரு டவல்ல துடைச்சு, 'கைசா ஹை', என்றான்.
இந்தில எனக்கு கெட்ட வார்த்தை எதுவும் தெரியாததுனால தப்பிச்சட டி
'ஏக் தம் அச்சா ஹே', என்றேன்.
அவன் பதிலுக்கு புளீச், என்றான்.

12 comments:

Manu said...

Ur correlation between you and ur manasatchi is so cool and different. Today i laughed first by reading ur post.

Ur wordings made a saloon shop come straight before my eyes.

Expecting more comedy posts from you.

Nalla iruku.

நறுமுகையே said...

Ha ha ha...! It is really nice & comedy post.I too face these probs:) One plus point, every month my hair style is changing as NERYA PULICH mumbai la irrukkanga... Next time mubai try pannunga TRUTH....!

வித்யா said...

:)

யூர்கன் க்ருகியர்..... said...

தமாஸ்

Truth said...

வருகைக்கும் கமெண்டிற்கும் நன்றி
Mano
நறுமுகையே
வித்யா
யூர்கன் க்ருகியர்

sujatha said...

Hi Truth
சலூன் கடையும் நீங்களும் மற்றும் கடைக்காரனும் என் கண் முன்னால் . மிக்க நன்று. உங்கள் மனசாட்சியும் நீங்களும் உரையாடியது "simply superb".

Truth said...

@Sujatha,
ரொம்ப நன்றி அக்கா. :-)

புன்னகை said...

ஒரு வழியா பிறந்த நாளுக்காச்சும் முடிய வெட்டியாச்சா??? கேட்கும் போதே அம்புட்டு சந்தோஷமா இருக்கு! :-)

//உங்க வீடு எங்க இருக்குன்னு யாருக்கும் தெரியாத தைரியமா?//
ஹி ஹி... தெரியாதவங்க, http://kanavumeippadavaendum.blogspot.com/2008/12/600-077.html போய் பாருங்கப்பா, இந்த பிரம்மாண்டமான ஊர்ல தான் இருக்கு இவங்க வீடு.

//ஏன் டா நாம் என்ன ட்ரேடிங் கேமா ஆடப் போறோம்? வெளக்கெண்ண.//
கலக்கல் :-)

//கஸ்டமர் சேடிஸ்பேக்ஷன்னா?//
ரணகளத்துலயும் குதூகலம்??? ;-)

//என்னோட நெத்தியக் காமிச்சு 'அரே இதர் பால் கம் ஹே', என்றான்.
அடங்கொய்யாலே, வயசாச்சுன்னு சொல்றியா டேய்ய்ய்ய்ய்?//
ஹி ஹி ஹி... அவனுக்கும் கூட தெரிஞ்சு போச்சா??? ;-)

உங்களுடைய மனசாட்சி தாங்க பதிவுல ஹைலைட்! சிரிச்சு சிரிச்சு வாயும் வயிறும் செம்ம வலி. கொலை வெறி நாளுக்கு நாள் கூடிட்டே போகுது? என்ன நடக்குது??? :P

//'Where is Kiran?'//
நீங்க அடுத்த முறை இந்தியா வரும் போது நாங்க யாரும் கேட்காம இருந்தா சரி!
:-)

Truth said...

@புன்னகை,
போஸ்ட் அ கமெண்ட் இடத்துல, போஸ்ட் மார்டெம் பண்ணியிருக்கீங்க போல.
வருகைக்கும் கமெண்டிற்கும் நன்றி.

கார்க்கி said...

ஹிஹிஹிஹி

பதிவு பளீச்...

மங்களூர் சிவா said...

புளீச்
:))))))))))

Truth said...

நன்றி கார்க்கி, மங்களூர் சிவா