Thursday, July 02, 2009

நினைத்து நினைத்து பார்த்தேன்

சமீபத்தில் தொலை தூரம் பேருந்தில் தனியாகப் பயணித்துக் கொண்டிருந்த நேரம், (இந்த பயணத்தைப் பற்றி பிரிதொரு சமயம் பதிவுகிறேன்) தனிமையைப் போக்க, மற்றும் நேரத்தைக் கொல்ல (kill the time) என்ன செய்வதென்று யோசிக்கும் போது நமக்குப் பிடித்த பாடல்களை மனதிற்குள் பாடிக் கொண்டே வரலாம் என்று எண்ணி, பிடித்த பாடல்களை முனுமுனுத்துக் கொண்டிருந்தேன். பொதுவாக எனக்குப் பிடித்த பாடல்கள் முழுவதும் இசைக்காகவே கேட்பேன், பாடல் வரிகள் அவ்வளவாக மனதில் இருக்காது. அப்படி இருக்க முடிந்த வரையில் பாடல்களின் வரிகளை நினைவில் கொண்டு வர நினைத்து, தோற்றுப் போனது 'நினைத்து நினைத்து' பாடல் 7ஜி ரெயின்போ காலனியிலிருந்து.

அடுத்த நாள் ஆபீசுக்கு வந்து உடனே இண்டெர்நெட்டில் தேடிப் பார்த்தேன். அருமையான வரிகள். ஆண் பாடும் பாடல் வரிகளுக்குப் பெண் பாடும் பாட்டு வரிகள் எவ்வளவு அழகாக பதில் சொல்கிறது. மிரண்டே போனேன். கிட்டத்தட்ட அனைவருக்கும் இந்த பாடல் தெரிந்திருக்கலாம். தெரியாதவர்களுக்கு இதோ கீழே. ஆண் பாடும் வரிகள் நீல நிறத்திலும், பெண் பாடும் வரிகள் பிங்க் நிறத்திலும் இருக்கிறது.

நினைத்து நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்

நினைத்து நினைத்து பார்த்தால்
நெருங்கி அருகில் வருவேன்

உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓ
உன்னில் இன்று என்னைப் பார்க்கிறேன்

உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓ
உன்னில் இன்று என்னைப் பார்க்கிறேன்

எடுத்துப் படித்து முடிக்கும் முன்னே
எறியும் கடிதம் எதற்கு பெண்ணே

எடுத்துப் படித்து முடிக்கும் முன்னே
எறியும் கடிதம் உனக்குக் கண்ணே

உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓ
உன்னில் இன்று என்னைப் பார்க்கிறேன்

உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓ
உன்னில் இன்று என்னைப் பார்க்கிறேன்


அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
உன்னைக் கேட்கும் எப்படிச் சொல்வேன்
உதிர்ந்து போன மலரின் மௌனமா?

அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
நமது கதையை காலமும் சொல்லும்
உதிர்ந்து போன மலரின் வாசமாய்...

தூது பேசும் கொலுசின் ஒலியை
அறைகள் கேட்கும் எப்படிச் சொல்வேன்
உடைந்து போன வளையல் பேசுமா?

தூது பேசும் கொலுசின் ஒலியை
அறைகள் முழுதும் ஆண்டுகள் சொல்லும்
உடைந்து போன வளையலின் வண்ணமாய்...

உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்
விரல்கள் இன்று எங்கே?

உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்
விரல்கள் உந்தன் கையில்

தோளில் சாய்ந்து கதைகள் பேச
முகமும் இல்லை இங்கே

தோளில் சாய்ந்து கதைகள் பேச
நமது விதியில் இல்லை

முதல் கனவு முடிந்திடும் முன்னமே
தூக்கம் கலைந்ததே

முதல் கனவு போதுமே காதலா
கண்கள் திறந்திடு


பேசிப் போன வார்த்தைகள் எல்லாம்
காலம் தோறும் காதினில் கேட்கும்
சாம்பல் கறையும் வார்த்தை கறையுமா?

பேசிப் போன வார்த்தைகள் எல்லாம்
உனது பேச்சில் கலந்தே இருக்கும்
உலகம் அழியும் உருவம் அழியுமா?

பார்த்துப் போன பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் கேள்விகள் கேட்கும்
உயிரும் போகும் உருவம் போகுமா?

பார்த்துப் போன பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் உன்னுடன் இருக்கும்
உனது விழியும் என்னை மறக்குமா...

தொடர்ந்து வந்த நிழல்கள் இங்கே
தீயில் சேர்ந்து போகும்

தொடர்ந்து வந்த நிழலின் பிம்பம்
வந்து வந்து போகும்

திருட்டுப் போன தடயம் பார்த்தும்
நம்பவில்லை நானும்

திருட்டுப் போன தடயம் இருந்தும்
திரும்பி வருவேன் நானும்

ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய்
என்றே வாழ்கிறேன்

ஒரு தருணம் என்னடா காதலா
உன்னுள் வாழ்கிறேன்


ரசிச்சு எழுதியிருக்காங்க இல்ல.

7 comments:

Truth said...

HTML ஃபார்மட்டிங் பண்றதுகுள்ள போதும் போதும்ன்னு ஆயிச்சு.

ரமணன்... said...

hats off to na.mu :)

புன்னகை said...

உங்களுக்கு நீங்களே "me de 1st" போல? :-)
அருமையான பாடல் இது. இந்தப் பாடல்களுக்கு இப்படி ஒரு comparison இருக்கும்னு யோசிச்சது கூட இல்ல. உங்களால மட்டும் எப்படி முடியுது??? எந்த மாதிரி மன நிலைல கேட்டாலும் மனதை ஏதோச் செய்திடும் இசையும், பாடல் வரிகளும். ஆண் பாடுற பாடலுக்கு முன்னாடி வரும் BGM-ல யுவன் கலக்கியிருப்பார்.. அதுக்கு மேல பாடகர்கள். ஷ்ரேயா கோஷல் குரல்ல சிலிர்ப்பையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் அதே மெட்டுக்கு, கே.கே வெறுமையையும் சூன்யத்தையும் ரொம்ப இயல்பா வெளிப்படுத்தியிருப்பார்.

"ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய்
என்றே வாழ்கிறேன்!"
என்னோட favourite வரி! :-)

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

Truth said...

@ரமணன், புன்னகை
வருகைக்கும், கமெண்டிற்கும் நன்றி.

mazhai said...

எனக்கு பிடித்த பாடல் தான் - ஆனாலும் உங்களை போல நுட்பமாக வரிகளை ரசித்ததில்லை. மீண்டும் இந்த பாடலை அதன் வரிகளுக்காக கேட்கிறேன்.

உங்கள் Blog-ஐ bookmark tools-ல் சேர்த்திருக்கிறேன்.

Truth said...

நன்றி மழை.