Monday, April 20, 2009

அது எப்படி டா முடியும்

அலுவலகத்தில் மதிய உணவிற்காக பெரிய வரிசையில் நின்று டோக்கனை வாங்கி, பிறகு கையில் சாப்பட்டுத் தட்டுடன் உட்கார ஒரு இடம் தேடி அலைவதை ஔவையார் பார்த்திருந்தால் அவரது கொடுமையில் கொடுமை பாட்டில் இதையும் சேர்த்துக் கொண்டிருப்பார்.

சரி இடத்தைப் பிடித்துவிட்டோம் என்ற மகிழ்ச்சி, வாங்கிய உணவு வாயைச் சென்றடைந்ததும் மங்களம் பாடி விடுகிறது. பிறகென்ன? ஏதோ மருந்தை விழுங்குவது போல, உணவை உருண்டைகளாக்கி உள்ளுக்குள் தள்ளி விட்டு ஒரு செக் லிஸ்டில் 'லன்ச்' என்றிருக்கும் இடத்தில் ஒரு டிக் அடித்து விட்டால் முடிந்தது என்னுடைய மதிய உணவு. இந்த நிலை பூனேவில் மட்டுமல்ல, உலகின் எல்லா மூலைகளிலுள்ள கேண்டீன்களிலும் தான் (என்று நினைக்கிறேன்).

இரண்டு வருடங்களுக்குப் பின்னர், இப்பொழுது மீண்டும் அம்மா சமைப்பதை டப்பாவில் போட்டுக் கொண்டு வருவது இன்றோடு இரண்டு நாட்களாகிறது. சென்ற சனியன்று அம்மா, அப்பா, பாட்டி பூனேவிற்கு சமைக்கத் தேவையான சகலத்துடன் வந்து சேர முதல் பத்தியில் நான் அழுத அவலம் ஒரு முடிவிற்கு வந்தது. ஞாயிறு இரவு, திங்கள் மதியத்திற்கு என்ன சமைக்கலாம என்று அம்மாவும், பாட்டியும் நன்றாக யோசித்து தக்காளி சாதம் செய்து விடுவதாக முடிவு செய்தனர். இந்த முடிவை அவர்கள் என்னிடம் சொல்ல, நான் அவர்களிடம் 'இந்தத் தக்காளி சாதம், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், புளி சாதம் எல்லாம் நான் லண்டன்ல தனியா இருக்கும் போது கூட சமைச்சதில்ல', என்றேன்.

பிறகு நான் சில விஷயங்களைச் சொல்ல முடிவானவை இதோ.
- என்ன சமைக்கலாம் என்று முடிவு செய்யும் போது, சமைக்கும் உணவில் என்ன இருக்கிறது என்று ஆராய்தல்.
o தக்காளி சாதத்தில் சத்து ஒன்றுமில்லை. அதனால் கடைசியில் சமைத்தது பருப்பு + காய்கறி.
- எந்த உணவில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ளுதல்
o பருப்பு (pulse) வகையில் புரதச்சத்து உள்ளது. உடம்பு சதை வளர்க்க இது மிகவும் தேவை.
- அரிசியில் என்ன இருக்கிறது?
o ஒன்றுமே இல்லை, நிறைய கலோரீஸ் தவிர.
- கலோரீஸ் இருந்தால் என்ன?
o கலோரீஸ் இருக்கலாம். ஆனால் அதை உடற்பயிற்சி செய்து எறிக்க வேண்டும். தவறினால், சதை வளரும், வயிறு பாகத்தில் மட்டும்.
- எப்போது என்ன சாப்பிட வேண்டும்?
o காலையில் அதிகமாக. கிட்டத்தட்ட 12 மணி நேரத்திற்கு பின்னர் சாப்பிடுவதால் தான் ஆங்கிலத்தில break fast (break the fast) என்று கூறுகிறார்கள். மேலும் ஒரு நாள் முழுக்க நமக்கு சக்தியைத் தருவது காலை உணவு தான்.
o மதியம் சிறிது குறைவாக.
o இரவு மிகவும் குறைவாக, அரிசி வகைகள் கண்டிப்பாக தவிர்ப்பது நல்லது.

'நீ இவ்வளவு ஒல்லியா இருக்கியே டா', இது அம்மா
'சரி நீங்க என்னோடு இரண்டு மாதங்கள் இருக்கப் போறீங்க, நீங்க சொல்றதை எல்லாம் நான் கேட்கிறேன், நீங்க சாப்பிட சொல்றதை எல்லாம் சாப்பிடுகிறேன்', என்று சொல்ல, அம்மா சிரிக்க, நான் தொடர்ந்தேன், 'ஆனா ஒரு கண்டிஷன், இரண்டு மாதத்தில் எனக்கு தொப்பை போடக் கூடாது ஆனா, கைகள் குண்டாகனும்', என்றேன்.
'அது எப்படி டா முடியும்?' மீண்டும் அம்மாவும் பாட்டியும் ஆழந்த யோசனையில்.

9 comments:

புன்னகை said...

Me de 1st :-)

புன்னகை said...

//என்ன சமைக்கலாம் என்று முடிவு செய்யும் போது, சமைக்கும் உணவில் என்ன இருக்கிறது என்று ஆராய்தல்//
இந்தத் தொல்லையெல்லாம் வேணாம்னு தான் சமையல் பக்கமே தலை காட்றதில்ல :-)

//அரிசியில் என்ன இருக்கிறது?//
ஞாயிறு காலைல இட்லிகளை ஒரு கை பார்க்கும் போது இந்த நினைப்பு வந்தா சரி ;-)

//'நீ இவ்வளவு ஒல்லியா இருக்கியே டா'//
Late news no use... Next :P

//'அது எப்படி டா முடியும்?'//
அம்மா, பாட்டி பட்டியலில் என்னையும் சேர்த்துக் கொள்ளவும்! :-)

வித்யா said...

:)

ராமலக்ஷ்மி said...

பாவம் அம்மாவும் பாட்டியும்:)!

Truth said...

வருகைக்கும், கமெண்டுக்கும் நன்றி புன்னகை, வித்யா, ராமலஷ்மி :-)

நேத்து நைட் வீட்டுக்குப் போகும் போது சப்பாத்தி உருட்டிக்கிட்டு இருந்தாங்க :-)

Manu said...

நண்பனே...நான் ஒன்று கேட்கிறேன்?

சாலையில் ஓரமாக உடுக்க உடை இல்லாமல் மூன்று வேளையில் இரண்டு வேலை மட்டும் உண்டு வாழ்ந்து இருக்கும் அந்த மக்கள் அரோகியமாக தான் உள்ளனர். நீங்கள் பட்டியல் போட்டு இருக்கும் பல விஷயங்கள் அவர்களக்கு தெரியாது. ஆனாலும் அவர்கள் அரோகியமாக தான் உள்ளனர். ஆதலால் நீங்கள் சொன்னது உண்மைகள் இல்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால் நீங்கள் சொன்ன விஷயங்கள் அனைவர்க்கும் பொருந்தாது என்பது தான் உண்மை...

அப்புறம்...உங்கள் கைகள் மட்டும் குண்டாக வேண்டுமா? நான் நினைகிறேன் உங்கள் உடம்பில் வயிர் பகுதி கைகளில் தான் உள்ளதோ என்னவோ???

SK said...

என்ன தலைவா டரியல் பண்றீங்களே.. அம்மா சமையலா.. என்சாய் பண்ணும் ஒய் .. :)

Truth said...

@மனோ, சாப்டு சாப்டு முகத்துலையும், வயிற்றிலும் சதை போடாமலிருக்க...

@SK, ஆமா, தல :-) என்சாய் பண்ணிக்கிட்டுத்தான் இருக்கேன். :-)

Raich said...

திருத், என்னதான் அம்மாவும் பாட்டியும் பார்த்து பார்த்து சமைச்சாலும், கண்டிப்பா நீங்க குண்டாகிடுவீங்க. ஏன் என்றால் அவுங்க சாப்பாடு மட்டும் ஊட்ரதில்லை, பாசத்தையும் சேர்த்து தான்.