Friday, April 10, 2009

அவன்

இரண்டு ஆண்டுகள் ஆயிற்று, வீட்டையும் நாட்டையும் விட்டுத் தனியாக வாழத் துவங்கி. வருடத்திற்கு ஒரு முறை சென்னை செல்ல வேண்டும் என்பதே எனது எண்ணம். அதேப் போல, சென்ற வருடம், சென்னை சென்றேன். இப்போது மீண்டும் சென்னை செல்லும் சமயம். அம்மா, அப்பாவை லண்டனுக்கு அழைத்துக் கொள்வதாகத் தான் முதலில் திட்டமிடப்பட்டது. விசா பிரச்சனையில் அவர்கள் வர முடியாதலால், இனி மனது தாங்காது என எண்ணி, பெட்டிகளைப் பூட்டினேன், காசுகளைக் கட்டினேன், சகப் பயணிகளோடு பறந்து கொண்டிருக்கிறேன் இப்போது.

காலச்சக்கரம் தான் எவ்வளவு வேகமாச் சுழல்கிறது. குழந்தைப் பருவம், பள்ளிக்குச் சென்றது, நண்பர்களுடன் சண்டை போட்டுப் பின்னர் சேர்ந்து கொள்வது, கல்லூரிக் கலாட்டாக்கள், அர்த்தமற்ற இரவு நேர க்ரூப் ஸ்டீஸ், பின்னர் வேலைத் தேடி அலைந்தது, வேலைப்லுவில் இரவு பகல் தெரியாமல் முட்டி மோதியது போன்றவையெல்லாம் ஏதோ கண் சிமிட்டும் நேரத்தில் முடிந்தது போல இருக்கிறது எனக்கு. நினைவுகள் பின் நோக்கிச் சென்றாலும், மனதில் ஏனோ, சென்னையைச் சீக்கிரம் சேர்ந்து விட வேண்டும் என்ற எண்ணம். கிட்டத்தட்ட பதின்மூன்று வருடங்களுக்குப் பின்னர் என்னுடைய முதல் நண்பனைப் பார்க்கத் தான் இந்தத் துடிப்பு. இத்தனை காலத்திற்குப் பின்னர் அவனை அடையாளம் கண்டுபிடிக்க முடியுமா என்பதே எனக்கு ஆச்சரியமாகத் தான் இருக்கிறது.

பத்தாவது முடித்த பின்னர், நான் வேரு பள்ளியில் சேர்ந்ததால், இவனுடைய தொடர்பு துண்டிக்கப்ட்டது. LKG முதல் நாளிலிருந்தே நாங்கள் நண்பர்களாகித் தொலைத்ததால் என்னவோ, என்னை இவனிடமிருந்தோ, அல்லது அவனை என்னிடமிருந்தோ பிரிக்கமுடியவில்லை. சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் ஆர்குட் என்ற விதி விளையாடி, துண்டிக்கப்பட்ட இணைப்பு மீண்டும் இணைக்கப்பட்டது. இம்முறை மிக வலிமையாக.

அன்றிலிருந்து இவனைப் பார்த்துப் பேசிப் பழகிப் பழைய நாட்களைக் திரும்பிக் கொண்டுவர வேண்டுமென்றே மனதில் எண்ணம் ஓடிக் கொண்டிருந்தது. தாய், தந்தை என்ற உறவுகளின் பொருள் புரியாத வயதிலிருந்தே நாம் அவர்களைச் சரியாக அழைப்பது போல், நண்பனின் அர்த்தம் தெரியாத வயதிலேயே 'இவன் தான் என்னுடைய நண்பன்' என்று சொல்லிக் கொள்ளும்படி வைத்தது அவனது நட்பு.

சென்னை விமான நிலையத்தில் இப்போது நான் நின்று கொண்டிருக்கிறேன். இவனைக் கண்டுபிடிக்க முடியுமா என்று நினைக்கும் போது, என் நினைவில் இருந்த அதே முகம் ஒன்று, மலர்க்கொத்துடன் எனக்காகக் காத்துக் கொண்டிருக்க, எனது பெட்டிகளைத் தள்ளி அவனை தழுவிக் கொள்ள மீண்டும் LKG நாட்கள் நினைவில் குடியேறியது. அவன் பெயர் மனோகரன்.

10 comments:

ராமலக்ஷ்மி said...

ஆமாங்க சிறுவயது நட்பு போல சிறந்தது எதுவுமில்லை. அறியா வயதில் எந்தவிதமான எதிர்பார்ப்புகளுமற்று இனிதாய் இருக்கும் அத் தோழமைகள். தொடருங்கள்...

[நாகவள்ளி பயம் காட்டிக்கிட்டே இருந்ததால் ப்ளாக் பக்கம் வரமுடியலை:-0. அப்பாடி...:)]

புன்னகை said...

பாரதியோட, "இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்" தான் நினைவுக்கு வருதுங்க! ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க! உங்க நட்பைப் பார்க்கும் போது கொஞ்சம் பொறாமையாத் தான் இருக்கு.

நரை தழுவும் நாட்களிலும் இந்நட்பு குறை ஏதும் தழுவாதிருக்க என் மனமார்ந்த பிரார்த்தனைகள்.

Thamira said...

நிஜமான உணர்ச்சிப்பூர்வமான இறுதிப்பகுதி.! ஸோ டச்சிங்..

(எழுத்துப்பிழைகளை தவிர்க்க கவனம் செலுத்தவும், வேலைப்பலு, வேரு பள்ளி)

Arasi Raj said...

அர்த்தமில்லா நைட் ஸ்டடிஸ் ........///

ஆமா ஆமா

----------------------------------------

பழைய நண்பரை கண்டு பிடிச்சதே பெரிய விஷயம்....அதுல சந்திக்க வேற போறீங்களா....சுப்பர்...அந்த அனுபவத்தையும் எழுதுங்க

ஆ! இதழ்கள் said...

ALL THE BEST FOR ONE MORE ROUND OF YOUR THICK FRIENDSHIP. I MISS MY FRNDS TOO... :(

Truth said...

@ராமலக்ஷ்மி
//ஆமாங்க சிறுவயது நட்பு போல சிறந்தது எதுவுமில்லை. அறியா வயதில் எந்தவிதமான எதிர்பார்ப்புகளுமற்று இனிதாய் இருக்கும் அத் தோழமைகள்.
உண்மைங்க

[நாகவள்ளி பயம் காட்டிக்கிட்டே இருந்ததால் ப்ளாக் பக்கம் வரமுடியலை:-0. அப்பாடி...:)]
ஓ அப்போ படிச்சீங்களா? நீங்க படிக்கலயோன்னு கொஞ்சம் கவலை இருந்திச்சு :-)

********************************************
@புன்னகை
//நரை தழுவும் நாட்களிலும் இந்நட்பு குறை ஏதும் தழுவாதிருக்க என் மனமார்ந்த பிரார்த்தனைகள்.

ரொம்ப நன்றி புன்னகை

********************************************
//ஆதிமூலகிருஷ்ணன்
வருகைக்கு நன்றி ஆதி.

//(எழுத்துப்பிழைகளை தவிர்க்க கவனம் செலுத்தவும், வேலைப்பலு, வேரு பள்ளி)
மாத்திட்டேங்க

********************************************
@நிலாம்மா
//பழைய நண்பரை கண்டு பிடிச்சதே பெரிய விஷயம்....அதுல சந்திக்க வேற போறீங்களா....
சந்திச்சுட்டேன்னு தானே பதிவு போட்டிருக்கேன் :-) airport-லியே சந்திச்சாச்சு :-)

********************************************
@ஆ! இதழ்கள்
ALL THE BEST FOR ONE MORE ROUND OF YOUR THICK FRIENDSHIP.
ரொம்ப நன்றிங்க
I MISS MY FRNDS TOO... :(
கண்டுபிடிச்சிடலாம் :-)

Arasi Raj said...

அட ஆமா...நான் ஒரு அவசர குடுக்கை ...எப்டி இருக்கார் நம்ம மனோகர் ;-)

Raich said...

Nice blog...
Good narration.

Joe said...

அட்டகாசமான எழுத்து நடை.
உணர்ச்சிபூர்வமான வர்ணிப்பு.

எனக்கு கூட பால்ய சிநேகிதர்களை மீண்டும் சந்திக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

Truth said...

@நிலாம்மா,
//எப்டி இருக்கார் நம்ம மனோகர் ;-)
அவனுக்கு என்ன, சூப்பரா இருக்கான் :-)

*******************************************
@Raich
// Nice blog... Good narration.

நன்றி ரைச்

*******************************************

@Joe

//அட்டகாசமான எழுத்து நடை. உணர்ச்சிபூர்வமான வர்ணிப்பு

ரொம்ப நன்றிங்க.

//எனக்கு கூட பால்ய சிநேகிதர்களை மீண்டும் சந்திக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
அப்றொமென்ன, சந்திக்க வேண்டியது தானெ? :-)