Saturday, April 04, 2009

எனது பெயர் நாகவள்ளி : நிறைவுப் பகுதி

பாகம் இரண்டு

இரவு எட்டு முப்பது.
இது இராஜன் மயங்கி விழும் நேரம். ஆனால் இராஜன் கைகளின் இரத்த காயங்களின் வலியில் துடித்துப் போனான்.

'அண்ட் தட்ஸ் தி எண்ட் ஆஃப் தி கேம்.', என்று எனது வலது கட்டை விரலை தாமுவிற்க்கு உயர்த்தினேன்.

அடுத்த நாள் காலை சினிங்காப்பட்டியிலிருந்து சென்னைக்கு எங்கள் வேனில் சென்றுக் கொண்டிருந்த போது, எனது தொலைப்பேசி சினுங்கியது. அதில் My Heart Calling என்ற எழுத்துக்கள் 'உயிரின் உயிரே' என்ற பாடலுடன் மின்னிக்கொண்டிருந்தது.
'யோவ்', என்றாள் அவள்.
'அடியே, எப்படி டி இருக்கே', இது நான்.
நாங்கள் படித்தது கேம்ப்ரிட்ஜ் யூனிவெர்சிட்டியில்.ஆனால் எங்களை அழைத்துக் கொள்ளும் விதம் இன்றும் மாறவில்லை.
'நல்லா இருக்கேன். எப்படி இருக்கான் இராஜன்?'
'தெரியல மா, குணமான மாதிரி தான் இருக்கு. ஆனா, ஐ அம் நாட் ஷூர்'
'ஹ்ம்ம்ம், அடுத்து என்ன ப்ளான்?'
'அடுத்த மாசம் இராஜன இன்னும் க்ளோசா வாட்ச் பண்ணப்போறோம்'
'போறோமா? என்ன சொல்றே?', பொய்யான பயத்துடன் கேட்டாள்.
'ஆமா, நீயும் தான், நம்ம வீட்டில தான்', என்று கூறி அழைப்பைத் துண்டித்தேன்.

நானும் அவளும் சுமார் மூன்று ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். நான் அமானுஷ்ய சக்திகளின் பின்னிருக்கும் உண்மைகளை கண்டுபிடிக்க, அவளோ ஆவி உலகின் ஆதியை தேடி அலைந்தாள். அவளுடைய ஆராய்ச்சியை தவறென்று உணர்த்துவதற்க்குள் என்னுடைய மயிர்கள் சில வெள்ளைக் கொடியையே காட்டிவிட்டது. இரு துருவங்களாக இருந்தாலும், ஒன்றாக சந்தோஷமாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.

சென்னையில், அவளுடன் நான்.
'சரி என்ன ஆச்சு, இங்க என்ன பண்ணப் போறீங்க?', இது அவள்.
'அடுத்த மாசம் அமாவாசைக்கு அடுத்த நாள் இராஜனை நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு வந்து, அவனுக்கே தெரியாம, அவன மானிட்டர் பண்ணப் போறேன்'
'பண்ணப் போறோம்னு சொன்னீங்க, இப்போ என்ன போறேன்?'
'சரி இரண்டு பேருமே சேர்ந்து ஆராய்ச்சி பண்ணலாம். நான் அவனுடைய ப்ரேயின் செல்ஸ்ச ஆராய்ச்சி பண்றேன், நீ நாகவள்ளியோடப் பேசு', என்றேன் சிரித்திக்கொண்டே.

அமாவாசையன்று, எனது வீட்டிற்க்கு, இராஜன் வரவழைக்கப் பட்டான். அவனுடைய சம்மதத்துடன், ஹிப்னடைஸ் செய்து சில விஷயங்கள் தெரிந்துக் கொண்டேன். ஆனால், நாகவள்ளியைப் பற்றி, ஒன்றும் தெரியவில்லை. வீட்டில் எல்லா முக்கிலும் CCTVக்கள் பொருத்தப் பட்டது. இராஜனின் ஒவ்வொரு அசைவும், ஸ்டடி ரூமிலிருந்தபடி கண்கானிக்க வசதிகள் செய்யப்பட்டது.

அமாவசைக்கு அடுத்த நாள், இரவு ஏழு ஐம்பது:
நான் எனது தற்காப்புக்காக எனது கோட்டில் ஒரு 9 mm பிஸ்டலை மறைத்துக் கொண்டு, இராஜனுடன் ஹாலின் சோஃபாவில் அமர்ந்து சகஜமாகப் பேசிக் கொண்டிருந்தேன்.

இரவு ஏழு ஐம்பத்தைந்து:
தொலைக்காட்சியில் நம்பினால் நம்புங்கள் நிகழ்ச்சியின் கடைசி சில நிமிடங்கள், இராஜன் இரத்தக் கைகளுடன் வலியில் துடித்துக் கொண்டிருக்க நாகவள்ளி தூக்கிலடப்படும் காட்சி ஓடிக்கொண்டிருந்தது.
ஸ்டடி ரூமில் தாமு தனது குழுவுடன் தீவிரமாக கண்கானித்துக் கொண்டிருந்தார்.
என்னவள் நாகவள்ளியுடன் பேச வேண்டுமென்று தனது பானியில் நாகவள்ளிக்கு பிடித்த உணவை சமைத்துத் தள்ளினாள்.
'வாங்க சாப்பிடலாம்' அவள் அழைத்தாள்.
இராஜனும், நானும் வாஷ் பேசினில், கைகளை கழுவி விட்டு மேசைக்கு வந்தோம். நான் இராஜனை மிக நெருக்கமாகத் தொடர்ந்தேன்.
ஸ்டடி ரூமில் தாமு மானிட்டரின் ஒவ்வொரு அங்குலமும் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.
நான் இராஜனின் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன்.

இரவு எட்டு மணி:
அவள் உள்ளிருந்து தான் சமைத்ததைக் கொண்டுவந்தாள்.
இராஜன் தனது இரு கைகளையும் பிசைந்துக் கொண்டான்.
அவள் வெளியே வர, கைகளில் இரத்தத்தை பார்த்து 'என்னங்க இரத்தம்', என்று அலறி கையில் இருந்த பாத்திரத்தைக் கீழே போட்டாள்.
நான் உடனே எழுந்து, இராஜனை வெறித்துப் பார்த்தேன். இராஜன் முகத்திலும் அதிர்ச்சி.
இரத்தக் கைகளுடன், பற்களைக் கடித்துக் கொண்டே 'எனது பெயர் நாகவள்ளி', என்றேன் நான்.

முற்றும்.

8 comments:

நிலாவும் அம்மாவும் said...

எனது பெயர் நாகவள்ளி : நிறைவுப் பகுதி

/////
ஐ....இருங்க படிச்சுட்டு வரேன்

நிலாவும் அம்மாவும் said...

நான் உடனே எழுந்து, இராஜனை வெறித்துப் பார்த்தேன். இராஜன் முகத்திலும் அதிர்ச்சி.
இரத்த கைகளுடன், பற்களை கடித்துக் கொண்டே 'எனது பெயர் நாகவள்ளி', என்றேன் நான்.//////////

அப்படின்னா?...உங்களுக்கு பேய் பிடிச்சுடுச்சா?

இனிமே எழுத மாட்டீங்களா ?

கதை அவ்ளோ தானா?

நிலாவும் அம்மாவும் said...

சூப்பரோ சூப்பர்

Sankar Balasubramaniam(சங்கர்) said...

உண்மையாவே கலக்கிப்புட்டீங்க .. வழக்கமான வழவழா கொழகொழா முடிவா இல்லாம வித்தியாசமா இருந்திச்சு. ஆனா இதை அறிவியல்பூர்வமா விளக்கப் போறீஙகளோன்னு எதிர்பார்த்தேன். ஹீரோயினோட பேரை சொல்லவே இல்லை. அடுத்த பாகத்தில தான் சொல்லுவீங்களோ ?

வித்யா said...

Unexpexted ending. Superb:)

Truth said...

@நிலாவும் அம்மாவும்
//அப்படின்னா?...உங்களுக்கு பேய் பிடிச்சுடுச்சா?
அப்படின்னு சொல்லலியே :-)

//கதை அவ்ளோ தானா?
முற்றும் கூட போட்டுட்டேன். அவ்ளோ தான் :-)

//சூப்பரோ சூப்பர்
நன்றி நிலாம்மா

**************************************
@சங்கர்
//உண்மையாவே கலக்கிப்புட்டீங்க .. வழக்கமான வழவழா கொழகொழா முடிவா இல்லாம வித்தியாசமா இருந்திச்சு.
நன்றி சங்கர்

//ஆனா இதை அறிவியல்பூர்வமா விளக்கப் போறீஙகளோன்னு எதிர்பார்த்தேன்.
முயற்சி பண்ணினேன், ஆனா சட்டியில் இருந்தாத் தான் அகப்பையில வருமாமே! ;-)

//ஹீரோயினோட பேரை சொல்லவே இல்லை. அடுத்த பாகத்தில தான் சொல்லுவீங்களோ ?
ஹீரோயின் பேரா? ஹீரோ பெயரே சொல்லலே :-) அதெல்லாம் கண்ணுல படலியா? :-)

******************************************
@வித்யா
//Unexpexted ending. Superb:)
நன்றி வித்யா... :-)

Manu said...

கடைசியாக எங்கள் இதய துடிப்பை மீண்டும் சீராகி விட்டீர்கள். நன்றி.
உங்கள் கதையின் கதாநாயகன் மிகவும் அழகாக இருப்பார் என்று நினைகிறேன். எனென்றால் ஒரு ஆவிக்கே பிடித்து உள்ளது என்றால் கண்டிபாக அவன் ஒரு ஆணழகன் தான்.
மற்றவர்களுக்கு ஆச்சிரியத்தை அளிக்க வேண்டும் என்பது உங்களின் குறிக்கோள் என்று நினைகிறேன்.
ஆனால் நாகவள்ளி கதாபாத்திரத்துக்கு ஒரு முடிவு இல்லாமல் போனது தான் ஒரே ஒரு வருத்தம்.....

புன்னகை said...

//'யோவ்', என்றாள் அவள்.
'அடியே, எப்படி டி இருக்கே', இது நான்.//
உங்களுக்கு 'romance' கூட நல்லா தான் வருதுங்க! ;-)

//'ஆமா, நீயும் தான், நம்ம வீட்டில தான்', என்று கூறி அழைப்பைத் துண்டித்தேன்.//
இது கொஞ்சம் ஆணாதிக்கத்தோட வெளிப்பாடு மாதிரி இருக்கே??? :-(

//அவளுடைய ஆராய்ச்சியை தவறென்று உணர்த்துவதற்க்குள் என்னுடைய மயிர்கள் சில வெள்ளைக் கொடியையே காட்டிவிட்டது.//
எப்படி தான் உங்களால மட்டும் இப்படியெல்லாம் எழுத முடியுதோ தெரில! டியூஷன் ஏதும் எடுப்பதா இருந்தா சொல்லுங்களேன் (சிறப்புத் தள்ளுபடிகளோட!)

//'பண்ணப் போறோம்னு சொன்னீங்க, இப்போ என்ன போறேன்?'//
சொந்த அனுபவம் எழுத்து வடிவில் ரொம்ப இயல்பாவே வெளிப்பட்டிருக்கு :-)

//இரத்த கைகளுடன், பற்களை கடித்துக் கொண்டே 'எனது பெயர் நாகவள்ளி', என்றேன் நான்.//
எதிர்பார்த்த மாதிரியே உங்களுடைய Touch! :-)

//முற்றும்.//
முற்றும் - நாகவள்ளியைத் தொடர்ந்து படித்தவர்களுக்குப் "பயம்"!