Thursday, December 03, 2009

Photographers Invited - புகைப்படபோட்டிக்கு அழைப்பு.

Translated into English towards the end.

இம்முறை அழகான தலைப்பு நமது PiTல். இதுவரை தனித்தனியாக போட்டியில் கலந்து கொண்டிருந்த நமக்கு இம்முறை ஒரு குழுவாக பணியாற்ற ஒரு புது சந்தர்ப்பம். தலைப்பு 'நம் நகரம்'. ஒரு குழுவில் குறைந்தது இரண்டு பேராவது இருக்க வேண்டுமாம். அவர்கள் வசிக்கும் நகரத்தைப் பற்றி புகைப்படங்களை எடுக்க வேண்டும். ஐம்பதிலிருந்து நூற்றிருபது புகைப்படங்கள் வரை எடுத்து ஒரு ஆல்பத்தை உருவாக்கித் தர வேண்டும். கடைசி நாள் பிப்ரவரி 28. இப்படிப்பட்ட குழுப் போட்டி இது தான் முதன் முறையாக நடத்தப் படுவதால், விதிமுறைகளும் இடையிடையே மாற்றப்படலாம். சில விதிமுறைகள் புதிதாக சேர்க்கப்படலாம். கடைசியில் தேர்ந்தெடுக்கப்படும் புகைப்படங்கள்/ஆல்பம் ஒரு புத்தகமாக வெளியிடப்பட்டு நமது வட்டாரங்களில் விற்கப்பட்டு, அதில் வரும் பணம் ஏதேனும் (இந்திய) தொண்டுநிறுவனத்திற்கு வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்.


சரி இனி விஷயத்திற்கு வருவோம். நான் தற்போது (இதில் 'தற்போது' என்பது மிக முக்கியம்:-) ) லண்டனில் வசித்து வருவதால், நான் லண்டனை ஆல்பமாக்கும் குழுவை உருவாக்க நினைக்கிறேன். ஒரு வேளை குழு ஏற்கனவே உருவாகியிருந்தால், என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள். ஒரு குழுவில் இரண்டு அல்லது மூன்று பேர் மட்டும் இருந்தால் நல்லது. அதற்கும் மேலாக நண்பர்கள் இருக்கும் பட்சத்தில் நாம் வேலையை பிரித்துக் கொண்டு, இரண்டு அல்லது அதற்கு மேல் குழுக்களாக பிரிந்து பணிபுரிந்து கடைசியில் ஆல்பத்தை ஒன்று படுத்தலாம்.

இதில் என்னோடு 'லண்டன்' ஆல்பத்தில் பங்கேற்க விரும்பும் நண்பர்கள் அவர்கள் இதுவரை எடுத்த புகைப்படங்கள் கொண்ட ஆல்பத்தை பின்னூட்டவும். டிசெம்பர் 20ஆம் தேதிற்குள் குழுவை அமைத்து விட்டால் பாதி வேலை முடிந்துவிடும் என்று நினைக்கிறேன்.

Folks, we have a photo competition in place. The topic is 'My City', more precisely London, in this case. We have to shoot 50 to 120 photos which depicts London before 28-Feb-2010. Interested do comment with your contact details, I will get in touch with more information personally.

Regards,
Kiran Gosu.

13 comments:

Athisha said...

நண்பா இதுகுறித்து இன்னும் தகவல்கள் கிடைக்குமா?

dhoniv@gmail.com

Truth said...

அதிஷா,

உங்களுக்கு மெயில் அனுப்பியிருக்கிறேன்.

SurveySan said...

'என் நகரம்' மறுவி, இப்ப 'எங்க ஏரியா'ன்னு மாறியிருக்கு. :)
புதிய பிற்சேர்க்கையை PiTல் பார்க்கவும்.

///ஒரு புத்தகமாக வெளியிடப்பட்டு நமது வட்டாரங்களில் விற்கப்பட்டு////
வெற்றி ஆல்பத்தை, ஒரே ஒரு 'photo book'ஆக தயார் செய்து அதை விற்க முயற்சிக்கப் படும். பல copies அடிப்போம் என்பதெல்லாம் சாத்யமா என்பது தெரியவில்லை. பார்ப்போம், மக்கள்ஸ் கலக்கினாலும் கலக்குவாங்க.

Vidhya Chandrasekaran said...

வெற்றி பெற வாழ்த்துகள்.

Truth said...

விளக்கத்திற்கு நன்றி சர்வேசன்.

நன்றி வித்யா.

Truth said...

உண்மையாவே லண்டன்ல யாருமே இல்லையா? அட நான் கூட பெரிய கூட்டம் வரும், எப்படி சமாலிக்கப் போறேன்னு இல்ல நினைச்சுக்கிட்டு இருந்தேன். :-)

Sankar said...

ஹஹா .. மச்சி, நான் அங்கே வந்தப்போ எடுத்த படம் கொஞ்சம் இருக்கு. ஒரு கை குடுக்கட்டுமா ?

Truth said...

@சந்திப்பிழை.
நானே இன்னும் கொஞ்சம் நாள்ல சென்னை (ஹைதை) வந்தா வந்திருவேன். அப்படி சென்னை வந்தா நான் சென்னைய பத்தி தான் புகைப்படங்கள எடுக்க வேண்டி இருக்கும். நீ ஏன் இப்போவே சென்னை குழுவோட சேர்ந்துக்க கூடாது

Thamira said...

வாழ்த்துகள் கிரண்.

ப்ரியா கதிரவன் said...

Good luck Kiran.

ப்ரியா கதிரவன் said...

Good luck Kiran.

Manu said...

நம்ம ஊரே படம் புடிகறதா இருந்தா....நான் ரெடி...

Truth said...

நன்றி அதி, ப்ரியா
மனு, நம்ம ஊருன்னா, எது பெங்களூரா, சென்னையா? எதுவா இருந்தாலும், மக்கள் இருக்காங்க, சேந்துக்கோங்க. :-)