Saturday, December 12, 2009

மெகா பிக்சல் என்றால் என்ன?

சென்ற காம்போசிஷன் பதிவில் புகைப்படங்களை எப்படி எடுக்க வேண்டும் என்பதைச் சொல்லியிருந்தேன். இப்போது தான் ஆரம்பித்து இருப்பதனால் சில எளிய கான்செப்ட்ஸ் மட்டுமே சொல்லப் போகிறேன். எளிய கான்செப்ட்ஸ் எல்லாம் முடிச்சிட்டு அப்புறமா எனக்குத் தெரிஞ்ச சில முக்கியமானவற்றை எளிமையாகச் சொல்கிறேன். இந்த இணையத்தில் புகைப்படக் கலை பற்றி வரும் பதிவுகள், SLR வைத்திருப்பவர்களுக்கு மட்டும் இல்லை. சாதாரண கேமரா வைத்திருப்பவர்களுக்கும் தான். எனவே கேமராவை வாங்கும் போது நாம் நினைக்கும் அம்சங்களை இப்போது பார்ப்போம். இதில் உங்களுக்கு என்ன அம்சங்கள் தேவைப் படுகிறது என்பது உங்களுக்குத் தான் தெரியும் என்பதால், நான் அவற்றை விளக்குவதோடு நிறுத்திக் கொண்டு, என்ன வேண்டும் என்பதை உங்களிடத்தில் விட்டு விடுகிறேன்.

இன்று நாம் மெகா பிக்சல் பற்றி பார்ப்போம். இது தான் நாம் அனைவரையும் ஈர்ப்பது. ஆனால் மெகா பிக்சல் என்றால் என்ன என்பதை பார்போம். மெகா பிக்சலைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன், பிக்சல் என்றால் என்ன என்பதைப் பார்போம். நமது புகைப்படங்களில் இருக்கும் ஒவ்வொரு புள்ளியைத் தான் பிக்சல் என்று குறிப்பிடுகிறோம். நாம் நமது கணினியில் Display Properties-இல் resolution-ஐ மாற்றும் போது என்ன நடக்கிறது. நாம் 1024x768 அல்லது 800x600 அல்லது வேறொரு resolution வைத்திருப்போம். 1024x768 என்று இருக்கும் போது நமது கணினியில் 1024x768=786432 பிக்சல்கள் (அதாவது புள்ளிகள்) இருக்கிறது என்று பொருள். அதே 800x600 என்று இருக்கும் போது 800x600=480000 பிக்சல்கள் தான் இருக்கும். ஒரு மெகா பிக்சல் என்பது 1000000 (ஒரு மில்லியன்) பிக்சல்கள் ஆகும். எனவே நமது கணினியின் மெகா பிக்சல் 786432/1000000 = 0.79 மெகா பிக்சல் தான். அதாவது ஒரு மெகா பிக்சலை விட குறைவு.

சரி இனி நாம் நமது கேமராவின் மெகா பிக்சலைப் பற்றி பார்ப்போம். ஒரு கேமரா 8 மெகா பிக்சல் என்று இருக்கிறது எனக் கொள்வோம். 8MP (MP: Mega Pixel) என்பது 8000000 பிக்சல்களாகும். அதாவது நமது கேமராவின் சென்சரில் (sensor) 8000000 பிக்சல்களை சேமிக்க (to save) முடியும். கேமராவின் சென்சர் பரப்பளவு மெகாபிக்சலுக்கேற்ப மாறுவதில்லை. அதாவது 1024x768ஆக இருந்தாலும், 800x600ஆக இருந்தாலும் எப்படி நமது மானிட்டெரின் பரப்பளவு மாறுவதில்லையோ அதேப் போல் மெகா பிக்சல்கள் நமது கேமரா சென்சரின் பரப்பளவை மாற்றுவதில்லை. ஆனால் என்ன மாறுகிறது? பிக்சல்களின் எண்ணிக்கை தான் மாறுகிறது. சரி பிக்சல்களின் எண்ணிக்கை மாறுவதால் என்ன நடக்கிறது?

நமது சாதாரண போஸ்ட் கார்டில் சுமார் 475x335 பிக்சல்கள் இருப்பதாக நினைப்போம் (சரியான எண்ணிக்கை தெரியவில்லை, இது வெறும் உதாரணம் மட்டுமே). 475x335=159125 பிக்சல்கள் அதாவது 0.16 MP. ஆக 0.16 மெகா பிக்சலில் எடுக்கும் புகைப்படம் ஒரு போஸ்ட் கார்டின் அளவில் பார்த்தால் நன்றாகத் தான் தெரியும். ஆனால் இதையே ஒரு A4 அளவு (சுமார் 950x672) காகிதத்தில் ப்ரிண்ட் செய்தால் கண்டிப்பாக சரியாக இருக்காது. ஒரு A4 அளவு புகைப்படத்திற்குக் குறைந்த பட்சம் 950x672=638400 அதாவது 0.64 மெகா பிக்சல் இருக்க வேண்டும். இப்போது மெகா பிக்சல் பற்றி ஓரளவு உங்களுக்குப் புரிந்திருக்கும்.

8MP என்பது நமது மானிட்டரின் அளவைக் காட்டிலும் கிட்டத் தட்ட 3 மடங்கு அதிகம். இந்த மூன்று மடங்கை குறைத்து தான் நமது மானிட்டரில் பார்க்கிறோம். எனவே நமது கணினியில் பார்க்கும் போது படங்கள் 8MP கேமராவில் எடுத்ததாக இருந்தாலும், 10MP கேமராவில் எடுத்ததாக இருந்தாலும் நமக்கு ஒன்றும் வித்தியாசம் தெரியப் போவதில்லை. எப்போது வித்தியாசம் தெரியும் என்றால், நாம் இதை ப்ரிண்ட் செய்யும் போது தான், அதுவும் A4 காகித்தில் பிரிண்ட் செய்தால் தெரியாது, 8MP காதிதத்தில் அதாவது சுமார் 4000x2000 பிக்சல்* அதாவது 125cm x 62.5cm அதாவது அகலம் ஒன்றேகால் மீட்டர், உயரம் கிட்டத் தட்ட முக்கால் மீட்டர் அளவு காகிதத்தில் ப்ரிண்ட் செய்தால் மட்டுமே வித்தியாசம் தெரியும். ஆனால் நம்மில் எத்தனை பேர் இந்த அளவுக்குப் படங்களை ப்ரிண்ட் செய்யப் போகிறோம். இன்றைய உலகில் நாம் அனைவரும் புகைப்படங்களைக் கணினியில் பார்ப்பதோடு நிறுத்திக் கொள்கிறோம். அல்லது A4 அளவு காகிதத்தில் தான் ப்ரிண்ட் செய்யப் போகிறோம். புகைப்படங்களைப் பெரிய அளவில் பிரிண்ட் செய்பவர்கள், அதாவது திருமணங்களில் புகைப்படங்கள் எடுப்பவர்கள் அல்லது போஸ்டர்கள் தயார் செய்பவர்கள் தான் மெகா பிக்சலைப் பற்றி அதிக அளவில் ஆராய வேண்டியிருக்கிறது.

என்னுடைய கேமரா வெறும் 10.1 மெகா பிக்சல் தான். எனக்குத் தெரிந்து சோனி எரிக்சன் மொபைலில் 12MP இருக்கிறது. சோனி DSLRல் 24.6MP இருக்கிறது. மெகா பிக்சலின் முக்கியத்துவம் இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். இனி கேமராவை வாங்கும் போது உங்களுக்கு இது முக்கியமா என்று நீங்களே முடிவு செய்யுங்கள். நீங்கள் புகைப்படங்களைப் ப்ரிண்ட் செய்யப் போவதில்லை என்றால் 10MP போதுமானது. என்னைக் கேட்டால் 8MPக்கும் - 10MPக்கும் அதிக வித்தியாசம் தெரியப்போவதில்லை. கேமரா வாங்கும் போது மெகா பிக்சலின் பங்கு இத்துடன் முடிவு பெறுகிறது.

கேமரா வாங்கும் போது நாம் பார்க்க வேண்டிய அம்சங்கள் இன்னும் நிறைய இருக்கிறது. அனைத்தும் இந்தப் பதிவில் எழுத வேண்டும் என்று தான் நினைத்தேன். ஆனால் மெகா பிக்சல் மட்டுமே பதிவைப் பெரிதாக்கியதால் அடுத்த அம்சங்கள் அடுத்தடுத்தப் பதிவுகளில் வரும்.

*பிக்சலிலிருந்து செண்டி மீட்டருக்கு மாற்றுவதை நமது ms paintல் பார்த்து தெரிந்துக் கொள்ளலாம்.


டிஸ்கி: எனக்குத் தெரிந்ததை எளிமையாக சொல்லியிருக்கிறேன். இதில் தவறுகள் இருந்தால் தெரியப் படுத்தவும்.

29 comments:

Anonymous said...

A useful write up :)
cleared some of my old doubts:)

கார்க்கிபவா said...

//எனக்குத் தெரிந்ததை//

இதுல எதுவுமே எங்களுக்கு தெரியாது பாஸ்.. தொடருங்க.. நாங்களும் ஈ.சியா பி.சி ஸ்ரீராம் ஆகலைனாலும் ட்ரூத் ஆகனுங்க

ஷாகுல் said...

Good Post

Thamira said...

8MP என்பது நமது மானிட்டரின் அளவைக் காட்டிலும் கிட்டத் தட்ட 3 மடங்கு அதிகம்.//

முந்தைய பாராவில் இப்பிடிச்சொல்லியிருக்கீங்க.. 8/0.79=10.12

அப்படின்னா சுமார் 10 மடங்கு அதிகமில்லையா? ஹிஹி.. அப்புறம் பிரிண்ட் போடாம இருக்குறவங்களுக்கு 10 MPல்லாம் ரொம்ப ஓவர்னு நினைக்குறேன்.

ரொம்ப இன்ஃபர்மேடிவ், தொடருங்க.!

அன்பரசன் said...

நல்ல யூஸ்ஃபுல்லான தகவல்

நாதஸ் said...

Also More the pixels, more the noise at high ISOs. Especially in point and shoot cameras don't go after high Megapixels.

ஆ.ஞானசேகரன் said...

//டிஸ்கி: எனக்குத் தெரிந்ததை எளிமையாக சொல்லியிருக்கிறேன். இதில் தவறுகள் இருந்தால் தெரியப் படுத்தவும். //

நல்லாயிருக்கு தொடருங்கள்

Vidhya Chandrasekaran said...

தொடருங்க..

Muthu Kumar N said...

\\1024x768ஆக இருந்தாலும், 800x600ஆக இருந்தாலும் எப்படி நமது மானிட்டெரின் பரப்பளவு மாறுவதில்லையோ அதேப் போல் மெகா பிக்சல்கள் நமது கேமரா சென்சரின் பரப்பளவை மாற்றுவதில்லை\\

சரிதான் ஆனால் ஆழமாக நாம் எல்லா வகையான டிஜிடல் கேமராக்களை நோக்கினால் ஒவ்வொரு வகையான டிஜிடல் கேமராக்கள் வெவ்வேறு அளவுகளிள் சென்சார்கள் வைத்துள்ளனர். எ.கா. point & shoot camera's 2/3" or 1/3" Olympus Some cameras 4/3" Nikon & Canon DSLR cameras 1.5x or 1.6x crop factor. Size 23.6mm x 15.7mm

மேலும் தகவல்களுக்கு இந்த லிங்கைப் பாருங்கள்.

Source:http://en.wikipedia.org/wiki/Digital_single-lens_reflex_camera

http://www.cambridgeincolour.com/tutorials/digital-camera-sensor-size.htm
ஆனால் எல்லாமே நாம் என்ன மாதிரி எடுத்த படங்களை கையாளப்போகிறோம் என்பதைப் பொருத்துதான். மானிட்டர் மற்றும் டிவியில் பார்பதற்கு சாதாரண கேமராவே போதுமானது. crop செய்ய DSLR தேவைப்படும்.

\\அப்புறம் பிரிண்ட் போடாம இருக்குறவங்களுக்கு 10 MPல்லாம் ரொம்ப ஓவர்னு நினைக்குறேன்.\\

நண்பரே,

நீங்கள் சொல்லவது சரிதான் ஆனால்,
crop செய்பவர்களுக்கு எவ்வளவு பிக்ஸல்ஸ் இருந்தாலும் போதாது.


உங்கள் பதிவுகளை தவறாது படித்து வருகிறேன். எல்லோருக்கும் நிச்சயம் பயன்படும். வளர்க உங்கள் பணி.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்

Rajakamal said...

very informative please keept it up

SPECTRUM VIDEOS said...

Very interesting.

Thank you

Muralidharan

venkatesh said...

நான் sony (w130)8mp கேமரா வைத்து இருக்கிறேன்... இதில் ISO என்று ஒன்று உள்ளது... எனக்கு அதனை எப்படி திறம்பட பயன் படுத்துவது என்று தெரியவில்லை... உதவி செய்யுங்கள்... இதற்கான தீர்வை எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைப்பீர்கள் என்று ஆவலோடு எதிர்பார்கிறேன்... id - rvenkatesh.13 @gmail.com

Truth said...

நன்றி மது கிருஷ்ணா
நன்றி கார்க்கி
நன்றி ஷாகுல்

Truth said...

நன்றி ஆதி.
பத்து மடங்கு தான் பரப்பளவில்.
x axis மற்றும் y axisல் சுமார் மூன்று மடங்கு என சொல்ல வந்தேன். உண்மையில் முதலி 10 மடங்குன்னு தான் எழுதினேன். அப்புறம் புரியாம இருக்குமோன்னு இப்படி மாத்தினேன். கரக்டா புடிச்சிட்டீங்க :-)

Truth said...

நன்றி அன்பரசன்
நன்றி நாதஸ்
நன்றி ஞானசேகரன்.
நன்றி வித்யா.

Truth said...

நன்றி முத்துக்குமார். ஒரு கேமரா 10MP என்று இருக்கிறது என்று கொள்வோம். அதே கேமராவில் 8MP மற்றும் 6MPல் எடுக்கலாம். அதைத் தான் விளக்கியிருக்கிறேன்.

crop factor பற்றி இப்போது சொல்ல விரும்பவில்லை. இது ஒரு பெரிய காசெப்ட். இப்போதைக்கு தேவையில்லை. முதலில் இதைப் பற்றி எழுதி, பின்னர் குழப்பங்கள் அதிகமாக இருக்குமென்று நீக்கிவிட்டேன். பிறிதொரு சமயம் வரும்.

//நீங்கள் சொல்லவது சரிதான் ஆனால், crop செய்பவர்களுக்கு எவ்வளவு பிக்ஸல்ஸ் இருந்தாலும் போதாது.

இதுல நீங்க crop என்று எதை குறிப்பிடுகிறீர்கள்?

Truth said...

நன்றி ராஜ்கமல்.
நன்றி முரளி.

Truth said...

நன்றி வெங்கடேஷ்.
உங்களது கேள்விக்கான பதில் பிரிதொரு சமயம் ஒரு பதிவாக வரும். மறவாமல் வந்து படிக்கவும். எழுதும் போது உங்களுக்கு மெயிலும் அனுப்புகிறேன். ஆனால் நீங்கள் மற்ற factorசும் கற்றுக் கொள்ள வேண்டும். தொடர்ந்து படிக்கவும்.

KKPSK said...

gud one!
if we want to see photos thru DVD player USB/CD drive, 3MP is OK. otherwise it would hang/slow to view!

Rajalakshmi Pakkirisamy said...

Informative ................very useful

ராமலக்ஷ்மி said...

மிக அருமையாக விளக்கியிருக்கிறீர்கள். நன்றி.

Anonymous said...

indha mega pixel mega pixel nnu solrangale adhu idu thaana ? thanks for details..

ப்ரியா கதிரவன் said...

Where are you?

Rajalakshmi Pakkirisamy said...

Enganga poneenga?

Henry J said...

Unga blog romba nalla iruku
(`*•.¸(`*•.¸ ¸.•*´)¸.•*´)

Make Money Online - Visit 10 websites and earn 5.5$. Click here to see the Proof

Download Youtube Videos free Click here

தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. Click Here

Anonymous said...

Romba naalaa update illa.
Enna sir????

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Hari said...

Enna sir romba naala entha postum illa enna achu romba busya?

Ungal post kaga kathu irukkum ungal post fan club

subha said...

really useful