Friday, November 20, 2009

பத்துக்குள்ளே நம்பர் ஒன்னு சொல்லு

ஒன்றிலிருந்து பத்துக்குள் ஒரு எண்ணை நினைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மனதில் இருப்பதைச் சொல்கிறேன், உங்கள் ராசியை அலசுகிறேன் என்றபடி நமக்கு எத்தனையோ மெயில்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது. இப்படி வரும் மெயில்களுக்கு நான் நினைக்கும் எண் எப்போதும் 'ஒன்று' தான். 'ஒன்று' எனக்கு பிடித்த எண்னா? அப்படி எல்லாம் இல்லை. ஒருவேளை முப்பத்தேழுலிருந்து நாற்பத்திமூன்றுக்குள் ஒரு எண்னை நினைக்கச் சொன்னால், நான் முப்பத்தேழு தான் நினைப்பேன். ஏன்னா நமக்கும் சாய்சுக்கும் ஆகவே ஆகாது...

எனக்கு இருபது வயதிருக்கும் போது நான் பொறியியல் படித்துக் கொண்டிருந்தேன். ஹி ஹி ஹி... போதும் உங்க தூள் பட டயலாக். வழக்கமாக ஒரு வகுப்பில் அறுபது மாணவர்கள் இருப்பார்கள். ப்ராக்டிகல்ஸ் பரிட்சை வரும் போது வகுப்பை நான்காகப் பிரித்து பதினைந்து பதினைந்துகளாக பிரித்து மேய்ப்பது பாரம்பரிய வழக்கம்.

அன்றைக்கும் அப்படித் தான். ForTran மற்றும் COBOL ப்ராக்டிகல்ஸ். பன்னிரண்டாவது வரை அப்பாவின் ஆசையின் பெயரில் பயாலஜியில் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தேன். அதனால் கணினியைத் தொட்டது எல்லாம் கல்லூரியில் தான். முதன் முதலாக கம்ப்யூட்டர் ப்ராக்டிகல்ஸ் என்பது உள்ளூர பயம் இருந்தது. பயம் எல்லாம் கொடுத்த வேலையை செய்யத் தெரியுமா என்றெல்லாம் இல்லை. நாங்க எல்லாம் நல்லா படிக்கிற பயலுக. ஆமா... பயமெல்லாம் தெரிந்த ப்ரோக்ராமை குறிப்பிட்ட நேரத்தில் கீ-போர்டில் எழுத்துக்களைத் தேடித் தேடி டைப் அடித்து முடிக்க முடியுமா என்று தான். அன்று அனைவரும் இருக்கும் ப்ரோக்ராம்களை படித்துக் கொண்டிருக்கும் போது, நான் மட்டும் கீ போர்டில் எந்த எழுத்து எங்கிருக்கிறது என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

அனைத்து கேள்விகளும் ஒவ்வொரு தாளில் மறைத்து வைத்திருப்பார்கள். நாம் குலுக்கல் முறையில் நமக்கு கிடைப்பதை எடுத்துக் கொண்டு அதிலுள்ள கேள்விக்கான ப்ரோகிராமை எழுத வேண்டும். நேரம் நெருங்க நாங்கள் வரிசையில் நிற்க, முதலில் நிற்பவன் அங்கிருக்கும் பதினைந்து தாள்களில் ஒன்றை தேர்ந்தெடுத்து அதிலுள்ள ஒரு கேள்விக்கு ப்ரோக்ராம் எழுத வேண்டும். எனது எண் பதினைந்து, நான் வரிசையில் கடைசி. நான் செல்லும் போது ஒரே ஒரு கேள்வித் தாள் தான் பாக்கி இருக்கும். இதில் ஆசிரியரின் நக்கல் வேறு. 'சூஸ் ஒன்லி ஒன்' என்று சிரித்தார். 'என்னத்த சூஸ்றது' என்று நினைத்து விட்டு மிஞ்சிய ஒன்றை எடுத்துக் கொண்டு சென்று ப்ரோக்ராமைக் கணினியில் அடிக்க ஆரம்பித்தேன். கடினமானது தான். பதினைந்து பேரில் முதலில் முடித்தது நான் தான். அது மட்டுமின்றி சரியாக முழுமையாக எழுதியதும் நான் மட்டும் தான்.

பின்னர் ஒரு முறை Electricals & Electronics லேப். எலக்ட்ரிகல்ஸ் என்பது (எனக்குப் புரிந்த வரை, இதையே முதன்மையாக படித்தவர்கள் பின்னூட்டத்தில் தாறு மாறாக விளக்கவும்) ACயில் இயங்குபவை. எலக்ட்ரானிக்ஸ் என்பது DCயில் இயங்குபவை. சரி அதெல்லாம் இப்போது தேவையில்லை. என்னைப் பொருத்த வரையில் எலக்ட்ரிகல்ஸ் என்பது மெகானிக் ஷெட் போலிருக்கும் ஒரு பட்டறையில் பெரியப் பெரிய மோட்டார்கள், ட்ரான்ஸ்பார்மர்களுடன் வயர்களுடன் வண்டி ஓட்ட வேண்டும். எலக்ட்ரானிக்ஸ் என்பது சிப், டையோட், ரெசிஸ்டர் போன்ற சின்னச் சின்ன விஷயங்களை வைத்துக் கொண்டு சிரித்துக் கொண்டிருக்க வேண்டும். நான் ஒன்பதாவது படிக்கும் போதே எலக்ட்ரானிக்ஸ் பற்றி அக்காவிடம் பல விஷயங்களைக் கற்றுக் கொண்டதால் எனக்கு எலக்ட்ரானிக்ஸ் என்பது எலக்ட்ரிகல்ஸை விட சுலபமானது தான்.

அன்றும் பதினைந்து பேர் தான். எட்டு பேருக்கு எலக்ட்ரானிக்சும், ஏழு பேருக்கு எலக்ட்ரிகல்சும் என்று முடிவெடுத்து துண்டுச் சீட்டில் E (எலக்ட்ரானிக்ஸ்) மற்றும் L (எலக்ட்ரிகல்ஸ்) எழுதி வைத்தது ஆசிரிய பட்டாளம். முதலில் எந்த லேப் என்பது முடிவு செய்து அதன் பின்னர் அதில் என்ன கேள்வி என்பது அந்தந்த லேபிற்குச் சென்று முடிவு செய்யலாம் என்று நினைத்தார்கள் போலும். 'கம் அண்ட் பிக் யுவர் சிட்', என்றார் அங்கிருக்கும் ஒரு ஆசிரியர். வரிசையில் அப்போது யாரும் நிற்காததால் ஓடும் பஸ்சில் துண்டைப் போடு சீட்டு பிடிப்பது போல் அனைவரும் அலரி அடித்துக் கொண்டு எடுக்க, நான் தேடிப் பார்த்து Lலை விடுத்து E எடுத்துக் கொண்டேன். இனி சுலபம் தான்.

பதிவு பெரியதாக போய்க் கொண்டிருப்பதினால் இங்கே நிறுத்திக் கொள்கிறேன். ஆனால் தொடரும்.

8 comments:

விக்னேஷ்வரி said...

என்னோட காலேஜ் நியாபகம் வந்திடுச்சு. எங்களுக்கும் இதெல்லாம் ஒரு பாடமா வந்துட்டுப் போச்சு.
தொடரும்? அவ்ளோ பெரிய கதையா...

Truth said...

@விக்னேஷ்வரி
வருகைக்கு நன்றிங்க. காலேஜுல நடந்ததெல்லாம் ஒரு பதிவுல போட முடியுமாங்க? இன்னொரு பார்ட் தான், முடிஞ்சுடும் :)

Manu said...

பதிவு நல்லா இருக்குங்க....
ஒருத்தர சிரிக்க வைக்கிறது ஒரு தனி கலை...
அந்த கலையே ஆண்டவன் உங்களுக்கு அறிந்து தான் வாரி வாரி வழங்கி இருக்கிறார்....

புன்னகை said...

Self-damage செய்து கொள்வது எப்படின்னு ஒரு பதிவு போடுங்களேன்??? ;-)

Thamira said...

சுவாரசிய நடை. ஆமா, இன்னும் விஷயத்துக்கே வரலையா? சரிதான்.!

//என்னைப் பொருத்த வரையில் எலக்ட்ரிகல்ஸ் என்பது மெகானிக் ஷெட் போலிருக்கும் ஒரு பட்டறையில் பெரியப் பெரிய மோட்டார்கள், ட்ரான்ஸ்பார்மர்களுடன் வயர்களுடன் வண்டி ஓட்ட வேண்டும். எலக்ட்ரானிக்ஸ் என்பது சிப், டையோட், ரெசிஸ்டர் போன்ற சின்னச் சின்ன விஷயங்களை வைத்துக் கொண்டு சிரித்துக் கொண்டிருக்க வேண்டும்//

நானும் இன்னைக்கு வரைக்கும் இப்படித்தான் நினைத்துக்கொண்டிருக்கிறேன். கரெக்டுதானே? ஏன்னா நான் மெக்கானிகல்.

Truth said...

@Manu

//பதிவு நல்லா இருக்குங்க....
ஒருத்தர சிரிக்க வைக்கிறது ஒரு தனி கலை...
அந்த கலையே ஆண்டவன் உங்களுக்கு அறிந்து தான் வாரி வாரி வழங்கி இருக்கிறார்....

நன்றி மனு.

*********************************

@புன்னகை
//Self-damage செய்து கொள்வது எப்படின்னு ஒரு பதிவு போடுங்களேன்??? ;-)

ஒவ்வொரு முறையும் அத தானே பண்றேன்? இத வேற தனியா பதிவு போடுவாங்களாக்கும் :-)

*********************************

@ஆதிமூலகிருஷ்ணன்
// சுவாரசிய நடை. ஆமா, இன்னும் விஷயத்துக்கே வரலையா? சரிதான்.!

என்னங்கண்ணே, நாம இப்படி எல்லாம் பேசலாம? :-) முன்னுரைக்கு அப்புறமா டைரக்டா க்ளைமேக்ஸ் தானே நம்ம பதிவுகள்ல இருக்கும் :-)

//நானும் இன்னைக்கு வரைக்கும் இப்படித்தான் நினைத்துக்கொண்டிருக்கிறேன். கரெக்டுதானே?
தெரியலேங்க, வித்யா வந்து படிச்சு சொன்னா தான் நமக்கு தெரியும்.

sri said...

பிரக்டிகல், எக்ஸாம் என்னமோ போங்க, இதெல்லாம் நமக்கு சின்ன வயசுலிருந்தே ஆகாது...........

Truth said...

@ஸ்ரீ,

வருகைக்கு நன்றிங்க.