Friday, October 09, 2009

அவனோட கதை - காதலுக்கு மரியாதை

இது அவனோட கதை. இதுல கதாபாத்திரங்கனு சொல்றதுக்கு நிறைய பேரெல்லாம் இல்லேங்க. அவனும், அவனோட காதலி. முக்கியமா இரண்டு பேரு தான். ஊடால நிறைய பேரு வருவாங்க, போவாங்க, உக்காருவாங்க, நிப்பாங்க, எல்லாம் பண்ணுவாங்க. அவங்க எல்லாம் டூயட் பாட்டுல வர்ற சைடு வாத்தியம் போல, அவங்கள பத்தி எல்லாம் நிறைய சொல்ல தேவைப் படல.

அவன் அவள முதல் முறையா ச்சேட்ல பாத்து தன்னோட மனச தொலைச்சிட்டான். அப்போ அவன் சென்னையிலும், அவ ஆந்திரவிலும் இருந்தாங்க. அவன் மறத்தமிழன், அவ ஆந்திரா ஆவக்கா. அதான் காதலுக்கு கண்ணு, காது, மூக்கு, நாக்கு, சாக்கு எதுவுமே தேவையில்லையே அப்புறம் என்ன மொழி? காதலிச்சானுவோ, காதலிக்கிறானுவோ, காதலிப்பானுவோ, அத பத்தி நமக்கு எதுக்கு. இப்போ நம்ம டாபிக் அவங்களோட காதல் மலர்ந்தப்போ நடந்த கதை.

இப்போ அவன் ஒரு நல்ல கம்பனில கை நிறைய, பை நிறைய சம்பாதிக்கிறான். ஆனா நம்ம பசங்களுக்குக் காதல் எல்லாம் பிச்சை எடுக்கும் போது தானே வரும். அவனுக்கும் அப்போ தான் வந்துச்சு. ச்சேட்ல பாத்து காதலிச்சதால அது மேலும் மலர, மேலும் ச்சேட் செய்ய வேண்டிய சூழ்நிலை. பாவம் பையன் அவன் என்ன பண்ணுவான், he was cornered. ஏன்னா கையில செல்போன் இருந்தாலும் அதுல காசு இருக்காது. எவ்வளவு நாள் தான் அவனும் மிஸ்டு காலே தருவான். காதலோட பேஸ்மெண்ட் ரொம்ப முக்கியம், தெரிஞ்சுக்கோங்க. அதனால கொஞ்சம் செலவு பண்ணி ச்சேட் செய்யலாம்னு முடிவு பண்ணி பிச்சை எடுக்க ஆரம்பிச்சான். ஐய்யோ மன்னிச்சுக்கோடா அவனே, பிச்சை எடுக்க மாட்டான், மத்தவங்க கிட்ட கேட்டு வாங்கிக்கிட்டு போவான்.

இதுல என்ன விசேஷம்னு கேட்டீங்கன்னா, எல்லா முறையும் மத்தவங்கக் கிட்ட காசு கேட்டுட்டுப் போக முடியாது. அவனும் எத்தனை முறை தான் காறி துப்புறது தாங்கிக்க முடியும்? அப்போ வேலை செஞ்சுகிட்டு இருந்த கம்பனி கொடுத்த சம்பளத்துல சாப்பாட்டுக்கே லாட்டரி. படிக்கிறவங்களே, அவன பத்தி ரொம்ப கீழ்த்தரமா எடை போடாதீங்க. நாங்க எல்லாம் முதல் வேலை தேடும் போது அமெரிக்கால டாட் காம் பபுள். ஒருத்தனுக்கும் வேல கிடையாது. கிடைச்சாலும் சம்பளத்துல டாய்லெட் டிஷ்யூ தான் வாங்க முடியும். அதுல தான் எங்களுக்கு சாப்பாடே. அட சாப்பாடு டாய்லெட் டிஷ்யூல இல்லே, அந்த சம்பளத்துல. அவன் அந்த சம்பளத்துலேயே கொஞ்சம் ச்சேட்டுக்கு ஒதுக்கி வெச்சு காதலிச்சுக்கிட்டு இருந்தான்.

அப்போ இன்டர்நெட்ல ச்சேட் பண்றதுக்கு மணிக்கு 15 ரூபா. இன்டர்நெட் வேற செம்ம வேகமா சும்மா ஆமையோடு போட்டி போட்டுகிட்டு இருக்கும். ஒரு மணி நேரத்துல நலம், நலம் அறிய ஆவல்னு பாட தான் முடியும். அதனால குறைந்த பட்சம் ஒரு மணி நேரமாவது தேவை கடலைய வறுக்குறதுக்கு.

அன்னைக்கும் அப்படி தான், ச்சேட் செய்ய 15 ரூபாய் தேவைப் பட்டது ஆனா கையில வெறும் 5 ரூபா தான் இருந்திருக்கு, காறி துப்பாத நண்பர்களின் எண்ணிக்கை எத்தனை முறை நின்னு பாத்து எண்ணியும், தண்ணி குடிச்சு எண்ணியும் பூஜியம் தாண்டல. வங்கில அன்னைக்குன்னு பாத்து சரியா 510 ரூபா கிடக்குது. அவனோட வங்கி கணக்குல குறைந்தது 500 ரூபாய் இருக்கணும். ஆக அந்தப் பத்து ரூபாவ தான் நோண்டி எடுக்கணும். ஏ.டி.எம்-ல போய் பத்து ரூபா கேட்டா தருமா? அதனால அவன் டைரக்டா வங்கிக்கே போய், வித்ட்ராயல் ஸ்லிப் ஒன்னு வாங்கி சும்மா கெத்தா பத்து ரூபா போட்டு அங்கிருக்கும் ஆபீசர் கிட்ட தர, அவங்க
'ஏம் பா தம்பி இந்த வித்ட்ராயல் ஸ்லிப் இரண்டு ரூபா, தெரியுமா?' அப்படின்னு பீலா விட்டிருக்காங்க.
நம்ம பையன் அமெரிக்க எம்பஸில வாரணம் ஆயிரம் சூர்யா கணக்கா, 'நான் என்னோட காதலியோட ச்சேட் செய்யணும்'னு ஸீனா சொல்ல, அவங்க மெர்சலாகி காசு தந்திருக்காங்க.

காதலுக்கு மரியாதை! உண்மையாவே அவனே, நீ பண்ணின விஷயம் உன்னோட அவளுக்குத் தெரிஞ்சா அவங்களுக்கு உன் மேல காதல் அதிகமாகும்.

14 comments:

புன்னகை said...

Me de 1st after a loooooong time :-)

புன்னகை said...

நம்ம ஊர் தமிழ்ல நம்ம ஊர் காதல் கதை!!! நல்லா இருக்குங்க ட்ரூத்! சிரிக்க வைத்தாலும் உங்க அவனோட காதல் அழகு! வாழ்த்துக்கள், உங்களுக்கும் உங்கள் அவனுக்கும்! :-)

இசை நிலா said...

முடியலைங்க .. எப்படி.. நான் வடிவேல் காமெடிக்கு கூட இப்படி சிரிச்சது இல்ல .
ரொம்ப ரசிக்கும் படியா இருந்துச்சு.

பல காதல் இப்படி தான் ஆரம்பிக்குது , வலியோட வரதனால் தானோ என்னவோ வலிமையும் அதிகமாவே இருக்குது.

Manu said...

எழுத்து நடை அருமை...

எப்படி தான் இப்படி எல்லாம் எழுத இயலுமோ?

By the way...யாரு அந்த கிறுக்கன்?

Truth said...

நன்றி புன்னகை.

நன்றி இசை நிலா.

நன்றி மனு. அவன் யாருன்னு தெரியலியா? முதல் வரியில் அவனுக்கு ஒரு லிங்க் இருக்கு பாருங்க. அந்த லிங்குல இருக்கிற பதிவோட கடைசி வரிய படிங்க. உலகம் அற்தப்படும்; காதலித்துப் பார் :-)

sri said...

எங்கப்பன் குதுருக்குள்ள இல்லைங்கற கதைய போச்சே.... என்ன Truth நான் சொல்றது.............

Truth said...

@ஸ்ரீ

அட என்னங்க சொல்றீங்க?

Unknown said...

நாலு பேரு நல்லா இருக்கணும்னா எதுவும் தப்பு இல்ல

Unknown said...

Truth Correct ah

sri said...

மனோஜ் சின்ன திருத்தம், நாலு பேர் இல்ல...


ரெண்டு பேர் நல்லா இருக்கனும்னா ஏதும் தப்பில்லா........... பாஷா 2009(கிறுக்கன் knows this)

Rajalakshmi Pakkirisamy said...

innum srichittu irukken.. ha ha ha

Truth said...

@manoj
//நாலு பேரு நல்லா இருக்கணும்னா எதுவும் தப்பு இல்ல

நீங்க சொன்னா சரி தான்!

*******************************

@இராஜலெட்சுமி
//innum srichittu irukken.. ha ha ha

இதுல நக்கலு, நையாண்டி, பிக்கலு, பிடுங்களு எல்லாம் எதுவும் இல்லை தானே! நன்றிங்க இராஜி :-)

விக்னேஷ்வரி said...

இது எந்த வகைக் காதல் கதைகள்ல சேர்த்தி? ஆனா நீங்க எழுதிருக்குறது ரொம்ப நல்லா இருக்கு.

Truth said...

@விக்னேஷ்வரி
வருகைக்கு நன்றிங்க...