Tuesday, October 06, 2009

தோழியின் காதலன்

னது தோழியுடன் அந்தப்புரத்தில் விளையாடிக் கொண்டிருந்த இளவரசிக்கு வயது பதினெட்டு முடிந்து இரண்டு மாதங்கள் ஆகி நான்கு நாட்கள் எட்டிப் பார்த்து இரண்டு மணி முடிந்து இருபது நிமிடம் தொலைந்து எட்டு வினாடிகள் ஆகியிருந்தது. இதை நான் எழுதும் வேளையில் இன்னுமொரு பத்து வினாடிகள் ஆகிவிட்டது. தோழிக்கும் இளவரசிக்கும் ஒரு ஒற்றுமை - இருவரும் ஒரே சமயத்தில் பிறந்தது; வேறுபாடு - இருவரும் வெவ்வேறு சமயத்தில் பிறந்தது. பார்ப்பதற்கு இளவரசி ரம்பை போல், தோழி ஊர்வசி போல். இளவரசிக்குக் கிடைத்த அனைத்துமே தோழிக்கும் கிடைக்கும் அந்த அரண்மனையில். ஒற்றுமையினால் இருவரும் தோழிகள் ஆனார்கள், வேறுபாட்டினால் ஒருத்தி இளவரசி ஆனாள், வேறொருத்தி தோழி ஆனாள்.

வேற்றுமைக்கான பொருள் தெரியாதவர்களாகத் தான் இளவரசியும், தோழியும் முதலில் வாழ்ந்து வந்தார்கள். ஆனால் அரண்மனையில் இருந்த சிலப் பல நாரதத் தோழிகளால் இளவரசியின் தோழிக்கு விழுந்தது மனதில் ஒரு நிரந்திர வெட்டு. அன்றிலிருந்து இந்த அரண்மனையில், தான் இரண்டாம் பட்சம் தானோ என்ற எண்ணம் என்றுமே இருந்தது தோழிக்கு. வெளியே மட்டும் பொய்ச் சிரிப்பை வெளிப்படுத்திக் கொண்டு இளவரசியுடன் பழக அரம்பித்தாள்.

இளவரசிக்குத் திருமணம் செய்ய நினைத்த மன்னன், சுயம்வரத்திற்கு முன்பு இளவரசியின் புகைப்படத்தை மட்டும் அனைத்து நாட்டு இளவரசர்களுக்கு அனுப்ப முடிவு செயதார். இளவரசியை வரைய ஒரு ஓவியர் அரண்மனைக்கு அழைத்து வரப்பட்டார். ஓவியர் இளவரசியைக் காகிதத்தில் வரைய, இளவரசியோ ஓவியரை தன் மனதில் வரைந்து கொண்டிருந்தாள். ஒரு வாரத்தில் இளவரசி தன் காதலை ஓவியரிடம் சொல்ல, ஓவியரும் ஓரிரு நாட்களில் பயம் தெளிந்து சம்மதம் தெரிவித்தார். தன் காதலை இளவரசி தோழியிடம் சொல்ல, அவளோ வெளியே மகிழ்ச்சியையும், உள்ளே பொறுமியும், தனக்குக் கிடைக்காத ஒன்று இளவரசிக்கும் கிடைக்கக் கூடாது என்று முடிவு கட்டினாள்.

இளவரசிக்கு உதவி புரிவது போல் நடித்து ஓவியரைத் தனதாக்கிக் கொள்ள தோழி திட்டமிட்டாள். இதன் முதல் கட்டமாக ஓவியரையும் இளவரசியையும் பிரிப்பது என்று முடிவு செய்தாள். ஒரு மாலை வேளையில் ஓவியரும் இளவரசியும் அந்தப்புரத்தில் ஓவியம் வரைவது போல் காதலித்துக் கொண்டிருந்தனர். அப்போது தோழி மன்னரிடம் ஓவியரைப் பற்றி கீழ்த்தரமாகச் சொல்ல, மன்னனும் அந்தப்புரத்தில் இருவரும் ஒன்றாக இருப்பதைப் பார்த்துக் கோபமடைந்து உடனே ஓவியருக்கு ஒரு மாத சிறை தண்டனையும், அது கழித்தப் பின்னர் மரண தண்டனையும் விதித்தார். இளவரசி ஏதும் சொல்வத்றகு முன் ஓவியர் சிறையில் அடைக்கப் பட்டார். இது தோழிக்கு முதல் வெற்றி.

இரண்டாவது கட்டமாக, ஓவியரைத் தன்வசப் படச் செய்ய நினைத்தாள். ஓவியர் சிறையில் இருக்கும் போது தோழி பல முறை ஓவியரைச் சந்தித்து தன்னைக் காதலிக்கும் படி சொன்னாள், மேலும் அப்படி காதலித்தால் மரண தண்டனையிலிருந்து தப்ப முடியும் என்றும் சொன்னாள். இதற்கு ஒரு போதும் மயங்காத ஓவியர் மரண தண்டனையை ஏற்றுக் கொள்ளத் தயாரானார். ஓவியரைச் சம்மதிக்க வைக்க முடியாமல் போக, தோழி தனது திட்டத்தை மாற்றினாள். தனக்குக் கிடைக்காத ஏதும் இளவரசிக்கும் கிடைக்கக் கூடாதென்பதில் உறுதியாக நின்றாள். மன்னரிடம் பேசி தண்டனையை மாற்றி அமைத்தாள்.

இன்று தண்டனைக்கான நாள்.

ஓவியருக்குத் தண்டனை மாற்றப் பட்டது என்பது மட்டுமே தெரியுமே தவிர என்ன தண்டனை என்று தெரியாது. ஓவியர் சிறையிலிருந்து வரவழைக்கப்பட்டு அவர் முன் இருக்கும் இரண்டு அறைகளில் ஒன்றைத் திறந்து உள்ளே செல்ல வேண்டும் என்பது தான் தண்டனை.

தண்டனை என்னவென்று மன்னருக்கும், இளவரசிக்கும், தோழிக்கும் மட்டுமே தெரியும். ஒரு அறையில் பசியுடன் கூடிய சிங்கமும், மற்றொரு அறையில் தோழியும் இருந்தார்கள். ஓவியர் சிங்கமிருக்கும் அறையைத் திறந்தால், சிங்கத்துடன் சண்டையிட்டு வென்றால் இளவரசியைத் திருமணம் புரியலாம், ஒரு வேளை தோழி இருக்கும் அறையைத் திறந்தால், தோழியை மணக்க வேண்டும்.

இது ஏதும் தெரியாமல் ஓவியர் கம்பிகளால் அடைக்கப்பட்ட கூண்டில் இரண்டு அறைகளுக்கு முன்னால் நின்றுக் கொண்டிருந்தார். கூண்டிற்கு வெளியே இடது புறம் மன்னன் தனது ஆசனத்தில் அமர்ந்திருந்தார். அவர் அருகே இளவரசி ஓவியரின் கவனத்தைத் தன் பக்கம் இழுக்க சைகை செய்துக் கொண்டிருந்தாள். ஓவியர் அறைகளின் முன் நின்று கொணடு, இளவரசியை ஒரு முறை பார்த்தார். இளவரசி சைகை செய்தாள். ஓவியரின் உள்ளத்தில் மகிழ்ச்சி, முன் சென்று அந்த அறையைத் திறந்தார்.

பி.கு: பாட்டி வடை சுட்ட கதையைச் சொல்லும் பாட்டிகளின் மத்தியில், எனது பாட்டி சிறிது டெக்னிகல். சில மாதங்களுக்கு முன்பு ஒரு விடுகதையைச் சொல்லி பதில் தெரியாது என்று சொல்லி்ட்டாங்க. பதில் தெரியலேன்னா என்ன, ஒரு சிறுகதைக்காவது ஆகுதே.

12 comments:

sri said...

ஹா ஹா ஹா..... இத நான் என்னோட பள்ளிக்குட நாட்களிலேயே படிச்சு இருக்கேன். ஆனா அப்போ அது இங்கிலீஷ் நோன்தேடில். இருந்தாலும் உரைநடை மாத்தி நல்லாவே இருக்கு. வாழ்த்துக்கள்

Vidhya Chandrasekaran said...

விடை??

Truth said...

நன்றிங்க ஸ்ரீ

என்ன வித்யா, கதைய படிச்சுட்டு விடுகதை எஃபெக்ட் தர்றீங்க. இது கதை, படிச்சுட்டு கதை விமர்சனம் சொல்லுங்க, இல்ல ஒரு பதிவு போடுங்க :P. 200 மச்சா?

Anonymous said...

நிஜமாவே எனக்கும் விடை என்னான்னு தெரியலை. கடைசில கதை கொஞ்சம் தெளிவா இல்லியோ

Truth said...

@சின்ன அம்மிணி said...
//நிஜமாவே எனக்கும் விடை என்னான்னு தெரியலை.

அட அவ்வள்வு யோசிக்காதீங்க. இது விடுகதை இல்ல, இது ஒரு கதை தான்.
நீங்க என்ன முடிவு வேணும்னாலும் எடுத்துக்கலாம்.

sri said...

விடை இதுதான்

நீங்க ராணியா இருந்தா என்ன பண்ணுவீங்க,
உங்க காதளர புலி சாப்பிடட்டும்ன்னு விடுவிங்களா?
அல்லது
உங்க வேலைக்காரிக்கு விட்டு கொடுத்துடுவிங்கலா?

உங்க விடை தான் கதைக்கான முடிவும்.

Manu said...

கதை சொன்ன விதம் அருமை...கதையை படிக்கும் பொது எங்கும் சலிப்பு ஏற்படவில்லை...

\\ஓவியர் இளவரசியைக் காகிதத்தில் வரைய, இளவரசியோ ஓவியரை தன் மனதில் வரைந்து கொண்டிருந்தாள்\\

என்ன ஒரு காதல் லயம்.... மல்லாக்கா படுத்து யோசிபியோ?

பேசமா அந்த ஓவியன் வேற ஒரு பொண்ண பாத்துக்குட்டு போகலாம்..எதுக்கு இந்த கஷ்டம் எல்லாம்?

Truth said...

@ஸ்ரீ
நான் இன்னும் ரொம்ப டெக்கியா இல்ல யோசிச்சு எழுதின. இவ்வளவு தான் உங்களால யோசிக்க முடியுதா? :-)

*******************

@மனு
நன்றிங்க

Rajalakshmi Pakkirisamy said...

நானும் விடுகதைனுல நினைச்சேன்

புன்னகை said...

//தோழிக்கும் இளவரசிக்கும் ஒரு ஒற்றுமை - இருவரும் ஒரே சமயத்தில் பிறந்தது; வேறுபாடு - இருவரும் வெவ்வேறு சமயத்தில் பிறந்தது.//
புலமை அதிகரித்துவிட்டது! :-)

//ஓவியர் இளவரசியைக் காகிதத்தில் வரைய, இளவரசியோ ஓவியரை தன் மனதில் வரைந்து கொண்டிருந்தாள்.//
ஆக இது ஓவியக் காதலா? ;-)

//ஓவியர் அறைகளின் முன் நின்று கொணடு, இளவரசியை ஒரு முறை பார்த்தார். இளவரசி சைகை செய்தாள். ஓவியரின் உள்ளத்தில் மகிழ்ச்சி, முன் சென்று அந்த அறையைத் திறந்தார்.//
முடிவை மறைமுகமா அதே சமையம் அருமையாக சொல்லியிருக்கீங்க!

மொத்தத்தில் பாட்டியின் புண்ணியத்தால் எங்களுக்கு ஒரு கதை! :-)

கார்க்கிபவா said...

கதைதான்னு நீங்க சொன்னாலும், எதுக்குள்ள போனாருன்னுதான் எங்க மனசு யோசிக்குது... எனக்கு என்னவோ எப்பவுமே, தோழிகள்தான் பெட்டர் சாய்ஸுன்னு தோணுது :)))

Truth said...

@இராஜலெட்சுமி
//நானும் விடுகதைனுல நினைச்சேன்

அப்போ விடை சொல்லிட்டுப் போங்க

**********************

@புன்னகை

ரொம்ப நன்றிங்கோ

**********************

@கார்க்கி
//எனக்கு என்னவோ எப்பவுமே, தோழிகள்தான் பெட்டர் சாய்ஸுன்னு தோணுது :)))

இது சரி இல்லையே!, டைம் தர்றேன், திறுத்திக்கோங்க. :P