Wednesday, September 16, 2009

என்ன பண்ணனும்னே தோனிருக்காது...

'என்ன தம்பி ஒரு மாசம் இருக்குமா?', என்றேன்
'என்னது தல', என்றான் அருண்.
'இன்டர்நெட் கட் ஆனத பத்தி சொல்றேன்'
'அது ஆவுது ஒரு ஒன்ற மாசம், ஆனா பாத்தியா தல எனக்கு எந்த பிரச்சனையுமே தெரியல'
'ம்ம்'
'நாளைக்கே டி.வி கனெக்ஷன் கட் ஆகி, போன் கட் ஆகிப் போனாலும் பழகிடும், என்ன சொல்றீங்க'
'அது சரி', என்று நான் ஜகா வாங்கிக் கொண்டேன்.

ஒன்றரை மாதங்களுக்கு முன்பு அதாவது இன்டர்நெட் என்ற ஒரு வஸ்து எங்களிடம் இருந்த வேளை, அடுத்த வீட்டில் வெடிகுண்டே வெடித்தாலும் யூ-டியூபில் ஆயிரம் முறை பார்த்த லொள்ளு சபா மீண்டும் பார்த்துக் கொண்டிருந்த சமயம், வீட்டில் காலிங் பெல் அடித்தாலும் ஏர்டெல் சூப்பர் சிங்கரை டெக்-சதீஷில் அஜிஷ் பாடியதை எட்டாவது முறையாக எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த நாட்கள். அந்த நாட்களில் நாங்கள் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்ததும் அனைவரும் அவர்களுடைய லேப்டாப்புகளை திறந்து சேட்டுகளும், ஆர்குட்டுகளும், டெக் சதீஷில் புதிய படங்கள், யூ-டியூபில் விவேக் காமெடிகளும் பார்த்துக் கொண்டு வயிற்று பகுதியை மஸ்குலராக மாற்றி அமைத்துக் கொண்டிருந்தோம்.

சமைக்கலாம் என்று தோன்றுவதே எட்டரை மணிக்குத் தான். சமைக்கத் துவங்குவது ஒன்பது ஒன்பதரை மணிக்கு. சுமார் இரவு 11 மணிக்கு தான் நாங்கள் உண்பது. அதன் பின்னர் அனைத்தும் சுத்தம் செய்துவிட்டு தூங்கலாம் என நினைக்கும் போது அடுத்த நாள் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும். சரி 12:30 மணிக்காவது தூங்கலாம் என்றால், அப்போது தான் அருண், 'தில் படம் பாக்கலாம் தல', என்பான். அதை டெக் சதீஷில் தேடி பின்னர் மெகா வீடியோவில் பிடிப்பதற்குள் மணி ஒன்றாகிவிடும். மெகா வீடியோவில் 72 நிமிடத்திற்குப் பின்னர் 52 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். இப்படியாக இரண்டரை மணி படத்தை நான்கு மணி நேரம் பார்த்து ஐந்து மணிக்குத் தூங்குவது அருணின் வழக்கமாக இருந்து வந்தது.

ஒரு வியாழக்கிழமை இங்கு ஒரு சில ரயில்கள் ஓடாததால், இது தான் சமயம் என்று நான் வீட்டிலிருந்து வேலை செய்து கொண்டிருந்தேன். அலுவலக வேலை தாங்க, இன்டர்நெட் வாயிலாக. அப்போது தான் சில பல காரணங்களால் இன்டர்நெட் டாடா சொல்லிவிட்டு சென்றது. அன்றிரவு எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஏழு மணிக்கு சமைக்க ஆரம்பித்து எட்டு எட்டரைக்கெல்லாம் எல்லா வேலைகளும் முடிவிற்கு வந்தது. எங்களுக்குக் கையும் ஆடவில்லை, காலும் ஓடவில்லை. அனைத்தும் புதிதாகவே இருந்தது.

அப்போது அருண் ஆரம்பித்தான். 'தல இன்னைக்கு நாம சீக்கிரம் தூங்கிடுவோம் பாரேன். இருபது வருஷத்துக்கு முன்னாடி டி.வி கூட இருக்காதுல்ல நிறைய வீட்டுல', என்று சொல்லிவிட்டு ஒரு சில விநாடிகள் யோசித்து மீண்டும் ஆரம்பித்தான், 'என்ன பண்ணனும்னே தோனிருக்காது, அதனால தான் தல, அப்போ ஜனத் தொகை அதிகமா இருந்திருக்கு', என்றான்.

11 comments:

கார்க்கிபவா said...

// 'என்ன பண்ணனும்னே தோனிருக்காது, அதனால தான் தல, அப்போ ஜனத் தொகை அதிகமா இருந்திருக்கு', என்றான். //

ஹிஹிஹிஹி

Manu said...

தல...

ஜனத்தொகை அப்போது விட இப்பொது தான் நிறைய இருக்கு.

அப்போது என்ன பண்ணனும்னே தெரியாம ஜனத்தொகை உற்பத்தி ஆச்சி.

ஆனால் இப்போ எல்லாம் இருந்தும் எல்லாம் தெரிஞ்சும் உற்பத்தி ஆகுது...

மனிதனுடைய ஆசா பாசங்களை கட்டுபடுத்துவது மிகவும் சிரமம் தல...

என்ன சொல்லற தல....

Truth said...

நன்றி கார்க்கி.

நன்றி மனு. 50 பேருல இருந்து 100 பேரா மாறினா அது 100% அதிகம். ஆனா 50 பேரு தான் அதிகமாகியிருக்கு. அது தான் அந்த காலத்துல நடந்துச்சு.
இன்னைக்கு 1000 பேருல இருந்து 1100 ஆகியிருக்கோம். இது 10% தான் அதிகம். ஆனா 100 பேரு அதிகம் ஆகியிருக்கோம்.
எத்தனை பேரு அதிகமாகியிருக்கோம் என்பது இல்லை கணக்கு. எவ்ளோ % தான் முக்கியம். முடியல இல்ல...

Thamira said...

வேறெதுவுவோ சொல்ல வர்றீங்கன்னு பார்த்தா வித்தியாசமான என்டிங்..

Truth said...

ஆதி, உங்களுக்கு ஒரு கண்ணன் போல் எனக்கு ஒரு அருண். :-)

sri said...

என்ன தான் % கணக்கு பாத்தாலும், நாம இன்னும் ரெண்டாவது இடத்துல தான இருக்கோம்? :.(

Truth said...

@ஸ்ரீ,
இது உலகத்தோட எதுக்கு கம்பேர் பண்ணனும்? நம்ம கொள்ளு தாத்தால இருந்து நம்ம வரைக்குமே கம்பேர் பண்ணுங்க. சரி தானே நான் சொல்றது?

Arasi Raj said...

'என்ன பண்ணனும்னே தோனிருக்காது, அதனால தான் தல, அப்போ ஜனத் தொகை அதிகமா இருந்திருக்கு', என்றான்.
////

ha ha....

Arasi Raj said...

ஆமாங்க...DSLR வாங்கி முதல் முதல்ல கலந்துக்குறேன் ..போன மாச போட்டிக்கு சும்மா பழைய படம் ஒன்னு போட்டேன்///

ஆனா தேவை இல்லாம கிம்ப்-ல கலர் குடுத்து சொதப்பிட்டேன்னு நினைக்குறேன்....

Original இங்க இருக்கு பாருங்க photoblog.com/nilaa

sri said...

சரி தான் ஆனா சரிஇல்லா?............

Truth said...

நன்றி நிலாம்மா, ஸ்ரீ