Tuesday, July 14, 2009

எதிர்பார்ப்பு



அடியே, எதிர்பார்ப்பு என்பது மிகப் பெரிய வார்த்தை.

நீ என்னைக் காதலிக்கும் உண்மை
உனக்குத் தெரியும் முன்னே
எனக்குத் தெரிந்து விட்டதால் தான் என்னவோ
நான் உன்னை அவ்வளவு காதலிக்கிறேன்.

காதலில் எந்த எதிர்பார்ப்பும் வேண்டாம்
என்று எதிர்பார்ப்பதை என்னவென்று சொல்ல?

உண்மையில், எதிர்பார்ப்பால் காதல்
எவ்வளவு அழகாகிறது தெரியுமா?
எதிர்பார்ப்பே இல்லாமல் போனால்,
நமது ஆறாவது அறிவு அறவே காணாமல் போகிறது.
நமக்கும் ஆட்டு மந்தைக்கும் உள்ள
இன்னொரு வேறுபாடும் எதிர்பாப்பு தான்.

அது இல்லை, இது தான் வேண்டும்
என்று கட்டளையிட்டு பெறுவது
காதலில் எத்தனை அழகு தெரியுமா?
கிடைத்ததைப் பெற்றுக் கொண்டு போவதென்றால்
நான் எதற்கு உனக்கு
நீ எதற்கு எனக்கு?

உன்னுள் இருண்டு கிடப்பதை
நான் தோண்டி எடுப்பது எதிர்பார்ப்பு என்றால்
எனக்கு எதிர்பார்ப்பு அதிகம் தான்.
இது எனக்கு பிடித்தே இருக்கிறது.

அடியே, எதிர்பார்ப்பு என்பது மிகப் பெரிய வார்த்தை.

5 comments:

புன்னகை said...

Me de 1st :-) படிச்சிட்டு வரேன்!

Manu said...

//கிடைத்ததைப் பெற்றுக் கொண்டு போவதென்றால்
நான் எதற்கு உனக்கு
நீ எதற்கு எனக்கு? //

எவ்வளவு அழகான சொற்கள்.
காதல் மிக மிக இனிமையான ஒரு உணர்ச்சி. அந்த உணர்ச்சியில் ஒரு பங்கை உங்கள் வார்த்தைகளில் படிக்க நேர்ந்தது.
இனிமை....

புன்னகை said...

மஞ்சள் குங்குமம் விநாயகர்னு மங்களகரமா இருக்க ஆரம்பமே! :-)

//நீ என்னைக் காதலிக்கும் உண்மை
உனக்குத் தெரியும் முன்னே
எனக்குத் தெரிந்து விட்டதால் தான் என்னவோ
நான் உன்னை அவ்வளவு காதலிக்கிறேன்.//
அருமையான உணர்வு.

//அது இல்லை, இது தான் வேண்டும்
என்று கட்டளையிட்டு பெறுவது
காதலில் எத்தனை அழகு தெரியுமா?
கிடைத்ததைப் பெற்றுக் கொண்டு போவதென்றால்
நான் எதற்கு உனக்கு
நீ எதற்கு எனக்கு?//
"போதும் என்ற போதும் நீ கேட்டு வாதிடு" என்ற வரிகள் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

//உன்னுள் இருண்டு கிடப்பதை
நான் தோண்டி எடுப்பது எதிர்பார்ப்பு என்றால்
எனக்கு எதிர்பார்ப்பு அதிகம் தான்.
இது எனக்கு பிடித்தே இருக்கிறது.//
இது அத்துமீறலா இல்லை உரிமை மீறலா என்று சிறியதொரு குழப்பம். ஆனால் காதலில் இரண்டுமே அழகென்பதால், ரசிக்க வைக்கின்றன இந்த வரிகள்!

//அடியே, எதிர்பார்ப்பு என்பது மிகப் பெரிய வார்த்தை.//
உண்மை தாங்க!

உங்களது எதிர்பார்ப்புகளை, நீங்கள் எதிர்பார்க்கும் நபர் எந்தவித எதிர்பார்ப்புமின்றி புரிந்து கொள்ள எனது வாழ்த்துக்கள்! :-)

Anu said...

"கிடைத்ததைப் பெற்றுக் கொண்டு போவதென்றால்
நான் எதற்கு உனக்கு
நீ எதற்கு எனக்கு"

Touchin lines...Cute..

Truth said...

நன்றி புன்னகை, மனு, அனு