Sunday, July 05, 2009

சிந்துபாத் ஆகிய நான்

பசங்களா, ஒன்னு சொல்றேன் நல்லா கேட்டுக்கோங்க. ஊர் சுற்றவேண்டுமெனில் நிறைய இடங்கள் இருக்கும் ஒரே நாடு இந்தியா தான். நான் கடந்த நான்கு மாதங்களாக சுற்றிக் கொண்டிருக்கிறேன் என்று பல முறை சொல்லியிருக்கிறேன். என்னுடைய சிந்துபாத் பயணம் நாளையோடு முடிவிற்கு வருகிறது. மன்னிக்கவும் நாளையோடு ஒரு சின்ன இடைவெளி இருக்குமென நினைக்கிறேன்.

எனது சிந்துபாத் பயணத்தை நான் ஏற்கனவே பல முறை பல இடங்களில் சொல்லி புலம்பியிருக்கிறேன்.
மார்ச் 6 : லண்டன் - சென்னை
மார்ச் 13 : சென்னை - மும்பை
மார்ச் 22 : சென்னை - வேலூர்
மார்ச் 23 : சென்னை - கூர்க்
மார்ச் 29 : சென்னை - லண்டன்
ஏப்ரல் 4 : லண்டன் - பூனே ஹிஞ்சவாடி
ஏப்ரல் 12 : பூனே ஹிஞ்சவாடி - பூனேவில் வாக்கட்
ஏப்ரள் 18 : அப்பா, அம்மா, பாட்டி பூனேவிற்கு வந்தார்கள்.
அதன் பின்னர் நான் அவர்களை கொடுமை படுத்தியது தனிக்கதை. இப்படி ஒரு இரண்டு மாதங்கள் ஓடிவிட்டது. இடையில் இருக்கும் சில வாரக் கடைசிகளில்
  • ஷிர்டி
  • சனீஸ்வரர் கோவில்
  • தகுடுசேத் கனேஷ் மந்திர் (பிள்ளையார் கோவில் தாங்க)
  • அருகில் இருந்த ஒன்றிரண்டு கோவில்களுக்கு சென்றோம்
    ஜூன் 3 : அப்பா, அம்மா பாட்டி சென்னைக்கு கிளம்பிவிட்டார்கள். அப்புறம் தான் என்ன பண்ணலாம் என்று தெரியாமல் ஊரு சுற்ற மீண்டும் ஆரம்பித்தேன்.
    ஜூன் 12: பூனே - மும்பை, வடிவேல் வீட்டிற்கு
    ஜூன் 19: வடிவேல் மும்பையிலிருந்து பூனே வந்தான்.
    ஜூன் 26: பூனே - ஹைதரபாத்.
    ஜூலை 3: பூனே - மும்பை, வடிவேல் வீட்டிற்கு
    ஜூலை 5 (இன்று தான்) இரவு பத்து : மும்பை வடிவேல் வீட்டிலிருந்து விமான நிலையம்.
    ஜூலை 6 (நாளை) அதிகாலை 1:45 : மும்பையிலிருந்து லண்டனுக்கு கிளம்புகிறேன்.

    இதுவரையில் ஐரோப்பாவில் சுற்றிய போது நான் கண்டறிந்தது, அங்கிருக்கும் இடங்களை விட இந்தியாவில் பல இடங்கள் பார்க்க வேண்டியுள்ளது. உண்மையில் இந்தியாவில் வெய்யில் தருணங்களில் சுற்றியதும் மிகவும் பிடித்தே இருந்தது. இதோ மீண்டும் வருகிறேன் அடுத்த வருடம், இன்னும் பல இடங்களை சுற்ற. அப்போது விருப்பம் இருப்போர் என்னுடன் சேர்ந்துக் கொள்ளலாம். இந்த பதிவில் நான் சொல்லியிருக்கும் ஒவ்வொரு இடத்தை பற்றியும் நேரமிருக்கும் போது பதிவுகிறேன்.

  • 5 comments:

    Manu said...

    Antha virupam ullor patiyalil enaku thaan mudhalidam..

    Puriuthaa...Velangauthaaa...Velangirukum endru ninaikiraen..

    அ.மு.செய்யது said...

    நல்ல படியா போயிட்டு வாங்க..

    பூனே வெதர மிஸ் பண்ணிட்டு போறீங்களே !!! பாஸ்.

    Truth said...

    கண்டிப்பா மனோ.

    நன்றி செய்யது. போன வெள்ளியன்று தான் பூனே-மும்பை எக்ஸ்ப்ரெஸ் வேயில் முதன் முறையாக இருட்டுவதற்கு முன் சென்றேன். உண்மையில் சொல்லப்போனால், ஹிஞ்சவாடியிலிருந்து 10-15KM மும்பை மார்கமாக சென்றால் சொர்கம் இருக்கிறது. அடுத்த முறை பூனேவிற்கு வந்தால் கண்டிப்பாக அங்கிருக்கும் சின்னச் சின்ன கிராமங்களை சுற்றிப் பார்த்துவிடுவது என முடிவு செய்துள்ளேன்.

    புன்னகை said...

    //ஜூன் 3 : அப்பா, அம்மா பாட்டி சென்னைக்கு கிளம்பிவிட்டார்கள். அப்புறம் தான் என்ன பண்ணலாம் என்று தெரியாமல் ஊரு சுற்ற மீண்டும் ஆரம்பித்தேன்.
    ஜூன் 12: பூனே - மும்பை, வடிவேல் வீட்டிற்கு
    ஜூன் 19: வடிவேல் மும்பையிலிருந்து பூனே வந்தான்.
    ஜூன் 26: பூனே - ஹைதரபாத்.
    ஜூலை 3: பூனே - மும்பை, வடிவேல் வீட்டிற்கு
    ஜூலை 5 (இன்று தான்) இரவு பத்து : மும்பை வடிவேல் வீட்டிலிருந்து விமான நிலையம்.
    ஜூலை 6 (நாளை) அதிகாலை 1:45 : மும்பையிலிருந்து லண்டனுக்கு கிளம்புகிறேன்.//

    //அடுத்த வருடம், இன்னும் பல இடங்களை சுற்ற. அப்போது விருப்பம் இருப்போர் என்னுடன் சேர்ந்துக் கொள்ளலாம்.//
    இது கூட நல்லா இருக்கே! எங்க வேணும்னாலும் போங்க, but tickets புக் பண்ண ஒழுங்கா என் கிட்ட வாங்க! புரிஞ்சுதா??? :-)

    Truth said...

    @புன்னகை,
    கண்டிப்பா :-)