Wednesday, July 01, 2009

லேடீஸ் சீட் - எதிர் பதிவு

அனைத்து மேலை நாடுகள் பற்றித் தெரியவில்லை, ஆனால் நான் பார்த்த நாடுகளில் (இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, ப்ரான்ஸ், சுவிஸ்) பெண்களுக்குத் தனியாக என்றும் ஆண்களுக்குத் தனியாக என்றும் பிரிக்கப்பட்ட ஒன்று - கழிவறை மட்டுமே. எனக்குத் தெரிந்து வேறு எங்கும் இது பெண்களுக்கு என்றும் அது ஆண்களுக்கு என்றும் பிரித்தது கிடையாது.

இரண்டாம் உலகப் போர் தொடங்கும் முன்பு வரை இங்கிலாந்திலும், பெண்கள் வீட்டில் தான் இருந்திருக்கிறார்கள். பின்னர் போர் உதவிக்கு ஆட்கள் குறைந்த போது வெடிகுண்டுகளைத் தயாரிக்கவும், போரில் அடிபட்டவர்களுக்கு உதவவும், ராணுவத்திற்குச் சமைப்பதற்கும், இவ்வாறாக, வேலைப் பளு குறைவான வேலைகளை அவர்களுக்குத் தர ஆரம்பித்தனர். இதைச் சாதகமாக எடுத்துக் கொண்டு அங்குள்ள பெண்கள், ஆண்களுக்கு நிகராக எல்லா வேலைகளையும் செய்து நாங்கள் எந்த விதத்திலும் ஆண்களுக்குச் சளைத்தவர்கள் அல்ல என்று இன்று நிரூபித்துள்ளனர். பேருந்துகள் ஓட்டுவதிலிருந்து, ரயில் ஓட்டுவது வரை, தொழிற்சாலைகளில் வேலை செய்வதில் தொடங்கி, வீட்டு வேலைகளையும் செய்து கொண்டு தான் இருக்கின்றனர். கேட்கும் போது பெருமையாகவே இருக்கிறது அல்லவா?

உடனே, அவர்கள் கெட்டு சீரழிந்து போயிருக்கிறார்கள், பிள்ளைகளைச் சரியாக வழி நடத்துவதில்லை என்று குறை கூற வேண்டாம். அப்படிப்பட்ட தவறுகள் இங்கும் நடக்கிறது. குமுதம் ரிப்போர்ட்டர் ஒன்று போதும் சாட்சிக்கு. தவறுகள் அனைத்து இடங்களிலும் நடக்கிறது, சில நல்ல விஷயங்களை எடுத்துக் கொண்டு தீய விஷயங்களை விடுத்தால் நல்லது. ஸ்லம் டாக் மில்லேனியர் திரையிட்ட போது அமிதாப் பச்சனும் அதற்கு எதிராக நின்றார். மும்பையைத் தவறாக காட்டியிருக்கின்றனர். மும்பையில் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கும் போது அதைக் காட்டாமல் எதற்கு சேரியைப் படமாக்க வேண்டுமென்று. நல்ல விசயங்கள் மட்டுமே படமாக எடுக்கப்பட்டால் அவை 'பஞ்சதந்திர கதைகள்' தொகுப்பில் சேர்ந்து விடும். எனக்கு நினைவிருக்கும் பழைய படங்களிலிருந்து இன்று வரை இருக்கும் அனைத்து படங்களிலும், மேலை நாடுகளைக் காட்டும் போது, குடியும், கும்மாலமுமாகத் தான் பார்த்திருக்கிறேன். ஏன் மேலை நாடுகளிலிருந்து நாம் கற்றுக் கொள்ள எதுவும் இல்லையா. இல்லாத பட்சத்தில் நாம் முன்னேறியிருக்கவே முடியாது. சரி பதிவு திசை மாறுகிறது.

மேலை நாடுகளில், பேருந்துகளில் கூட பெண்களுக்கென்று தனியாக ஒதுக்கீடு கிடையாது. ஒரு வேளை அது அவர்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். ஒரு சான்று, ஒரு முறை நான் லண்டனில் பேருந்தில் செல்லும் போது நாற்பது வயதுக்கு மேற்பட்ட ஒரு பெண்மனி அருகில் வந்து நிற்க, நான் உடனே எழுந்து அவர்களுக்கு இருக்கையைத் தந்தேன். அவர் 'No problem, I can stand' என்று சொன்னார். அங்கு முதியோருக்கும், ஊனமுற்றோருக்கும், பிள்ளைதாச்சிகளுக்கும் மட்டுமே இருக்கைகள் தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது. பெண்களுக்குத் தனியாக இல்லை. நமது நாட்டில் அப்படி இல்லை.

சரி பெண்களுக்குத் தான் தனியாக இருக்கைகள் ஒதுக்கப்பட்டு, ஆண்களுக்குத் தனியாக இல்லையென்றான பின்னரும், பெண்கள் நேராக வந்து பொதுவான இருக்கைகளில் அமர்ந்தால் ஆண்கள் என்ன செய்ய முடியும்? பொதுவான இருக்கைகளில் பெண்கள் அமர்ந்தால் அவர்களை எழுந்திருக்கச் சொல்லப் போவதில்லை. என்னை மிகவும் கடுப்பேற்றிய சில சம்பவங்கள்
- ஒரு முறை இரு பெண்கள் பேருந்தில் ஏறினார்கள். முதல் வரிசையில் ஒருவருக்கும், நான்காவது வரிசையில் ஒருவருக்கும் இடம் இருக்க, அதை விரும்பாமல், பொதுவான இருக்கைகளில் இருவருக்கும் ஒரே வரிசையில் இடத்தைப் பார்த்து அங்கு தாவினர். நல்லாவா இருக்கு?
- அடுத்த சம்பவம், இதில் பெண் மீது எந்தவிதத் தவறும் இல்லை. கூட வந்தானே ஆண், அவனைச் சொல்லவேண்டும். அவர்களைக் கண்டால் கல்லூரியில் படிப்பது போல் தெரிந்தது. அந்தப் பெண்ணுக்குப் பெண்கள் இருக்கையில் இடம் இருந்தும் பொதுவான இருக்கையில் அமர்ந்தனர். அதோடு நில்லாமல், என்னைப் போன்ற வாலிபர்களின்(?) பிஞ்சு நெஞ்சில் நஞ்சைக் கலந்து செல்வது. என்ன கொடுமை இது?

பெண்களுக்கான ஒதுக்கீடு தவறா இல்லையா என்று நாம் இங்கு வாதிக்கப் போவதில்லை. பெண்களுக்கான ஒதுக்கீட்டை முழுவதுமாக உபயோகப்படுத்திக் கொண்டு, பின்னர் பொதுவான ஒதுக்கீட்டில் வருவது இருவருக்கும் win-win ஆக அமையும்.

பி.கு. ஹி ஹி. இதுக்கு எதிர் பதிவு எழுதணும்னு எழுதினது.

4 comments:

கார்க்கிபவா said...

ஹிஹிஹிஹி

மீ த ஃபர்ஸ்ட்டா?

புன்னகை said...

உங்களோட முந்தைய பதிவுக்குப் பின்னூட்டம் போட்டுட்டு, கொஞ்சம் ஆணிகளோடு போராடிட்டு இருக்கும் போதே அடுத்தப் பதிவானு ஆர்வமா வந்தேன். தலைப்பைப் பாத்ததுமே புரிஞ்சு போச்சு. இது என்னுடைய பதிவிற்கான எதிர் பதிவு! ஆக, நான் இப்போதைக்கு பெருசா ஏதும் சொல்லப் போறதில்ல. ஆனா, உங்க கிட்ட ஒரே ஒரு கேள்வி மட்டும். "நீ எங்க வர சிவாஜி?"

Anonymous said...

//அவர் 'No problem, I can stand' என்று சொன்னார்//
மேற்கத்தியவர்கள் ரொம்பவே Dignity பாப்பாங்க. யாரையும் சார்ந்திராமா இண்டிபெண்டெண்டா இருக்கணும் நினைப்பாங்க. மத்தபடி சீட்டு விஷயம் நம்ம நாட்டில கொஞ்சம் கடினமான விஷயம்தான்.

Truth said...

நன்றி கார்க்கி. யூவே தான் ஃபர்ஷ்ட்டு

வருகைக்கும், கமெண்டுக்கும் நன்றி புன்னகை, சின்ன அம்மிணி.