Wednesday, July 22, 2009

பதின்மூன்றாவது தேனிலவு - 8

... இதுவரை

அந்த நெருப்புக் குழம்பு எங்களை நெருங்கிக் கொண்டே வந்தது. பின்னால் இருக்கும் கூட்டம் ஒவ்வொருவராக நெருப்பில் கருகி மாயமாகிக் கொண்டிருந்தனர். இதோ வந்து விட்டது நெருப்பு எங்கள் அருகில். கொத்துக் கொத்தாக அனைவரும் கருகிக் கொண்டிருக்கின்றனர். அவளும், அவனும் கூட அதே நெருப்பில் கருகியே விட்டனர். தேவதை முடிந்த வரையில் பறந்து இங்கும் அங்கும் அலைகிறாள். முடிந்தே விட்டது தேவதையின் கதையும். எனது கால்களைப் பற்றிக் கொண்டிருந்த க்ளீனரை நான் தூக்கி நெருப்பில் 'சாவு டா', என்று எறிந்தேன். அவனும் எறிந்து அவனது சாம்பலும் எறிந்து போயிருக்கும். கதவு திறந்துக் கொண்டது. நானும் மீண்டும் முழு மனிதானேன்.

'ஐய்யோ, எனக்கு பயமா இருக்குங்க', என்றாள் என்னவள்.
'என்ன டி கதை நல்லாயில்லயா?', அவளை வளைத்து என் மார்பு மீது போட்டுக் கொண்டு கேட்டேன்.
'நல்லா தான் இருக்கு, ஆனா ஹனிமூன்ல இப்படியா கதை சொல்லுவாங்க?'
'நல்ல முடிவோட தானே முடிச்சேன்', என்றேன் அவளை என்னுடன் இறுக்கிக் கொண்டு.
'ஏதேது, நீங்க மட்டும் தான் உயிரோட இருக்கீங்க சார், என்னை தான் கொன்னுடீங்களே'
'அடியே, எல்லாம் ஒரு கதை தானே டி', என்று அவளது கன்னத்தில் முத்தமிட்டேன்.
'சீ, சும்மா இரு டா', என்று பொய்யாக சினுங்கினாள்.
'சும்மா இருக்கணுமா? உண்மையாவா சொல்றே?'
'என்ன சாருக்கு மூட் அதிகமா இருக்கு போல, இன்னைக்கு?'
'ஓ ஒவ்வொரு நாளும் எவ்வளவு மூடுன்னு கணக்குவேற இருக்கா?'
'சரி பாவம் தாமுவ எதுக்கு கொன்னீங்க?'
'ஹ ஹ, கதைய திரில்லா கொண்டு போகத்தான்'

அப்போது எனது தொலைப்பேசி சினுங்கியது. தாமுவின் பெயர் அதில் தெரிந்தது.
'தாமு தான் டி கால் பண்றான், ஸ்பீக்கர்ல போடறேன், கேளு', என்று என்னவளின் தோளில் எனது வலது கையை போட்டு, பக்கத்தில் இழுத்துக் கொண்டேன்.

'சொல்லு தாமு', என்றேன்.
'சார் நான் கிளம்பிட்டேன், இதோ பத்து நிமிசத்துல அங்க இருப்பேன்'
'வாட்?'
'வந்திருவேன் சார், அது வரைக்கும் பாத்துக்கோங்க'
'என்ன தாமு சொல்றே?'
'நீங்க தானே சார் கால் பண்ணி, பேய் இருக்குன்னு சொன்னீங்க', என்று சொல்லி அழைப்பை துண்டித்தான்.

நான் என்னவளைப் பார்த்தேன்.
'நீங்க கால் பண்ணவே இல்லையே', என்றாள் அவள்.
'எனக்கும் புரியவே இல்லை', என்றேன்.

கதவு 'டொக் டொக் டொக்', என்றது.

முற்றும்.

18 comments:

Truth said...

கதையை படிச்சுட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்க.

Sankar said...

முன்னொருவர் சொன்ன மாதிரி, கொஞ்சம் அம்புலிமாமா கதை தான் .. கடைசியில இது கதைக்குள் கதை’னு முடிச்சதால லாஜிக் எல்லாம் கேட்கலாமா கூடாதான்னு தெரியல. அங்கங்க காமெடி இருந்தாலும், கதை ஒரு single thread'ல இல்லாம அங்கங்க divert ஆன மாதிரி தோணிச்சு. அவசரம் அசவரமா எழுதனதாலேயோ என்னவோ கொஞ்சம் பிழைகள் அதிகமாவே இருக்கு. முயற்சியைப் பாராட்டலாம், ஆனா உன் ரேஞ்சுக்கு இல்லை மச்சி.

கதிரவன் said...

கடைசில இத ஒரு கற்பனைக்கதை/கனவுன்னு சொல்லுவீங்கன்னு தான் நினைச்சேங்க. ஆனாலும், கடைசி வரிகள்ல அதைவிட நல்லாவே முடிச்சிருக்கீங்க.

கதைல முதல் 3 பதிவுகள் நல்லா இருந்தன.இந்திரா சௌந்திரராஜன் கதை மாதிரி முழுக்க திகிலா இருக்கும்னு நினைச்சேன். ஆனா, அதுக்கப்புறம் வந்த மாயக்கதைகள் ஏனோ அவ்ளோ நல்லா இல்ல. அம்புலிமாமா கதைன்னு வேற சொல்லிட்டீங்க, ரொம்ப கேள்வி கேட்க முடியாது

போன பதிவுல சொல்லியிருந்திங்களே..

//இன்னும் சொல்லப்போனால், நாளை என்ன எழுதப் போகிறோம் என்று தெரியாமல் தான் இன்று எழுதிக் கொண்டிருந்தேன். //

இப்டித்தான் நாட்ல பல தொலைக்காட்சி-நெடுந்தொடர் கதாசிரியர்கள் இருக்கறாங்க :-) நீங்களும் அவங்களாட்டம் ஆகறதுக்கு வாழ்த்துக்கள் !!

//தினமும் ஒரு பாகம் போடுவதால், எழுதியே ஆக வேண்டும் என்ற கட்டாயமும் இருந்தது//

ஏங்க ? தினமும் கட்டாயம் கதையோட-ஒரு பாகம் வெளியிடனும்னு யாராவது உங்கள கட்டாயப்படுத்தினாங்களா ??

இன்னும் கொஞ்சம் யோசிச்சு எழுதியிருந்தீங்கன்னா இன்னும் நல்லா இருந்திருக்கும்

//உங்கள் பேராதரவு மிகவும் முக்கியம்//

நிச்சயமா உண்டுங்க, கிரண் !!

sreeja said...

கனவில் நடந்ததாக கதையை முடிப்பீர்கள் என நினைத்தேன். வித்யாசமாக முடித்து விட்டீர்கள்.

கதை ஓவர் ஸ்பீட் எடுத்து ஓடியது போல இருந்தது. இது போதும். ஜவ்வு போல் இழுத்து முடிக்க முடியாமல் முழிக்கும் சீரியல்போல் அல்லாமல் 8 பகுதிகளில் முடித்ததற்கு நன்றி.

இனியும் இது போல் Short and Sweet ஆக எழுதவும்.

வாழ்த்துக்கள்.

கார்க்கிபவா said...

கலக்கிட்டிங்க பாஸ்.. தொடர்கதை என்றாலும் இழுக்கவில்லை.

அடுத்த தொடர்கதை எழுதும்போது அனைத்து பகுதிகளையும் எழுதிவ்ட்டு, மூனு முறை வாசித்து, ஒவ்வொன்றாக வெளியிடுங்கள்..

அபப்டியே எதை வாசகரக்ள் ரசிக்கிறார்க்ளோ அடுத்த அத்தியாயத்தில் அதை கொஞ்சம் கூடுதலாக் சேருஙக்ள்.

உஙக்ளிடம் இருந்து இன்னும் சில நல்ல தொடர்கதைகள் எதிர்பார்க்கிறோம்..

வாழ்த்துகள்

Manu said...

கதாசிரியரே....

முதலில் உங்கள் உழைப்புக்கு பெரிய ஒரு சபாஷ்...கதை நிஜமாகவே அருமை. இந்த கதை படித்த அனைவர்க்கும் மனதில் திக் திக் என இருந்திருக்கும்.

முடிவு மிகவும் வித்தியாசமாக உள்ளது...அந்த முடிவிலும் உங்கள் லொலுக்கு அளவே இல்லையா??

வாழ்த்துகள்...

sri said...

கதை பழைய மாதிரி இருந்தாலும், சொன்ன விதம் புதிது, ஆங்கங்கே கவிதை நடை அருமை, புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்...... அடுத்த படைப்பு எப்போ?

Rajalakshmi Pakkirisamy said...

nalla irukkunga.. but next time yezhuthi mudichittu nalla oru thadava paarthutu podunga..

expecting more stories...

Truth said...

அனைவருக்கும் நன்றி.

அம்புலிமாமா கதைகள்: பேய் கதைகள் என்றாலே கொஞ்சம் fantasy கதையாகத் தாதே இருக்க முடியும். இல்லயா? ஆனா, பேய் கதையில் ஆரம்பித்து மந்திரவாதி கதையாக முடிந்ததென்பதை நான் ஒத்துக் கொள்ளவேண்டிய உண்மை. எழுதும் போது இதை நான் கவனிக்கவில்லை.

கதைக்குள் கதை: நீங்க நாகவள்ளி படிச்சுட்டு இதை படிச்சிருந்தீங்கன்னா, கதாப்பாத்திரங்கள் எல்லாம் ஒன்னு தான்னு புரிந்திருக்கும். என்னுடைய அடுத்தடுத்து கதைகளுக்கும் 'நான்', 'என்னவள்', 'தாமு' தேவைபடலாம் என்ற நோக்கத்தில் அவர்களை உயிருடன் கொண்டு வர வேண்டி இருந்தது. மேலும் கதைகளில் 'நான்' என்ற இதுவரை பெயர் சூட்டப்படவில்லை (இனியும் இருக்காது) என்பதால் 'நான்' என குறிப்பிடும் போது என்னை நானே குறிப்பிடுவது போல் அமைந்து இருப்பதால் என்னுடைய 'என்னவளையும்', 'தாமுவையும்' கொல்ல மனம் வரவில்லை. கதை எழுதும் போது இதெல்லாம் இருக்கக் கூடாது தான். இருப்பினும், அவர்களை மனசு கேட்கவில்லை :-)

எழுத்துப் பிழைகள்: எனது தாய் மொழி தமிழ் இல்லை என்று கூறி தப்பிக்க போவதில்லை. ஆனாலும் தமிழில் எழுத கடினமாகத் தான் உள்ளது. பல முறை வார்த்தைகள் தெரியாமல் dictionary பார்ப்பதுண்டு. திறு(ரு)த்துக் கொள்ள வேண்டிய ஒன்று.

உண்மையில் இந்தக் கதை எழுத ஆரம்பிக்கும் போது மனதில் இருந்த கதை இதுவல்ல. அந்தக் கதை மூன்றே பாகங்களில் முடிந்து விடும். இரண்டு பாகங்கள் பதிவேற்றிய பின்னர் நண்பர்களிடம் கதையின் க்ளைமேக்ஸ் சொல்லும் போது அவர்களில் பலருக்கு திருப்தி இல்லாமல் போனதால், கதையை மூன்றாவது பாகம் எழுதும் போது சற்று மாற்றியமைக்க வேண்டியிருந்தது. இப்போது அதுவும் நல்லது தான் என தோன்றுகிறது. இது போன்ற பலரது கருத்துக்கள் வந்திருக்காது. என்ன சொல்றீங்க?

தினமும் ஒரு பாகம்: கண்டிப்பாக பதிவேற்ற தேவையில்லை தான். ஆரம்பத்தில் மூன்று நாட்கள் தினமும் எழுதியதால், அதே frequencyயில் போகலாம் என நினைத்து செய்த தவறு இது.

Truth said...

@சந்தி(ப்)பிழை
//ஆனா உன் ரேஞ்சுக்கு இல்லை மச்சி.

இது என்ன காமெடி பீஸா? :)
அது என்ன என்னோட ரேஞ்சு? :) அடுத்த முறை பார்த்து எழுதறேன் மச்சி. :)

Truth said...

@கதிரவன்
//இந்திரா சௌந்திரராஜன் கதை மாதிரி முழுக்க திகிலா இருக்கும்னு நினைச்சேன்.

அவர் யார் என்று தெரியவில்லை. ப்ளாக் இருந்தால் அவரது urlஐ கமெண்டுங்க. இல்லேன்னா அவரது புத்தங்களை சொல்லுங்க, இங்கே கடைத்தால் படித்து விடுகிறேன்.

////உங்கள் பேராதரவு மிகவும் முக்கியம்//
நிச்சயமா உண்டுங்க, கிரண் !!

இது நிச்சயமாக வேணுங்க. நன்றி கதிரவன்.

Truth said...

@ஸ்ரீஜா
//கதை ஓவர் ஸ்பீட் எடுத்து ஓடியது போல இருந்தது. இது போதும். ஜவ்வு போல் இழுத்து முடிக்க முடியாமல் முழிக்கும் சீரியல்போல் அல்லாமல் 8 பகுதிகளில் முடித்ததற்கு நன்றி.

கவனித்து பார்த்திருந்தால் இந்தக் கதை எல்லாம் ஒரு நாலு மணி நேரத்துல முடியுற கதை தான். அதனால் தான் இவ்வளவு ஸ்பீட் :).

//இனியும் இது போல் Short and Sweet ஆக எழுதவும்.

கண்டிப்பாக முயற்ச்சிக்கிறேன்.

//வாழ்த்துக்கள்
ரொம்ப நன்றிங்க.

Truth said...

@கார்க்கி
//அடுத்த தொடர்கதை எழுதும்போது அனைத்து பகுதிகளையும் எழுதிவ்ட்டு, மூனு முறை வாசித்து, ஒவ்வொன்றாக வெளியிடுங்கள்..

நிச்சயமாக

//அபப்டியே எதை வாசகரக்ள் ரசிக்கிறார்க்ளோ அடுத்த அத்தியாயத்தில் அதை கொஞ்சம் கூடுதலாக் சேருஙக்ள்.

மைண்டல் வெச்சுக்கிறேன் :)

//உஙக்ளிடம் இருந்து இன்னும் சில நல்ல தொடர்கதைகள் எதிர்பார்க்கிறோம்..

சட்டியில் இருந்தால் கண்டிப்பாக அகப்பையில் வரும். இருக்கா இல்லையான்னு எனக்கும் தெரியலைங்க :) சில நாள் பொறுத்திருந்து பார்க்கலாம். :-)

Truth said...

@மனு
//கதாசிரியரே....
தூ....

//அந்த முடிவிலும் உங்கள் லொலுக்கு அளவே இல்லையா??
இருப்பது மட்டும் தான் டா வரும் :)

Truth said...

@ஸ்ரீ
//கதை பழைய மாதிரி இருந்தாலும்,
என்னுடைய பாட்டி என்னிடம் பல முறை சொன்னது 'இந்த உலகில் மொத்தம் எட்டு விதமான கதைகள் தான் உண்டு' என்பது. நாம் சொல்லும் விதத்தில் தான் கதை மாறுபடுகிறது. என்ன சொல்றீங்க.

//சொன்ன விதம் புதிது, ஆங்கங்கே கவிதை நடை அருமை, புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்......
ரொம்ப நன்றி ஸ்ரீ.

//அடுத்த படைப்பு எப்போ?
pun intended? :) தொடர்கதைக்கு ஒரு ப்ரேக் தரலாங்க.

Truth said...

@இராஜி
//nalla irukkunga.. but next time yezhuthi mudichittu nalla oru thadava paarthutu podunga..

நிச்சயமாக பண்றேங்க.

//expecting more stories...
அட... :)

புன்னகை said...

//'நீங்க கால் பண்ணவே இல்லையே', என்றாள் அவள்.
'எனக்கும் புரியவே இல்லை', என்றேன்.
கதவு 'டொக் டொக் டொக்', என்றது.//
சில இடங்களில் நெருடல் இருந்த போதிலும், இந்த கடைசி வரிகள் உங்களோட டச் with de usual நச்! :-)
எல்லாரும் உங்க மேல கொஞ்சம் உரிமை எடுத்துட்டு தான் பின்னூட்டம் போட்டிருக்காங்க. இதுவும் உங்கள் முயற்சிக்கான வெற்றி தான். எந்தக் குழந்தையும் எடுத்த எடுப்பில ஓடத் துவங்குகிறது இல்லைல. கொஞ்சம் கொஞ்சமா தவழ்ந்து, பிறகு அடி எல்லாம் பட்டு, அதுக்கு பிறகு தானே நல்லா நடக்கப் பழகுது? அப்படித் தாங்க இந்த முயற்சியும் கூட. எல்லாத்துக்கும் மேல, ஏற்கனவே முடிவான கதையின் முடிவை மாற்றி, திரும்ப யோசித்து புது மாதிரியாக முடிக்கத் துணிந்த உங்க துணிவுக்கும் பாராட்டுகள். அடுத்த தொடருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! வழக்கம் போல கலக்குங்க!

Truth said...

நன்றிங்க புன்னகை