Tuesday, July 21, 2009

பதின்மூன்றாவது தேனிலவு - 7

... இதுவரை

இப்போது இரவு மணி ஒன்று. நாங்கள் அனைவரும் ஒன்று கூடினோம். அவர் இந்த மந்திர ரிசார்ட்டுற்குரிய வரைப் படம் வைத்திருந்தார். அதைக் காட்டி இப்போது நாம் எங்கிருக்கிறோம், தப்பிப்பதற்கான வழிகளும் விளக்கினார். எனது கவனம் முழுவதும் அவர் சொன்ன வழிகள் மீதே இருந்தது. அனைவரும் அவர் சொன்ன விஷயங்களைக் கிழிந்த காதுகளால் கேட்டுக் கொண்டிருந்தனர். அவர் சொன்னதை வைத்துப் பார்த்தால் நாங்கள் ஏதோ குகைக்குள் இருக்கிறோம் என்பது மட்டும் புரிந்துக் கொண்டேன்.

'இந்த இடத்தை விட்டு நாம் செல்ல முயன்றால் நாம் வெடித்து சிதறிவிடுவோம். நாம் தப்பிக்க ஒரு வழி தான் உள்ளது. அது வடக்கே உள்ள வழியில் நடந்துப் போனால், கடைசியில் வலம், இடம் என்று இடண்டு வழிகள் வரும். அதில் நாம் வலது பக்கம் செல்ல வேண்டும். அந்தக் கடைசியில் ஒரு மர்ம வாசல் உள்ளது. அந்த மர்ம வாசலைத் திறப்பதற்கான சாவி என்னிடம் உள்ளது', என்றார்.

நாங்கள் அனைவரும் அவர் காட்டிய சாவியைப் பார்த்தோம். அது ஏதோ மனித எலும்பினால் செய்யப் பட்டது போல் இருந்தது. கிட்டத்ட்ட ஒரு அடி நீலம் இருக்கும் அந்தச் சாவி. அவர் அந்தச் சாவியை தனது கழுத்தில் மாட்டிக் கொண்டு எங்களுக்கான கட்டளைகளை விடுத்தார். அதன் படி நாங்கள் பன்னிரெண்டு பேரும் வெவ்வேறு திசைகளில் சென்று நிற்க வேண்டுமாம். கடிகார முட்கள் இருக்கும் கோணத்தில் நாங்கள் அனைவரும் இருக்க வேண்டும். பேய்கள் எங்களை அண்டாமல் இருக்க எங்கள் அனைவருக்கும் மந்திரக்கப் பட்ட ஒரு கயிற்றைக் கட்டினார். அவர் சொன்ன படி நான் பன்னிரெண்டாவது முள் இருக்கும் இடத்தில் நிற்கவேண்டும். வரைப்படத்தை ஒரு முறை பார்த்தேன். நான் நிற்கும் இடம் அந்த மர்ம வாசலின் அருகில் தான் இருந்தது.

'இந்தச் சாவியை நீ வைத்துக் கொள்', என்று அந்தச் சாவியை என்னிடத்தில் தந்தார்.
நான் மர்ம வாசலுக்கு அருகில் இருப்பதினால் அந்தச் சாவியை என்னிடம் தந்திருப்பார் என்பதை புரிந்துக் கொண்டேன்.
'இந்தச் சாவியை வைத்து மர்ம வாசலைத் திறந்தால் என்ன ஆகும்?', என்று நான் கேட்டேன்.
'நான் எனது யாகம் முடித்தப் பின்னர் நீ திறந்தால், இந்த இடம் முழுவதும் பஸ்பமாகி விடும், நாம் தப்பித்துவிடலாம்', என்றார்.
'இல்லேன்னா?'
'நீ வெடித்து சிதறிப் போவாய்', என்றார் சிவந்த கண்களுடன்.
நான் அமைதியானேன்.

'சரியாக ஒன்றரை மணியிலிருந்து இரண்டு மணி வரை தான் பேய்களின் பலம் குறைந்து இருக்கும். அப்போது நாம் அனைவரும் வெளியே சென்று அவரவர்களுக்கான இடங்களில் காவல் நிற்க வேண்டும்', என்றார்.
இனி எனக்கான சுய முயற்சி தேவையற்றது என்று தெரிந்துக் கொண்டதால், நான் அவர் சொன்னதை கேட்டு நடந்துக் கொண்டேன்.

'நான் யாகத்தை முடித்து விட்டு அனைவரையும் அழைத்துக் கொண்டு மர்ம வாசலுக்கு வந்து விடுகிறேன்', என்றார்.
'சரி, நீங்கள் அனைவரும் வந்தவுடன் என்னிடம் இருக்கும் சாவியால் நான் கதவைத் திறந்துவிடுகிறேன்', என்றேன்.

இரவு ஒன்றரை மணி:
அவர் சொன்னதைப் போல் நாங்கள் எங்கள் மணிக்கட்டில் மந்திரக்கப்பட்ட கயிற்றைக் கட்டிக்கொண்டு வெவ்வேறு திசைகளில் நிற்கச் சென்றோம். எனது கையில் அவர் தந்த எலும்பினால் ஆன சாவியும் இருந்தது. அவர் தன்னுடன் யாகத்துக்குத் தேவையானவற்றை ஒரு பெட்டியில் எடுத்துக் கொண்டார்.

நாங்கள் அனைவரும் பிரிந்தோம். ஒன்று, பதினொன்று மணி கோணங்களில் நிற்பவர்கள் என்னுடன் வந்தார்கள். அருகில் சென்ற பின் அவர்களிடமிருந்தும் நான் பிரிந்து நான் நிற்க வேண்டிய இடத்திற்கு தனியாக வந்து சேர்ந்தேன். இந்த இடத்தின் வரைப் படம் என் கண்களிலேயே இருந்தது. அதன் படி அங்கு மர்ம வாசலைப் போல் ஒன்றும் இருக்கவில்லை. சாவியைப் போட ஒரு துவாரமும் இல்லை. ஒருவேளை இது மர்ம வாசல் என்பதால், யாகம் முடித்தப் பின்னர் தான் பூட்டின் துவாரம் கூட தெரியவரும் போல் இருக்கிறது என நினைத்துக் கொண்டேன்.

சுமார் பத்து நிமிடங்களாகியிருக்கும். யாகம் முடிந்த பாடில்லை. மணி இரண்டாவதற்கு இன்னும் இருபது நிமிடங்கள் தான் இருக்கிறது. நான் அவர்களுக்காக காத்துக் கொண்டிருந்தேன். மந்திர வாசலில் துவாரம் மெல்ல காட்சியளித்துக் கொண்டிருந்தது. தப்பித்தல் இப்போது இன்னும் ஒரு சில நிமிட தூரத்தில் தான் இருந்தது. நான் இருக்கும் இடத்திற்கு வர இதோ இந்த ஒரு வழி தான் இருக்கிறது.

இன்னும் பத்து நிமிடங்கள் தான் இருக்கிறது. பேய்களின் தூக்கம் முடியப் போகிறது. அனால் இன்னும் இவர்கள் வரவில்லை.
அதோ அங்கே யாரோ வருகிறார்கள் என்பது தெரிகிறது. ஒருவர் மட்டுமே வருகிறார், மற்றவர்கள் எங்கே என்று தெரியவில்லை. ஒருவராக இருந்தால் இவர் க்ளீனர் இல்லை. வேறு யாரோ வருகிறார்களா? அவர் தூரத்திலிருந்து நடந்து வந்துக் கொண்டிருக்கும் போதே எனக்குள் ஏகப்பட்ட சந்தேகங்கள் மீண்டும் எட்டிப் பார்த்தது. நாங்கள் ஏன் வெவ்வேறு திசைகளில் நிற்க வேண்டும்? அவரிடம் சாவி இருக்கும் பட்சத்தில் ஏன் இது வரை காத்துக் கொண்டிருக்க வேண்டும்? நான் நினைத்துக் கொண்டிருக்கும் போது தூரத்தில் இருந்து நடந்து வந்துக் கொண்டிருந்தவர் அருகில் வந்தார். அவர் அதே மூன்றடி க்ளீனர் தான்.

'மத்தவங்க எல்லாம் எங்க?', என்று கேட்டேன்.
'அவர்கள் இனி வரப் போவதில்லை', என்றார்.
எனது சந்தேகங்கள் வலுத்துன. இவர் அனைவரையும் கொன்று இவர் மேலும் சக்திப் பெற்று வருகிறார். மேலும் இவரது அடுத்த கொலை நானாகத் தான் இருக்கப் போகிறேன், என்பது எனக்கு தெரிந்து விட்டது.
'ஓ, நீயும் போலி தானா?', என்றேன்.
'தெரிந்துவிட்டது அல்லவா, இனியும் தப்பிக்க முயற்சிக்காதே', என்றார்.

இரண்டு நிமிடங்களில் தான் இன்னும் இருக்கிறது. பேய்கள் எப்போது வேண்டுமானாலும் வந்துவிடும்.

'என்னை நீ அவ்வளவு சுலபமாக கொல்ல முடியாது', என்றேன், கையில் சாவியுடன்.
'ஹா ஹா, நீ வைத்திருக்கும் சாவி போலி, உன்னை கொன்று, என்னிடம் இருக்கும் உண்மையான சாவியால் திறந்து நான் வெளியே செல்லப் போகிறேன்', என்றார்.
நான் சிரித்துக் கொண்டே, 'ஹலோ தம்பி, முளைச்சு மூனு இல விடல, என்னய பாத்தா என்ன கிண்டலா இருக்கா?', என்று எனது வலது காலால் அவரது கழுத்தில் உதைத்தேன்.

அதோ அவர் பத்தடி தூரத்தில் விழுந்தார். அவரிடம் இருந்த பெட்டி தூரத்தில் விழுந்தது. பெட்டி உடைந்து சாவி வெளியே விழுந்தது. அவர் ஓடிச் சென்று அந்தச் சாவியை எடுக்க முயன்றார். நான் இங்கிருந்தே தாவி, அவர் மீது விழுந்தேன். அவரை எனது இடது கையால் தூக்கி எறிந்தேன்.

பேய்கள் முழிக்க இன்னும் ஒரே நிமிடம் தான் இருக்கிறது.

அவர் மீண்டும் என்னிடம் வந்து சாவியை எடுத்துக் கொண்டார். எனக்கு ஏனோ இவனை கொன்று விடுவது நல்லது என தோன்றியது. எனது காலால் அவனது கழுத்தை மிதித்தேன். அவன் சிரித்துக் கொண்டே, அவனது வலது பக்கம் பார்த்தான். தூரத்தில் பலர் பறந்து வருவதை பார்த்தேன். இனி இவனிடம் சண்டை போடுவதற்கு நேரம் இல்லை.

முப்பது வினாடிகள் மட்டுமே இருக்கிறது இப்போது.

அவர் எனது கால்களை பிடித்துக் கொண்டிருந்தார். அவரை தூக்கிப் போடவும் முடியவில்லை. இதோ அந்தப் பேய்க் கூட்டம் என்னை நெருங்கிவிட்டனர். நான் அவரை காலால் இழுத்துக் கொண்டு மர்ம வாசலுக்கு நடக்க முயன்றேன்.

இரண்டு வினாடிகள் மட்டுமே.
பேயக்ள் கீழே இறங்கி விட்டு, வந்து சேர்ந்தனர். நான் மர்ம வாசலில் இருக்கும் துவாரத்தின் அருகே நின்றேன். உண்மையான சாவியை பூட்டில் திருகி பூட்டைத் திறந்தேன்.

இப்போது மணி இரண்டு.
எங்கேயோ தூரத்திலிருந்து நெருப்புக் குழம்பு எங்களை நோக்கி வர ஆரம்பித்தது.

அடுத்த பதிவில் முடியும்...

7 comments:

கதிரவன் said...

8வது பதிவிலே முடிச்சிடறீங்களா ?? நான் 13வது பதிவில்தான் முடியும்னு நினைச்சேன் :-)

முடிவைப்படிச்சதுக்கப்புறம், கதையைப்பத்தி பேசுவோம்

Truth said...

@கதிரவன்.
உண்மையில் மூன்றாவது பதிவிலேயே கதையை முடிக்க வேண்டியது. முதலில் நினைத்த கதையின் க்ளைமேக்ஸ் சிலருக்கு பிடிக்காமல் போக, மூன்றாவது பதிவை சிறிது மாற்றம் செய்தேன்.

இன்னும் சொல்லப்போனால், நாளை என்ன எழுதப் போகிறோம் என்று தெரியாமல் தான் இன்று எழுதிக் கொண்டிருந்தேன். தினமும் ஒரு பாகம் போடுவதால், எழுதியே ஆக வேண்டும் என்ற கட்டாயமும் இருந்தது.

கதை எழுதத் தொடங்கும் முன்பே கதை முழுவதும் தெரிந்திருந்தால் ஒரு வேளை இன்னும் நன்றாக அமைந்திருக்கும்.


//நான் 13வது பதிவில்தான் முடியும்னு நினைச்சேன் :-)
எனக்கு எழுத ஆசை தான், ஆனால் படிக்கும் ஆர்வம் குறைந்து விடுமோ என்ற பயமும் இருந்தது. சில் flashback எல்லாம் கூட எழுத வேண்டும் என எண்ணியிருந்தேன்.

முழுக் கதையை படித்து விட்டு கண்டிப்பாக கதையை பற்றி பேசுவோம்.

உங்கள் பேராதரவு மிகவும் முக்கியம்.
நன்றி கதிரவன்.

sreeja said...

நன்றாக உள்ளது (இது வெறும் வார்த்தை அல்ல - உண்மை)

நாளை சந்திப்போம்

sri said...

கற்பனை வளம் அற்புதம், உரைநடை மஹா அற்புதம், கதை மட்டும் கொஞ்சம் அம்புலி மாமா கதைகள் மாதிரி இருக்கு. அடுத்த பாகதிர்க்காக காத்திருக்கிறேன் ..........

Truth said...

நன்றி ஸ்ரீஜா. நீங்க முதல் பாகத்துல இருந்து படிக்கிறீங்க. உங்கள் ஆதரவுக்கு ரொம்ப நன்றிங்க. கடைசி பாகத்தை போட்டாச்சு. படிச்சுட்டு திட்டுங்க :-)

Truth said...

@ஸ்ரீ,
//கற்பனை வளம் அற்புதம், உரைநடை மஹா அற்புதம்,

ரொம்ப நன்றிங்க.

//கதை மட்டும் கொஞ்சம் அம்புலி மாமா கதைகள் மாதிரி இருக்கு
பேய்க் கதைகள் எல்லாமே அப்படி தாங்க இருக்க முடியும். எழுத்தால இதுக்கும் மேல பயமுறுத்த என்னால முடியலிங்க. அடுத்த முறை முயற்சிக்கிறேன்.

கடைசி பாகத்தையும் போட்டாச்சு. இனி அடி பிளக்கப் போறீங்க போல இருக்கே :)

புன்னகை said...

எலும்பாலான மந்திரத் திறவுகோல், மர்ம வாசல், யாகம் இவையெல்லாம் உண்மையிலேயே ஏதோ மர்ம தேசத்தினுள் இருக்கும் உணர்வை ஏற்படுத்துகின்றன. முடிவின் உச்சகட்டப் பகுதி என்பதை நன்குணர்ந்து கதைக்குத் தேவையான விறுவிறுப்பினை இதில் அளித்துள்ளீர்கள்.