Friday, July 17, 2009

பதின்மூன்றாவது தேனிலவு - 3

...இதுவரை

விரல்கள் என்னை வாவென்று அழைத்தன. நான் விரல்களின் அருகே செல்லும் போது கதவு மீண்டும் 'டொக் டொக் டொக்', என்றது.

ஒரு பக்கம் விரல்கள் என்னை மீண்டும் மீண்டும் அழைத்து கொண்டிருந்தது. மறுபக்கம் கதவு விடாமல் அடித்துக் கொண்டிருந்தது. நான் கதைவைத் திறப்பதா, அல்லது விரல்களிடம் போவதா என்றெண்ணும் போது உள்ளே இருந்து என்னவள் 'நான் ரெடி', என்றாள்.

'நோ, வெளியே வராதே', என்றேன்
கதவு மீண்டும் சத்தமிட்டது.
'என்ன ஆச்சு?'
'நான் சொல்ற வரைக்கும் வெளியே வராதே'

கதவு இப்போது பலமாகத் தட்டப்பட்டது.
கதவின் சத்தத்தைக் கேட்டு, என்னவள் 'எனி பிராப்ளம்?', என கேட்டாள்.
'நோ நத்திங்க், வெளியே வராதே', என்று சொல்லிவிட்டு நான் கதவருகே சென்றேன். கதவு இப்போது அமைதி ஆனது. கதவைத் திறக்கவேண்டுமா வேண்டாமா என்று சந்தேகம் இருந்தது.
கதவின் தாழ் மட்டும் திறந்தேன். திறக்க வேண்டுமா வேண்டாமா என்ற சந்தேகம் இருந்து கொண்டே தான் இருந்தது. கதவு தட்டப்படவில்லை. கதவைப் பிடித்து மெல்ல திறக்க முயன்றேன். சின்ன துவாரத்தின் வழியே வெளியே யாரேனும் இருக்கிறார்களா என்று உற்றுப் பார்த்தேன். எனது கண்களுக்கு யாரும் தென்படவில்லை. கதவைத் திறந்தே விட்டேன். எனக்கான அதிர்ச்சி வெளியே இருக்கத் தான் செய்தது.

அந்த மூன்றடி மனிதன் கீழே விழுந்து கிடந்தான். கீழே இருப்பது அவனா, அதுவா என்று ஆராய்ச்சி செய்வது இப்போது முக்கியமில்லை என்பதைத் தெரிந்துக் கொண்டேன். கதவின் தாழடைத்து உடனே உள்ளே சென்றேன். என்னவள் எனக்காக மெத்தையருகே காத்துக் கொண்டிருந்ததைப் பார்த்து, 'அடியே, அங்க போகாதே', என்று சொல்லி அவளை இழுத்தேன். இவை எல்லாம் அவளிடம் சொல்வது கடினம் தான். ஆனால் நடந்ததைப் பார்த்து இனி எதுவும் கடினம் இல்லை என்று முடிவிற்கு வந்து சொல்ல ஆயத்தமானேன்.

'சரி கேளு, நாம் உடனே கிளம்பணும்', என்றேன்
'ஏன் என்ன ஆச்சு?'
'திஸ் ஹவுஸ் இஸ் ஹாண்டட், இங்க பேய் இருக்கு'
'யோவ், என்ன யா நீ. லூசு மாதிரி பேசுற?'
'கமான். நீ உள்ள போனதும் இங்க நிறைய விஷயங்கள் நடந்துச்சு, அங்க பாரு', என்றேன் ஜன்னல் ஓரத்தைக் காட்டி.
அங்கு இப்போது விரல்களும் இல்லை. வெடிப்பும் இல்லை.

'என்ன அங்க?', என்றாள்.
'சரி வெளியே வா', என்று கதைவைத் திறந்தேன்.
வெளியே மூன்றடி மனிதனும் இல்லை.
'என்னங்க ஆச்சு உங்களுக்கு?', என்றாள்.

நான் பதில் சொல்ல முடியாமல். 'சம்திங் இஸ் ரியல்லி கோயிங் ராங்', என்றேன்.
'எனக்குப் புரியலேங்க நீங்க சொல்றது'
'சொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இந்த ஜன்னலோரத்துல ஒரு சின்ன வெடிப்பு, அதுல இருந்து கை விரல்களைப் பார்த்தேன்'
என்னவள் திடுக்கிட்டு, 'வாட்?', என்று அலறினாள்.
'அந்தக் கை விரல்கள் என்ன வான்னு கூப்பிட்டுக்கிட்டே இருந்திச்சு'
என்னவள் என்னையே பயத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.
'அப்புறம், இந்தக் கதவு யாரோ பயங்கரமா தட்டிக்கொண்டே இருந்தாங்க'.
'ஆமா, கேட்டுச்சு'
'திறந்துப் பார்த்தா, அந்த க்ளீனர் பாய் இல்ல? அவன் கீழே விழ்ந்திருந்தான்', என்றேன்.
'செத்துட்டானா?'
'தெரியல, ஆனா இப்போ அவன் இங்க இல்லயே'
'அப்போ உயிரோட இருப்பானா? இல்லே டெட் பாடிய யாராவது எடுத்துக் கிட்டு போயிருப்பாங்களா?' என்றாள்.
'தெரியல மா', எனது நெற்றியில் விழுந்த கோடுகளைத் தேய்த்துக் கொண்டே, 'அப்போ, அட்மின் சொன்னது, அந்த டீ கடைக்காரர் சொன்னது எல்லாமே உண்மை தானோ? ஆனா, அவங்க இந்த பேய் மேட்டர் சொல்லலியே'.

'இப்போ என்ன பண்றது?'
'தாமுக்கு கால் பண்றேன்'
'வாட்?'
'யெஸ், என்று சொல்லி, நான் எனது தொலைப் பேசியுடன் மீண்டும் ஜன்னல் ஓரத்திற்குச் சென்றேன்.

தொலைப் பேசி மணி அடித்துக் கொண்டே இருந்தது. தாமு நிச்சயமாக எடுக்க மாட்டான் என்று தோன்றியது. அங்கு ஜன்னல் ஓரத்தில் வெடிப்பு இருந்ததற்கு சுவடே இல்லை இப்போது. அருகில் எங்கும் அதற்கான அறிகுறியும் இல்லை. தாமு தொலைப்பேசி எடுக்கவே இல்லை. நான் மீண்டும் மீண்டும் அழைத்த பின் ஐந்து நிமிடங்களுக்குப் பின் எடுத்தான்.

'ஹலோ தாமு, சொல்றத மட்டும் செய்'
'என்ன ஆச்சு?'
'நாங்க ஒரு பிரச்சனைல மாட்டிக்கிட்டு இருக்கோம்'
'என்ன ஆச்சுன்னு சொல்லுங்க சார்'
'பதினஞ்சு கிலோமீட்டர், உனக்கு பத்து நிமிஷம் டைம் தர்றேன், கிளம்பி வா'
'என்ன ஆச்சுன்னு நீங்க இன்னும் சொல்லவே இல்ல. நான் தனியா வரணுமா, இல்ல போலீஸ் ஹெல்ப் வேணுமா?'
'பேய் மீது நம்பிக்கை இருக்கா?'
'இல்லை'
'இங்க வா நான் காட்டுறேன்', என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தேன்.

'இன்னும் பத்து நிமிஷத்துல தாமு வந்திருவான்', என்று சொல்லி, திரும்பிப் பார்க்க, என்னவளும் அங்கு இல்லை.

தேனிலவு தொடரும்...

8 comments:

கதிரவன் said...

ம்ம்...நல்லா கிளப்பறீங்க பீதியை. சீக்கிரமா அடுத்த பாகம் வெளியிடுங்க

Manu said...

திக்...திக்...திக்...

மனதிலும்....உன் எழுத்திலும்...

அடுத்த பகுதிக்காக....ஆவலுடன்...

Anonymous said...

INTERESTING!!!
UNGALUKKU KALYANAMACHA??? KALYANAMANAMADIRI ELLAM VILAKAMA ELUTHIREENGA!!!!! GOOD ANYWAY

sreeja said...

Great !!

Waiting for 4th part and don't make late to post....please.

Truth said...

@கதிரவன், @மனு
ரொம்ப நன்றிங்க. அடுத்த பாகம் வெளிவந்தாச்சு. படிச்சுட்டு சொல்லுங்க.

Truth said...

@அனானி,
பேய் கதையையும், கல்யானத்தையும் ஒன்னா நினைக்கிற உங்க மனசு நல்லாத் தாங்க இருக்கு. உங்களுக்கு கல்யானம் ஆச்சா? ஆன மாதிரி தாங்க இருக்கு.
உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிங்க.

Truth said...

@ஸ்ரீஜா,
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிங்க.
அடுத்த பாகம் பதிச்சாசு, படிச்சுட்டு சொல்லுங்க.

புன்னகை said...

//கீழே இருப்பது அவனா, அதுவா என்று ஆராய்ச்சி செய்வது இப்போது முக்கியமில்லை என்பதைத் தெரிந்துக் கொண்டேன்.//
எழுத்துக்கள் எல்லாம் தானா வந்து விழுது போல? :-)

//அங்கு இப்போது விரல்களும் இல்லை. வெடிப்பும் இல்லை.//
தமிழ்த் திரைப்பட தாக்கம்!

//'இன்னும் பத்து நிமிஷத்துல தாமு வந்திருவான்', என்று சொல்லி, திரும்பிப் பார்க்க, என்னவளும் அங்கு இல்லை.//
சரியான இடத்தில் தொடரும் போட்டதற்கு ஒரு சபாஷ்! :-)