Tuesday, July 07, 2009

32K

இதோ எனது பதில்கள்

01. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

நான் பிறக்கும் முன்பே எனது பெயர் முடிவானது. ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் இதே பெயர் தான் என்று. என்னுடைய பிறப்புச்சான்றிதழில் பெயர் கிரண் குமாருக்கு பதிலாக கிருஷ்ண குமார் என்று தவறாக அடித்துத் தந்திருக்கிறார் அந்த அரசாங்க ஊழியர். நானாக இருந்திருந்தால் அப்படியே கூட விட்டுருப்பேன். எனது அப்பா, அதை அவர்களுடன் பேசி சிரத்தையுடன் மாற்றியிருக்கிறார். எனவே எனது பெயர் எனக்கு மிகவும் பிடிக்கும்.

02. கடைசியாக அழுதது எப்பொழுது?
ஞாயிறு இரவு பன்னிரண்டு மணிக்கு. மீண்டும் ஒருமுறை அனைவரையும் விட்டுப் போகும் போது. விமான நிலையத்தில் கண்கள் கலங்கியது. தனிமை கொடுமை.

03. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
மிகவும். எனது பள்ளியில் சிறு வயதில் கையெழுத்துப் பயிற்சி வகுப்புகள் உண்டு. அதனால் தான் என்னவோ, எனது கையெழுத்து மிகவும் நன்றாகவே இருக்கும்.

04. பிடித்த மதிய உணவு என்ன?
எதுவாக இருப்பினும் அம்மா சமைத்தது. அதற்கு பின்னர், நான் சமைப்பது. நல்லாத்தாங்க சமைப்பேன். என்னுடைய சமைப்பது எப்படி படிக்கலையா நீங்க.

05. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
இல்லை. சில நாட்களாவது பிடிக்கும்.

06. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
கடலில் குளிப்பது பிடிக்காது. கடல் மண் ஆடைகளில் புகுந்து விடுவதால். அருவி பிடிக்கும்.

07. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
கண்களை தான். ஐ டு ஐ காண்டாக்ட் மிகவும் முக்கியம்.

08. உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடித்தது : தெரியாத விஷயங்களைப் படித்து தெரிந்து கொள்வது
பிடிக்காதது : அப்படிச் செய்ததால், jack of all trades, master of none ஆனது. ஆனால் இப்படி இருப்பதும் எனக்கு பிடித்தேயுள்ளது.

09. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது?
நான் சின்னப் பையங்க :-).

10. யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
யாருமே பக்கத்தில் இல்லை என்ற கவலை தான் :-). பக்கத்தில் யார் இருந்தாலும் நல்லதே.

11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
கருப்பு சட்டை, கருப்பு பேண்ட், கருப்பு ஷூ. எல்லாமே கருப்பு தான். அதான் சொன்னேன்னே எல்லாமேன்னு.

12. என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
சென்ற வாரம் வரை FMஇல் பாட்டு ஓடிக் கொண்டிருந்தது. 'துஜே மேன் ரப் திக்தா ஹே யாரா மேன் க்யா கரோ' என்ற பாட்டு பல முறை கேட்டுவிட்டேன். 'ரப் னே பனா தி ஜோடி' படத்திலிருந்து இந்தப் பாட்டு. இப்போது எதுவும் கேட்கவில்லை.

13. வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
நீலம். நான் கல்லூரி முடிக்கும் வரை இங்க் பேனாவைத் தான் வைத்திருந்தேன்.

14. பிடித்த மணம்?
croissant(இதை க்ரொசாந்த் என்று சொல்ல வேண்டுமாம்)

15. நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார் ? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன ?
யாருமே இல்லேங்க :-)

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
நிறைய இருக்கு. அட கோவில் கொஞ்சம் போர் அடித்தால் தெய்வம் வந்து வாழும் வீடு என்ற ஒரு பதிவு.

17. பிடித்த விளையாட்டு?
ஹி ஹி ஹி... இதைப் படிங்க.

18. கண்ணாடி அணிபவரா?
ஒரு காலத்தில் அணிந்திருந்தேன். பின்னர் (ஒரு வருடத்திற்கு முன்னர்) சையாப்டிக்ஸ் செய்து கொண்டு இப்பொது அணிவதில்லை. புதிதாய் ஒரு ரேய்பேன் வாங்கி தொலைத்ததால் வெயிலில் மட்டும் அதை அணிவதுண்டு.

19. எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?
என்னுடன் இருக்கும் கூட்டத்தைப் பொறுத்து.
The Shawshank's Redemption நண்பர்களுடன் பார்க்க ஆரம்பித்து, முதல் காட்சியிலேயே அவர்கள் கமெண்டடிக்க, தொடர்ந்து பார்க்காமல் தனியாக பார்த்தேன்.
வில்லு படம் தனியாக பார்த்தால் உயிருக்கு பாதிப்பு இருப்பதை உணர்ந்து பல நண்பர்களோடு பார்த்தேன்.
எனவே என்னோடு இருப்பது யார் என்று தெரிந்துக் கொண்டு, அதற்கேற்ற படங்களைக் கண்டால் அனைத்தும் பிடிக்கும்.

20. கடைசியாகப் பார்த்த படம்?
காதல்னா சும்மா இல்லே, நேத்து ஜெட் ஏர்வேய்ஸ்ல பாத்தேன். இந்தப் படத்தை தெலுங்குல பார்த்த மாதிரி இருக்கு.

21. பிடித்த பருவ காலம் எது?
கல்லூரி படிக்கும் போது. முக்கியமாக ப்ராஜெக்ட் செய்த நாட்கள்.

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்
The Selfish Gene

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
அம்மா அப்பா படம் வெகு நாட்களாக இருக்கிறது. மாற்றுவதாய் எண்ணம் வரவில்லை.

24. உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்த சத்தம் : சத்தமே பிடிக்காது, இசை தான் பிடிக்கும்.
பிடிக்காத சத்ததம் : சிக்னலில் பச்சை விழுந்த உடன், முதலில் நிற்கும் ஒரு வண்டிக்கு பின்னால் நிற்கும் அனைவரும் ஹாரன் அடிப்பது.

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
லண்டன், சுவிஸ், பாரிஸ், ஸ்காட்லாண்டு. எது தூரம் என்று தெரியவில்லை.

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
எதாவது ஒன்று இருக்க வேண்டும் என்று தான் நினைத்தேன். ஆனால் உலகத்தில் இருக்கும் அத்துனை பேருக்கும் தனித் திறமை இருக்கும் பட்சத்தில், உலகில் அத்தனை திறமைகளா இருக்கிறது? என்னாமா யோசிக்கிறேன் இல்ல?

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
இந்தியன் படத்தில் கமல் சொல்வது போல், 'உங்க வேலையைச் செய்ய எதற்கு காசு தரணும்?'
அந்நியன் படத்தில் விக்ரம் சொல்வது போல், 'பலர் தப்பு செய்றதுனால தப்பு சரி ஆகாது'

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
சாத்தானை உள்ள கொண்டு போயா வைக்கனும்? நான் எல்லாவற்றிலும், cleanliness, punctuality, obidience இப்படிப் பல விஷயங்களை எதிர்பார்க்கிறவன். ஆனால் ஏனோ ஒரு நாள் நானும் இதைத் தவற விடுகிறேன்.

29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
நிறைய இருக்கு, அடுத்து சுற்ற வேண்டும் என நினைத்திருப்பது பூனே - மும்பை ஹைவேயில் இருக்கும் கிராமங்கள்.

30. எப்படி இருக்கணும்னு ஆசை?
நானாகவே இருக்கத் தான் ஆசை. ஆனால் அப்படி இருப்பது பலருக்கு பிடிக்கவில்லை. மாற வேண்டியிருக்கிறது பல நேரங்களில்.

31. மனைவி/கணவன் இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?
அதான் சொன்னேன்னே, நான் சின்னப் பையன் என்று.

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?
எனது மாமா ஒரு பெரிய அட்டையில் எழுதி வைத்த ஒரு வாக்கியம். அன்று அதன் பொருள் தெரியாமலேயே படித்துப் படித்து மனதில் பதிந்த ஒன்று.
Life is not a problem to be solved.
Its an experience to be lived.

7 comments:

ராமலக்ஷ்மி said...

எல்லாப் பதில்களையும் ரசித்தேன்.
தலைப்பும் அருமை.

Jackiesekar said...

என்னுடன் இருக்கும் கூட்டத்தைப் பொறுத்து.
The Shawshank's Redemption நண்பர்களுடன் பார்க்க ஆரம்பித்து, முதல் காட்சியிலேயே அவர்கள் கமெண்டடிக்க, தொடர்ந்து பார்க்காமல் தனியாக பார்த்தேன்.

நல்லது செய்தீர்கள் நண்பரே.. அந்த படங்களை அனுபவித்து பார்க்கவேண்டும்..

Truth said...

@ராமலக்ஷ்மி,
நன்றிங்க :-) உண்மையில் ஒரு கதை எழுதி, அதில் இந்த 32 கேள்விகளுக்கும் மறைமுகமாக பதில் சொல்ல வேண்டும் என்று தான் நினைத்தேன். நேரம் இல்லாததால் (ஐடியா இல்லாததால் என்று படிக்கக் கூடாது :) )அப்படி செய்யவில்லை.

Truth said...

@jackiesekar
பாஸு, உங்க கதை விமர்சங்களை எல்லாம் நானும் ஏதோ படிச்சிருக்கேன்.
வருகைக்கும், கமெண்டிற்கும் நன்றி ஜாக்கி.

புன்னகை said...

ஒரு வழியா எழுதிட்டீங்களா? ப்ரியா அக்கா உங்கள அழச்சப்போவே ரொம்ப ஆவலா எதிர்பாத்தேன் நம்ம ஊர் புள்ள என்ன எழுதப் போகுதுன்னு. நல்லா இருக்குங்க. உங்கக் குசும்பு ஏனோ இந்தப் பதிவுல கொஞ்சம் குறைவு, இல்ல நான் அதிகமா எதிர்பாத்துட்டேன்னு நினைக்கிறேன். வாழ்க்கை பற்றி தத்துவம் எல்லாம் சொல்லி இருக்கீங்க??? என்னவோ நடக்குது போங்க! :-)

Truth said...

@புன்னகை.
நன்றிங்க. இது ஒரு சீரியஸ் பதிவு, இதுல குசும்பு எதிர்பார்கறது தவறு, என்ன நான் சொல்றது? என்ன சிரிப்பு வருதா? :)

ப்ரியா கதிரவன் said...

Thanks.