Friday, July 10, 2009

சிந்துபாத் கதைகள் - சுவிஸ் - 3

இது வரை பயணித்தது...

'சர்தான், நேத்து நைட் ஏர்போர்ட், இன்னைக்கு நைட் ப்ளாட்பார்ம் போல', என்றேன்.
அப்போது அங்கு வெள்ளை நிறத்தைத் தவிர வேறொன்றும் அறியேன் என்ற படி ஒரு பெண் செல்ல, 'மச்சி, இவளுக்குப் பக்கத்து ரூம்ல நமக்கு இடம் கிடைக்குமா பாரு டா', என்றான் ஆதி.
'ங்கொய்யாலே, ரூமே கிடைக்கல, இதுல ஸ்பெசிபிகேஷன் வேற', என்றேன்.
'So when can we check in, when will the reception be open', கார்த்தி கேட்டான்.
'Reception will be open again this evening till night. We have lockers there and bathrooms on to the left', சொல்லிவிட்டு சிரித்தாள் அங்கிருந்த பெண்.

நாங்கள் எங்களது பைகளை அங்கிருந்த லாக்கர்களில் வைத்து ஒருவன் காவல் காக்க, மற்றவர்கள் குளித்து முடிக்க, அனைவரும் மதியம் பன்னிரண்டு மணிக்குத் தயார்.
'இவ்வளவு வசதி இருந்தா நான் ரூம் புக் பண்ணியே இருந்திருக்க மாட்டேன் டா', என்றான் ஆதி.
'ஆமா, நமக்கு வேண்டியது பைகள வெக்கறதுக்கு ஒரு இடம், குளிக்கிறதுக்கு ஒரு இடம், சூப்பர் மச்சி. ரூம் கேன்சல் பண்ணிடலாமா?', என்றேன்.

வெளியே வரும் போது, 'மச்சி ரிசெப்சன்ல பாத்தோம்ல ஒரு பொண்ணு வெள்ள வெளேற்னு அவ ஆஸ்திரேலியா டா', என்றான் ஆதி.
'அது எப்படி டா கண்டுபிடிச்ச', என்றேன்.
'உங்கள மாதிரி தேர்வடைந்த துறைமுகம் எல்லாம் இல்ல'.
'பேசிட்டியா?'
'ச்சீ... இல்ல'
'பின்ன?'
'ஒட்டு கேட்டேன்'
'ம்ம்ம்'
'அவங்க க்ரூப்பா ட்ரிப்புக்கு வந்திருக்காங்க. பர்ஸ்ட் ப்ளோர்ல தான் இருக்காங்க', என்றான்.

இருப்பினும் எங்களின் ஊர் சுற்றும் பொறுப்புணர்ச்சி எப்போதாவது எங்களை எட்டிப் பார்ப்பதால், நாங்கள் வெளியே கிளம்பினோம். அன்று நாங்கள் பட்ட பாட்டைப் பார்த்து வானமும் அழுது கொண்டிருந்தது. எங்களின் திட்டப்படி அன்று யூங்ப்ரா போக வேண்டும். காரணம் அங்கு தான் ஜில் ஜில் ஐஸ் இருக்கிறது. ஆனால் மழையில் போகக் கூடய இடம் அது இல்லை என்று பலர் எங்களுக்கு சொன்னதால், எங்களின் திட்டத்தை மறுபடியும் வேகவேகமாக மாற்றி அமைத்தோம். அடுத்த நாள் திட்டத்தில் இடங்கள் குறைவாகவே இருந்ததினால், மேலும் இன்று ஏற்கனவே பாதி நாள் முடிந்துவிட்டதால், அடுத்த நாள் திட்டத்தில் இருந்தவை இன்றைக்கு மாற்றப்பட்டது. வெங்கன் மற்றும், இண்டெர்லேக்கன் சுற்றுவோம் என்று திட்டக்குழுவில் தீர்மானம் செய்யப்பட்டது.

வெங்கன் என்பது இண்டெர்லேக்கனிலிருந்து சுமார் ஒன்றரை நேர ரயில் பயணம். ரயிலில் முதல் வகுப்பில் தான் ஏறுவோம் என்று ஒற்றைக்காலில் நின்று பின இரண்டு கால்களோடு ஏறினோம். ரயிலைப் பற்றி எழுத வேண்டுமெனில் அதற்குத் தனிப் பதிவாகத் தான் இருக்கும். வெங்கன் போகும் வழி கூட பிரமாதம். மாசற்ற சூழல், எங்கும் பச்சைப் பசேலென்று மலைகள். ஒவ்வொரு சாலையின் ஓரத்திலும் தண்ணீர் ஓடுகிறது. அட சுத்தமான தண்ணீர் தான்.



வெங்கனின் முக்கியத்துவம் கேபில் கார். ஒரு மலையிலிருந்து வேறொரு மலைக்குச் செல்ல வேண்டும். ஆகாயத்தில் பறப்பது போல் ஒரு உணர்வு. நாங்கள் சென்றது இலையுதிர் காலம் என்பதால் மரங்கள் யாவும் பொன்னிறத்தில் இருந்தது.



கேபில் கார் பயணமும் சுமார் ஒன்றரை மணி நேரம். இடையில் ஒரு இடத்தில் இறங்கி வேறொரு கேபில் கார் ஏறவேண்டுமாம்.


அங்கு இந்தியக் குடும்பம் ஒன்றைக் காண முடிந்தது. அவர்களுடன் பேச்சு கொடுத்தவாறே வேறொரு கேபில் காரில் ஏறுவதற்கு நடந்தோம். மணி மதியம் இரண்டிருக்கும். ஆனால் பத்தடிக்கு மேல் ஒன்றும் தெரியவில்லை. அப்போது தான் தெரிந்தது நாங்கள் மேக மூட்டத்தின் நடுவே நடந்து கொண்டிருந்தோம் என்று.



நாங்கள் ஏறிய இரண்டாவது கேபில் கார் இன்னும் உயரத்தில் இருக்கும் மலைகளின் இடையே செல்வது. கேபில் கார் மேகத்தைக் கிழித்துச் செல்வதை உணர முடிந்தது. இந்தப் படத்தைப் பார்த்தால் உங்களுக்கும் தெரியும்.



வெங்கனில் கேபில் கார் சாகசத்தை முடித்து விட்டு பின்னர் இண்டெர்லேக்கனுக்குத் திரும்பும் போது மணி சுமார் ஏழு இருந்திருக்கும். பசி உயிரைக் கிள்ளியதால் அருகில் ஏதேனும் இந்திய உணவகம் இருக்கிறதா என்று தேடிப் பார்த்ததில் ஏதோ ஒரு சந்தில் ஒளிந்து கொண்டிருந்தது. அதைத் தேடிப் பிடித்து வேண்டியதையும், வேண்டாததையும் சாப்பிட்டு எங்களின் யூத் ஹாஸ்டலுக்குச் சென்றோம்.

மறுபடியும் அங்கிருக்கும் ரிசப்ஷனிஸ்டிடம் எங்களைப் பற்றியும், மறவாமல் நாங்கள் லண்டனிலிருந்து வந்ததாகவும் கார்த்தி சொல்ல, எங்களின் அறை எங்களுக்குக் காட்டப்பட்டது.

யூத் ஹாஸ்டல் பற்றி தெரியாதவர்களுக்கு இந்த பத்தி:
இங்கு ஒரு அறையில் குறைந்தது நான்கு படுக்கைகள் இருக்கும். எத்தனை படுக்கைகளோ அத்தனை அலமாரிகள் பூட்டுடன் இருக்கும். ஒரு குளியலறை இரு கழிப்பறை இருக்கும். படுக்கைகள் ஒன்றின் மேல் ஒன்றாகக்கூட இருக்கலாம் (நமது ரயில்களில் இருக்குமே அப்படி). பல யூத் ஹாஸ்டல்கள் நன்றாக சுத்தமாக பராமரிக்கப் பட்டிருக்கும். மற்றவைகளில் கால் கூட வைக்க முடியாது. காலையில் உணவு இலவசம். திருமணம் ஆகாதவர்களுக்கு ஏற்றது.

நாங்கள் சென்றது மிக சுத்தமாகப் பராமரிக்கப் பட்டிருந்தது. எங்களின் அறையில் ஆறு படுக்கைகள் இருந்தது. மற்ற மூன்று பேர் யாரென்று எங்களுக்குத் தெரியவில்லை.
'இந்த மூனு பெட்ல பொண்ணுங்களாக் கூட இருக்கலாம் இல்ல', என்றான் ஆதி. ஆதி வெளியே சொல்லிவிட்டான், அவன் சொன்னதை நாங்கள் மனதில் நினைத்துக் கொண்டிருந்தோம்.

சற்று நேரத்தில் மூன்று ஆண்கள் உள்ளே நிழைய எங்கள் ஆசையில் இரண்டு லாரி லோடு மண் போட்டு மூடப்பட்டது. அவர்கள் கொரியாவிலிருந்து வந்ததாக அவர்கள் சொல்ல எங்களுக்குத் தெரிந்தது. அதில் ஒருவனுக்கு மட்டுமே ஆங்கிலம் தெரிந்திருந்தது. மூவரும் அச்சு அசலாக ஒரே மாதிரி இருந்தனர். ஒரு வேளை அண்ணன் தம்பிகளாக இருப்பார்களோ என நினைத்தோம். இதைக் கேட்டதற்கு மூவரும் ஒரே கல்லூரியாம். அதைத் தவிர எந்த சம்பந்தமும் இல்லை என்று ஆங்கிலம் தெரிந்தவன் சொன்னான்.

'எப்படி தான் கண்டுபிடிக்கிறாங்களோ', என்று நினைத்துக் கொண்டேன்.

ஆங்கிலம் தெரிந்தவனிடம் நாங்கள் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.
'Where are you coming from?', என்னைப் பார்த்துக் கேட்டான்.
'London', என்றேன்.
'Are you a Brit?', சந்தேகத்துடன் கேட்டான்.
'ஐயோ உண்மை தெரிஞ்சிடுச்சு போல இருக்கு', என்று நினைத்து, 'No we are from India, but we work in London', என்றேன்.
'Ah ok', என்றான்.

அந்த மூவரும் ஏற்கனவே அவர்கள் இடத்தைப் பிடித்திருக்க மிச்ச மீதி இருந்த மூன்று இடங்களை நாங்கள் எடுத்துக் கொண்டோம். ஆங்கிலம் தெரிந்தவனும், இன்னுமொருவனும் இரண்டு படுக்கைகளின் கீழ் பெர்த்தை எடுத்துக் கொண்டிருந்ததால், அதன் மேல் பெர்த்துகளை ஆதியும் நானும் எடுத்துக் கொண்டோம். மூன்றாவது படுக்கையில் கார்த்தி கீழேயும், மேல் பெர்த்தில் மூன்றாவது கொரியன் படுத்துக் கொண்டான்.

ஆங்கிலம் தெரிந்தவன் ஏதோ அடுத்த நாள் நாசாவில் செயற்கைக்கோளை ஏவி விடுவது போல் அவனது கணிப்பொறியில் வெகு நேரமாக ஏதோ தட்டிக் கொண்டிருந்தான். எங்களது அறை மிகவும் சிறியதாக இருந்ததினால், கார்த்திக்கு வியர்க்க, அவனது சட்டையைக் கழட்டிப் படுத்துக் கொண்டான்.

அப்போது அந்த ஆங்கிலம் தெரிந்தவன் எங்களைப் பார்த்து, 'Do you mind bringing my girl friend into this room', என்றான்.
'I am without a shirt, is that ok with you?', என்று கார்த்தி கேட்டான்.
'No problem', என்று சொல்லி விட்டு அவனது தொலைப் பேசியில் ஏதோ சொல்லி இணைப்பைத் துண்டித்தான்.

'மச்சி எனக்கு ஒரு கவிதை தோனுது டா', என்றான் ஆதி
'சொல்லு', இது நான்
'அக்கா வருவாங்க பரவாலயான்னு அவன் சொன்னான்,
சொக்கா போடலா பரவாலயான்னு இவன் கேட்டான்', என்றான்

கார்த்தி அவளின் வருகையைப் பார்ப்பதற்கு திரும்பிப் படுத்துக் கொண்டான்.
நான் மேலேயிருந்து கீழே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
எதற்குப் பிரச்சனை என்று ஆதி எழுந்து அமர்ந்து கொண்டான்.

கதவு 'டொக் டொக் டொக்', என்றது.

பயணம் தொடரும்...

4 comments:

Manu said...

அட போடா..நீ கொடுத்து வெச்சவன்...வாழ்க்கை வாழ்வதற்கே என்று நன்றாக புரிஞ்சவன்.

அது எப்படி...உன் நண்பர்கள் பேசினது மட்டும் கூறிகின்றாய்....நீ பேசியது எங்கே???? விழுங்கிட்டியா??

Truth said...

நான் பேசினது கூட வரும். patience is the name of the game.

sujatha said...

As usual Photos R Excellent. Expecting more photos...........

Truth said...

நன்றி அக்கா :)