Thursday, April 30, 2009

கனவு நினைவாகுமா

கனவு நினைவாகுமா? ஜாதகப் படி இன்று இரவோடு முடிகிறதாம் என்னுடைய ஏழரை. நாளை முதல் என்னுடைய வாழ்க்கை ஒரு பெண்ணால் மெருகேறி அம்பானிகளையும், பில் கேட்சையும் ஓரம் தள்ளி முன்னுக்குச் சென்றாலும் ஆச்சரியப் பட ஒன்றும் இல்லை என்று சொல்லியிருக்கிறார் எங்கள் குடும்ப ஜோதிடர். எனது சிறு வயதிலிருந்தே எனது சித்தப்பா 'டேய் நீ பம்பாய்ல பெரிய அடுக்கு மாடி கடை எல்லாம் கட்டுவ டா' என்று சொன்ன ஒரே காரணத்திற்காக நான் சிவில் இஞ்சினியரிங் படித்தேன். இரண்டு வருடங்களுக்கு முன்னர் எனது மாமா 'அமெரிக்காவுல தான்பூ இப்ப நிறைய வேல இருக்கு' என்று சொன்னதற்காக கம்ப்யூட்டர் கற்றேன். படித்து முடித்து நான்கு ஆண்டுகள் வேலையில்லாமல் போனதால், ஜோதிடர் இட்ட கெடுவிற்காகக் காத்திருந்து அதுவும் இன்றோடு முடிகிறது. நாளை எந்தப் பெண்ணை நான் பார்க்கப் போகிறேனோ என்று நினைப்பு எனது மூளையின் அனுக்களில் அலையடித்தது. எங்கு பார்க்கப் போகிறேன் அவளை? அவள் எப்படி இருப்பாள்? அவள் எனது வாழ்க்கையை மாற்றிவிடுவாளா? நாளை மும்பை முழுவதுமாகச் சுற்றி விடவேண்டும். அவள் எங்கிருந்தாலும் கண்டுபிடித்தாக வேண்டும். காலையில் ஆறு மணிக்கெல்லாம் அலாரம் வைத்துக்கொண்டேன். என்னிடம் இருந்த ஆயிரம் ரூபாயை மடித்து வைத்திருந்த எனது சட்டையில் வைத்துக் கொண்டேன்.

அதிகாலை ஆறுமணிக்கெல்லாம் எழுந்துவிட்டு குளித்து, இல்லாத அழகைக் கொண்டு வர முயற்சி செய்து தோற்று, நான்காக மடித்த சட்டையை மாட்டிக்கொண்டு, நிறம் மறந்த காலணிக்குக் கருப்பைப் பூசி, பரட்டையைப் பக்குவப்படுத்துவதற்குள் எனக்கு பிறந்த நாள் கண்டுவிட்டது. வீட்டிலிருந்து கிளம்பி பேருந்து நிலையத்தைப் பத்து நிமிடத்தில் வந்து சேர்ந்தேன். முதலாவதாக வரும் பேருந்து எங்குச் சென்றாலும் ஏறிவிட வேண்டும் என்று முடிவு செய்தேன். இது வரை திரைப்படங்களில் மட்டும் தான் முக்கிய காட்சிகளில் மழையும் இடியும் வரப் பார்த்திருக்கிறேன். இன்று ஏனோ எனது வாழ்விலும் இது நடக்கிறது. மேகத்தின் வேகம் கூடியது. பலத்த காற்றும் வீசியது. சில்லென்று மழைப் பொழிய, அதோ வருகிறது முதல் பேருந்து. பேருந்தின் எண் 19.

மழையில் நனைந்து விடாமல் பேருந்தில் ஏறி விட முயற்சி செய்தும் சிறிது நனைந்தே தான் போனேன. வலது புறத்தில் கிடைத்த ஒரு இருக்கையில் சன்னலோரம் மழையால நனைந்திருக்க நான் அந்த இருக்கையில் இடது புறமாக அமர்ந்து கொண்டேன். காலையிலிருந்தே ஏதோ அனைத்தும் எனக்கு சாதகமாக இருப்பது போல் ஒரு உணர்வு. வெயிலில் சுட்டெறிக்கும் இந்த நரக நகரத்தில் இன்றேனோ சில்லென்று காற்று, மழையுடன். நிற்கக் கூட இடம் கிடைத்திராத இந்தப் பேருந்துகளில், இருவர் அமரும் இருக்கை எனக்கே எனக்கென்று. இவை எல்லாம் நினைத்தால் சிறுபிள்ளைத்தனமாகத் தான் இருக்கிறது. இருந்தும், எனக்கு அனைத்தும் அதிசயமாத் தான் தென்பட்டது. பேருந்தில் அவளெங்கும் இருக்கிறாளா என்று ஒரு முறை எனது தேடல் பார்வையை வீசினேன். சல்வார் கமீசிலும், ஜீன்ஸ் டாப்களிலுமே அனைவரும் இருக்க, இவர்களுள் யாரும் அவளாக இருக்க முடியாது என என்னுடைய உள்ளுணர்வு சொன்னது. எப்படியும் கடைசி நிறுத்தம் வரை பயணச் சீட்டு வாங்கி விட்டதால், இருக்கையில் சாய்ந்துக் கொண்டு சன்னல் வழியாக வெளியே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது, ஆயிரம் மலர்களின் நறுமணம் தனக்குள்ளே வாங்கிக் கொண்டு, இளஞ் சிவப்பில் ஒரு புடவைக்குள் தன் அழகை மறைத்துக் கொண்டு, கைப்பேசியில் ஏதோ ஒரு குயிலுடன் கொஞ்சிக் கொண்டு, அவளுடைய முந்தானை எனது முகத்தை உரசியப்டி பின்னிருந்து முன்னே சென்றாள் அவள். வானம் பலமாக இடித்தது.

அவள் தான். அவளே தான். எனது வாழ்வை மாற்ற வந்து தேவதை அவளே தான். அவள் நான் அமர்ந்திருக்கும் இருக்கையிலிருந்து ஐந்து இருக்கைகள் முன் அமர்ந்து கொண்டாள். அவளது காதுகளை மறைத்த படி படிந்திருக்கும் முடியாக நான் இருக்கக்கூடாதா என்றது எனது மனம் ஒரு கணம். அவளது முந்தானையை அழகாகப் பிடித்திருக்கும் கைகளில் வளர்ந்து நீண்டிருக்கும் நகங்கள் ஒவ்வொன்றும் வெட்டிப் போட்ட நிலாத் துண்டுகள். எனக்குள் சந்தேகம், ஒரு வேளை இவளை நான் காதலிக்கிறேனா? இல்லை இல்லை. இவள் எனது வாழ்வில் ஒளி வீச வந்த தேவதை. எனக்குள் இருக்கும் அழுக்கைத் துடைத்துக் கொண்டு, அவளை ஒரு முறையேனும் பார்த்து விட, நான் பல முறை எட்டிப் பார்த்தும் முடியவில்லை. பேருந்து நின்றது. அவள் முன் பக்கம் இறங்கிடச் சென்றாள். ஐயோ, அவளை விட்டு விட்டால் எப்படி? நானும் அங்கேயே இறங்க முற்பட்டேன். அவள் இறங்கியதும் நானும் இறங்கி அவளைப் பார்த்து விட வேண்டுமென்று அவளின் பின்னேச் சென்றேன். அவளை நெருங்க எங்கிருந்தோ 'ஷீ இஸ் ஆர் ஃபேண்டசி' என்ற பாடல் எனக்கு உண்மையாகவேக் கேட்டது. அவளின் வலது பக்கமாக வந்து அவளின் அருகே சென்ற போது பாடல் சற்று கடுமையாகவேக் கேட்டது.

'சனியனே, வேல வெட்டி இல்லாம எவ்ளோ நேரம் டா தூங்குவே, ஏந்திரிச்சு போய் குளி, தண்ணீ நின்னுடப் போவுது', அரைகூவலாய்க் கத்தினான் எனது அண்ணன்.
எனது அலாரத்தை நிறுத்தி விட்டு குளித்து முடித்து, ஏழரை முடிந்ததாகச் சொன்ன ஜோதிடரைத் திட்டிக் கொண்டே, வெறும் வயிறுடன் பேருந்து நிலையத்திற்கு வந்துச் சேர்ந்தேன். மேகத்தின் வேகம் கூடியது. பலத்த காற்றும் வீசியது. சில்லென்று மழை பொழிய, அதோ வருகிறது முதல் பேருந்து. பேருந்தின் எண் 19.


பின்குறிப்பு: சங்கமம் போட்டிக்காக முதலில் நினைத்தது இதைத் தான். பின்னர் மூளைக்குள்ளேத் தேடிப் பார்த்ததில் தேடல் கிடைத்தது.

13 comments:

புன்னகை said...

நான் வந்துட்டேன்! Me de 1st :-)

புன்னகை said...

//சல்வார் கமீசிலும், ஜீன்ஸ் டாப்களிலுமே அனைவரும் இருக்க, இவர்களுள் யாரும் அவளாக இருக்க முடியாது என என்னுடைய உள்ளுணர்வு சொன்னது.//
ஆக, உங்களுக்கு வரப் போற பொண்ணு, தழைய தழைய புடவை கட்டினவளா தான் இருப்பான்னு சொல்ல வரீங்க??? புரிஞ்சு போச்சு! ;-)

//மேகத்தின் வேகம் கூடியது. பலத்த காற்றும் வீசியது. சில்லென்று மழை பொழிய, அதோ வருகிறது முதல் பேருந்து. பேருந்தின் எண் 19.//
கனவு நினைவாக வாழ்த்துக்கள்!

//பின்னர் மூளைக்குள்ளேத் தேடிப் பார்த்ததில் தேடல் கிடைத்தது.//
இந்தக் கதை நல்லா இருக்கு, ஆனா தேடல் கொஞ்சம் extra சூப்பர். உங்களுக்கு எப்பவும் second attempt தான் click ஆகும்னு நீங்க சொன்னது நியாபகம் வருது!

ராமலக்ஷ்மி said...

இதுவும் நன்றாகவே உள்ளது. சங்கமம் இரண்டு எண்ட்ரி அனுமதித்தால் கொடுத்திடலாம்:)!

சந்தி(ப்)பிழை said...

இந்தக் கதையையும் ‘தேடல்’ பதிவையும் ஒப்பிடுறது கொஞ்சம் கஷ்டம் தான். பேய் பிசாசு எல்லாம் இல்லாம, யதார்த்தமான ஒரு சின்ன நிகழ்வை உன்னோட பாணில சொன்னது எனக்குப் பிடிச்சிருந்தது.

என்னைக் கவர்தவை
”இது வரை திரைப்படங்களில் மட்டும் தான் முக்கிய காட்சிகளில் மழையும் இடியும் வரப் பார்த்திருக்கிறேன். இன்று ஏனோ எனது வாழ்விலும் இது நடக்கிறது.” - கதைக்கும் பொருத்தம், பின்னர் இது கனவு காட்சி’னு தெரியும் போதும் லாஜிக்கலா இருக்கு.

“முன்னே சென்றாள் அவள். வானம் பலமாக இடித்தது. ” - கதிர் படம் எஃபக்டு. தீப்பொறி எல்லாம் பறந்திச்சா ?

“நகங்கள் ஒவ்வொன்றும் வெட்டிப் போட்ட நிலாத் துண்டுகள்.” - இது கதையா கவிதையான்னு சந்தேகமே வந்திருச்சு. வர வர ரொமான்ஸ் ஜாஸ்தி ஆயிட்டே போறாப்ல இருக்கு :-)

”சில்லென்று மழை பொழிய, அதோ வருகிறது முதல் பேருந்து. பேருந்தின் எண் 19. ” - ஃபைனல் டச் - நச்

ஒரு சந்தேகம்
- அந்தப் பாட்டு 'she is a fantacy' இல்ல ?

Truth said...

@புன்னகை,
//ஆக, உங்களுக்கு வரப் போற பொண்ணு, தழைய தழைய புடவை கட்டினவளா தான் இருப்பான்னு சொல்ல வரீங்க??? புரிஞ்சு போச்சு! ;-)
ஷ்ஷ்ஷ்ஷ்... வெளில சொல்லாதீங்க.

//இந்தக் கதை நல்லா இருக்கு, ஆனா தேடல் கொஞ்சம் extra சூப்பர்.
ரொம்ப நன்றிங்க :-)

Truth said...

@ராமலக்ஷ்மி
//இதுவும் நன்றாகவே உள்ளது.
ரொம்ப நன்றிங்க. :-)

//சங்கமம் இரண்டு எண்ட்ரி அனுமதித்தால் கொடுத்திடலாம்:)!

:-))

Truth said...

@சந்தி(ப்)பிழை
பேய் பிசாசு எல்லாம் இல்லாம, யதார்த்தமான ஒரு சின்ன நிகழ்வை உன்னோட பாணில சொன்னது எனக்குப் பிடிச்சிருந்தது.
டேங்கஸ் டா.

//கதைக்கும் பொருத்தம், பின்னர் இது கனவு காட்சி’னு தெரியும் போதும் லாஜிக்கலா இருக்கு.
:-) டிஜிடல் லாஜிக் டிசைன் படிச்ச நமக்கு இது கூட வரேலேன்னா எப்படி? ;-)

//கதிர் படம் எஃபக்டு. தீப்பொறி எல்லாம் பறந்திச்சா ?
இப்போல்லாம் இது தான் ஹிட் ஆகுது :-) அதுத்த கதைல விஜய், பரத் எல்லாம் ஹீரோவா போட்டு, பறந்துகிட்டே ஃபைட் சீக்வென்ஸ் எல்லாம் வெக்கலாம்னு இருக்கேன் :-)

//இது கதையா கவிதையான்னு சந்தேகமே வந்திருச்சு. வர வர ரொமான்ஸ் ஜாஸ்தி ஆயிட்டே போறாப்ல இருக்கு :-)
வயசாகுதுல. இப்போ கூட வரலேன்னா எப்படி :-)

//”சில்லென்று மழை பொழிய, அதோ வருகிறது முதல் பேருந்து. பேருந்தின் எண் 19. ” - ஃபைனல் டச் - நச்
:-) நன்னி


// ஒரு சந்தேகம்
- அந்தப் பாட்டு 'she is a fantacy' இல்ல ?

she is our fantacy இல்லயா? ஒரு குரூப்பா பாடிகிட்டு போறாங்கலா, சரி our ன்னு நினைச்சேன்

VISA said...

First 2 paras you were able to build the tempo. Which means your narration is good. But there is a sag later and the ending was not thrilling or new or exciting. But I enjoyed reading it full. Keep writing. Best wishes.

VISA said...

so naanum unga kadaiku vanthutean.

இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...

he he he.. good one

நர்சிம் said...

நல்ல நடையில் சுவாரஸ்யமான கதை.

SurveySan said...

nice one :)

Truth said...

@VISA, will develop slowly.

@இராஜலெட்சுமி பக்கிரிசாமி, thanks

@நர்சிம், @SurveySan thanks