Wednesday, April 22, 2009

இந்தக் கொசுத் தொல்லை தாங்க முடியல டா நாராயணா

'ஐயோ அம்மா, இந்த கொசுத் தொல்ல தாங்க முடியலம்மா', இது நான்.
'உன்னை மட்டும் தான்டா கொசு கடிக்குது, எங்கள யாரையும் கடிக்கல', இது அம்மா, அம்மாவுக்கு ஆதரவாக பாட்டியும் கூட கூட்டணியில்.
'எவ்ளோ கொசு பாரும்மா'
'மைக்ரோஸ்கோப் வெச்சி பாத்தாக் கூட எங்களுக்குத் தெரியல, உன்னுடைய கண்ணுக்கு மட்டும் தான்டா அது தெரியுது'.

சரி கொசுக்களுக்கு இரவில் மட்டும் ஏன் இவ்வளவு குதூகலம்? தேடிப் பார்த்து படித்தவை, இதோ உங்களுக்கு. உங்கள் வீட்டைக் கொசுக்களிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள இது உதவலாம்.
- பொதுவாக கொசுக்கள் ஈரப்பதமான இடங்களையே விரும்புகின்றன.
- இருட்டும், வெப்பம் குறைந்த, (அதாவது சென்னையின் இரவு நேரத்தில் இருக்கும் வெப்பம்) மூலை முடுக்குகளில் தான் இவற்றின் இருப்பிடங்கள்.

எனவே இவை இரவு நேரங்களில் மட்டும் ஆட்டம் போடுகிறது.

அது இருக்கட்டும். கடிப்பதில் ஏன் இந்த பாரபட்சம்?
- நமது உடம்பிலிருந்து வரக்கூடிய ஒருவகையான மணம் அனைவருக்கும் ஒன்றாக இருப்பதில்லை.
- சிலரது மணம் mosquito repellent தாக்கத்தை உருவாக்குவதால் கொசுக்கள் அவர்களை விட்டு விடுகிறது.

நேற்று இரவும் கொசுத்தொல்லை அதிகமாக இருந்தது, எனக்கு மட்டும். ஹிட் அடித்த பிறகு மாயமாகப் போனது கொசுக்கள். எனது காலின் மீது ஏதோ கருப்பாக தூசி இருக்க, நான் அதைத் தட்ட, அம்மா உடனே 'அது எப்படி டா உன்னை மட்டும் தேடித் தேடிக் கடிக்குது', என்றாள்.
'இந்தக் கொசுத் தொல்லை தாங்க முடியல டா நாராயணா', என்று முனுமுனுத்த படி நேற்றைய நாள் நிறைவுற்றது.

பி.கு: இன்னொரு கசக்கும் உண்மை, global warming உலகின் வெப்பத்தை உயர்த்துவதால், முன்னர் பனிப் பிரதேசங்களாக இருந்த இடங்களில் வெப்பம் அதிகரிக்க, கொசுக்கள் இப்போது அங்கும் உயிர் வாழத் துவங்கியுள்ளது. இதனால் மலேரியா போன்ற கொசுக்கள் மூலம் பரவும் நோய்கள் அங்கும் பரவலாகப் பரவுகிறது. இதைத் தான் 'inconvenient truth' டாக்குமெண்டரியில், அல் கோர் மிகவும் தெளிவாகக் கூறுகிறார்.

5 comments:

புன்னகை said...

இன்னைக்கும் me de 1st :-)
படிச்சிட்டு வரேன்.

ராமலக்ஷ்மி said...

தாங்க முடியாத கொசுத் தொல்லையோடு தந்திருக்கிறீர்கள் விவரமாய் அதைப் பற்றியொரு பதிவு.

நன்று.

புன்னகை said...

உங்க பதிவப் படிச்ச பிறகு பல கேள்விகள் ஓடுது! எல்லாத்தையும் இங்கக் கேட்டுத் தொலைக்க முடியாது, அதனால, சில கேள்விகள் மட்டும் இங்க (அலைபேசி எண் மாறல இல்ல?)

=> இந்தக் கொசுத் தொல்லையிலும் உங்களால் நிம்மதியாகத் தூங்க முடியுதா?

=> நீங்க சமீபத்துல சென்னை வந்திருந்த போது கூர்க் போனீங்க இல்ல? அங்கேயும் இப்படி தான் கொசுத் தொல்லை அதிகம் இருந்திச்சா?

=> பதிவுக்கு, "கொசுவைப் பற்றி கோசு" அப்படின்னு தலைப்பு கொடுத்திருக்கலாம்ல? ;-)

Vidhya Chandrasekaran said...

கொசுவுக்காக பதிவா? நடத்துங்க.

Truth said...

வருகைக்கும் கமெண்டுக்கும் நன்றி புன்னகை, ராமலக்ஷ்மி, மனோ, வித்யா.
எதற்காகவேணும் பதிவு போடலாம், அதுல ஒரு மெசேஜ் இருக்குற வரையில். :-)