Thursday, February 26, 2009

தொடர் பதிவு- வழக்கொழிந்த தமிழ் சொற்கள்

வணக்கம்.

அட இது என்ன டா கூத்து? என்னையும் மதித்து "வழக்கொழிந்த தமிழ் சொற்கள்" தொடர் பதிவை எழுதச் சொல்றாங்க நம்ம பொன்னாத்தா [எ] சண்டைக்கோழி.

"ஆழத்தப் பத்தி கொஞ்சம் கூட கவலைப் படாம கால வெச்சிட்டீங்க. கொஞ்சம் நேரத்துல அதோட விளைவு தெரியும்" அப்படின்னு சொன்னதுக்கு கொஞ்சம் கூட அசராம "நான் ரெடி ஆழம் பாக்க, ரொம்ப முட்டி முட்டி யோசிக்குறிங்க போல இருக்கே... நீங்க தயாரா?" அப்படின்னு சேலையை வரிஞ்சு கட்டிக்கிட்டு கேட்டுட்டாங்க.

நிலாம்மா, ஒன்னு சொல்றேன் அதைக் கற்பனை பண்ணிகிட்டு உங்க மூளையில் ஒரு படமா ஓட்டுங்க. சரியா?
சீன் 1 டேக் 2, ஆக்ஷன்.
இப்போ நம் இரு கண்களையும் கட்டிக் கொண்டு படிக்கட்டு மேலிருந்து கீழே இறங்குவதாக நினைத்துக் கொள்வோம். ஒவ்வொரு படி இறங்கும் போது பார்த்துப் பார்த்துத் தான் காலை வைப்போம். ஏன்? அடுத்து ஒரு படி இருக்கிறதா இல்லையா என்று நமக்குத் தெரியாது. எல்லாப் படிகளையும் இறங்கிவிட்டப் பிறகும் ஏதோ இன்னொரு படி இருப்பது போல் நினைத்து காலை ஓங்கி 'தம்ம்' என்று தரையில் வைப்போம்.
கட்.

இதுல தரை தான் நான். ஆழம் இருக்கிற இடத்துல மெதுவா கால வெச்சு, ஆழத்தப் பாக்கலாம். ஆழமே இல்லாத இடத்துல கால வெச்சிட்டீங்க. அதத் தான் நான் "ஆழத்தப் பத்தி கொஞ்சம் கூட கவலைப் படாம கால வெச்சிட்டீங்க", இப்போ புரிஞ்சிருக்கும் விளைவு. எனக்கும் தமிழுக்கும் இருக்கிற ஒரே தொடர்பு இந்த ப்ளாகும், நண்பர்கள் மட்டும் தான். மத்த படி நான் வீட்டுல பேசுற மொழி வேர. நாங்க வீட்ல சுந்தர மொழியில பாட்டு இசைச்சிக்கிட்டே இருப்போம். :-)

எங்க அக்கா பிள்ளைங்க வீட்டுல தாய் மொழியோட கொஞ்சம் தமிழ் சேத்தாலே, உடனே நான் அதை திருத்துவேன். அந்த அளவுக்கு எனக்கு தாய் மொழி மேலப் பற்று இருக்கு. தாய் மொழி எழுதப் படிக்க ஓரளவுக்குத் தான் தெரியும். பள்ளியில படிக்கும் போது தமிழ் படித்ததோடு என்னோட தமிழ்க் கல்வி முடிந்தது.

அதுக்கு அப்றொம், வைரமுத்துவோட 'தண்ணீர் தேசம்', 'வில்லோடு வா நிலவு', 'கள்ளிக்காட்டு இதிகாசம்' மற்றும் பலக் கவிதைகள் படிச்சுட்டு, ஓ, தமிழில் இவ்வளவு அழகா எழுத முடியுமா அப்படின்னு ஆச்சரியப்பட்டதுண்டு. அதுக்கு அப்றொம், சுஜாதாவின் 'ஆஹ்', 'அனிதாவின் காதல்கள்' மற்றும் சிலப் பல சிறு கதைகள் படிச்சிருக்கேன். இப்போ எல்லாம் லைப்ரரி போனா, டைரக்டா தமிழ் செக்ஷனுக்கு போயிட்டு, ராஜேஷ் குமார் புத்தகங்கள எடுத்து படிக்கிறது பழக்கமாயிடிச்சு. மேலும், ராமலக்ஷ்மி, நந்து, சர்வேசன், ப்ரியா, பரிசல்காரன், தாமிரா, கார்க்கி இப்படி பலப்பேருடைய தமிழ் பதிவுகளை படிச்சிட்டு சரி தமிழ்ல முயற்சி பண்ணலாம்னு தான் நானும் டமில்ல எழுதிக்கிட்டு இருக்கேன்.

சரி இதுக்கு மேல மொக்கையெல்லாம் வேணாம். விஷயத்துக்கு வருவோம். சில வழக்கொழிந்த தமிழ்ச் சொற்கள்
o வசை - திட்டுதல்
o ஆரம் - மாலை

சரி இப்போ, எல்லோருக்கும் புத்திமதி சொல்லப் போறேன், எல்லோரும் கவனமாக் கேட்டுக்கோங்க.
வெள்ளையாக இருத்தல் அழகு, கருமையாக இருத்தல் அழகின்மை என்று நினைப்பதும், ஆங்கிலத்தில் பேசுவது அறிவு, தமிழில் பேசுவது அறிவின்மை என்று நினைப்பதும் தவறு. வெள்ளை என்பது கருமைப் போல் ஒரு நிறம். இதில் அழகின்மை என்று ஒன்றும் இல்லை. அதேப்போல், ஆங்கிலம் என்பது தமிழைப் போல் ஒரு மொழி. அவ்வளவு தான். இனிமேலாவது 'கொன்ச்சம் கொன்ச்சம் டமில் டெரியும்' அப்படின்னு சொல்லாதீங்க. தாய்க்கும், தாய் மொழிக்கும் நிறைய வித்தியாசங்கள் இல்லை.

அடுத்து நான் வம்புக்கு இழுக்கப் போறது புன்னகை.

18 comments:

Sankar said...

interesting .. one spelling mistake (மூலையில்) . its the second 'la' ..

can't type in tamil from office .. so plz excuse :-)

Truth said...

சங்கர், மாத்திட்டேன், நன்றி

Arasi Raj said...

...அசத்தீட்டீங்க போங்க

இப்போ தான் ஆழத்தோட தீவிரம் புரியுது......நிஜமா பெருமையா இருக்கு..உங்களை நினைச்சும்..தமிழை நினைச்சும்.....

எனக்கும் தமிழுக்கும் சம்பந்தம் இல்லைன்னு சொல்லி ஒதுங்காம தைர்யமா களம் இறங்கினதுக்கு ஆரம், பொன்னாடை ....போதும்ல?


-----
/*****தமிழில் இவ்வளவு அழகா எழுத முடியுமா அப்படின்னு ஆச்சரியப்பட்டதுண்டு/*****

...நீங்க தன் நரசூஸ், ப்ரூ எல்லாம் சேர்த்து கலக்கிட்டு இருக்கீங்களே .. :o)

Arasi Raj said...

சீன் 1 டேக் 2, ஆக்ஷன்...ஏதோ இன்னொரு படி இருப்பது போல் நினைத்து காலை ஓங்கி 'தம்ம்' என்று தரையில்

.யம்மா கால் வலிக்குது.....கதாநாயகி விழுறா.....அங்க இருந்து எட்டி கூட பார்க்காம கதாநாயகன்.....தினமலர் ஆன்லைன்-ல படிச்சுக்கிட்டு..."என்ன ஆச்சு"ன்னு சத்தம் மட்டும்.....தலைல இடியே விழுந்தாலும் இதே response தான்

Arasi Raj said...

/****சரி இப்போ, எல்லோருக்கும் புத்திமதி சொல்லப் போறேன், எல்லோரும் கவனமாக் கேட்டுக்கோங்க. ****/

காமெடி கீமெடி பண்ணலியே

புன்னகை said...

நிலாம்மா பதிவப் படிச்சிட்டு, "பாவம், நம்ம ஊரு புள்ள இப்படி வகை தெரியாம மாட்டிகிச்சே, எப்படி சமாளிக்கப் போதோ"னு உங்களுக்காக அனுதாப அலைகள நான் அள்ளி வீசிட்டு இருக்க, "நான் பலி குடுக்கப் போறதே உன்ன தான்மா!" அப்படின்னு கண்ணுக்குத் தெரியாம வெச்ச "ஆப்பு"க்கு ஒரு பெரிய நன்றி! உங்களுக்காக பாவப்பட்ட நேரத்துக்கு, உருப்படியா ரெண்டு வார்த்தையை யோசிச்சு வெச்சிருந்தா, கொஞ்சம் நல்லா இருந்திருக்கும் போல. இதுக்கு மேல கமெண்ட் போடறதுல நேரத்த விரயம் பண்ண விரும்பல. பதிவப் போட்டுட்டு பேசறேன். ஒன்னே ஒன்னு மட்டும் சொல்லவா??? ரொம்ப நல்லவன் பா நீ! ;-)

ஆதவா said...

இந்த தொடர் பதிவில் நானும் இருந்திருக்கிறேன்... என் வலையில் வழக்கொழிந்த சொற்கள் பதிவு கொடுத்திருக்கிறேன்... (நேரமிருந்தால் படிக்கவும்.)

////முயற்சி பண்ணலாம்னு தான் நானும் டமில்ல எழுதிக்கிட்டு இருக்கேன்.////////

நல்லா எழுதறீங்க.... இருந்தாலும் கொஞ்சம் நிறைய வார்த்தைகளை தேடிப் புடிச்சிருக்கலாம்..

Raich said...

ரொம்ப நல்லா எழுதிருக்கீங்க.
நானும் வேற தாய் மொழிய செர்த்தவளானாலும், தமிழ் மேல ஒரு பற்று ஜாஸ்தி.
இது ஒரு நல்லா ப்லோக், தமிழ்ல சில "வழக்கொழிந்த தமிழ் சொற்கள்" பத்தி தெரிஞ்சிக்க ஒரு நல்லா வைப்பு.
மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!!!

Rajalakshmi Pakkirisamy said...

he he he ...

Truth said...

@Nilavum Ammavum

/* ...அசத்தீட்டீங்க போங்க */
நன்றிங்க :-)

/*காமெடி கீமெடி பண்ணலியே */
அட நீங்க வேர, எனக்கு இதத் தவிர வேர ஒன்னும் தெரியாது. :-)

*************************************

@புன்னகை

நீங்க கலக்குவீங்கன்னு எனக்கு தெரியுங்க :-)

*************************************

@ஆதவா,

/* இந்த தொடர் பதிவில் நானும் இருந்திருக்கிறேன்... என் வலையில் வழக்கொழிந்த சொற்கள் பதிவு கொடுத்திருக்கிறேன்... (நேரமிருந்தால் படிக்கவும்.) */
படிச்சேங்க, இம்புட்டு வார்த்தைகள எழுதியிருகீங்க.

/*நல்லா எழுதறீங்க... */
நன்றி

/*இருந்தாலும் கொஞ்சம் நிறைய வார்த்தைகளை தேடிப் புடிச்சிருக்கலாம்.. */
இதுக்கே நான் பட்டப் பாடு இருக்கே... நண்பர்கள கேட்டுப் பாத்தா தெரியும். :-)

*************************************

@இராஜலெட்சுமி பக்கிரிசாமி

எதுக்குன்னு தெரில, ஆனா சிரிச்சிட்டு போயிருக்கீங்க :-) நன்றி. :-) உங்களுக்கும் கூடிய விரைவில் இந்த வம்பு வரும். எதிர் பாருங்கள்.

Truth said...

@Raich said...

/* ரொம்ப நல்லா எழுதிருக்கீங்க. */
நன்றிங்க. உங்க ப்ளாக் ரொம்ப நாளா அமைதியா இருக்கு. அடிக்கடி எழுதுங்க...

Manu said...

உன் பதிவை படித்த பின் கீழ் கண்ட வாக்கியங்கள் தான் என் மனதில் தோன்றியது. ..

என்ன தவம் செய்தனை???
உம்மை என் நண்பனாய் அடைவதற்கு!!!!

Truth said...

@Mano
நன்றி நண்பா,
"என்ன தவம் செய்தனை" - இது கொஞ்சம் ஃபேமசான டாபிக்க இருக்கு இப்போ.
புன்னகை - http://kanavumeippadavaendum.blogspot.com/2009/02/blog-post_23.html
பரிசல் - http://www.parisalkaaran.com/2009/03/blog-post_03.html

புன்னகை said...

//நீங்க கலக்குவீங்கன்னு எனக்கு தெரியுங்க//
அதனால தானா என்னோட பதிவு போட்டு ரெண்டு நாள் ஆகுது, இன்னும் அந்த பக்கம் வந்து எட்டி கூட பாக்கல நீங்க???

ராமலக்ஷ்மி said...

//எல்லாப் படிகளையும் இறங்கிவிட்டப் பிறகும் ஏதோ இன்னொரு படி இருப்பது போல் நினைத்து காலை ஓங்கி 'தம்ம்' என்று தரையில் வைப்போம்.//

//வெள்ளையாக இருத்தல் அழகு, கருமையாக இருத்தல் அழகின்மை என்று நினைப்பதும், ஆங்கிலத்தில் பேசுவது அறிவு, தமிழில் பேசுவது அறிவின்மை என்று நினைப்பதும் தவறு.//
இரண்டு வழக்கொழிந்த சொற்களைத் தந்து விட்டு
இரண்டு வழங்கங்களைப் பற்றியும் ஆராய்ந்த விதம்
அருமை.//

//தாய்க்கும், தாய் மொழிக்கும் நிறைய வித்தியாசங்கள் இல்லை.//

அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

தமிழ் மேல் உள்ள ஈர்ப்பால் அதைக் கற்று இன்பம் பெற்று.. எங்களுக்கும் படைக்க வந்த நீங்கள் பாராட்டுக்குரியவர்.

Truth said...

@புன்னகை
/*அதனால தானா என்னோட பதிவு போட்டு ரெண்டு நாள் ஆகுது, இன்னும் அந்த பக்கம் வந்து எட்டி கூட பாக்கல நீங்க??? */
நான் எப்பவோ படிச்சிட்டேங்க. கமெண்ட தான் டைம் இல்ல. :-)

Truth said...

@ராமலக்ஷ்மி said...
// இரண்டு வழக்கொழிந்த சொற்களைத் தந்து விட்டு இரண்டு வழங்கங்களைப் பற்றியும் ஆராய்ந்த விதம்
அருமை.//

நன்றி ராமலக்ஷ்மி

******************************************

/*//தாய்க்கும், தாய் மொழிக்கும் நிறைய வித்தியாசங்கள் இல்லை.//
அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
தமிழ் மேல் உள்ள ஈர்ப்பால் அதைக் கற்று இன்பம் பெற்று.. எங்களுக்கும் படைக்க வந்த நீங்கள் பாராட்டுக்குரியவர். */

எல்லாம் உங்களுடைய, மற்றும் மூத்த பதிவர்களோட பதிவுகள படிச்சதால தாங்க. உங்க எல்லோருக்கும் நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கேன். நன்றி. :-)

குடந்தை அன்புமணி said...

என் வலையில் வழக்கொழிந்த சொற்கள் பதிவு கொடுத்திருக்கிறேன்.வருக... namadukural.blogspot.com