Sunday, February 22, 2009

தெய்வீகமான வார்த்தை

வணக்கம்.

வாரக் கடைசியில், எப்போதாவது நான் கோவிலுக்கு போற பழக்கமுண்டு. பாதி பேருக்கு எதுக்குன்னு தெரிஞ்சிருக்கும். அய்யோ, அதுக்கு இல்லேங்க, நீங்க வேற! நல்ல சாப்பாடு கிடைக்கும். அதுக்கு தான். ஆனா இன்னைக்கு உண்மையாவே சாமி கும்பிடத் தான் போனேன். என்னோட ரூம் மேட் வெங்கியும் கூட வந்தான்.

சாமி எல்லாம் கும்பிடிட்டு, சாப்பாடு போடுற இடத்துக்கு போகும் போது, சாப்பாடு எங்களுக்கு கிடைக்கல. சீக்கிரமாத் தான் போனோம். ஆனாலும் காலி ஆயிடிச்சு. சரி பரவாயில்லன்னு, நானும் வெங்கியும் சம்பிரதாயப்படி கொஞ்சம் நேரம் உக்காந்துகிட்டு கிளம்பலாம்ன்னு முடிவு பண்ணிட்டு கிளம்பினோம். எனக்கு செம்ம பசி.

நான் - டேய் வெங்கி, எனக்கு செம்ம பசி. சென்னை தோசா போய் சாப்பிடலாமா?
வெங்கி - டேஸ்டு ஆஃப் இந்தியால சாப்பிடலாம். நல்லா இருக்கும்.
நான் - ஓ, நான் அங்க சாப்பிட்டதில்ல. நல்லா இருக்கும்னா போகலாம்.
வெங்கி - நான் பல முறை சாப்டிருக்கேன்.
நான் - சரி அங்க டெபிட் கார்டு அக்செப்ட் பண்ணுவாங்கலா?
வெங்கி - பத்து பவுண்டுக்கு மேல சாப்டா அக்செப்ட் பண்ணுவாங்க.
நான் - பத்து பவுண்டா? டேய், ஒரு சிக்கன் பிரியாணி மிஞ்சிப் போனா நாலு பவுண்டு தானே. எனக்கு தெரிஞ்சி இத விட காஸ்ட்லியா ஒன்னும் கிடைக்காது.
வெங்கி - பாத்துகலாம் வாடா.
நான் - சொல்றத கேளு. பக்கதுல எ.டி.எம் இருக்கு. ஒரு பத்து பவுண்டு கைல வெச்சிக்கிலாம். பத்து பவுண்டுக்கு கீழ பில் வந்தா கேஷ் தரலாம். மேல வந்தா கார்டுல தேச்சிடலாம்.
வெங்கி - பாத்துக்கலாம் வாடா. இன்னைக்கு என்னோட ட்ரீட்.
நான் - ஓ அப்படின்னா தைரியமா போலாம்.

பத்து பவுண்டுக்கு மேல சாப்பிடவே முடியாது அப்படிங்கிற ஒரு மைண்ட் செட்ட, "ட்ரீட்" அப்படிங்கிற ஒரு தெய்வீகமான வார்த்தை எப்படியெல்லாம் மாத்திடுது பாத்தீங்களா? நாங்க சாப்பிட்ட பில் அமௌண்டு - 25 பவுண்டு. எல்லாம் ட்ரீட் பண்ணுற வேலை தான். நீங்க உடனே வெங்கி மேல பாச அலைகள்ல வீச வேண்டாம். இதுல பல முறை நானும் மாட்டி, சிக்கிச் சிதறி, சீரழிஞ்சி சின்ன பின்னமாயிருக்கேன். நீங்களும் தானே?

பி.கு.1. இன்னைக்கு (22-Feb-2009) வெங்கியோட பிறந்த நாள். அதுக்கு தான் ட்ரீட். இத மதியம் சாப்பிட போறதுக்கு முன்னாடி தான் சொன்னான். பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் டா வெங்கி.
பி.கு.2. 22-Feb-2009 அன்னைக்கு பிறந்த நாள் கொண்டாடுற 'அனைவருக்கும்' என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

17 comments:

HS said...

உங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/ சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்

கேள்வி. நெட்

Raich said...

Mmmm,appadi iniku kovilukum poyaachu, saaptitum vanthaachu.
But enna deal la vituteenga. Anyways, convey my wishes to Venki

Nilavum Ammavum said...

ஆஸ்கர் பற்றி பதிவு போட்ருக்கேன்.....வந்து சந்தோஷத்தை பகிர்ந்துக்கோங்க

புன்னகை said...

//இதுல பல முறை நானும் மாட்டி, சிக்கிச் சிதறி, சீரழிஞ்சி சின்ன பின்னமாயிருக்கேன்.//
உங்க செர்டிபிகேஷன் ட்ரீட் தானே??? ஹி ஹி ஹி ;-)
//பி.கு.2. 22-Feb-2009 அன்னைக்கு பிறந்த நாள் கொண்டாடுற 'அனைவருக்கும்' என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.//
இதுல "3rd meaning" ஏதும் இருக்கா என்ன??? :-)
சென்னை வருகை எப்போ? நிறைய "ட்ரீட்" பாக்கி இருக்கு? ;-)

வித்யா said...

ஹா ஹா. அடுத்தவன் ட்ரீட் கொடுத்தா எவ்வளவு சாப்பிட்டாலும் தப்பில்லைன்னு ட்ரீட் வாங்குவோர் சங்கத் தலைவர் சொல்லிருக்கார்:)

Truth said...

@Raich,
//But enna deal la vituteenga.

நீ எங்க பயங்கர பிசி. என்ன பண்றது. :-)

***************

@நிலாம்மா,

//ஆஸ்கர் பற்றி பதிவு போட்ருக்கேன்.....வந்து சந்தோஷத்தை பகிர்ந்துக்கோங்க

பாத்தேங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு, கொஞ்சம் பெருமையாவும் இருக்கு :-)

***************

@புன்னகை.
//உங்க செர்டிபிகேஷன் ட்ரீட் தானே??? ஹி ஹி ஹி ;-)
ஆமா ஆமா :-)

***************

@வித்யா
//அடுத்தவன் ட்ரீட் கொடுத்தா எவ்வளவு சாப்பிட்டாலும் தப்பில்லைன்னு ட்ரீட் வாங்குவோர் சங்கத் தலைவர் சொல்லிருக்கார்:)

இதுக்கெல்லாமாயா சங்கம் வெச்சிருகாய்ங்க?

Manu said...
This comment has been removed by the author.
Truth said...

@Mano,

நான் சிக்கிச் சின்னாபின்னமானது பொதுவா நான் தர்ற ட்ரீட்ல.

புன்னகை said...

ஒரு விஷயம் சொல்லுங்களேன் ப்ளீஸ். எப்படி பால் போட்டாலும் சிக்ஸர் அடிக்கிறீங்களே, அது எப்படி கிரண்??? ;-)

Nilavum Ammavum said...

சண்டை கோழியில் உங்களுக்கு ஒரு வம்பு காத்துட்டு இருக்கு

thevanmayam said...

பத்து பவுண்டுக்கு மேல சாப்பிடவே முடியாது அப்படிங்கிற ஒரு மைண்ட் செட்ட, "ட்ரீட்" அப்படிங்கிற ஒரு தெய்வீகமான வார்த்தை எப்படியெல்லாம் மாத்திடுது பாத்தீங்களா? நாங்க சாப்பிட்ட பில் அமௌண்டு - 25 பவுண்டு. எல்லாம் ட்ரீட் பண்ணுற வேலை தான். நீங்க உடனே வெங்கி மேல பாச அலைகள்ல வீச வேண்டாம். இதுல பல முறை நானும் மாட்டி, சிக்கிச் சிதறி, சீரழிஞ்சி சின்ன பின்னமாயிருக்கேன். நீங்களும் தானே?
///
காலேஜ் டைமில் உண்டு!!!

thevanmayam said...

வாரக் கடைசியில், எப்போதாவது நான் கோவிலுக்கு போற பழக்கமுண்டு. பாதி பேருக்கு எதுக்குன்னு தெரிஞ்சிருக்கும். அய்யோ, அதுக்கு இல்லேங்க, நீங்க வேற! நல்ல சாப்பாடு கிடைக்கும்.///

நாங்க நம்புறோம்!!

thevanmayam said...
This comment has been removed by the author.
thevanmayam said...

10 சரிதான் 25 ஓவர்தான்!
பூந்து விளையாடீடீங்களா?

Truth said...

//புன்னகை said...
ஒரு விஷயம் சொல்லுங்களேன் ப்ளீஸ். எப்படி பால் போட்டாலும் சிக்ஸர் அடிக்கிறீங்களே, அது எப்படி கிரண்??? ;-)
எங்களுக்கு எல்லாம் சிக்ஸர் மட்டுன் தாங்க அடிக்கத் தெரியும்

Truth said...

//Nilavum Ammavum said...
சண்டை கோழியில் உங்களுக்கு ஒரு வம்பு காத்துட்டு இருக்கு
'நானா எந்த வம்புக்கும் போக மாட்டேன். ஆனா தானா வர்ற எந்த வம்பும் விட்டுட்டுப் போக மாட்டேன்' இப்படியெல்லாம் பன்ச் டயலாக் தாங்க அடிக்கத் தெரியும் எனக்கு. சரி கோதால குதிக்கிறேன். கூடிய சீக்கிரம் ஒரு பதிவு போடறேன் :-)

Truth said...

//thevanmayam said...
10 சரிதான் 25 ஓவர்தான்!
பூந்து விளையாடீடீங்களா?

பின்ன :-)