Saturday, February 14, 2009

காதலர் தின வாழ்த்துக்கள்

வணக்கம்.

இன்னைக்கு நான் ஒரு செய்திய படிச்சேன்.

ஆல்ஃபீ பேட்டன் அப்படின்னு ஒரு சின்னப் பயலுக்கு வயசு 13. இந்த ஆல்ஃபீக்கு ஒரு வருஷத்துக்கு முன்னாடி சின்ன சின்ன ஆசை ஒன்னு வந்திருக்கு. சின்னப் பயலுக்கு சின்ன ஆசை தானே வரும். அதான் வந்திருக்கு. ஆக அவனுக்கு 12 வயசு இருக்கும் போது அந்த ஆசை வந்திருக்கு. அந்த சின்ன ஆசை என்னான்னா, "I thought it would be good to have a baby". இது அந்த 12 வயசு பையன் சொன்னது.

இப்போ பிரட்டன்ல இவனும் ஒரு அப்பா. அவங்கிட்ட பேட்டி எடுத்திருக்காங்க. கேட்ட கேள்விகள்ல ஒன்னு - "உன்னுடைய குழந்தைய வளக்கிறதுக்கு ஃபினான்ஷியல் ப்ளான்ஸ் ஏதாவது வெச்சிருக்கியா?" அப்படின்னு கேட்டதுக்கு, அவன் "ஃபினான்ஷியல்-ன்னா என்ன" அப்படின்னு கேட்டிருக்கான். அப்றொம "காசுக்கு என்னடா பண்ண போறே?" அப்படின்னு தெளிவா கேட்டதுக்கு, "தெரில, அப்பா தான் உதவி பண்ணனும்" அப்படின்னு சொல்லியிருக்கான்.

சின்னத்தம்பி படத்துல, பிரபு சொல்லுவாரே, "கல்யாணம்னா, பீ பீ ஊதுவாங்க, டும் டும் கொட்டுவாங்க, சாப்பாடு போடுவாங்க, முதல் ராத்திரி நடக்கும், அப்றொம் குழந்தை எல்லாம் பெத்துக்குவாங்க". இத்தனையும் தெரியும் ஆனா 'தாலி' அப்படின்னா மட்டும் என்னான்னு தெரியாது.

நம்ம ஆல்ஃபீ பேட்டனுக்கு 12 வயசுல குழந்தை பெத்துக்க தெரியும், ஆனா இன்னைய வரைக்கு ஃபினான்ஸ்ன்னா என்னான்னு தெரியல.

கீழ பாருங்க. அண்ணன்-தம்பி இல்லேங்கோ, அப்பா-புள்ள


சரி இது போல சில பல வருஷங்களுக்கு முன்னாடி நம்ம தமிழ் நாட்டுல கூட நடந்ததா கேள்விப்பட்டிருக்கேன்.

காதலர் தினத்தன்று ஒழுங்கா இல்லேன்னா, குழந்தைகள் தினம் கொண்டாட வேண்டி வரும்னு மொக்கைத் தனமான ஜோக்ஸ் எல்லாம் இப்போ குழந்தைகள் தினத்தை கொண்டாட வேண்டிய குழந்தைங்க எஸ்.எம்.எஸ் அனுப்பிக்கிட்டு இருக்கானுவோ.

சரி என்ன தான் டா சொல்ல வரேன்னு கேக்றீங்களா?
ஒன்னும் இல்லேங்கோ, 'காதலர் தின நல்வாழ்த்துக்கள்' அவ்ளோ தான்.
சந்தோஷமா, புனிதமா கொண்டாடுங்கோ. கேடு கெட்ட சேனாக்கள் தொந்தரவு செய்யும்ன்னு நினைச்சா நம்ம நண்பர்களோட ஐடியாக்கள்ல ஒரு முறை படிச்சிட்டு போங்க
- Valentines Day - முதலியிடமிருந்து காதலர்கள் தப்பிக்க வழி!
- காதலர் தினம் - கலாச்சாரக் காவலர்களை சமாளிக்க சில டிப்ஸ்!


பி.கு - லண்டன்ல மீதி இருக்கிற மிச்சமும் சொச்சமும் சேர்ந்து ஒரு காதலர் தின பார்ட்டி நடத்துறாங்களாம். தேவைப் பட்டால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனியா கூட நடத்துறாங்களாம். இந்துக்களுக்கு தனியா, முஸ்லிம்களுக்கு தனியாக் கூட நடத்துவதாக கேள்விப் பட்டேன். கண்டிப்பா விவகாரமாத் தான் இருக்கும் போல.
ஏதோ நேர்ல பாத்த மாதிரியே சொல்றியேன்னு கரெக்டா தப்பா நினைக்காதீங்க. எல்லாமே செய்தித்தாள்ல படிச்சதுதான்.

8 comments:

கார்க்கிபவா said...

வாழ்த்துகள்..

Truth said...

நன்றி கார்க்கி. நீங்க சேனா கிட்ட மாட்டிக்கலயா? ;-)

Sankar said...

பல நாடுகளோட தலைவர்களுக்கே ஃபைனான்ஸ் பத்தி தெரியமாட்டேங்குது. ஆல்ஃபீ பேட்டன் தெரியலேன்னா என்ன இப்போ. குழந்தைக்கு சின்னச் சின்ன ஆசை இருக்கலாம். இப்படி சின்னக் குழந்தையே வேணும்னு விவகாரமான ஆசை இருக்கலாமா. புள்ளையை வளர்த்த அப்பா வாழ்க.

Arasi Raj said...

அட இப்போ தாங்க செய்தி பார்த்தேன் டீவி-ல.... என்ன கொடுமை சார் இது

Truth said...

@சங்கர்.
இத பாத்துட்ட பிறகு நம்மல நினைச்சா, பெருமையா இருக்கு. :-)
ஒருவன் - இத எங்க வீட்ல சொன்னா, எங்க அம்மா திட்டினாங்க.
இன்னொருத்தன் - என்னது திட்டினாங்களா? எங்க அம்மாவா இருந்தா பாடையே கட்டியிருப்பாங்க.
இந்த டயலாக் நினைவு இருக்கா :-)
இருக்கும் கண்டிப்பா :-)

Truth said...

@நிலாம்மா,
ஓஹ் நம்ம டி.வி வரைக்கும் இது ஃபேமஸ் ஆயிடிச்சா? :-)
//என்ன கொடுமை சார் இது
நாம தான் இத கொடுமைன்னு சொல்றோம். அவனுங்க குரூப் ஃபோட்டோக்கு போஸ் தந்துகிட்டு பேட்டியெல்லாம் தர்றாங்களே :-)

Arasi Raj said...

டீவீ -ன்னா நம்ம ஊர்ல இல்லேங்க.....அமெரிக்கால

ஐயோ நம்ம ஊர்ல தயவு செஞ்சு காட்ட வேண்டாம்னு சொல்லுங்க...நம்ம அக்கா பசங்க, அண்ணா பசங்க எல்லாம் பார்க்கவே கூடாது...

மேலை நாட்டு நாகரிக பைத்தியம் புடிச்சு அலையும் தமிழர்களுக்கு கண்டிப்பா தெரிய கூடாது

Truth said...

Nilavum Ammavum said...
//டீவீ -ன்னா நம்ம ஊர்ல இல்லேங்க..... அமெரிக்கால
ஓ ஒகே ஒகே... நான் உங்க profile-a பாக்கலே