Wednesday, February 11, 2009

கண்ட நாள் முதலாய்...

வணக்கம்.

ஒன்னும் பெருசா இல்லங்க. எனக்குள்ள ஒரு நல்ல (?) பழக்கம் என்னன்னா, எனக்கு ஒன்னு புடிச்சுப்போச்சுனா, அத நான் எங்கயாச்சும் உபயோகிக்கணும். உதாரணத்துக்கு, நான் காலேஜ் படிக்கும் போது ஏதோ ஒன்ன ஆங்கிலத்துல கிறுக்கும் போது, "This" அப்டிங்கற ஒரு வார்த்தைய நல்ல அழகா எழுதித் தொலைச்சிட்டேன். அதை எங்கயாச்சும் உபயோகிக்கணும்னு முடிவும் பண்ணினேன். அது வரைக்கும் என்னோட பெயர அழகா எழுதி அது தான் என்னோட கையொப்பம்னு இருந்த நான் "This"கு பின்னாடி ஒரு மேடு ஒரு பள்ளத்த சேர்த்து, என்னோட கையொப்பத்த மாத்தினேன். இன்னைய வரைக்கும் என்னோட கையொப்பம் This + மேடு + பள்ளம் தான். உற்று கவனிச்சா அதுல ஒரு This நல்லாவேத் தெரியும்.

சரி, இப்போ விஷயத்துக்கு வருவோம். "கண்ட நாள் முதலாய்" பாட்ட நான் பல முறை கேட்டிருக்கேன். ஆனா, என்னமோ தெரியல, ரெண்டு வாரத்துக்கு முன்னாடி அந்தப் பாட்டக் கேட்டு, "ச்ச என்னமோ இருக்கு" அப்படின்னு நெனச்சேன். விளைவு, அத நான் இப்போ எங்கயாச்சும் உபயோகிச்சே ஆகணும். நண்பர் பரிசல் போன பதிவுக்கு கமெண்டும் போது "Me and My Notepad" க்கு பதிலா தமிழ்ல இருந்தா நல்லா இருக்கும்னு சொன்னாரு. பாட்டு சிக்கிடுச்சு! பேரும் மாறிடுச்சு!

7 comments:

புன்னகை said...

"கண்ட நாள் முதலாய்"
அழகா இருக்கு இந்தத் தலைப்பு. நீங்களும் இலை மறைக் காயாக சொல்லாம சொல்றீங்க! எத்தனைப் பேருக்கு புரியுதோ இல்லையோ, எனக்குப் புரிஞ்சுப் போச்சுப்பா! :)

Manu said...
This comment has been removed by the author.
Truth said...

@புன்னகை,
நல்ல விஷயம் தானே. தெரிஞ்சா, எனக்கு மட்டும் தனியா சொல்லுங்க :-)

Truth said...

@Manu,
நீங்க ஒன்னும் 3rd மீனிங்க்ல கேக்கலியே!
சரி சொல்றேன். நல்லா கேட்டுக்கோங்க.
கோவில்ல நாம கீழ விழுந்து சாஷ்டாங்கமா கும்பிடுறோம்ல, அங்க பல பேரு முட்டி போட்டுத் தான் கும்பிடுவாங்க. ஆனா அது தப்பு. நம்மல முழுசா கடவுளுக்குத் அற்பனிக்கிறோம் அப்படிங்கிறத எடுத்துக்காட்டாத் தான் நாம கீழ விழறோம். அப்படி கீழ விழுந்து கும்பிடும்போது, நான் என்னோட முழு உடம்பையும் பயன் படுத்தறேன்.

உங்கள கூடிய விரைவில் நேருல பாக்கப்போறத மறந்திடப்படாது.

Rajalakshmi Pakkirisamy said...

எப்படியோ .... உங்க நல்ல (?) பழக்கத்தால ஒரு நல்ல பேரு கிடைச்சிடுச்சு ....

//@Manu,
நீங்க ஒன்னும் 3rd மீனிங்க்ல கேக்கலியே!
சரி சொல்றேன். நல்லா கேட்டுக்கோங்க.
கோவில்ல நாம கீழ விழுந்து சாஷ்டாங்கமா கும்பிடுறோம்ல, அங்க பல பேரு முட்டி போட்டுத் தான் கும்பிடுவாங்க. ஆனா அது தப்பு. நம்மல முழுசா கடவுளுக்குத் அற்பனிக்கிறோம் அப்படிங்கிறத எடுத்துக்காட்டாத் தான் நாம கீழ விழறோம். அப்படி கீழ விழுந்து கும்பிடும்போது, நான் என்னோட முழு உடம்பையும் பயன் படுத்தறேன்.//

எப்படிங்க ..... முடியல ..........................

Truth said...

@ராஜி,
//எப்படியோ .... உங்க நல்ல (?) பழக்கத்தால ஒரு நல்ல பேரு கிடைச்சிடுச்சு ....
நன்றி :-)

//எப்படிங்க .....
தானா வருது. நிறுத்த முடியல :-)

//முடியல
என்னாலயும் தான் :-)

Anonymous said...

Nice name.
As Punnagai said, even enakkum purinju pochu.
Congrats