Thursday, November 20, 2008

Try - இதை அகராதியிலிருந்து விலக்கிடுங்க

வணக்கம்.

சில நாட்களுக்கு முன்பு படித்தது. யார் சொன்னாங்கனு சரியாத் தெரியல, ஆனா படிக்க நல்லா இருந்தது. என்ன சொல்லியிருக்காங்கனா, "Try" என்கிற வார்த்தையை அகராதியிலிருந்து விலக்கிவிடுவது நல்லதுனு சொல்லியிருக்காங்க. சரி அப்படி என்ன தான் அந்த வார்த்தைல பிரச்சனைனு பாக்கலாம்.

Try என்ற சொல் நம்முடைய மூளைக்கு வெற்றிய மறைச்சு, தோல்விக்கான வழிய காட்டுதாம். என்னடா சிறுபிள்ளைத்தனமாக இருக்குனு நீங்க நினைக்கிற மாதிரி தாங்க நானும் நினைச்சேன். மேல படிச்சாத்தான் இது கூட ஒரு விதத்துல சரீன்னு பட்டுது. ஒரு உதாரணத்தோட விளக்கியிருக்காங்க.

ஒரு குழந்தைக் கிட்ட ஒரு பென்சில் தந்து, "Try dropping this pencil" அப்படீன்னு சொல்றதா வெச்சிக்குவோம். அந்தக் குழந்தை என்ன பண்ணும்? பென்சிலக் கீழ போடும். அந்தக் குழந்தைக் கிட்ட மறுபடியும் போய் "நான் உன்கிட்ட பென்சிலக் கீழ போட சொன்னேனா? பென்சிலக் கீழ போட 'Try' பண்ணுனு தானே சொன்னேன்" அப்படீன்னு சொன்னா, அந்தக் குழந்தை என்ன பண்ணும்? பென்சிலக் கீழ போடாம, பென்சிலோட ஒரு முனையப் புடிச்சிக்கிட்டு கீழ போட்ற மாதிரி பாவனை பண்ணும். ஆனா பென்சிலக் கீழ போடாது.

ஆக, ஒரு வேலைய செய்ய Try பண்ணுனு சொல்லும் போது, நாம் நமது முளைக்கு அந்த வேலையைச் செய்யாதேன்னு தான் சொல்றோம். இது கிட்டத்தட்ட வெற்றியை மறைத்துத் தோல்வியைத் தான் முன்னிறுத்துது. அதனால தான் Try என்கிற வார்த்தையை அகராதில இருந்து விலக்கச் சொல்றாங்க.

யாராவது அவங்க வீட்டுக்கு உங்களக் கூப்பிட்டா, "I will come" இல்ல "I will not come" அப்படீன்னு தெளிவாச் சொல்லனுமாம். மாறாக "I will try to come" அப்படீன்னு சொன்னா, நாம கண்டிப்பா போகமாட்டோமாம். அதேபோல, உங்கக்கிட்ட இந்த வேலைய முடீன்னு சொன்னா, ஒன்னு, "Yes, I will do it" அப்படீன்னு சொல்லணும், முடியலேன்னா, "No, I cant do it", அப்படீன்னு சொல்லணுமாம். அப்படிச் சொல்லாம, "I will try to do it" அப்படீன்னு சொல்லக்கூடாதுனு சொல்லியிருக்காங்க. என்ன சரிதானே?

உங்கக் கருத்துக்களைக் கமெண்டுங்க.

பி.கு: இதைக் கூறியவர் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அப்படீன்னும் இருந்திச்சு. இது உண்மையான்னு தெரியல.

11 comments:

ராமலக்ஷ்மி said...

’முயற்சி’க்கு புது விளக்கமாயிருக்கிறதே? சரி விவரம் தெரிந்தவர்கள் என்ன கமெண்டுராங்கன்னு நானும் காத்திருக்கிறேன் உங்களோடு.

Truth said...

@ராமலக்ஷ்மி,
//’முயற்சி’க்கு புது விளக்கமாயிருக்கிறதே? சரி விவரம் தெரிந்தவர்கள் என்ன கமெண்டுராங்கன்னு நானும் காத்திருக்கிறேன் உங்களோடு.



உங்காளுக்கு வந்த அதே சந்தேகம் தான் எனக்கும் இருந்தது. அப்றொம், 'முயற்சி'க்கு ஆங்கிலத்துல hardwork வருமா இல்ல try தான் வருமா அப்டீன்னு ஒரு சந்தேகம் இப்போ :)

Anonymous said...

:) Nalla karuthu!

Aana, "Muyatrinmai inmai payathuvidum" nu dhaan eh namma Valluvar solli irukkaru? "Try" koodadhu na, there shud be an alternate equivalent in English for "muyarchi" la? Adhu enna nu sonna, rombavey prayojanama irukkum!

நிலா said...

i will try to follow this :)

ராமலக்ஷ்மி said...

//அப்றொம், 'முயற்சி'க்கு ஆங்கிலத்துல hardwork வருமா இல்ல try தான் வருமா அப்டீன்னு ஒரு சந்தேகம் இப்போ :)//

ஹிஹி உங்க வீட்டுக்கு வர கடினமா உழைக்கிறேன்னு சொல்ல மாட்டோம்தானே:)!

ஆனா ஒரு வேலையை முடிக்க, சரி கடினமா உழைக்கிறேன்னு சொல்லுவோம்தான் :(!

குழம்புதே சாமி!

Maduraikkarathambi said...

ohum! Mudiyale!!! sss appa!!! Kanna kattudhe!!!!

Anonymous said...

hai friends... this post is a meaning full one. The word TRY , has its own meaning when its used in situations. but, in psychology point of view the word "try" is use for "EXCUSE MECHANISM" .when, people says " i will try" means they wont do it,positively. so,those who has got an positive attitude please don't use the word try. " TRY NOT TO USE IT again" he eh eh.........

யோசிப்பவர் said...

A Quote from the film "The Matrix"
Morpheus: Stop trying to hit me and hit me!

Truth said...

@யோசிப்பவரே...
சரியா புரிஞ்சிக்கிட்டீங்க. try ன்னு சொல்லும்போதே, நாம ஏதோ அப்பீட்டு ஆறமாதிரி தான் தோனுது.

Vasanth said...

'Try' is giving an attempt..putting an effort which might result either positively or negatively...
But kaala pokkula namma makkal adhai negative visayangalukaaga matum use panna aarambichutaanga... :)

வால்பையன் said...

அருமை!