Thursday, October 30, 2008

டார்வின் தியரியும், விருதும்.

டார்வின் தியரி பற்றி நாம் ஏற்கனவே படித்திருக்கிறோம் என்று நான் சொல்கிற வேளையில், "ஆமா, அப்படி ஏதோ படிச்சியிருக்கோம், ஆனா இப்போ ஞாபகத்துல இல்ல" என்று நீங்கள் சொல்வதில் தப்பொன்றும் இல்லை. ஆறாவது படிக்கும் போது, பத்து மார்க் கேள்விக்காக தலைகீழாக படித்து மறந்தவைகளுள் இதுவும் ஒன்று.

டார்வின் தியரி - சில வரிகளில்.
பழமாகட்டும், பறவையாகட்டும், மலராகட்டும், மங்கையாகட்டும், அவை அனைத்திற்க்கும், முந்தாதையர் ஒன்று தான் என்பது தான் டார்வின் தியரி. பரிணாம வளர்ச்சியை பற்றி விளக்குகிறது. மேலும் படிக்க இங்கே செல்லவும்.

டார்வின் தியரி சரி, டார்வின் விருது என்று ஒன்று இருக்கிறது தெரியுமா?. டார்வின் தியரி பரிணாம வளர்ச்சியைப் பற்றிக் கூறும்போது, டார்வின் விருது, எதற்க்காக வழங்கப்படுகிறது என்று தெரியுமா?

புதிதாக ஏதேனும் கண்டுப்பிடிப்பவர்களுக்கு அல்ல. மிக முட்டாள்த்தனமாக அல்லது விசித்திரமாக இறந்துப் போகிறவர்களுக்கு. ஆக, டார்வின் விருது பெற முதல் தகுதி - இறந்துப்போவது. இரண்டாவது, முட்டாள்த்தனமாக அல்லது யாரும் யூகிக்க முடியாத அளவுக்கு விசித்திரமாக இறப்பது.

இந்த விருதை பெறவேண்டும் என்று யாரும் முயற்சிப்பதில்லை என்பது நல்ல விஷயம் என்றாலும், சிலரது தற்கொலை முயற்சிகளும், இன்ன பிற விஷயங்கள் கேளிக்கையாகவும், விசித்திரமாகவும் இருக்கிறது. இவர்களுக்கு டார்வின் விருதும் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சம்பவமும் டார்வின் விருதுக்கு தகுதி வாய்ந்ததா என்று தீர்மானிப்பதற்க்காக, ஒரு தனிக்குழுவும் உள்ளது.

சில நாட்களுக்கு முன்னால், இதைப்பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள நான் இணையதளத்தை நோண்டிய போது சில சுவாரஸ்யமான விஷயங்கள் கிடைத்தது. இவர்களுக்கு டார்வின் விருதும் கிடைத்தது. படித்தவைகளுள் ஹாலிவுட் வகையில் யூகிக்கமுடியாத சம்பவம் இதோ.

23-மார்ச்-1994
ரொனால்டு ஓபஸ் என்பவர் தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார் என்று மருத்துவ பரிசோதனை சொல்கிறது. ஆனால் இது தற்கொலை என்று முடிவு செய்து கேஸ் ஃபைலை மூடியது காவல் துறை. நடந்தது என்ன? இதோ...

வாழ்க்கையை வெறுத்த ஓபஸ் தற்கொலை செய்துக்கொள்ள தனது வீட்டின் பத்தாவது மாடியில் இருந்து கீழே குதித்தார். கீழே குதிக்கும் போது ஒன்பதாவது மாடியில் இருந்து வந்த துப்பாக்கிக்குண்டு ஓபஸின் தலையை பதம் பார்க்க, தலை சிதறியது. மொட்டை மாடியில் வேலை செய்பவர்கள் தவறி விழுந்தால் காப்பாற்றுவதற்க்காக எட்டாவது மாடியில் கட்டியுள்ள வலையில் ஓபஸ் விழுந்தார். ஆக, தான் நினைத்த படி தற்கொலை செய்யவில்லை.

இது கொலையாக இருக்குமோ என்ற ஐயத்துடன், காவல்துறை ஒன்பதாவது மாடியில் வசிக்கும் தம்பதியரிடம் தன் விசாரணையை தொடர்ந்தது. தம்பதியர் தமக்குள் நடந்த சண்டையில், கணவன் துப்பாக்கியால் மனைவியை சுட, அது தவறி, ஜன்னலின் வழியாக ஓபஸின் தலையை தட்டியது. ஆனால், சட்டப்படி, ஒருவன் 'அ'வை கொலை செய்யும் நோக்கத்தில் 'ஆ'வை தவறுதலாக கொலை செய்தாலும், 'ஆ'வை கொன்றது குற்றமே என்று கூறி, கணவனை கைது செய்ய காவல்துறை முனைந்தது. அதற்கு மறுப்பு தெரிவித்த கணவர் தன்னுடைய துப்பாக்கியில் தான் தோட்டாக்களை போடவில்லை என்றும், தனக்கும், தன் மனைவிக்கும், அடிக்கடி சண்டை வருமென்றும், அதனால் வெத்துத் துப்பாக்கியால் தன் மனைவியை மிரட்டுவதும் சகஜம் என்றும் கூறினார்.

இதை மேலும் விசாரித்த போது, துப்பாக்கியில் தோட்டாக்களை போட்டது தம்பதியினரின் மகனென்று தெரிய வந்தது. தாய் தன்னுடைய மகனுக்கு பணம் தருவதை நிறுத்தியதில் கோபமடைந்த மகன் தாயை கொலை செய்ய முடிவெடுத்திறுக்கிறான். தன் தந்தைக்கும், தாய்க்கும் அடிக்கடி சண்டை வருவதையும், தன் தந்தை வெத்துத் துப்பாக்கியால், தன் தாயை மிரட்டுவதும் தெரிந்துக்கொண்டு, ஆறு வாரங்களுக்கு முன்பு துப்பாக்கியில் தோட்டாக்களை நிரப்பியிருக்கிறான். ஆக இந்த மகன் தான் ஓபஸ் கொலையில் குற்றாவாளி என்று காவல்துறை முடிவெடுத்தது.

திரைக்கதையில் "ட்விஸ்டு" என்பார்களே அது இனி தான். தம்பதியினரின் மகன் தான் ஓபஸ் என்றும், தன் தாயை கொலை செய்ய பல வழிகள் கையாண்டும் வெற்றி பெறவில்லை என்ற வருத்ததில் தற்கொலைக்கு முயற்ச்சித்த போது, தன்னால் தோட்டாக்களை நிறப்பப்பட்ட துப்பாக்கியால் இறந்ததால் இது தற்கொலை என்று கூறி கேஸை க்ளோஸ் செய்தது காவல்துறை.

ஓபஸ்சுக்கு டார்வின் விருது வழங்கியது சரியான முடிவு தானே?

35 comments:

ராமலக்ஷ்மி said...

டார்வின் தியரியை விளக்கிய விதத்தில்
//பழமாகட்டும், பறவையாகட்டும், மலராகட்டும், மங்கையாகட்டும், அவை அனைத்திற்க்கும், முந்தாதையர் ஒன்று தான்//
உங்க எழுத்து கவி பாடுது.

டார்வின் விருது பற்றிய விளக்கத்திலோ உங்க எழுத்து வீறுநடை போடுகிறது.

இயல்பான நகைச்சுவையும் ஆங்காங்கே வீடு கட்டி விளையாடுகிறது.
//இந்த விருதை பெறவேண்டும் என்று யாரும் முயற்சிப்பதில்லை என்பது நல்ல விஷயம்//

சபாஷ் ட்ரூத். வாழ்த்துக்கள்!

Raji said...

Yeppadiyellam TWIST irukka mudiyumo appadiyellam irukku..

konjam kavanam.... yaravathu directors itha padichittu film yeduthuda poranga

Anonymous said...

Mudhal padhippirkkum idharkkum idaiyeyaana kaalathai polavey, pizhaigalum migavum kuraivagavey ulladhu, maghizhchiyai tharugindradhu :) Melum pala nalla padaippugalai pizhaiyindri vazhanga ennudaiya manamaarndha vaazhthukkal! :)

siri said...

Superb narration........the touching point is the link which u have provided for to explain about darwin's theory....kalakarae macchi.......

i felt mesmerised by the line malar and mangai....post more blogs like this........love to read more......clapped hands and visiled for u........

even kept a OOOo for u.......

VJ said...

Somehow/somewhere in ur post u r taking us back to the childhood days daaaa....

Wonderful narration......

Truth said...

@ராமலக்ஷ்மி,
நன்றி. உங்களோட 'அந்த' மெயில் தான் பிழை இல்லாம எழுத உதவி பண்ணிச்சு. ரொம்ப நன்றி. அடிக்கடி உங்கள தொந்தரவு பண்ணுவேன், ரெடியா இருங்க.

~உண்மை.

Truth said...

@ராஜி,

வருகைக்கு நன்றி. உங்க தீபாவளி பஸ்-ல கொண்டாடுனிங்கனு கேள்விப்பட்டேன். இப்போ எங்க இருக்கீங்க? :)

Truth said...

@அனானி,

நன்றி. எல்லாம் உங்க ஆசிர்வாதம் தாங்க :)
//Melum pala nalla padaippugalai pizhaiyindri vazhanga ennudaiya manamaarndha vaazhthukkal! :)//

சட்டியில் இருந்தால் அகப்பையில் வருமே தெரியாதோடி நோக்கு.
நல்ல பாடல் வரிகள் இல்ல. :)

Raich said...

Nice one Kiran.
Its very intersting.
Darwin theory e maranthu poi irukara po, darwin virutha pattri solli kalakiteenga.
Good.

Truth said...

@siri
கைத்தட்டினதுக்கும், விசில் அடிச்சதுக்கும் நன்றி. ஆமா,
இந்த கைத்தட்டினதும், விசில் அடிச்சதும், ஆஃபீஸ்லயா? பாத்துங்க :)

Truth said...

@VJ,

மனசுல இருக்றது, வெளில வந்தே ஆகனும். கரெக்டா? :)

Truth said...

@Raich
நன்றி. படிச்சத போட்டேன். அவ்ளோ தான்.

நந்து f/o நிலா said...

கொய்யால என்னமோ டார்வின் தியரி பத்தி கொதற போறன்னு நெனச்சா...

காலங்காத்தால என்னால சிரிச்சு மாளல.

சொன்னவிதம் இருக்கே... ஊம குசும்பும்மாங்களே. அந்த மாதிரி செம நக்கல் நடைய்யா.

தமிழ்மணத்துல ஆட் பண்னலயா?

நந்து f/o நிலா said...

இதுக்கெல்லாம் தலைப்பு வேற மாதிரி வைக்கனும். தீசிசா சப்மிட் பண்ண போற?

தமிலிஷ்ல இந்த போஸ்ட்ட இணைச்சிருக்கேன். தலைப்பு நானா கொடுத்திருக்கேன்.

"வித்தியாசமா செத்தா விருதாமாம்.விருப்பமிருக்கா?"

தலைப்பு நல்லா இருக்கா.

போய் tamilish.com ல உன் போஸ்ட்டுக்கே ஒரு ஓட்ட குத்திட்டு வா. நல்ல ரீச் ஆவும்.

ஏன்னா இது நல்ல போஸ்ட் :)

சேகுவேரா said...

சூப்பர் நிகழ்வு.
பகிர்விற்கு நன்றி.

Truth said...

@நந்து,

கமெண்டுக்கு நன்றி. :) தமிழ்மணத்துல ஆட் பண்ண ட்ரை பண்றே, ஆன ஆட் ஆகற மாதிரி தெரியல. என்ன பிரச்சனைனு பாத்து, சரி செய்யனும்.
மத்தபடி, தமிழிஷ் ல ஆட் பண்ணதுக்கு நன்றி, தல.

Truth said...

@சேகுவேரா,

வருகைக்கு நன்றி.

பொடியன்-|-SanJai said...

கடைசி வரைக்கும் எதுவுமே யூகிக்க முடியலை :(

இதே மாதிரி கற்பனை கதை எதும் இருக்கா?

Sankar said...

என்னை கவர்ந்தது "ஆறாவது படிக்கும் போது, பத்து மார்க் கேள்விக்காக தலைகீழாக படித்து மறந்தவைகளுள் இதுவும் ஒன்று.".

சமீபமா மின்சாரத்தை பற்றி படிக்க ஆரம்பிச்சேன். ஐஞ்சாங் கிளாஸ்ல இருந்து இந்த மாதிரி புரியாமயே எவ்வளவு தாண்டி வந்துருக்கோம்னு வருத்தப்பட்டுட்டு இருந்தேன்.

இந்த தபா தமிழ்'ல நல்ல முன்னேற்றம். பதிப்பிக்கறதுக்கு முன்னாடி அதிகப்படியான இடைவெளிகளை நீக்கிடு. ஒரு விண்ணப்பம். எளிமையான தமிழ் வார்தைகளை மட்டுமே பயன்படுத்தினேனா இன்னும் நல்லா இருக்கும். நான் முயற்சி பண்ணினேன். கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு :-)

Truth said...

@பொடியன்
யூகிக்க முடியாத சம்பவத்துக்கு தான்யா, இந்த விருதெல்லாம்.

Raji said...

Truth..

oru valiya yella celebarations (!!!!) mudinchu diwali annaike chennai vanthutten..

priya pathivula naan yentha company nu ketta mathiri irukku..

neenga sonnathu illa... konjam correct a kandu pidingalen .....

Truth said...

@சங்கர்,
நன்றி. நாம எத்தன எத்தனையோ இப்படி டீல்-ல விட்டிருக்கோம்.

அப்றொம், எளிமையான வார்த்தகளத்தானே போட்டிருக்கேன். :)

என்ன காமெடினா, நான் சீரியஸ்சா எழுதினது, பல பேருக்கு காமெடியா இருக்குனு நெனக்றேன். நெறய பேரு சிரிச்சிட்டு பொறாங்க :)

Truth said...

@ராஜி,

இது இல்லைன, அது. :) ஆனா, ஒரே குட்டைல தாங்க நீங்களும் ஊரிக்கிட்டு இருக்கறீங்க? :)

ஆட்காட்டி said...

உருப்பட்டுடாங்கோ!!!!!!!!!!!!

ராமலக்ஷ்மி said...

//அடிக்கடி உங்கள தொந்தரவு பண்ணுவேன், ரெடியா இருங்க.//

தாராளமா:). பதிலுக்கு தொடர்ந்து இது போன்ற பல பதிவுகளைத் தாருங்கள்:)!

Raji said...

Yenna pannurathu .. sari yethukku ivvalavu build up... naanga lam applying thought....

Truth said...

@ஆட்காட்டி

//ஆட்காட்டி said...
உருப்பட்டுடாங்கோ!!!!!!!!!!!!

நீங்க ட்ரிபிள் மீணிங்கல ஒன்னும் சொல்லலியே! :)

Truth said...

@ராமலக்ஷ்மி,
//தாராளமா:). பதிலுக்கு தொடர்ந்து இது போன்ற பல பதிவுகளைத் தாருங்கள்:)!

நன்றி. இது போல பதிவிகள் தொடர்ந்து போட நானும் கண்டிப்பா முயற்சி பண்றேன்.

Truth said...

@ராஜி,

//
Raji said...
Yenna pannurathu .. sari yethukku ivvalavu build up... naanga lam applying thought....


ஓ அந்த கம்பேனியா? :)

ஆட்காட்டி said...

புரிஞ்சாச் சரி.

Truth said...

@ஆட்காட்டி
//ஆட்காட்டி said...
புரிஞ்சாச் சரி.

எனக்கு புரியலேங்க.

ஆட்காட்டி said...

எல்லாத்தையும் வெளிப்படையா சொல்ல முடியாது. விடுங்க.

ஆதிமூலகிருஷ்ணன் said...

செம்ம ஸ்டோரிங்க.. சூப்பர்.!

Truth said...

@ஆதி,
நன்றிங்க

☀நான் ஆதவன்☀ said...

அட!