Friday, October 24, 2008

லண்டனில் தீபாவளி

வணக்கம் மக்களே...
இது என்னோட முதல் தமிழ் பதிப்பு. படிச்சிட்டு நல்லா இருந்தா நல்ல இருக்குனு சொல்லுங்க, நல்லா இல்லேனாலும் நல்லா இருக்குனே சொல்லுங்க. இல்ல வேனா உண்மையே சொல்லுங்க பரவால. :)

முதல் தமிழ் பதிப்பாச்சே, என்னத்த எழுதறதுனே தெரில, சரி நமக்கு தெரிஞ்ச தீபாவளிய பத்தி எழுதிறலாம்னு ஒரு எண்ணம். தவிர லண்டன்ல இருக்கேனா, அதனால தான் இந்த டாபிக். ஆனா தீபாவளி பத்தி தானா முழு பதிப்பும்? இல்ல, இன்னும் கொஞ்ச கூடவே இருக்கு. முழுசா படிங்க.

நரகாசுரன கொன்னு போட்டாங்கனு சொல்லித்தான தீபாவளிய ஆரம்பச்சானுங்க. ஆனா எனக்கு எங்க வீட்ல வேற மாதிரி தான் சொல்லித்தந்தாங்க. இட்லியும் கோழி கொழம்பும் சாப்டற நாள் தான் தீபாவளினு சொல்லித்தந்தாங்க. அட மொக்கை எல்லாம் ஒன்னியும் இல்லே. உண்மையத்தான் சொல்றே. இதுல விசேஷம் என்னனா, எங்களுக்கு செவ்வாக்கிழமையும், சனிக்கிழமையும், நான்-வெஜ்-ன, ச்சீ ச்சீ அபச்சாரம்னு சொல்ற பழக்கமும் நல்லாவே இருக்கு. அதனால செவ்வாக்கிழம அல்லது சனிக்கிழம வர்ர தீபாவளிய வேற நாள்-ல மாத்தி வெக்கற பழக்கமும் நல்லாவே இருக்கு. இந்த கலாச்சாரத்தோட ஒட்டி நானும் வளந்துட்டேன்.

என்னோட தீபாவளியப்பத்தி சொல்லனும்னா குறைந்தது பதிமூன்றாம் நூற்றாண்டுக்காவது, க்க்க்ம், தசவதாரம் பாத்த எஃபெக்ட்டு. மன்னிச்சிக்கோங்க. என்னோட பதிமூனாம் வயசுக்காவது போகனும். அப்போ பட்டாசு மேல மோகம் போயி கொஞ்சம் எங்க "கலாச்சாரத்தோட"(?) மிக்ஸ் ஆன காலம். அதுக்கு முன்னாடி பட்டாசு எப்டினு கேக்காதீங்க. கிட்டத்தட்ட எல்லா வெடியயும், கைல புடிச்சி கொலுத்தி போட்டிருக்கேன் அப்பாக்கு தெரியாம. சில சமயம் கைலயே வெடிக்கவும் செஞ்சே. ஏன்டா கைலயே வெச்சிக்கிட்டே? தூக்கி போட வேண்டியது தானேங்கறீங்களா? எல்லாம், யோசிச்சா பன்னே? பல பேறு பண்ணாங்க, நானும் பண்ணே. அது சமுதாய பிரச்சன. இங்குட்டு அலச வேண்டாம் :).

சரி டாபிக்குக்கு வருவோம். சின்ன வயசுல இருந்தே எங்களோட "கலாச்சாரத்த" விட்டுக்கொடுக்காம இருந்ததுனால, எனக்கும் என்னோட அக்காவுக்கும் இது கொஞ்சம் போட்டியாவே மாறிடிச்சு. போட்டி விதிகள் ரொம்ப சிம்பிள். ஒரு இட்லிக்கு 10 ரன். போட்டி முடியும் போது யாரு நெறய ரன் எடுத்திருக்காங்களோ அவங்க தான் வின்னர். பரிசு எல்லாம் ஒன்னியும் இல்ல, வேணும்னா எக்ஸ்ட்ரா ரெண்டு இட்லி சாப்டலாம், ஆனா வயித்துல இடம் இருக்காது. அட எனக்கு சொல்லல. எங்க அக்காக்கு தான் இடம் இருக்காது. எனக்கு அந்த பிரச்சனையும் வந்ததில்ல. நான் "இந்த" போட்டில தோத்து போனதா சரித்திரமும் இருந்ததில்ல.

வயசு எவ்வளவோ அத்தன இட்லிகள உள்ள தள்ளியே ஆகனும் அப்டிங்கரது என்னோட எழுதப்படாத பாலிசியா வெச்சிருந்தேன். அதாவது நான் சொல்றது குறைந்த பட்சம், அப்பர் லிமிட் நான் வெச்சிக்கிட்டதே இல்ல. என்னோட மேக்சிமம் ஸ்கோர் 260 ரன்ஸ். அதாவது 26 இட்லி, சத்தியமா தான். இந்த இமாலய சாதனய(?) நான் நிகழ்த்தும் போது என்னோட வயசு 15. சச்சின் கொஞ்சம் கவனிக்கவும். 260 ரன் அடிச்சும் நான் நாட்-அவுட் தான். ஓவர் தீந்திடிச்சு. அதான் இட்லி அவ்ளோ தான்னு அம்மா சொல்லிட்டாங்க. பாவம் அவங்க, எவ்ளோ தான் பண்ணுவாங்க?

நான் +2 படிக்கும் போது என் நண்பன் ஒருத்தன தீபாவளிக்கு எங்க வீட்டுக்குக் கூப்டலாம்னு இருந்தேன். அவன் முஸ்லிம்ங்கறதனால அவங்க தீபாவளி கொண்டாடல. பட்டாசு வெடிக்கலையானு கேக்றீங்களா? அட பட்டாசு எல்லாம் வெடிச்சானுங்க. நான் சொல்றது எங்களோட சம்பிரதாயப்படி கொண்டாடலனு. அதனால எங்க வீட்டுக்குக் கூப்டேன். நான் பல பேரு மூனு இட்லி நாலு இட்லியெல்லாம் சாப்ட்டு ஏப்பம் விடுவாங்கனு கேள்விப்பட்டிருக்கேன். இவன் ஒரு வேல அந்த சாதிப் பயலா இருந்தா என்ன பண்றது? அவன் நாலு சாப்டு, நான் இறுபத்தி அஞ்சி சாப்டா நல்லாவா இருக்கும்னு ஒரே பீலிங்கு. அட நான் ஃபீல் பண்ணல. எல்லம் எங்க வீட்ல தான். கண்ணு பட்டிரும்னு பயம். சரி என்ன பண்ணலாம்னு அவன கூப்டரதுக்கு முன்னாடி 10 சாப்ட்டு, அவன கூப்டேன். நெனச்ச மாதிரி அவன் நாலு தாங்க சாப்டான். நான் என்னோட பாலிசி(?) அடிவாங்கக் கூடாதுனு 9 சாப்ட்டு, 190 ரன்ஸ்சோட முடிச்சிகிட்டேன். அப்போ என்னோட வயசு 17.

சில சமயம் நான் தான் இப்படியோனு நெனச்சதுண்டு. அப்பொ தான் ஒரு தடவ, எங்க கஸின் பிரதர்ஸ மீட் பண்ணெ. அட அவனுங்களும் என்ன மாதிரி தான் இருந்தானுங்க. சபாஷ் சரியான போட்டினு பல முறை, மோதி இருக்கோம். ம்ம்ம் வீட்ல இல்ல. வீட்ல ஆளுக்கு 25னு நாலு பேறு சாப்டா 100 இட்லிக்கு தகப்பன்ஸ் எல்லாம் எக்ஸ்ட்ரா டைம் வர்க் பண்ணவேண்டி இருக்கும். அதனால அதுக்கு தனியா நாங்க தேதி ஃபிக்ஸ் பண்ணுவோம். எங்க குடும்பங்கள்ல எல்லாம் கல்யாணம் முடிஞ்சி "மறு வீடு" அப்டீனு ஒரு ஃபங்க்ஷன் வெப்பானுங்க. அதாவது பொண்ண பய்யன் வீடுக்கு அனுப்ர ஃபங்க்ஷன். அப்போ மெனுல நான்-வெஜ் தான் அதிகமா இருக்கும். எப்பொ எல்லாம் இது நடக்குதோ, அப்பொ எல்லாம், match கண்டிப்பா நடக்கும். அப்பொ கூட சரித்திரத்த மாத்த முடியலேனா பாத்துக்கோங்க என்னோட திறமய.

நான் காலேஜ் முடிச்சிட்டு ஒரு நல்ல வேல கிடைக்க ரொம்ப கஷ்டப்பட்டேன். ஒரு வருஷம் ஏதோ ஒரு சின்ன கம்பேனில தான் வேலயும் பாத்தேன். அப்பொ தான் ஒரு ஞாய்த்துக்கிழம இப்பொ நான் வேல பாக்ற கம்பேனில இருந்து இன்டர்வியூக்கு கூப்டானுங்க. வேல கெடச்சே ஆவனும்னு எங்க வீட்ல எல்லோரும் மனசுக்குள்ளேயே பிரார்த்தன பண்ணிக்கிட்டு இருந்தாங்க. நானும் தான். காலைல 8 மணிக்கு இன்டர்வியூக்கு மீனாட்ச்சி காலேஜ்க்கு போகணும். அந்த காலேஜ் இருக்றது கோடம்பாக்கம், நான் இருக்றது அம்பத்தூர். வண்டி வேற இல்ல. பஸ்ல தான் போகனும். ஓரே டென்ஷன். அட டென்ஷன் எனக்கு இல்ல, எங்க வீட்ல இருக்றவங்களுக்கு தான். அன்னைக்கு என்னோட ஸ்கோர் 145. ஒரு பாதி இட்லி எக்ஸ்ட்ரவா சாப்டேன். தட்டுல கொஞ்சம் கொழம்பு இருந்ததுனால அந்த 5 ரன்.

அப்றோம், என்னோட வயசு பெருகப்பெருக, ஸ்ட்ரைக் ரேட் கொறஞ்சுது. இப்பொ புறியுது சச்சின்க்கு என்ன ஆச்சுனு. ஆனாலும் 100 ரன் குறையாம பல வருஷங்களா அடிச்சிக்கிட்டு தான் இருந்தேன்.

இது வரைக்கும், ஃபளாஷ் பேக். இனி வருவது இன்னய பத்தி.

இபோ சிச்சுவேஷன் என்னானு பாத்தா...
1) செவ்வாக் கிழமையா தீபாவளி வருது. [தீபாவளி வட இந்தியால செவ்வாக்கிழமயாவும், தென் இந்தியால திங்கக்கிழமயாவும் வருது. சுவாரஸ்யமும், ஃப்ளோவையும் மனசில வெச்சிக்கிட்டு செவ்வாக்கிழமய எடுத்துக்கிட்டேன்]
2) நான் இப்போ தனியா லண்டன்ல இருக்கேன்.
3) நான் வேற "அதே" கலாச்சாரத்தோட வளந்து தொலச்சிடேன்

இப்படி இருக்கு சிச்சுவேஷன். ஆன அதுக்காக பழக்கத்த மாத்திக்க முடியுமா? உம்மாச்சி என்ன லீவ் போட்டா போயிருக்காங்க? கண்ண குத்தி பள்ளாங்குளி ஆடிட மாட்டாங்க? சம்பிரதாயப்படி, இட்லியும் கோழி கொழம்பயும் உள்ள தள்ளியே ஆகனும்.

அதனால செவ்வாக்கிழமையா வர்ர தீபாவளிய ஞாய்த்துக்கிழமைக்கு மாத்திட்டேன். அடுத்ததா, frozen இட்லியும், pack பண்ணின கோழியயும் வாங்கி, அத சமச்சி ஓரளவுக்கு தீபாவளி சீன்ன க்ரீயேட் பண்ணிட்டேன். இப்பொ எனக்கு முன்னாடி இட்லியும் இருக்கு, கோழி கொழம்பும் இருக்கு. ஆனா எங்க வீட்ல பண்ற மாதிரி ஆவி பறக்ற மல்லிப்பூ இட்லியும் இல்ல, கொழம்ப பாத்த உடனெ வாயில எச்சிலும் ஊரல. இது வரைக்கும் எதுக்கும் கவல படாத நானு இப்போ கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு. என்னோட இட்லியயும், கொழம்பயும் பாத்து இல்ல. உலகத்துல பல பேறுக்கு ஒரு வேள சாப்ட கூட சாப்பாடு இல்லேனு நினைக்கும் போது. 

இறைவனை வேண்டி எனக்கு முன்னாடி இருக்றத சந்தோஷமா சாப்ட இப்போ நான் அப்பீட்டு ஆயிக்கறேன்.

தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

பி.கு.1. நாம மெக்.டி, KFC போன்ற கடைகளுக்கு போய், ஃப்ரெஞ்சு ஃப்ரைஸ் கேட்டா கூட நமக்கு pack பண்ணும் போது, உள்ள போறதுல பாதி வெளில விழுது. இந்த கீழ விழறது பல பேறுக்கு முழு உணவாகவும் இருக்கலாம்
பி.கு.2. packed ஃபுட் ங்கர பேருல ஆடுல இருந்து, தக்காளி வரைக்கும், எக்ஸ்பைரி தேதி ஒன்னு போட்டு இருக்காங்க, அடுத்த நாள் அது வீணா போகுது. வேணுங்கற போது ஆட்டையும், கோழியயும் வெட்டலாமெ. நாம இப்படிப்பட்ட packed ஐடங்க்ள தவிர்க்கலாமே
பி.கு.3. தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்னு பாரதி சொல்லிட்டு போயிருக்காரு. நாம ஜகத்த அழிக்க வேணா, ஆனா, எதாச்சும் செய்யனுங்க. கண்டிப்பா எதாச்சும் செஞ்சே ஆகனுங்க.
பி.கு.4. இதெல்லாம் தப்பு, மெக்.டி யும், KFCயும் பன்றது கரெக்ட்டு தான்னு நீங்க சொன்னா, ஹி ஹி, அதுக்கு வருத்த படபோறது, நான் இல்ல, நாம.
பி.கு.5. இவ்ளோ பேசற, நீ என்னத்தடா பன்னியிருக்கேனு கேக்றீங்களா? நானும் ஒன்னும் செய்யல, அதத்தான் பி.கு.3 ல சொல்லியிருக்கேன்.
பி.கு.6. எதுவுமே பண்ண முடியலேன வாங்கற சாப்பாட்ட வேஸ்டு பண்ணாம சாப்டாலே நல்லது.
பி.கு.7. நந்து, சர்வேசன், ப்ரியா, ராமலக்ஷ்மி. இவங்களோட தமிழ் பதிப்புகள பாத்து தான் நானும் தமிழ்-ல எழுதனும்னு தோனிச்சு. இந்த முதல் பதிப்பு, அவங்களுக்கு. இத நான் அவங்கள கேட்டு போடல, தப்பா இருந்தா மன்னிச்சிக்கோங்க
பி.கு.8. படிச்சிடீங்களா? இப்போ கமெண்ட்டுங்க.

37 comments:

Aruna said...

Kiran, Hope this diwali, you break your records... Nalla message.. I would like to add one more message.. Pavam kozhi enna pannichu.. adha packed agavum vanga vendam.. appadiye vettavum vendam..

HAPPY DIWALI..

Manu said...

Nijama rombha superaa irukku..... aannaaa ithula fulla idliaaa pathiaaaee sollirukkae..u shld have added some more topic so tht it will be more interesting.......don mind........

Raich said...

Good one Kiran.
Athuvum, mukkiyama antha Pin Kurippu, romba sinthikka vaikuthu.

Anonymous said...

hi kiran, sooooooooperrr... chumma madras bashai flowla varudhu... :) perfect...

நாதஸ் said...

:) :) :)

Sankar said...

மச்சி .. நல்ல முயற்சி (அடடா கவிதை :-) .. இதில் பொருட்பிழை இல்லை (உன்னோட வரலாறுலே நான் என்ன பிழை கண்டு பிடிக்கறது :-) .. ஆனால் சொற்பிழை இருக்கிறது .. "பல பேறு" என்பது தவறு (பிள்ளை பேறு மாதிரி இருக்கு) .. "பல பேரு" அப்படிங்கறது தன் சரின்னு நினைக்கிறேன் .. எதுக்கும் நம்ம டுபுக்கு கிட்டே ஒரு தபா கேட்டுக்கோ ..

Vasanth said...

Kiran,
Chancey illa...wonderful...i was laughing till pinkurippu... :) Continue the same kind of blogs...

Truth said...

@அருணா
நன்றி. ஆனா கோழி எல்லாம் சாப்டாம இருக்க முடியாது :)

Truth said...

@சிரி
அதான் கடைசில ஒரு மெசேஜ் தந்திருகோம்ல் அப்றோம் என்ன? :)

Truth said...

@raich
நன்றி

Truth said...

அனானி
28 வருஷமா பேசற பாஷ வராம இருக்குமா?

Truth said...

@நாதஸ்
சிரிச்சிட்டு போனதுக்கு நன்றி. :)

Truth said...

@சங்கர்
மாத்திட்டேன். முன்ன பின்ன எழுதி இருந்த தெரிஞ்சிருக்கும். அதான் மேட்டர்.

Truth said...

@வசந்த்
நன்றி தம்பி

VJ said...

Idlyya nabaga paduthitiyaeeee daaaaa.........

Wonderful post Machi......

ராமலக்ஷ்மி said...

Truth, உண்மையைச் சொல்லலாம்தானே:)?

முதலில் ப்ளஸ் எல்லாம் சொல்லிக்கிறேன். அனுபவங்களை ரசித்துச் சொல்லி வாசிப்பவர்களையும் ரசிக்க வைத்திருக்கிறீர்கள். நீங்கள் இட்லி விளாசி ரன் எடுத்ததெல்லாம் சுவாரஸ்யம்.பழைய 'மாயாபஜார்' படத்தில் கடோத்கஜனாய் வரும் ரங்காராவ் (சரியா:(? ) "கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம் அந்தக் கவுரவப் பிரசாதம் இதுவே எனக்குப் போதும்.." என பாடிய படி சாப்பிடுவதை டிவியில் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா:)?

பின்குறிப்புகள் எல்லாம் பிரமாதம். [முக்கியமா ஏழாவது, :))!]

எழுத்து நடையில் ஃப்ளோ நல்லாயிருக்கு. ஆனால்,
சித்திரமும் கைப் பழக்கம்
செந்தமிழும் நாப் பழக்கம்

பேசும்போதே உச்சரிப்பில் கவனம் செலுத்தி வந்தால் எழுதும் போது பிழைகள் வாராது.

அது சரி செய்யக் கூடியதுதான். தொடந்து எழுதுங்கள். படிக்கக் காத்திருக்கிறோம். All the Best!

SurveySan said...

கலக்கிபுட்டீங்க.

நான் எழுதரத பாத்துதான், டமில்ல எழுதணும்னு தோணிச்சா? அவ்வ்வ்வ்வ் ;)

Truth said...

@VJ
நன்றி

Truth said...

@ராமலக்ஷ்மி

நன்றி, கொஞ்சம் கொஞ்சமா திருத்திக்கிறேன்

Truth said...

@சர்வேசன்,
உங்களோட "எட்டெல்லாம் பத்தாது சார், அதிசய பிறவி நான்" பாத்து தான் உங்களோட எல்லா பதிவுகளையும், கிட்டத்தட்ட படிச்சேன்.
எல்லாமே சூப்பர்

ப்ரியா கதிரவன் said...

தமிழ் பதிவுலகத்துக்கு வரவேற்கிறேன்.
முதல் பதிவு கலக்கல்.
ஆனா spelling mistake இருக்கு.....
எனக்கு உங்க பிரச்னை புரியுது.நீங்க நானாவையே நாய் ன்னு கூப்பிட்டவரு....:-)

ஒரு தெலுங்கு பையன் இவ்ளோ தூரம் எழுதுவதையே மிக மிக பாராட்டுகிறேன். கொஞ்சம் முயற்சி செஞ்சு, தப்பு விடாம எழுதுங்க.
வாழ்த்துக்கள்.

நந்து f/o நிலா said...

கிரண் எழுத்துப்பிழை,நடை இதைல்லாம் விட்டுத்தள்ளுய்யா, அதெல்லாம் கொஞ்ஜூண்டு ட்ரை பண்ணா வந்துடும்.

ஆனா உன் போஸ்ட்ட படிக்கறப்போ நம்ம வீட்டு பையன் எழுதறத படிக்கும் ஃபீல் வருது. இதான் சூப்பர்.

எந்த பெரிய எழுத்துவண்மை மிக்க எழுத்தாளரும் சொக்க வைக்கும் நடையையும், படித்த பின் பித்து பிடித்தது போல் அதை பத்தியே சிந்திக்கும் அளவு கனமான மேட்டரையும் தரலாம்.

ஆனால் நான் சொன்ன நம்ம பையன் ஃபீலிங்க தரமுடியுமா?

சோ இந்த டைப் எழுத்தில் நீ ஜெயிச்சுட்ட கிரண்.


அப்புறம் இட்லி சாப்பிடும் போட்டிக்கு சில ஐடியாஸ் (ஹாஸ்டல்ல நாங்களும் இதெல்லாம் பண்ணி இருக்கோம்ல)

1. இடையில் தண்ணி குடிக்க கூடாது
அப்படி குடித்தால் ஒரே ஒரு வாய் தண்ணிதான் குடிக்கனும்.

2. இட்லிய ரொம்ப மென்னு முழுங்க கூடாது. லேசா ஒரு கடி அப்படியே முழுங்கிடனும்.

3 சிக்கன் குழம்புல ஊற வெச்சு சாப்பிட்டா நல்லாதான் இருக்கும். ஆனா அதிக இட்லி சாப்பிடமுடியாது. சோ கொஞ்சமா தொட்டுக்கனும்.

எப்படி நம்ம ஐடியாஸ்?


அப்புறம் கொஞ்சம் எழுத்தில் கொஞ்சம் ஹோம்சிக் தெரியுதே? சீக்கிரம் கல்யானம் பண்ணு.


கடைசியா ஒண்ணு


என் எழுத்தைல்லாம் பாத்து எழுத வந்தியா? காலக்கொடுமைடா சாமி

Truth said...

@ப்ரியா

நன்றி. கண்டிப்பா, அடுத்த தடவ முயற்சி பண்றேன்.

Truth said...

@நந்து.
இப்போ எப்டி தெளிவா இருக்கீங்களா?

//சோ இந்த டைப் எழுத்தில் நீ ஜெயிச்சுட்ட கிரண்.

கொஞ்ச பெருமையா இருக்கு :-)

நீங்களும் போட்டி எல்லாம் வெச்சதுண்டா? ஐடியா எல்லாம் பிரமாதம். highest ஸ்கோர் எவ்ளோ? :-)

உண்மையா சொல்லனும்னா, ஹோம் சிக் எல்லாம் ஒன்னும் இல்ல பாஸு. வேல இல்லாதப்போ தான் கொஞ்ச ஹோம் சிக்கா ஃபீல் பண்ணுவேன், மத்தபடி இன்னும் பேச்சுலர் லைஃப் போர் அடிக்கல எனக்கு. :)

கமெண்ட்ஸ்க்கு நன்றி.

ராமலக்ஷ்மி said...

பிரியா said...
//ஒரு தெலுங்கு பையன் இவ்ளோ தூரம் எழுதுவதையே மிக மிக பாராட்டுகிறேன்.//

தாய்மொழி தெலுங்கா??
அப்போ உங்க தமிழுக்குத் தலை வணங்குகிறேன்.

ஹிஹி. பெங்களூர் வந்து 18 வருடம் முடியப் போகிறது. கன்னடம் வருமா என கேட்டு விடாதீர்கள்:((!

Truth said...

@ராமலக்ஷ்மி,

ஆமாங்க, நான் தெலுகு பையன் தாங்க. ஆனா அதுக்குக்காக தலை வணங்க வேண்டாம் :) school ல second language தமிழ் தான் படிச்சேன் :)

~உண்மை.

துளசி கோபால் said...

வலை உலகத்துக்கு வந்துட்டீங்கல்லே????

வாழ்த்து(க்)கள்.
அங்கங்கே சில தட்டச்சுப்பிழைகள் இருக்கு. அதைச் சரி பார்த்துக்குங்க.

வலையில் தமிழில் எழுதும் சில பதிவர்களுக்குத் தாய்மொழித் தமிழ் இல்லை என்பது உண்மை(நான் உள்பட)

பரவாயில்லை. போகப்போகத் தமிழில் எழுத நல்லாப் பழகிரும்:-)

கபீஷ் said...

லண்டன்ல எங்கே இருக்கீங்க?

cheena (சீனா) said...

வருக வருக - நல்ல பதிவுகளைத் தருக - துளசியின் ஆசிர்வாதம் கிடைத்தாயிற்று - இனி ஜமாய்க்கலாம்

Anonymous said...

தீபாவளினு வந்தாக்க வீடு கும்மிருட்டா இருக்கு. தட்டுதடுமாறி இப்பால் ஓ....டியாந்திட்டேன்.
வீட்ட வெளிச்சமாக்கீடுங்க சாமி.

ambi said...

சூப்பரா எழுதி இருக்கீங்க. வாழ்த்துக்கள்.

பிழை எல்லாம் காலப்போக்குல சரியாயிடும். :)

தட்டிட்டு வாசிச்சு பாருங்க. தட்டும் போது பிழையை சரி பாத்தா ஒரு பாரா கூட தாண்ட முடியாது. :)

Truth said...

@துளசி கோபால்,
நன்றி.
ஆமாங்க எழுதிப்பாக்கலாம்னு தாங்க வந்தேன். நல்லாத் தான் இருக்கு. :)
பல பேர் நண்பர்களாகி இருக்காங்க :)

பிழைகள் - ஆமா, போகப் போக குறைக்க முயற்சி பண்றேன்.

Truth said...

@கபீஷ்
//கபீஷ் said...

லண்டன்ல எங்கே இருக்கீங்க?

லண்டன்ல ஸ்ட்ராட்ஃபோர்டு அப்டினு ஒரு இடத்துல இருக்கேங்க.

Truth said...

@cheena (சீனா)

//cheena (சீனா) said...

வருக வருக - நல்ல பதிவுகளைத் தருக - துளசியின் ஆசிர்வாதம் கிடைத்தாயிற்று - இனி ஜமாய்க்கலாம்
//

ஆமாங்க கிடைச்சுடிச்சு. நன்றி.

Truth said...

@அனானி,
/*
Anonymous Anonymous said...

தீபாவளினு வந்தாக்க வீடு கும்மிருட்டா இருக்கு. தட்டுதடுமாறி இப்பால் ஓ....டியாந்திட்டேன்.
வீட்ட வெளிச்சமாக்கீடுங்க சாமி.
*/

வருகைக்கு நன்றி. ஓ கரண்டு வந்துடிச்சா? :)

Truth said...

@அம்பி
/*
ambi said...

சூப்பரா எழுதி இருக்கீங்க. வாழ்த்துக்கள்.

பிழை எல்லாம் காலப்போக்குல சரியாயிடும். :)

தட்டிட்டு வாசிச்சு பாருங்க. தட்டும் போது பிழையை சரி பாத்தா ஒரு பாரா கூட தாண்ட முடியாது. :)*/

நன்றிங்க. கண்டிப்பா. உண்மையா சொல்லனும்னா, இது வரைக்கும் நான் தமிழ்ல எழுதினது கிடையாது :). google transliterature வெச்சுத் தான் spelling கரெக்டா னு பாத்துப் பாத்து எழுதறேன். போகப் போக சரியாகும்னு நினைக்கிறேன்.

SK said...

இட்லி அடிச்சு தூள் கெளப்பி இருக்கீங்க.

வாங்க ஒரு நாள் கோதால இறங்கலாம். :)

இப்பவும் bachelor தானா. .. நான் தனி மரம் இல்லை தோப்புன்னு தெரிய வெச்சதுக்கு வாழ்த்துக்கள். :) :)